திருமணங்கள் பல விதம்.
-----------------------------------
நேற்று ஒரு திருமணத்துக்குச்
சென்றிருந்தோம். திருமணங்களில்தான் இப்போதெல்லாம் உறவுகளைப் பார்க்க முடிகிறது.
பார்க்க முடிகிறது என்று சொல்வதைவிட அறிமுகப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே
நிஜம்.மாமாக்களும் அத்தைகளும், சித்தப்பா சித்திகளில் ஓரிருவரைத்தவிர பலரும் பரகதி
அடைந்து விட்டதால் அவர்களின் அடுத்த தலைமுறையினர், இன்று சீனியர்களாகி
கூடியவரையில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அழைக்கிறார்கள் .அப்படி அழைக்கப் பட்ட
ஒரு திருமணம் ஆரிய சமாஜ் முறைப்படி நடந்தது. மணமகன் வெள்ளையினத்தவன். வரனும்
வதுவும் காதலித்து முறைப்படி பெற்றோர் அனுமதியுடன் ( கொடுக்காவிட்டால் நிற்கவா
போகிறது.?) திருமணம் நடக்க அது காணச் சென்றிருந்தோம். மந்திரங்கள்
சமுஸ்கிருதத்தில் கூறப் பட . உடனே அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து விளக்கப்
பட்டது. சடங்குகளின் காரணங்களும் விளக்கப் பட்டது.(வெள்ளைக்காரர்களுக்காக ஆங்கில மொழிமாற்றம்.!மற்றவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அனுமானம்.!) ஆனால் அந்த நிகழ்ச்சி அதன் solemnity இழந்து தமாஷாகவே அணுகப்
பட்டது,போல் தோன்றியது. அங்கு மட்டுமல்ல, பெரும்பாலான திருமணங்களில் சடங்குகள் ஏதோ
செய்ய வேண்டுமே என்பதுபோல் செய்யப் படுகின்றன.
முன் காலத்தில் இளவயதுகளில் திருமணம் செய்வித்தபோது, மணப்பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் நன்றாக விளையாட்டாக அறிந்துகொள்ள ஏற்படுத்தப் பட்ட நிகழ்ச்சிகளே, மாமன் தோளில் அமர்ந்து மாலை மாற்றுவதும், நலங்குக்கு தேங்காய் உருட்டி விளையாடுவதும், குடத்தில்கைவிட்டு மோதிரம் எடுப்பது போன்றவை இருந்திருக்க வேண்டும். அவற்றை ( just imagine the plight of those who shoukder the bride and groom with their sixty kg weight.!) இன்று பார்க்கும்போது தமாஷல்லாமல் வேறென்ன.?
முன் காலத்தில் இளவயதுகளில் திருமணம் செய்வித்தபோது, மணப்பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் நன்றாக விளையாட்டாக அறிந்துகொள்ள ஏற்படுத்தப் பட்ட நிகழ்ச்சிகளே, மாமன் தோளில் அமர்ந்து மாலை மாற்றுவதும், நலங்குக்கு தேங்காய் உருட்டி விளையாடுவதும், குடத்தில்கைவிட்டு மோதிரம் எடுப்பது போன்றவை இருந்திருக்க வேண்டும். அவற்றை ( just imagine the plight of those who shoukder the bride and groom with their sixty kg weight.!) இன்று பார்க்கும்போது தமாஷல்லாமல் வேறென்ன.?
ஒரு திருமண விழாவுக்குச் சென்றபோது , முதலில் எனக்கு ஏதுமே விளங்கவில்லை.
திருமணம் நடத்திவைக்கும் புரோகிதர் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தார்.
கூட்டத்தில் நாங்கள் பின்னால் நின்றிருந்தோம். பிறகு பார்த்தால் புரோகிதரே
பெண்ணுக்குத் தாலியும் கட்டினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் புரோகிதர் அல்ல.
அவர்தான் மாப்பிள்ளை என்று. .அந்த மாப்பிள்ளை இன்றைய ( அல்ல நாளைய ) சமுதாயத்தின்
பிரதிநிதி என்று, குடுமி வைத்து, தாடியுடன் கடுக்கன் எல்லா அணிந்திருந்த அவர் ஒரு MNC-ல் ஒரு உயர்ந்த பதவியில்
இருக்கிறார் என்று. Appearances can be deceptive என்று
விளங்குகிறது.நேற்றைய வழக்கங்கள் இன்றைய ஃபாஷனோ.?
காலங்கள் மாற மாற சம்பிரதாயங்களும் மாறி வருகின்றன. தவிர்க்க முடியாதது.
ReplyDeleteதமாஷாக இணைகிறார்கள்... தமா'சாக' பிரிகிறார்கள்...
ReplyDelete(சாக = பெற்றவர்களையும் உறவுகளையும்)
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
@ திண்டுக்கல் தனபாலன்
உடன் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
நல்ல பதிவு. ரசித்தேன்.
ReplyDeleteஇப்போது ஐடி உத்தியோகஸ்தர்களில் பலரும் பழமைக்கு மாறி வருகின்றனர். ஆகவே நீங்கள் பார்த்த மாப்பிள்ளை புதுமை அல்ல. எல்லாமும் கலந்தே இருக்கிறது. மந்திரங்களின் அர்த்தங்களை நாமும் ஒரு காலத்தில் தெரிந்து கொண்டு தான் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் கால மாற்றத்தில் மேஜை, நாற்காலி வேலை என்றானதும் வேத அத்யயனம் என்பது சுத்தமாய்ப் போய்விட்டது. ஆகவே மந்திரங்களின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்வது நல்லதே.
ReplyDelete\\திருமணங்களில்தான் இப்போதெல்லாம் உறவுகளைப் பார்க்க முடிகிறது. பார்க்க முடிகிறது என்று சொல்வதைவிட அறிமுகப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே நிஜம்.\\
ReplyDeleteதாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி ஐயா. முன்பெல்லாம் உறவினர்கள் வீடுகளுக்கு வர போக இருக்க, அடிக்கடி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. திருமணம் என்றால் கூட ஒன்றிரண்டு நாளாவது முன்னதாக போய் எல்லா வேலைகளிலும் பங்கெடுப்போம். இப்போது எல்லாவற்றையும் ஒப்பந்தக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். திருமண நேரத்துக்கு வந்தால் போதுமென்று அழைப்பு கொடுக்கும்போது சாடையாகவும் சொல்லப்பட்டுவிடுகிறது. நமக்கும் நேரம் மிச்சம் வேலை மிச்சம் என்று நிம்மதி. மொத்தத்தில் அன்று பின்னிப்பிணைந்திருந்த உறவு வட்டங்கள் இப்போது ஒன்றையொன்று விளிம்பில் தொட்டுக்கொண்டு இருக்கின்றன, பட்டென விலகிச் செல்லும் வாய்ப்புகளை எதிர்நோக்கியபடி!
வெவ்வேறு இன, மத, மொழிகளோடு இணையும் திருமண உறவுகளில் அர்த்தமறியாமல் நடத்தப்படும் சடங்குகள் வேடிக்கையாக இருந்தாலும் இது போன்ற திருமணங்களில் இன்னும் சடங்குகள் நடத்தப்படுகிறது என்பதே வியப்பளிப்பதாக உள்ளது.
அனுபவப் பகிர்வுக்கு நன்றி ஐயா.
திருமணத்தில் நலுங்கு வைப்பது (தேங்காய் உருட்டி விளையாடுவது, பூ பந்து , அப்பளம் தட்டுவது, எல்லாம்)
ReplyDeleteமாப்பிள்ளை, பெண்ணை சகஜமாய் பழகவைக்க அந்தக்காலத்தில் வைத்தார்கள். இப்போது சகஜமாய் அலைபேசியில் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள், இருந்தாலும் காலையிலிருந்து சடங்குகள் காரணமாய் இரு வீட்டாரும் களைத்து போய் இருப்பார்கள் மாலையில் உள்ள இந்த நலுங்கு விளையாட்டால் இரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மாலை விழாவை தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் திறமையைக் காட்டும் மேடையாக பயன்படுத்திக் கொண்டு பாட்டு, நடனம், என்று நிகழ்ச்சி நடத்தி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
திருமண சடங்குகள் ஒவ்வொன்றும் காரண காரியங்களுக்காக செய்யப்பட்டது அதை புரிந்து கொண்டு செய்தால் நன்மை தரும்.
//திருமணங்களில்தான் இப்போதெல்லாம் உறவுகளைப் பார்க்க முடிகிறது. பார்க்க முடிகிறது என்று சொல்வதைவிட அறிமுகப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே நிஜம்//
ReplyDeleteதிருமணம், மற்றும் குடும்ப விழாக்களில் தான் உறவினர்களை பார்க்க முடிகிறது என்பது உண்மைதான்.
பெரியவர்கள் குடுமபத்தில் உள்ள சிறியவர்களை அறிமுகப்படுத்துவது நடக்கிறது.
சொந்தங்கள் தெரியமாட்டேன் என்கிறது அடிக்கடி வந்து போய் கொண்டு இருந்தால் தானே தெரியும்.
இந்த மாதிரி மனம் விரும்பி திருமணம் நடப்பதில் இரு வீட்டு சடங்குகளும் கடைபிடிக்கப் படுகிறது சில இடங்களில்.
எப்படியோ இருகுடும்பமும், மாப்பிள்ளை, பெண்ணும் ஒற்றுமையாக வாழ்ந்தால் சந்தோஷம்.
வாழ்க வளமுடன்.
//திருமணங்களில்தான் இப்போதெல்லாம் உறவுகளைப் பார்க்க முடிகிறது. பார்க்க முடிகிறது என்று சொல்வதைவிட அறிமுகப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே நிஜம்.//
ReplyDeleteஆம், அதுதான் நிஜம்.
//ஒரு திருமண விழாவுக்குச் சென்றபோது , முதலில் எனக்கு ஏதுமே விளங்கவில்லை. திருமணம் நடத்திவைக்கும் புரோகிதர் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தார். கூட்டத்தில் நாங்கள் பின்னால் நின்றிருந்தோம். பிறகு பார்த்தால் புரோகிதரே பெண்ணுக்குத் தாலியும் கட்டினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் புரோகிதர் அல்ல. அவர்தான் மாப்பிள்ளை என்று. .அந்த மாப்பிள்ளை இன்றைய ( அல்ல நாளைய ) சமுதாயத்தின் பிரதிநிதி என்று, குடுமி வைத்து, தாடியுடன் கடுக்கன் எல்லா அணிந்திருந்த அவர் ஒரு MNC-ல் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்று. Appearances can be deceptive என்று விளங்குகிறது.நேற்றைய வழக்கங்கள் இன்றைய ஃபாஷனோ.? //
ஆம். சிலர் ஏனோ இப்படி மாறித்தான் வருகிறார்கள்.
இந்த இடத்தில் நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். ;)))))
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
காலத்தின் கட்டாயம்.
ReplyDeleteவிசித்திரமான காட்சிகள்...
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
@ கீதமஞ்சரி
@ கோமதி அரசு
@ கோபு சார்
@ கரந்தை ஜெயக்குமார்
@ இராஜராஜேஸ்வரி.
சில நடப்புகள் பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.
திருமணமும் திருந்தாத மனங்களும் என்று சொல்லாமலேயே சொல்லி விட்டீர்கள்
ReplyDelete
ReplyDelete@ கவியாழி கண்ணதாசன்.வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகையை எதிர்
பார்க்கிறேன்.
நானே நேரில் சென்று பார்த்ததுபோன்ற ஒரு பிரமை. நேர்முக வர்ணனைக்கு நன்றி.
ReplyDelete//திருமணங்களில்தான் இப்போதெல்லாம் உறவுகளைப் பார்க்க முடிகிறது. பார்க்க முடிகிறது என்று சொல்வதைவிட அறிமுகப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே நிஜம்.//
ReplyDeleteGMB சார் உறவுகளை நாம் இசந்து கொண்டிருக்கிறோம். நம் ஈகோ அல்லது வேறு காரணங்களுக்காக (உம்) வீட்டிற்கு ஒரே குழந்தை குடும்பன்கள் பெருகி வருகின்றன. நம் அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகள் காலப் போக்கில் மறைந்து விடும் என்றே தோன்றுகிறது.
உங்கள் பதிவின் பிற பகுதி நல்ல நகைச்சுவை.
ரசித்தேன்.
Those days’ weddings were between two families, not just between two individuals. I know couples, after marriage still keep separate accounts like friends and they are proud of it. May be “கலி”.
ReplyDelete
ReplyDelete@ பக்கிரிசாமி.N.
முதல் வருகைக்கு நன்றி. உங்கள் மொழிமாற்றப் பதிவுகள் கண்டேன். நிதானமாக வந்து படிக்க வேண்டும். Interesting subject.!
புரோகிதரே தாலி கட்டினார் - திடுக்கிட்டுப் பிறகு சிரியோ சிரி.
ReplyDeleteஆரிய சமாஜ் முறைப்படி என்றால் என்னவென்ற் ஒரு வரி எழுதியிருக்கலாமே?
குடத்துக்குள் மோதிரம் தேடுவதா? கை மாட்டிக் கொண்டுவிட்டால்?