ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தேங்காயும் மாங்காயும்



                                                      தேங்காயும்   மாங்காயு ம்         
                                                     ------------------------------------------


 என் வீட்டில் ஒரு தென்னையும் ஒரு மாமரமும் உண்டு தென்னையில் காய்த்து காய்கள் தானாகவே கீழே விழுவதுண்டு  சாலை நோக்கி சாய்ந்து  இருப்பதால் யார் தலையிலாவது விழாமல் இருக்க வேண்டுமே என்று  கவலை  காய்ந்த மட்டைகளும் விழும் இவற்றை  அப்புறப்படுத்துவதே பெரியவேலை  முன்பெல்லாம் ஒவ்வொரு மட்டையை  அப்புறப்படுத்த ஆட்களை தேட வேண்டி உள்ளது அதுவும் ரூபாய் இருபது கொடுக்கவேண்டும் துப்புரவாளர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள் காய்த்த தேங்காய்களை பறிக்க ஆட்கள்கிடைப்பதே குதிரைக் கொம்பு  வந்த்வர் தொலை பேசி எண்ணை  வாங்கி வைத்துக் கொண்டு  கூப்பிட்டால்  வருவதே சிரமம்   வீடு நெரிசலான சாலையில் இருப்பதால்நடமாட்டம் இல்லாத அதாவது  குறைந்த நேரத்தில்பறிக்க வேண்டும்  ஒரு வழியாக தென்னந்தோப்பு இருப்பவரை  பரிச்சயப்படுத்திக்கொண்டோம் ஆனால்லேசில் தொடர்பில்வரமாட்டார் அப்படியே வந்தாலும்இன்று நாளை என்று சால்ஜாப்பு சொல்வார்
 இம்முறை  நாங்கள் எதிர்பாரா விதமாக வந்துகாய்களை  பறித்துபோட்டு எங்கள் சங்கடம் தீர்த்தார்
இங்கெல்லாம்  ஒரு தேங்காய் ரூ 30 லிருந்து  ரூ 40 வரை விற்கிறது வந்தவர் மரத்தில் இருந்த  காய்கள் அனைத்தையும்  பறித்தார்  இதில் இள நீர் காய்களும் அடங்கும்  ஒரு இள நீர் ரூ 40 க்கு குறைவாய் கிடைப்பதில்லை  பறித்தவற்றில்  இள நீர் காய்களுமிருந்ததால்  அவர் எங்களுக்கு ரூ  500 கொடுத்துச்சென்றார்  எங்களுக்கு காயும் கிடைத்தது ஒரு சங்க்சடமும் தீர்ந்தது இந்த முறை தேங்காய்  பறிக்கும் வேலை நன்றாகவே நடந்தது
அதேபோல்  மாங்காய் தொந்தரவும் தீரும் என்று நம்புகிறோம் இப்போது மரத்தில் காய்கள் குறைவாக இருக்கிறது  இருப்பதும்வெகு உயரத்தில் இருக்கிற்து முடிந்தால் மரத்தை  குத்தகைக்கு விட உத்தேசம் ஆனால்  அதற்கும் ஆட்கள்வேணுமே  தென்னை பிரச்சனை தீர்ந்தது போல் மாவின் பிரச்சனையும் தீரும் என்றுநம்புகிறோம்

புதன், 15 ஏப்ரல், 2020

கம்பராமாயணத்தில் அங்கதன்


                                               கம்பராமாயணத்தில்  அங்கதன்


       
தொலைக்காட்சியில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தேன் வாலி வதம் முடிந்து எல்லோரு ஏதேதோ பேசிக் கொண்டி ருந்தனர் மொழி ஹிந்தி ஆதலால்; ஏதோ குன்சா புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தேன்   அப்போது நான்  அங்கதன் பற்றிய  பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது கூடவே அதையே ஏன்மீள் பதிவாக்கக் கூடாது  என்னும் எண்ணமும் வந்தது  நினைத்ததை முடிப்பவன் நானல்லவா  இதோ அந்த பதிவு மீண்டும்

ராமனின்   கதையை ஒரே வாக்கியத்தில் எழுதி பதிவிட்டிருந்தேன்  பலரும் பாராட்டி கருத்துரை தந்தனர்  அதில் ஒருபின்னூட்டம் என்னைக் கவர்ந்தது

(அங்கதனைக் காணோம் - என் பேவரிட் கேரக்டர்களுள் ஒன்று. 'தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்றவனை தினம் பார்த்தபடி அவனால் எப்படி பணிவிடை செய்யமுடிந்தது?' என்பதற்கான motivation இன்று வரைக் கிடைக்கவில்லை.) இந்தக் கருத்து திரு அப்பாதுரை எழுதியது நானும் எவ்வாறு அங்கதனை  மிஸ்செய்தென் என்று தெரியவில்லை ஒரு வேளை அங்கதன்பாத்திரப்படைப்புஎன்னைக் கவராது இருந்திருக்கலாம்  எனக்கு ராமாயணக்கதை புகட்டியவர்கள் அங்கதனைப்பற்றி அதிகம் அறியாதிருந்திருக்கலாம் வால்மீகி ராமயணத்தை அடிப்படையாகக்கதை சொன்னதாலும் இருக்கலாம்
ஆனால் கம்பன் அங்கதனுக்கு ஒருமுக்கிய இடமே கொடுத்திருந்தான் அங்கதன் பற்றி கம்பனில் நுழைந்து தேடியபோது ஒரு இலக்கியச்சுவையை நான் சுவைத்திருக்கவில்லை என்றே தோன்றியது
அங்கதனைப் பற்றி அறிய புகுந்தபோது வாலி பற்றியும்  இன்னும் சில விஷயங்கள் கிடைத்தது
ராமனுக்கு அனுமன் வாலி பற்றிக் கூறுவதாக வரும் இருபாடல்களைக் கூறுகிறேன்
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன் மலையின் மேலுளான்
சூலிதன் அருள் துறையின் முற்றினான்
வாலி என்று உளான்வரம்பு இல் ஆற்றலான்.

(நான்கு வேதமாகிய பயிர்கள் வளர்வதற்கு வேலி போன்றவன். சூலப்படையுடைய சிவபெருமான் மீது.அளவற்ற பக்தி உடையவன்.அப்பெருமானின் இன்னருள் பெற்றவன்.எல்லை இல்லா ஆற்றல் பெற்றவன்.)

கழறு தேவரோடுஅவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீ விட
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.

 ( வாலியின் ஆற்றலுக்கு எல்லை எது என்றால், அது அவன் கடலைக் கடைந்ததே ஆகும். தேவரும் அவுணரும் பாற்கடலைக் கடைந்து களைத்த போது, இவன் ஒருவனே மந்தார மலை என்னும் மத்தின் அகடு தேயக் கடைந்து காட்டினான் )
இந்தக் குறிப்பு அதிகம் அறியப் படாததோ, இல்லை கூறப் படாததோ ஆகும்.
வாலி உயிர் துறக்கும்  போதுராமனிடம் வேண்டினானாம்

“ என் தம்பி சுக்கிரீவன் மலர்களில் உண்டான மதுவைக் குடித்து அறிவு  மாறுபடும் போது அவன் மீது சினம் கொண்டு இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய யமனை செலுத்தாதிருக்க வேண்டும்” எனும் பொருள் படும் இப்பாடலும் என்னைக் கவர்ந்தது.
.
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.
வாலி இறக்கும் தருவாயில் தன் மகன் அங்கதனை அழைத்து வரக் கூறுகிறான்.சந்திர மண்டலம் வானிலிருந்து கீழே விழுந்து கிடக்க , அச்சந்திரன் மீது விண்ணிலிருந்து ஒரு விண் மீன் விழுந்தது போல தரையின் மீது விழுந்து கிடக்கும் வாலியின் மேல் அவன் விழுந்தான்”.எட்டு திக்கு யானைகளுக்கும் தோல்வியை உண்டாக்கியவன் இராவணன்.அவன் உள்ளம் உன் வாலின் தன்மையை நினைக்கும் போதெல்லாம்பட படவென அடிக்கும் அச்சம் ,இன்று நீ இறப்பதால் நீங்கி விடும் அல்லவா...” என்றெல்லாம் கூறிக் கலங்க,அதற்கு வாலிஇராவணனை வென்ற தன்னை வென்றதால் அது ராமன் செய்த நல்வினை என்று கூறி , ராமனிடம் அடைக்கலம் என்று அங்கதனை சேர்க்கிறான்.

இலங்கையின் மீது படை யெடுத்துச் செல்லும் முன் இராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்புகிறான் ராமன்..வாயுவின் மகனான அனுமன் இராவணனிடம் தூதனாகச் சென்றால்,அனுமன் அல்லாது இலங்கைக்குள் வந்து திரும்பும் வல்லமை உடையவர் வேறொருவர் இங்கில்லை என்று ராவணன் நினைக்கலாம் அல்லவாஅங்கதனே தக்கவன் என்று தேர்ந்தெடுக்கப் படுகிறான்தூது சொல்லாக சீதையை விடுவித்து உயிர் பிழைப்பதா இல்லை ராமன் அம்புகளால் பத்து தலைகளும் துண்டாவதா இதில் ஒன்றை ஏற்கக் கூறுமாறு இராவணனிடம் அங்கதன் கேட்க வேண்டும்
.. இராவணன் முன் தூதுவனாக வந்த அங்கதனைப் பார்த்து “இன்று இப்போது இங்கு வந்த நீ யார்.?வந்த காரணம் யாது. ?என் ஏவலாட்கள் கொன்று தின்பதன் முன் நானறியத் தெரிவிப்பாயாக,”என்று வினவ அங்கதனும் பற்கள் வெளியே விளங்கச் சிரித்தான்.
நின்றவன் தன்னை யன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து இங்கு
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய என்றான்.
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான்.
இந்திரனின் மகனும்,முன் காலத்தில் ஒப்பிலா இராவணன் என்பவனை,அவனது தோள்களுடனே வாலில் தொங்குமாறு கட்டி எல்லா திசைகளிலும் பாய்ந்து திரிந்தவனும் ,தேவர்கள் உண்ண மந்தார மலையாலே பாற்கடலைக் கடைந்தவனுமான வாலியின் மைந்தன் நான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்
.
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னை
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்.தேவருண்ண
மந்தாரப் பொருப்பால் வேலைக் கலக்கினான் மைந்தன் என்றான்.

என்நண்பனின் மகன் நீ
உன் தந்தையைக் கொன்றவனுக்கு நீ ஏவல் செய்யல் வேண்டாம் உனக்கு குரங்கினத் தலைவன் பதவி நான் தருகிறேன் என்று அங்கதனைத் தன் வசம் ஈர்க்க முயன்ற ராவணனிடம்

வாய் தரத் தக்க சொல்லி என்னையுன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்.

 இவ்விடமொன்று கூற வேண்டும் கம்பராமாயணப் பாடல்களில் பல இடங்களில் ஒருவரை தாழ்வாகஎண்ண  நாய் என்னும் சொல்லை உபயோகித்த்ருக்கிறார்  கம்பன்   அதை குற்ப்பிடப்போனால் தனிபதிவாகி விடும் 
ராவணனை வென்று சீதையை மீட்டு அயோத்தி  சென்று

மகுடம்சூடும்போதுபலராலுமெடுத்தாளப்படும்பாடல் இதோ

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெம் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத்தாள் சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.

 கம்ப ராமாயணம் ஒரு இலக்கியச் சோலை
 இப்போதெல்லாம்  பதிவெழுதபல விஷயங்கள் உள்ளடக்கியது  கம்பனை முழுவதும் கற்று அறிய ஆவல்  ஆனால்  என்ன படித்தாலும்  கடல் நீரை பூனை நக்கி குடிப்பது போல்தான் இருக்கிறது















சனி, 11 ஏப்ரல், 2020

ஒரு பல்சுவை


                                                  ஒரு பல் சுவை
                                                  ---------------------------



       கொரோன வந்தாலும் வந்தது  வாட்ஸாப் செய்திகளுக்கு பஞ்சமில்லை எனக்கு வரும் செய்திகள்  சிலவற்றை பகிரவு செய்திருக்கிறேன்பல செய்திகள்வெறும்பொழுது போக்காக எடுத்துக்கொள்ள் வேண்டும் வாட்சாஆப் செய்திகள் பலதும்  வேலை இல்லாதவர் பொழுதுபோக்க  என்றெ இருப்பதுபோல் இருக்கிற்து  செய்தி அனுப்பப்பட்டவர் ஏதோ அவரையே குரிப்பிடுவதுபோல் நினைக்கக் கூடாதுசில செய்திகள் மாறுபட்ட சிந்தனைகளாக்  இருக்கும்  அப்படி வந்தசெய்தி ஒன்று சும்மா தமாஷாகமட்டும் எடுத்துக் கொண்டால் குறை இருக்காது  சிலசெய்திகள் மோடியை விமர்சிப்பது போலும் இருக்கும்

  கொரோனாவில் 2 வகை இருப்பதாகத் தெரிகிறது. ஒன்னுக்குக் கண் தெரியும், ஆனா காது கேட்காது. இன்னொன்னுக்கு காது கேட்கும், ஆனா கண் தெரியாது. இது உலத்துல யாருமே கண்டு பிடிக்காத உண்மை. கை தட்டி 50% காலியாச்சு, இப்ப லைட் அடிச்சு மீதி 50% காலியாகும். இது புரியாம நக்கலும், நையாண்டியும். சே! எல்லமே வெறும்  tokenism

                                ----------------------------------------------------------
*A pilot was told to transfer mad people from Nigeria to U.S.A. He agreed and carried them in his plane. The whole plane was so noisy.*
*Later one of the mad men approached the pilot in the cockpit and asked him, "Please can you teach me how to fly the aeroplane?"*
*The pilot replied, "I will teach you how to fly if you will tell your friends to stop making noise."*
*The mad man went back inside the cabin. After some minutes, the whole plane was silent.*
*Some minutes later the mad man approached the pilot again and told him that everywhere was silent now.*
*The pilot became happy and asked "WHAT DID YOU DO TO MAKE THEM SO QUIET?*

*The mad man replied, "I opened the door for them to go and play outside."*

*The pilot fainted.*
*Don't just laugh alone.*
வாட்ஸாப்  செய்திகளை ஃபார்வார்ட் செய்யும்போது கவனம்தேவை  என்று புரிந்துகொண்டேன்
                           --------------------------------------------
கொரோனா எல்லோரையும்  கவலையிலும்  பீதியிலும் ஆழ்த்தி இருக்கிறது அதிலுமொரு ஆறுதல்மருந்தே கண்டு பிடிக்கபடாமல் இருந்தாலும் பீதிஅடைய  வைக்கும் கொரோனா தொற்றிலிருந்து  குணமாகி வருபவர்களுமிருக்கிறர்கள் விளங்காகாதவிஷயம் இருந்தாலும்  ஒரு ஆறுதல்  இந்தியாவில்  மரண்ப்பவர்களை விட குணமாகி வருபவர் அதிகம்      அறுபது வயதுக்கு மேற்பட்டோர் அதிக கவனம் தேவை  கொரோனாவல் மட்டுமல்ல
  எனக்கு  அந்தகவலை இல்லை என்மனைவி பார்த்துக் கொள்வாள் முக்கியமாக வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் பாத்ரூமில் இதற்கென்றே பிடிமான்ச்துக்கு ஒருகயிறு    கட்டி வைத்திருக்கிறாள்  ஒரு கி மீ தூரத்துக்கும் கீழேயே  நடக்க ஒருமணிநேரத்துக்கும்  அதிகமாகும்  எனக்கு  இருந்தும் அதுஒன்றே  தேகப் பயிற்சி என்பதால்நானும்  நடக்கிறேன்  அளவான மிதமான உணவு  நேரத்துக்கு கிடைக்கும் படி மனைவி பார்த்துக் கொள்வாள் தினமுமிரண்டு முறை ஆவிபிடிப்பேன்   இரும்ல் சளி வராமல் தடுக்கும் படுக்கும் முன்  சிறிது பாலில்  மஞ்சப்பொடி போட்டு கொதிக்க வைத்தது கொடுப்பாள் மாலையில்கார்ன்  ஃப்லேக்ஸ்  வழைப்பழத்துடன் பாலும்  கூடவே நட்ஸ் சிறிது தாய் இல்லையே என்று கவலைப்பட்ட நாட்கள்உண்டு இப்போது தாரமே தாயாய் 
                       ----------------------------------------------         

நமசிவாய என்றால் நலம் tதரும்  பிணி விலகும் என்று தஞ்சையம்பதி துரைசெல்வராஜு எழுதி இருந்தார் கொரோனா தொற்று பெருகி வரும் வேளையில்இப்பாட்டு நல்ம்தரலாம்  




iஒரு பக்திப்பாடல் 


















*