இப்படியும் ஒரு சாமியார்..
-----------------------------------
நான் இதற்கு முன்பு ஐந்தும் இரண்டும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் எப்படி ஒரு சாமியார் ஒரு கணவன் மனைவியை ஏமாற்றி பணம் வாங்கிச் சென்றார் என்று கதை எழுதியிருந்தேன்.
அண்மையில் நான் கோயமுத்தூரிலிருந்து குருவாயூர் சென்று திரும்பி வரும் போது பாலக்காட்டில் ஒரு வீட்டுக்குச் சென்றேன். என் தம்பியின் மாமியார் வீடு அது. அது இருநூறு வருடத்துக்கு முந்தைய கட்டுமான வீடு. அங்கு ஒரு அறையில் ஒரு நந்தா விளக்கு வெகு காலமாக அணையாமல் காக்கப் பட்டு வருகிறது. அதன் உண்மைப் பின்னணியைப் பற்றி ஒரு சம்பவம் விவரிக்கப் பட்டது. அவர்களின் முன்னோரில் மூதாட்டி ஒருவர் மிகவும் கொடைக்குணம் மிகுந்தவர். அதிதிக்கு உணவு படைத்த பிறகே தான் உண்ணும் வழக்கம் கொண்டவர். ஆனால் அவருடைய இந்த உதார குணம் அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் மூதாட்டி அதை சட்டை செய்யாமல் வறியோரையும் முதியோரையும், பக்தர்களையும் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறார்.
ஒரு முறை சுவாமிஜி ஒருவர் இவர்கள் வீட்டுக்கு வந்து மதுரை மீனாட்சியின் அருளும் முருகனின் கடாட்சமும் இவர்களுக்கு இருப்பதாகவும், தினமும் விளக்கேற்றி வழிபடுமாறும் கூறி சில மயில் பீலி இதழ்களைக் கொடுத்து அதை பாதுகாக்குமாறும் கூறி இருக்கிறார். வழக்கம்போல் அந்த மூதாட்டி அவருக்கு உணவளித்து உபசரிக்க வழக்கம்போல் உறவினர்கள் இவரைக் குறைகூற வந்த சுவாமிகள் புறப்பட்டுச் செல்லும்போது அவரை வழியனுப்ப வந்த அம்மூதாட்டி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வந்தவர் காணாமல் போய்விட்டார். அவர் நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு ஒளிப் பிழம்பு வானில் போவதைக் கண்டவருக்கு வந்தவர் சாட்சாத் முருகனே என்னும் நம்பிக்கை தோன்ற, அன்று ஏற்றப்பட்ட தீபம் இன்னும் அணையாமல் பாதுகாக்கப் படுவதாகக் கூறினார்கள்.
ஆண்டுதோறும் தை மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடி அந்த விளக்கு பூஜையை ஒரு விழாவாகவே நடத்துகிறார்களாம்.
---------------------------------------------------------------------------

அபூர்வமான நிகழ்வுகள்....
ReplyDeleteவிமர்சிக்க எனக்குத் தகுதியில்லை என நினைக்கிறேன். உண்மை பக்திக்கும் நல்ல மனத்திற்கும் இறைவன் இரங்குவான் என்பதற்கு சாட்சி.
சுமார் எந்த காலகட்டத்தில் நடந்தது என்று கூற இயலுமா சார்?
அபூர்வத் தகவல்
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 2
அபூர்வ நிகழ்வு.
ReplyDeleteஅருமையான, அரிய செய்தி.
ReplyDeleteநன்றி ஐயா.
ம் உண்மையான
ReplyDeleteஎதிர்பார்ப்பில அன்புக்கு
எடுத்துக்காட்டு
அபூர்வ நிகழ்வு.வியப்பு மேலிடுகிறது!
ReplyDeleteஇதுபோல சில நிகழ்வுகள் அனுபவித்தவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.
ReplyDeleteஇப்படி தான் சபரி மலை ஜோதியை கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. இன்று உண்மை அம்பலத்தில்.. மன்னிக்கவும் தோனுச்சு சொல்லிட்டேன்
ReplyDelete@ஷக்திப்ரபா,
ReplyDelete@ரமணி,
@டாக்டர் கந்தசாமி,
@ரத்னவேல்,
@சிவசங்கர்,
@கே.பி.ஜனா,
@லக்ஷ்மி,
@சூர்யஜீவா.
அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இச்சமயத்தில் நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதில் நான் எழுதியுள்ளது, நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது சொல்லிக் கேட்டதுதான். உண்மையா கற்பனையா கதையா என்னும் ஆராய்ச்சி ஏதும் செய்யவில்லை. எல்லோரும் சிந்திக்கும் தகுதி பெற்றவர்களே. மேலும் என் பதிவுக்குப் பின்னூட்டமிடுபவர்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைத் தாராளமாகப் பதிவு செய்யலாம். மீண்டும் நன்றி.