மாமுண்ணவே கண்ணா ஓடிவா...
-------------------------------
(சில நாட்களுக்கு முன் நான் குருவாயூருக்கு
நாராயணீய பாராயணம் செய்யச் சென்ற என் மனைவியுடன் சென்றிருந்தேன். பாராயணம்
முடிந்து அவர்கள் மலையாளத்தில் கண்ணனை உணவு உண்ண அழைப்பதுபோல் ஒரு பாட்டுப்
பாடினார்கள்.அதன் பொருள் எனக்கு அரைகுறையாய் விளங்கியது. வந்தது முதல் நானும் ஒரு
பாட்டு எழுத வேண்டும் என்று ஏனோ தோன்றியது. முயன்றிருக்கிறேன் அதுவே கீழே.)
கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி
கோவிந்தாஹரி கோவிந்தா.! ( கோவிந்தா...)
வெய்யிலில் ஓடி மண்ணிலே ஆடி
மேனி தளர்ந்தது போதுமே செல்வா
மண்ணுண்டவன் நீ என் கையால் இங்கு
மாமுண்ணவே கண்ணா ஓடிவா
..............( கோவிந்தா ஹரி...)
பசியால் வாடியே மங்கிய நின் முகம்
சோர்ந்ததே கண்ணா அதைக்
காணவே உன் தாய் எனக்குத் தாங்காதே
அதனால் மாமுண்ணவே கண்ணா ஓடி வா ......( கோவிந்தா ஹரி....)
.வற்றல்,பொரியலும் சாம்பாரும் சாதமும்
கட்டித்தயிர் கலந்து நான் தருவேன்
வேண்டிய வெண்ணை நெய்யும் கலந்து
மாமுண்ணவே கண்ணா ஓடி வா. ......( கோவிந்தா ஹரி....)
இனிக்கும் கனிவகை மூன்றும் உண்டு
ஊறுகாயுடன் பபபடமுண்டு பாயசம்
பணியாரம் எல்லாம், உண்டு மகிழ்ந்திட
மாமுண்ணவே கண்ணா ஓடிவா. ......( கோவிந்தா ஹரி....)
பாலும் பழமும் கிண்ணத்தில் வைத்தே
கோபியர் உன்னைச் சுற்றி ஆடியே
வாவென்றழைத்து உன் வாயினில் ஊட்ட.
மாமுண்ணவே கண்ணா ஓடிவா. ( கோவிந்தா ஹரி.....)
கொம்பும் குச்சியும் அக்குளில் வைத்திடு
ஆடும் பம்பரம் அரையினில் செருகிடு
அன்னிய்ர் எவரும் வந்தெடுக்க இயலுமோ
மாமுண்ணவே கண்ணா ஓடிவா. ( கோவிந்தா ஹரி....)
கெட்டித்தயிரும், பருப்பும் வெண்ணையும்
சப்பிகொட்டியே நீ உண்டால் கண்ணா
கார்நிற மேனியும் கருத்தும் மினுமினுக்கும்
மாமுண்ணவே கண்ணா ஓடிவா. ( கோவிந்தா ஹரி.....)
காகம் கொண்டு போய். நாயும் கொண்டு போய்
பூனை கொண்டு போய் , யார் கொண்டுபோயினும்
செல்வா, கிண்ணத்தில் இருப்பது தாராளம்
மாமுண்ணவே கண்ணா ஓடிவா. ( கோவிந்தா ஹரி.......)
---------------------------------------
( நான் பத்து வயதாயிருக்கும்போது என் தந்தை வழிப் பாட்டியுடன் சில காலம் எங்கள் கிராமத்தில் கோவிந்தராஜபுரத்தில் இருந்தேன். அவர் அக்காலத்தில் தினமும் காலையில் பாடும் பாட்டின் சில வரிகள் ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது ” ஐயனே உம்முடைய அழகான பாதத்தை நான் அர்ச்சித்திருப்பதும் எப்போ.”)
--------------------------------------------------------------
( நான் பத்து வயதாயிருக்கும்போது என் தந்தை வழிப் பாட்டியுடன் சில காலம் எங்கள் கிராமத்தில் கோவிந்தராஜபுரத்தில் இருந்தேன். அவர் அக்காலத்தில் தினமும் காலையில் பாடும் பாட்டின் சில வரிகள் ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது ” ஐயனே உம்முடைய அழகான பாதத்தை நான் அர்ச்சித்திருப்பதும் எப்போ.”)
--------------------------------------------------------------
//கெட்டித்தயிரும், பருப்பும் வெண்ணையும்
ReplyDeleteசப்பிகொட்டியே நீ உண்டால் கண்ணா
கார்நிற மேனியும் கருத்தும் மினுமினுக்கும்
மாமுண்ணவே கண்ணா ஓடிவா. ( கோவிந்தா ஹரி.....)//
;)))))
பாடல் வரிகள் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
அழகு... அருமை... இவ்வளவையும் கொடுத்தால் கண்ணன் ஓடி வந்து விடுவார்...! வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஅசத்தலான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteவாடா கண்ணா, விளையாடி விளையாடி களைத்துப்போய்விட்டாயே.. சாப்பிடலாம் வாடா (அன்போடு அழைக்கிறாள் அன்னை)
ReplyDeleteபோம்மா நான் வரமாட்டேன்
அப்படிச்சொல்லாதேடா.. பசியால் உன்முகம் எப்படி சோர்ந்து கிடக்கிறது வாடா சாப்பிட! (அன்போடு அக்கறையும் சேர்ந்துகொண்டது.)
ம்ஹூம் நான் மாட்டேன்,
இங்கே பார் உனக்குப் பிடித்த உணவுகள். பழங்கள் எல்லாமே இங்கு இருக்கின்றன, உனக்கு மிகவும் பிடித்த வெண்ணெயோடு நெய்யும் கூட தருவேன். வாடா கண்ணா… (ஆசை காட்டுகிறாள்)
வேண்டாம், நான் வரமாட்டேன்,
உனக்கு ஊட்ட எவ்வளவு கோபியர் காத்திருக்கிறார்கள் பார், அவர்களிடம் உணவூட்டிக்கொள்ள வாயேன்டா கண்ணா… (பிள்ளை சாப்பிடவேண்டுமே… மற்றுமோர் ஆசைகாட்டி மடக்கப்பார்க்கிறாள்)
யார் ஊட்டினாலும் நான் வரமாட்டேன், நான் விளையாட்டைப் பாதியில் விட்டு வரமாட்டேன். என் விளையாட்டுப் பொருட்களை யாராவது எடுத்துக்கொண்டுவிட்டால்…?
நீ உன் விளையாட்டுப்பொருட்களை கையோடு கொண்டுவந்திடு. கையில் போதவில்லையா? கக்கத்தில் இடுக்கிக்கொள், அரையில் செருகிக்கொள்.. (இந்த சமாதானத்துக்குப் பிறகேனும் வரமாட்டானா… ஏங்குகிறாள்)
நீ என்ன சொன்னாலும் வரமாட்டேன் அம்மா…
கண்ணா, இங்கே பார், நீ தயிரும் வெண்ணெயும் வாரிவளைத்துச் சாப்பிட்டால்தான் தகதகவென்று உன் மேனி மின்னும், இன்னும் பல கோபியரை உன்னழகால் நீ வசப்படுத்துவாய், வாடா கண்ணா… (மீண்டுமொரு தூண்டில்.)
ம்ஹூம்..
பாரடா பார், காகத்துக்கு இடுகிறேன், நாய்க்கு இடுகிறேன், பூனைக்கும் இடுகிறேன், சீக்கிரம் வா… உனக்கும் இடுவேன். இன்னும் கிண்ணம் நிறைந்தே இருக்கிறது வாடா கண்ணா…
( நீ வரவில்லையென்றால் உணவைப் பங்கிட்டுவிடுவேன் என்று பயமுறுத்துகிறாள், பின் குழந்தை முகவாட்டம் கண்டு இல்லையில்லை, எவ்வளவு கொடுத்தாலும் உன்பங்கு என்றைக்கும் குறையாது என்று உறுதியளிக்கிறாள்.)
எவ்வளவு நயமாய் விளையாட்டுக்குழந்தையை தாஜா செய்து சாப்பிட அழைக்கிறாள் அன்னை. ரசித்து மகிழ்ந்தேன். மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.
அருமையான கவிதை
ReplyDeleteஅழகான கவிதை
நெஞ்சைக் கொள்ளை
கொள்ளும் கவிதை அய்யா
நன்றி
அழகாய் ரசித்துப் பாடி மகிழவைக்கும் அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..!
ReplyDeleteகவிதையை வாய் விட்டுப் படித்தாலே குழந்தை கண்ணன் வந்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். சீக்கிரம் கண்ணன் வர நானும் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteபாடல் நன்றாக இருக்கிறது. பாடுவோர் பாடினால் ஆடக்கூடத் தோன்றும்.
ReplyDelete
ReplyDelete@ வை. கோபால கிருஷ்ணன்.
/ பாடல் வரிகள் அழகோ அழகு/ பாராட்டுக்கு நன்றி கோபு சார்.
@ திண்டுக்கல் தனபாலன்
@ பழனி கந்தசாமி
வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி டிடி, டாக்டர் சார்.
@ கீதமஞ்சரி.
உண்மை சொல்லப் போனால். கீதமஞ்சரி, இந்த பாட்டு எழுதியபோது இருந்ததை விட , உங்கள் பின்னூட்டம் படித்தபிறகு அதிகமாய் மனம் நிறைந்தது. நெடுநல்வாடைக்கே பொருள் கூறியவரல்லவா. ! நன்றி.
@ கரந்தை ஜெயக்குமார்
பாராட்டுக்கு நன்றி ஐயா.
@ இராஜராஜேஸ்வரி
மனதிற்குள் பாடிப் பார்த்தேன். சுமார் என்று தோன்றியது. வருகைக்கு நன்றி.
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
கண்ணன் வருவானா. ? காத்திருக்கிறேன்.
@ ஜீவி
/பாடல் நன்றாக இருக்கிறது/ வசிஷ்டர் வாயால் என்று சொல்வது நினைவுக்கு வருகிறது. நன்றி ஜீவி சார்.
பாட்டும் சாப்பாட்டு மெனுவும் நன்றாகவே உள்ளன.
ReplyDeleteகண்ணனை அழகாக, நன்றாகவே அழைத்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeletehttp://stotrarathna.blogspot.com/2020/06/unnu-guruvayurappaa-eat-oh-lord.html the poem inviting lord guruvayurappan to eat
ReplyDelete