புதன், 15 மே, 2019

ஒரு கன்னட கிராமீயப்பாடல்



                                         ஒருகன்னட கிராமீயப்பாடல்
                                        -------------------------------------------------

 இது  ஒரு மீள்பதிவு
   
நான் இந்த கன்னட கிராமீயப் பாடலை முதன் முதலில் 1961-1962 வாக்கில் கேட்டேன். அதன் பிறகு தமிழில் ஒரு திரைப்படத்தில் இதன் முதல் வரி எடுத்தாளப் பட்டிருந்தது. முழுப்பாடலும் நினைவில் வரவில்லை. ஒரு நண்பனின் உதவியோடு இப்போது முழுப் பாடலும் கை வரப் பெற்றேன். அதை என்னால் முடிந்த அளவு தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் பாடிப் பாருங்கள்.

( முதலில் தமிழ் எழுத்தில் கன்னடப் பாட்டு.)

மாத்தாடு மாத்தாடு மல்லிகே பாடியது:- ஜீ.வி. அத்ரி,மஞ்சுளா குருராஜ்.


ஆண்,:- மாத்தாடு மாத்தாடு மல்லிகே
        செம்பக செவந்திகெ....
       கும்பினல்லி மாத்தாடு மாத்தாடு மல்லிகே.

பெண்:- ஒப்பன்னெ கட்டித்தெ
        ஒப்பன்னெ பிட்டித்தெ
        ஒப்பன்னெ கரக் கோண்டொளொகோகிதே  கெளையா

ஆண்:- யாரென்னக் கட்டித்தெ, யாரென்ன பிட்டித்தெ
       யாரென்ன கரக்கோண்டொளகோகிதெ மல்லிகே
      

பெண்:-ஹசுவன்னக் கட்டித்தெ , கருவன்ன பிட்டித்தெ
       ஹாலுன்னு கரக்கோண்டொளகோகிதே  சலுவா

ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
       செம்பகெ செவந்திகெ
       மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண்:- ஒப்பன்ன தள்ளித்தெ, ஒப்பன்ன நுக்கித்தெ
       ஒப்பன்ன ஜதையல்லி திருகி பந்தெ கெளையா

ஆண்.:-யாரன்னு தள்ளித்தெ, யாரன்னு நுக்கித்தெ
      யாரன்னு ஜதையல்லி திருகி பந்தெ மல்லிகே

பெண்;-கதவன்னு தள்ளித்தெ அதகள நுக்கித்தெ
      தீபத ஜதையல்லி திருகி பந்தெ கெளையா

ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
       செம்பகெ செவந்திகெ
       மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண்:-ஒப்பன்ன ஆசித்தெ ஒப்பன்ன ஹோதித்தெ
      ஒப்பன்னு இளக்கோண்டு மலகிதெ கெளையா

ஆண்:- ஏனென்ன ஆசித்தெ, ஏனென்ன ஹோத்திதெ
      யாரன்ன இளக்கோண்டு மலகிதெ மல்லிகே

பெண்:-ஹாசிகே ஆசித்தெ,கம்பளிய ஹோத்திதெ
       தலதிம்பு இளக்கோண்டு மலகிதெ கெளையா

ஆண்:-மாத்தாடு மாத்தாடு மல்லிகே
      செம்பகெ செவந்திகெ
      மாத்தாடு மாத்தாடு மல்லிகே 

பெண்:-ஒப்பக்கெ கால் கொட்டெ, ஒப்பக்கெ கை கொட்டெ
       ஒப்பக்கெ சீரையன்ன எளக் கொட்டெ கெளையா

ஆண்:- யாரெக்கெ கால் கொட்டெ யாரெக்கெ கை கொட்டெ
       யாரெக்கெ சீரையென்ன எளக்கொட்டெ மல்லிகே
      
பெண்:-கந்துகாருகெ கால் கொட்டெ, பளேகருகெ கை கொட்டெ
      மடிவாளகெ சீரையென்ன எளக் கொட்டெ கெளையா

ஆண்:- மாத்தாடு மாத்தாடு மல்லிகே...........

இனி தமிழாக்கம்.
ஆண்:- சொல்லு நீ சொல்லடி மல்லிகே
        செண்பகமே சாமந்தியே
        குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே
பெண்:_ ஒண்ணே நான் கட்டினேன்
        ஒண்ணெ நான் விட்டுட்டேன்
        ஒண்ணெ நான் எடுத்திட்டு போனேன், நீ கேளைய்யா.!
ஆண்:- யாரை நீ கட்டினே யாரை நீ விட்டுட்டே
        யாரைதான் எடுத்திட்டு போனே நீ மல்லிகே
பெண்:_பசுவை நான் கட்டினேன்
       கன்றை நான் விட்டிட்டேன்
      பாலைத்தான் எடுத்திட்டு போனேன்,நீ கேளைய்யா.!

ஆண்.;-சொல்லு நீ சொல்லடி மல்லிகே

       செண்பகமே சாமந்தியே
       குழுவில்கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே.!
பெண்.:_ஒண்ணை நான் தள்ளிட்டேன்
       ஒண்ணை நான் போட்டுட்டேன்
       ஒண்ணை நான் கையிலே,தாங்கி வந்தேன் நீ கேளைய்யா.!
ஆண் .:-யாரை நீ தள்ளினே
        யாரை நீ போட்டுட்டெ
        யாரை நீ கையிலே, தாங்கி வந்தே மல்லிகே
பெண்.;- கதவ நான் தள்ளினென்
        தாப்பாளப் போட்டுட்டென்
        வெளக்கை நான், கையில் தாங்கி,வந்தேனெ மச்சானே
ஆண்.;-  சொல்லு நீ சொல்லடி மல்லிகே
        செண்பகமே சாமந்தியே
        குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகே
பெண்.;- ஒண்ணை நான் ஆசைப் பட்டேன்
        ஒண்ணை நான் போத்திக்கிட்டேன்
        ஒண்ணை நான் கட்டிக்கிட்டு படுத்திட்டேன் நீ கேளைய்யா.!
ஆண்.:-  யாரை நீ ஆசைப்பட்டே
         யாரை நீ போத்திக்கிட்டே
         யாரை நி கட்டிட்டுப் படுத்திட்டெ மல்லிகெ
பெண்.:- படுக்கைக்கு ஆசைப்பட்டேன்
        கம்பளியப் போத்திக்கிட்டேன்
        தலையணையக் கட்டிட்டுப் படுத்திட்டேன் மச்சானே.!
ஆண்.:- சொல்லு நீ சொல்லடி மல்லிகே
        செண்பகமே சாமந்தியே
        குழுவில் கூடி சொல்லு நீ சொல்லடி மல்லிகெ.
பெண்.:- ஒருத்தனுக்கு கால் கொடுத்தேன்
       ஒருத்தனுக்குக் கை கொடுத்தேன்
       ஒருத்தனுக்கு சேலை தூக்கிக் கொடுத்தேன் நீ கேளைய்யா
ஆண்.:-யாருக்குக் கால் கொடுத்தெ
       யாருக்குக் கை கொடுத்தெ
       யாருக்கு சேலை தூக்கிக் கொடுத்தெ நீ மல்லிகெ
பெண்.-தட்டானுக்குக் கால் கொடுத்தேன்
       வளைக் காரனுக்குக் கை கொடுத்தேன்
       வண்ணானுக்கு சேலை தூக்கிகொடுதேன் நான் மச்சானே
ஆண்.:- சொல்லு நீ சொல்லடி மல்லிகெ..........

( சில கன்னட வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் எழுதி உள்ளேன். உ-ம் கன்னடத்தில் கெளையா என்னும் சொல் இளைஞன் என்று பொருள்படும். அதற்கு மாற்றாக நீ கேளைய்யா என்றும் கும்பினல்லி  என்பதைக் குழுவில் கூடி என்றும் எழுதி உள்ளேன்.).                     
   





ஞாயிறு, 12 மே, 2019

ஒரு நவீன பாட்டி



                                            ஒரு நவீன பாட்டி
                                             --------------------------


நவீன பாட்டி

பிற மொழியாளர்களைப்பற்றியே  நினைத்துக் கொண்டிருந்தத்யால் அதன் தாக்கம் அண்மைய பதிவுகளில்  தெரிய்லாம் டி பி கைலாசம் என்பவர்பிறப்பால் ஒரு தமிழர் கன்னட நாடக உலகில்பெயர் பெற்றவர்  முதலில் அவரைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு anecdot  இவருக்கு ஒரு நண்பர் பெயர் கோபால  சுந்தரமையர்  அவர் இவரை டிபிகல் ஆஸ் typical ass   என்று கூப்பிடுவாராம்  அதகு இவர் மறுபடியாக பால்ஸ்  அண்டெர்  மயிர்  என்பாராம்

   “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை இது படித்துப் பாருங்களேன்

 .” பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடு” என்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி ” என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்கலையா “ என்று கேட்டேன். 
” படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே
 நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.” என்றேன்.
” சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “
“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம்  என்கிறார்கள்
“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.” பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.
” பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?
. “ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.
 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “
“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...
“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....
 அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?
“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!

                 


  


வெள்ளி, 10 மே, 2019

சில திரிபாதிகள்(மூன்றடிகள்



                                             சில திரிப்பாதிகள்( மூன்றடிகள்)
                                             --------------------------
ஒரு பதிவில்  கன்னட நாடகக் கலைஞர் ஹிரனையா பற்றி எழுதி இருந்தேன் பல  திக்கும் சென்று பிற மொழிவல்லுனர்களையும்   அறிமுகப் படுத்துவதும்  என் எழுத்துகளில் ஒன்றாகும் சில ஆண்டுகளுக்கு மு ந் திரு துரை செல்வராஜின் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாக தமிழ் அரசர்களின் பெருமைகளை மட்டுமே எழுதும்நாம்  பிற மொழிஅரசர்களின் சிறப்புகளை ஏன்  எழுதுவது இல்லை என்று கேட்டதாக நினைவு ஹிரனையா படிவுக்கு பின்னூட்டமாக  திரு ஜீவி  நான் பெங்களூரில் இருப்பதால் இது பற்றி எழுதினால் சுவாரசியமாக இருகுமென்று கூறி இருந்தார் அடைஒட்டி இப்போது கன்னடக் கவி  சர்வக்ஞா பற்றி நான் சேகரித்த தகவல்களில் சில
  திருவள்ளுவர் யார் என்று தமிழ் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் படித்தவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிலிருந்து ஓரிரு குறள்களையாவது சொல்வார்கள் என்றுநம்புகிறேன். இன்னும் சிலருக்கு திருக்குறள் மூன்று பிரிவுகளில் ( அறப்பால் ,பொருட்பால், காமத்துப்பால்) மொத்தம் 133 தலைப்புகளில் தலைப்புக்குப் பத்தாக 1330 ஈரடிச் செய்யுட்கள் கொண்டது என்றும் தெரிந்திருக்கலாம்
சரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? தமிழர்கள் அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு வேண்டுமானால். திருவள்ளுவர் சிலை பெங்களூரில் திறக்கப்பட வேண்டுமானால் சென்னையில் கன்னட கவி சர்வக்ஞாவின் சிலையும் திறக்கப் படவேண்டும் என்ற கன்னடியர்களின் கோரிக்கை நினைவுக்கு வரலாம். அதாவது தமிழர்களுக்கு திருவள்ளுவர் போல கன்னடியர்களுக்கு சர்வக்ஞா
திருவள்ளுவர் யார் என்று தமிழ் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் படித்தவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிலிருந்து ஓரிரு குறள்களையாவது சொல்வார்கள் என்றுநம்புகிறேன். இன்னும் சிலருக்கு திருக்குறள் மூன்று பிரிவுகளில் ( அறப்பால் ,பொருட்பால், காமத்துப்பால்) மொத்தம் 133 தலைப்புகளில் தலைப்புக்குப் பத்தாக 1330 ஈரடிச் செய்யுட்கள் கொண்டது என்றும் தெரிந்திருக்கலாம்
சரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? தமிழர்கள் அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு வேண்டுமானால். திருவள்ளுவர் சிலை பெங்களூரில் திறக்கப்பட வேண்டுமானால் சென்னையில் கன்னட கவி சர்வக்ஞாவின் சிலையும் திறக்கப் படவேண்டும் என்ற கன்னடியர்களின் கோரிக்கை நினைவுக்கு வரலாம். அதாவது தமிழர்களுக்கு திருவள்ளுவர் போல கன்னடியர்களுக்கு சர்வக்ஞா

சர்வக்ஞா பற்றியும் அவரது  செய்யுட்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவலோடுமுனைந்தேன். ஒருசில தகவல்களும் செய்யுட்களும் இணையத்தின் மூலம் கிடைத்தது. இணையத்தில் தேடும்போது கன்னட மொழியில் வேண்டுமானால் அவரது செய்யுட்கள் கிடைக்கலாம் ஆனால் எனக்குக் கன்னடம் தெரியாது ஆகவே எனக்குக் கிடைத்த தகவல்கள் உங்களிடம் பகிர்கிறேன் இணையத்தில் தேடும்போது ஒரு சில செய்யுட்களின் transliteration , translation  கிடைத்தது. அவற்றை எழுதியவருடனும் தொடர்பு கொண்டேன் அவர் ஒரு தமிழர். அவரும் முழுவதும் எழுத முயல்வதாகக் கூறி இருக்கிறார் இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை
புஷ்பதத்தர் என்னும் இயற்பெயர் கொண்ட சர்வக்ஞாவின் காலம் சரியாகக் கணிக்கப் படவில்லை பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராக எண்ணப் படுகிறது. ஒரு சைவப் பிராம்மணத் தந்தைக்கும் , ஒரு சூத்திரவிதவைப் பெண்ணான தாய்க்கும் பிறந்தவர் என்று சொல்லப் படுகிறது ஆயிரத்துக்கும் மேற்பட்ட த்ரிபாதி(TRIPADIS) எனும் மூன்றடிச் செய்யுட்களை இவர் இயற்றி இருப்பதாகச் சொல்லப் படுகிறது மதம் ஒழுக்கம் வழக்கம் ஜோதிடம் பருவங்கள் புதிர்கள் என்று பல தலைப்புகளில் இவர் எழுதி இருப்பதாகக் கூறப் படுகிறது அறிஞர்கள் இவரது செய்யுட்களிருந்து மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் இவர் எழுதியதாக கருதப்படும் எந்த இரு புத்தகமும் ஒருப்போல இருப்பதில்லையாம்.  ஒருவேளை இவர் இயற்றியதாகச் சொல்லப் படும் பல செய்யுட்கள் பல நகல் எழுத்தாளர்களின் இடைச் செருகலாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இனி இவர் எழுதிய சில( VACHANAGALU”)   செய்யுட்கள் சிலவற்றைக் காண்போம்

 1) சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!

சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்

விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல் ஒருவனே என்றாலும்  
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )

( எனக்குத் தெரிந்த சில கன்னட நண்பர்கள் சர்வக்ஞாவின் இந்த மூன்றடிகளைச் சொல்கிறார்கள் நாம் திருக்குறளில் “அகர முதல....சொல்வதைப்போல)
2) ஏளு கோடியே கோடி ஏளு லக்‌ஷ்வே
ஏளு சாவரித எப்பத்து வசனகள
ஹேளித்தானு  கேள  சர்வக்ஞ
..
ஏழு கோடியே ஏழு லக்ஷத்து
ஏழாயிரத்து எழுபது வசனங்கள்
சர்வக்ஞனால் கூறப் பட்டது அறிவீர் நண்பர்களே

விளக்கம் சர்வக்ஞர் கூறுகிறார். அவரால் பயனுள்ளதாஉ உலகோருக்குக் கூறப்பட்ட வாக்குகள்  ஏழு கோடியே ஏழு லட்சத்து ஏழாயிரத்து எழுபதுஎன்று. (ஆனால் 20002500 வசனங்களே கிடைத்திருக்கின்றன)

3) கெலவம் (B)பல்லவரிந்த கலது
கெலவம் மல்பவரிந்த கண்டு மத்தே
ஹலவம்தானே ஸ்வதஹா மாடி தில்லி எந்தா சர்வக்ஞா

சில அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்
சில பிறர் செய்வதைக் கண்டு அறிந்து கொள்
மற்றவை தானே அறிந்து செய்யச் சொல்கிறார் சர்வக்ஞா

விளக்கம் :- உலகில் எல்லாம் நமக்குத் தெரியாது. சர்வக்ஞா கூற்றுப்படி சில விஷயங்கள் பிறர் சொல்வதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் இன்னும் சிலவை பிறர் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவை அவரவர் அனுபவத்தில் கற்றுத் தெரிய வேண்டும்

4)மூர்கநிகே புத்தியனு நூர்க்கால பேளிதறு 
கோர்க்கல்ல மேல் மள கரெதரே 
ஆ கல்லு நீரு குடிவுதே சர்வஞ்யா

அறிவிலிக்கு  நூறாண்டு புத்திமதி சொலவது
பெருமழை கல்லில் வீழ்வதற்கொப்பாகும்
கல் ஒருக்காலும் நீரைப் பருகாது

விளக்கம் :- ஒரு முட்டாளுக்கு அறிவுரை கூறுவது கல்லின் மேல் பொழியும் மழைக்கொப்பாகும் அறிவிலி புத்திமதிகளை ஏற்கமாட்டான்  கல் நீரை  உறிய முடியாததுபோல

5) சித்தவுஇல்லதே (g)குடிய சுத்திதோடெஃபலவேனு
எத்து (g)கான்னவனு ஹொத்துத
நித்யதல்லி சுத்தி(b)பந்தந்தே சர்வக்ஞ

மனம் எங்கோ அலைய கோவிலைச் சுற்றுவதில் என்னபலன்
செக்கிழுக்கும் எருதின் சுற்றலுக்கு அது ஒப்பாகும்

 விளக்கம்ள்- கவுளிடம் மனம் லயிக்காமல் கோவிலைச் சுற்றுவதில் பலனேதுமில்லை. அச்செயல் செக்கிழுக்கும் மாடு போல் செயல் படுவதற்கு ஒப்பாகும்

6) சாலவனு கொம்பாக ஹாலோகருண்டந்தே 
சாலிகரு பண்டு எலெவாக 
கிப்பதிய கீலு முரிதந்தே சர்வஞ்யா

கடன் வாங்கும்போது தேனினும் இனிக்கும் பணம்
திருப்பிக் கொடுக்கக் கேட்கப் படும்போது
முதுகெலும்பை முறிபது போல் இருக்கிறது

விளக்கம்:- கடன் வாங்குவது வரமல்ல  சாபம் என்று உணர வேண்டும் கடன் பெறுகையில் இனிக்கும் பணம் திருப்பிக் கேட்கும் போது முதுகெலும்பை முறிப்பது போல் இருக்கும் கடன் முதுகெலும்பை முறிக்கிறதோ இல்லையோ அன்பை முறிக்கும்

7) அன்னவனு இக்குவுது நன்னியனு நுடியுவுது
தானந்தே பரார (b)பாகெடொடெ
கைலாச (b)பின்ன அனவக்கு  சர்வக்ஞ 

பசித்தோர்க்கு அன்னமிடல் உணமை உரைத்தல்
தன்னைப் போல் பிறரை பாவிப்பது
வானுலகத்துக்கு உயர்த்தும்

விளக்கம்:- சொர்க்கத்துக்குப் போக அனைவரும் விரும்புவர். பசித்து வருவோர்க்கு உணவிடுதல் என்றும் உண்மைபேஅல் தன் உயிர் போல் அனைத்தையும் எண்ணுவது இவையெல்லாம் வானுலகேக வழிவகுக்கும் 

( சென்றிடுவீர் எட்டு திசையிலும்  கொணர்ந்திங்கு சேர்ப்பீர்  கலைச் செல்வத்தை என்ற பாரதிக்கு நன்றி )
 சர்வக்ஞா எழுதிய பல பாடல்கள் கிடைக்கவில்லை  எனக்கு கன்னடம் டெரியாதாஅல் கன்னடட்தில்தேடவில்லை

சர்வக்ஞாn