காரண காரியங்கள் பதில்கள்.
----------------------------------------
சென்ற பதிவில் சில கேள்விகள் கேட்டிருந்தேன் நண்பர் திண்டுக்கல் தனபாலனின் பின்னூட்ட பதில்களை பார்க்காதவர்களுக்காகவும் கேள்விகள் கேட்ட நானும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருப்பதாலும் இந்தப் பதிவு. ஏனோ பதிவுகளில் விவாதங்கள்மிகவும் குறைந்தே வருகிறது
கேள்வி 1) வாயில் நிலைப்படிகளில்
உட்காரக் கூடாது .சரியா?
சரி எது தவறு எது என்று அவரவரே நிர்ணயிக்க வேண்டும்.நிலைப்
படிகள் எதிர்மறைச் சக்திகளை (negative
energy) உண்டு பண்ணுவதாக நம்பிக்கைக்கு வலு சேர்க்கச் சொல்லப்
படுகிறது தற்காலத்தில்
dowsing rod உபயோகித்து சரியா
தவறா என்று கண்டு கொள்ளலாம் என்கிறார்கள் இந்த டௌசிங் ராடின் உபயோகமே
கேள்விக்குறியாக உள்ளது. நிலத்தடியில் நீர் இருக்கிறதா என்று காண வாட்டர்
டிவைனர்கள் உபயோகிக்கும் ஒரு கருவிதான் டௌசிங் ராடுகள்.
கேள்வி 2) கர்ப்பிணிப் பெண்கள்
வயிற்றில் சலனம் அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாக இருக்கும் .சரியா?
இதற்கு மருத்துவ ரீதியாக எந்த
உறுதிப்பாடும் கிடையாது. பெண்குழந்தைகளின் இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதாகச்
சொல்லப் படுகிறது. மேலும் பெண்குழந்தைன் கரு தாயின் வயிற்றில் அதிக திரவத்துக்குள்
மிதப்பதாகச்சொல்லப் படுகிறது அதனால்தானோ என்னவொ கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு
பெரிதாயிருந்தால் பிறக்கப் போவது பெண்சிசுவே என்று ’பெரிசுகள்’ சொல்லக்
கேட்கிறோம்.
கேள்வி 3) கிருகப் பிரவேசம்
நடத்தும் போது வாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள் ஏன்.?
கிருகப் பிரவேசத்தின் போது
மட்டுமல்ல எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் பலர் வந்து போவர். அதனால் சுற்றுவட்டாரக்
காற்று அசுத்தப் படலாம். மாவிலைகளுக்கு காற்றை சுத்திகரிக்கும் குணமிருப்பதாக
நம்பப் படுகிறது (என் வீட்டிலொரு மாமரமே இருக்கிறது )
கேள்வி4) படுத்து எழும்போதுவலது
புறமாகவே திரும்பி எழ வேண்டும்.ஏன்.?
நம் உடலில் இரு விதமான ஈர்ப்பு
சக்திகள் இயங்குவதாகச் சொல்லப் படுகிறது. தலைமுதல் காலும் கால் முதல் தலை வரை
ஒன்றும், பின்னாலிருந்து இடது வலமாகவும் வலது இடமாகவும் ஒன்று என்றும் சொல்லப்
அடுகிறது உடலின் அசைவுகள் இந்த மின் ஈர்ப்பு சக்திக்கு பலமூட்டுவதாக இருக்க
வேண்டும் என்றால் அதன் திசையிலேயே இயங்க வேண்டுமாம். எனக்கு இதய சிகிச்சைசெய்த
மருத்துவரும் வலது பக்கம் திரும்பி எழப் பழகுமாறு கூறினார். முன்பெல்லாம்
சிறார்கள் மந்தமாக இருந்தால் இடப்பக்கமாகத்திரும்பிஎழுந்தாயா என்று கேட்பார்களாம்.
கேள்வி 5) முங்கிக் குளித்தபின்
உடலில் எண்ணை தேய்க்கலாமா.?
மனுஸ்மிருதியில் இது தடை செய்யப்
பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது. எண்ணை தோலின் துவாரங்களை அடைத்துவிடும்
சாத்தியமிருக்கிறது. எண்ணை தேய்ப்பது ஒருவித மசாஜ் என்று கூறலாம் இதனால் உடலின்
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது . அதிக இரத்த ஓட்டத்தினால் வெளியேற
வேண்டிய வியர்வை எண்ணை தேய்ப்பதால் வெளியேறாமல் போகலாம்
கேள்வி 6) காலணி இல்லாமல் நடப்பது
உகந்ததா.?
காலணி என்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல்
என்றாகி விட்டது. கரடு முரடான பாதையில் ஒருவர் காலணி இல்லாமல் நடக்கும் போது
காலில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் ஒரு வித அழுத்தத்துக் உட்படுகின்றன. இவை
உடலின் எல்லா பாகங்களுக்கும் தொடர்புடையவை.
காலணி இல்லாமல் நடந்தால் உடலின் எல்லா பாகமும் ஒருவித ஸ்டிமுலேஷனுக்கு உள்ளாகும்.
இயற்கையாகவே இது ஒரு அக்குபன்க்சர் போல் செயலாற்றும்
கேள்வி 7) எண்ணைக் குளியல் ஏன்
எடுக்க வேண்டும்.?
தினமும் தலை முதல் கால்வரை எண்ணை
தேய்த்துக் குளிப்பது நல்லது என்று அறிவுறுத்தப் படுகிறது.மருத்துவக் குணங்கள்
கொண்ட எண்ணை உடலுக்குள் செல்லும். இரண்டாவதாக தோலை.க் கெடுக்கும் நுண்கிருமிகள்
எண்ணையில் மாட்டிக் கொண்டு காற்றில்லாமல் அழிந்து போகும் என்றும் சொல்லப் படுகிறது ( என் மருத்துவ நண்பர் தோலில் இருக்கும் துவாரங்கள் வழியே வியர்வை வெளியேறலாமே தவிர வெளியிலிருந்து எண்ணை எதுவும் உள்ளே போக முடியாது என்றும் கூறுவார்...!)
கேள்வி 8.) பெற்றோரின் காலில்
விழுந்து வணங்குவது தேவையா.?
பெற்றொர் கால்களில் விழுந்து
வணங்குவது சாலச் சிறந்தது மரியாதையை வெளிப்படுத்த கரங்கூப்பி வணங்குவதும் ,
எழுந்து ந்ன்று மரியாதை செலுத்துவதும் , கால் தொட்டு வண்ங்குவதும் உடல் தரையைத்தொட
விழுந்து வணங்குவதும் நடை முறையில் இருந்து வருகிறது. பெற்றோரைக் கடவுளாக பாவித்து
வணங்கும் முறை அந்த உறவின் மேம்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.
கேள்வி 9) விபூதி தரிப்பது ஏன்.?
நல்ல சுத்தமான விபூதிக்கு
மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெறும் புல்லையே தின்னும் பசுவின் சாணத்தை உமியுடன் கலந்து சிவ ராத்திரி
தினத்தன்று எரித்தால் கிடைக்கும் சாம்பலை நீரில்கரைத்து பின் அதைக் காடவைத்து
சிவனுக்கு அர்ப்பணித்து பின் சேமித்து வைத்து
உபயோகப் படுத்த வேண்டுமாம். காய்ச்சல் இருக்கும் ஒருவருக்கு நெற்றியில்
விபூதி வைத்தால் காய்ச்சல் குறையும் என்று நம்பப் படுகிறது.( எதிர் பார்க்கும் பலன்கள் கிடைக்கவில்லை என்றால் விபூதி சுத்தமாக சரியாகத் தயாரிக்கப் படவில்லை என்று கூறித் தப்பிக்கலாம்...!)
கேள்வி 10) ஹிந்துக் கோவில்களில்
அர்ச்சகர் அல்லது பூசாரியின் கால்களைப்பிடிப்பது அனுமதி இல்லை. ஏன்?.
இது எந்த தீண்டாமையினால் வந்த பழக்கமல்ல. ஒரு அர்ச்சகரோ
பூசாரியோ, இடை விடாது மந்திர உச்சாடனங்களைச் செய்வதால் அவரிடம் ஒரு ஆன்மீக சக்தி
இருப்பதாக நம்பப் படுகிறது யாராவது அவரைத் தொட நேர்ந்தால் அந்த சக்தி குறையும்
என்று நம்பப் படுகிறது. ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு பிரபை (halo) இருப்பதாக் கூறப்படுகிறது ஒருவரை தீண்டினால்
அந்த சக்தி விரய மாகலாம் என்றும் நம்பப் படுகிறது.தேவை யில்லாமல் ஒருவரைத் தீண்டுவதே தவிர்க்கப் படவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
உங்களின் கேள்விகளால் வலையில் உள்ள பல பதில்களை அறிய முடிந்தது... சொற்களை மாற்றி மாற்றி தேடினேன்... (வணங்குவதற்கு பதில் கும்பிடுவதற்கு - இப்படி பலவகையில்) அறியாதவற்றை விளக்கமாகவும் அறிய முடிந்தது... அதற்கு மிக்க நன்றி ஐயா... உங்களின் பதில்கள் கிட்டத்தட்ட 99.99% ஒத்துப் போகின்றன... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteகடவுள், மதம், ஜாதி, அரசியல் + இன்றைய திரைப்பட நடிகர்கள் - இவைகளின் விவாதம் நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவு வரும்... நன்றி... வணக்கம்...!
கோவில்களில் பிரகாரம் சுற்றுவதும், நமஸ்காரம் செய்வதும் உடர்பயிற்சியாய் இருக்கலாம். உடற்பயிற்சி செய் என்று சொன்னால் யாரும் செய்ய மாட்டார்கள். இப்படிச் சொன்னால் எல்லோரும் செய்வார்கள்! :))
ReplyDeleteஒரு கேள்விக்கும் பதில் தெரியாது!
ReplyDeleteஓரளவு ஒப்புக் கொள்ளக்கூடிய
ReplyDeleteபதில்கள்தான்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
பதில்கள் தோராயமாகத்தான் உள்ளன. ஆனாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளாகவே உள்ளன. கண்ணதாசனின் புத்தகம் எத்தனை தேடியும் காணவில்லை. அடிக்கடி வீடு மாறுபவர்களுக்கு இதுதான் தொல்லை. கடைசி மாற்றம் வரை இருந்தது. அதில் இம்மாதிரியான பல கேள்விகளுக்கு அருமையாக விளக்கம் அளித்திருப்பார்.
ReplyDeleteகேள்விகளுக்கான பதில்களையும் தந்தமைக்கு நன்றி. நானும் அந்தப் புத்தகத்தினை தில்லி சென்றதும் எடுத்துப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
ReplyDelete
ReplyDelete# திண்டுக்கல் தனபாலன்
நடைமுறையில் அநேக விஷயங்கள் ஏன் எதற்காக என்று அறியாமலேயே பின் பற்றப் படுகின்றன. சொல்லியிருக்கும் பதில்கள் சரி தவறு என்று சொல்லமாட்டேன். மூத்தோர் கூறியுள்ள அநேக விஷயங்கள் அவர்களுக்குச் சரி என்று பட்டுச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். உலக மக்கட்தொகையில் இம்மாதிரி சொல்லிப் போன விஷயங்கள் அறியாதோரே மிகமிக அதிகம்.உலகின் ஒரு மூலையில்சிலர் அவர்களுக்குச் சரி என்று பட்டதை சொல்லி இருக்கிறார்கள். அதை பின் பற்றாவிட்டால் குடி முழுகிப் போகாது, தெரியாவிட்டாலும் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை, பின்னணி தெரிந்தால் நாம் பின் பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா இல்லையா என்று தெரியும். எதையும் தெரிந்து வைப்பதில் தவறில்லையே. மீண்டும் உங்கள் முனைப்புக்குப் பாராட்டுக்கள். நான் விவாதம் என்று நினைத்தது இவற்றைப் பின் பற்ற வேண்டுமா வேண்டாமா என்றிருக்கும் என்றே நினைத்தேன் ஆனால் வழக்கம் போல it was a damp squib..!
ReplyDelete@ ஸ்ரீராம்
சொல்பவர்கள் சொன்னதை அப்படியே பின் பற்ற வேண்டும் என்னும் நினைப்பு மக்களை சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
ReplyDelete@ அப்பாதுரை
அதனால் குறை ஒன்றும் இல்லை சாரே.
ReplyDelete@ ரமணி.
ஐயா இந்த பதில்கள் என்னுடையதல்ல இதே போல் முன்னூறுக்கும் மேற்பட்ட முன்னோர் சொன்னது என்று கைவசம் நிறையவே ஸ்டாக் இருக்கிறது. இது சரி இது சரி இல்லை என்று கூறி இருந்தால் ஒரு விவாதத்துக்கு வழி வகுத்திருக்கும். !
ReplyDelete@ டி.பி.ஆர் ஜோசப்.
தோராயமான பதில்களாகத்தான் இருக்கும். திட்ட வட்டமாகச் சொல்லி இருக்க முடியாது. ஆனாலும் இவற்றைப் பின் பற்றுவதால் தவறு ஒன்றும் இல்லை. பின் பற்றாவிட்டால் குடி முழுகிப் போய்விடாது. கண்ணதாசன் மட்டும் அவராகவா நினைத்துச் சொல்லி இருப்பார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete# வெங்கட் நாகராஜ்
எந்தப் புத்தகமாய் இருந்தாலும் எழுதி இருப்பவை எல்லாம் சரி என்று இருக்கத் தேவையில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முன்னோர் சொன்ன முன்னூறுனு பதிவுல போடுங்கள்.
ReplyDeleteசரி தவறு என்ற விவாத எதிர்பார்ப்பே சரி தவறு என்ற பார்வையில் பார்க்கத் தோன்றுகிறதே?