Sunday, April 20, 2014

கல்லேக்குளங்கரை பகவதி க்ஷேத்திரம்


                  கல்லேக்குளங்கரை  பகவதி க்ஷேத்திரம்
                  ---------------------------------------------------------
அட.. என்ன இது ... இவனும் ஆன்மீகப் பதிவு போடுகிறானா என்று எண்ண வேண்டாம் அண்மையில் சில கோவில்களுக்குப் போய் வந்ததன் பாதிப்பே. மேலும் இந்தக் கோவில்தான் எங்கள் குலக் கோவில் என்று பல வருடங்கள்நம்பி வந்திருக்கிறேன் மேலும் சிறு வயதில் போய் வந்த nostalgic memories.!



வடமலக் காட்டின் வழியே  துர்க்கையைட் தரிசிக்க குருரும் கைமுக நம்பூதிரிகளும் சென்று கொண்டிருந்தபோது ஒரு அரிய காட்சியைக் கண்டனர்அன்னை தேவி.தகதகவென தங்க ஜ்வலிப்புடன் ஒரு மரத்தின் அடியில் யானையின் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டனர். வயது முதிர்ந்த குரூருக்கு கடினமான யாத்திரைகளை மேற்கொள்ளா முடியாமல் இருப்பது எண்ணி மனமொடிந்தார். அன்னை அவரது கனவில் தோன்றி தான் அருகில் உள்ள குளத்தில் காட்சியளிக்கப் போவதாகக் கூறினாள், மறுநாள் அங்கிருந்த குளத்தின் நடுவே முதலில் கைகள் வெளிப்பட்டடன. தடுக்க முடியாத ஆவலில் குருர் குளத்தில்  நீந்திப் போய் அன்னையின் கைகளைப் பற்றி கொள்ள உருவம் மேலெழும்பாமல் கையும் கல்லாய் மாறி நின்றுவிட்டது
பக்தன் ஒருவனுக்குக் கனவில் வந்து தான் அவனுக்குக் காட்சியளிக்கப் போவதாகவும் இதை அவன் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அன்னை தேவி கேட்டுக் கொண்டாள். ஆனால் இந்த அதிசய நிகழ்வை அவனால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை, அதன் வினையே குளத்தின் நடுவே காட்சியளிக்க வந்த தேவியின் கரங்களை மட்டுமே தரிசிக்க முடிந்தது
இதையே அன்னை காட்சியளிக்கும் சமயம் ஆச்சரியம் பக்தி மேலிட பக்தன் கூக்குரலிடவும் அன்னை தன் கரங்களை காட்டியதோடு நின்று விட்டாள் என்றும் கூறுவர்.
இப்படியெல்லாம் சொல்லப் படும் கோவிலின் நாயகி ஏமூர் பகவதி (ஹேமாம்பிகா) என்னும்நாமத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்
காலையில் சரஸ்வதியாகவும் மதியம் லக்ஷ்மியாகவும் மாலை துர்க்கையாகவும் வணங்கப்படும் அன்னையின் கைகள் ஒரு குளத்தின் நடுவே பிரதிஷ்டை ஆகி இருக்கிறது கல்லேகுளம் என்று அழைக்கப் படும் அந்தக்குளத்தைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அவை அம்பலக் குளம் , தெருக்குளம் ஆனக்குளம் பரக்குளம் என்று கூறப்படுகின்றன.
நீரில் தோன்றிய கரங்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு வரும் ஆலயம் பாலக்காடு நகரத்தில் இருந்து மலம்புழாவுக்குச் செல்லும் பாதையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது “கைப்பதி அம்பலம் “ என்றும் ஏமூர் பகவதி ஆலயம் என்றும் அழைக்கப் படுகிறதுகாலை ஐந்து மணிமுதல் முற்பகல் பதினொன்றரை மணி வரையிலும் பின் மாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டரை மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்
பாலக்காடு அரசர்களின் குலக்கோவிலாக விளங்கும் இந்த ஆலயத்தில் ஒன்பது நாள் சிவராத்திரிப் பண்டிகை விசேஷம் நான் சிறுவயதில் (ஒன்பது பத்து வயதில்) என்   தந்தைவழி பாட்டியுடன் அருகில் இருக்கும் கோவிந்தராஜபுரம் எனும் கிராமத்தில் ஏறத்தாழ ஒரு வருடம் இருந்தேன் கல்பாத்தி புழையைக் கடந்து வந்து மாதம் ஒரு முறை எங்கள் வீட்டில் இருந்து பாயச நைவேத்தியம் செய்யப் படும் அந்தப் பிரசாதம் மிகவும் சுவையுடன் இருக்கும்.
இந்த ஆலயத்தை பற்றி இன்னொரு கதையும் (?) உண்டு, திருமதி. இந்திராகாந்தி திரு. கருணாகரனுடன் இந்த ஆலயத்துக்கு வந்து வழி பட்டதாகவும் ஆலயத்தில் கைகளாகக் காட்சிதரும் அம்மன் ரூபத்தில் லயித்துப் போய் “கையையே தன் கட்சி சின்னமாக வைத்ததாகவும் கூறப் படுகிறது
இன்றைக்கும் இந்தக் கோவிலில் மின்சார வசதி இல்லை என்று கேள்வி. ஆசிகளையும் எல்லா நலங்களையும் நல்கும் அன்னை எல்லோரையும்காக்கட்டும்      .     .       .  
 .
ஏமூர் பகவதி
( படம் இணைய உபயம் )    



   

 


26 comments:

  1. //இன்றைக்கும் இந்தக் கோவிலில் மின்சார வசதி இல்லை என்று //

    இயற்கையாக இருக்கட்டும் என்று விட்டு விட்டார்களோ... ஸ்ரீரங்கம் கோவிலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை இன்னமும் மின்சார விளக்கில் பார்க்க முடியாது என்பது போல! :)))

    சுவாரஸ்யமான கதை.

    ReplyDelete
  2. இன்னொரு கதையும் சுவாரஸ்யம்... ஏமூர் பகவதி கோவிலின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  3. ஆசிகளையும் எல்லா நலங்களையும் நல்கும் அன்னை எல்லோரையும்காக்கட்டும்

    வியப்ப்பான தகவல்கள்...!

    ReplyDelete
  4. ஏமூர் பகவதி எல்லாருக்கும் மங்கலங்களை அருள்வாளாக!..

    ReplyDelete
  5. //திருமதி. இந்திராகாந்தி-------அம்மன் ரூபத்தில் லயித்துப் போய் “கை”யையே தன் கட்சி சின்னமாக வைத்ததாகவும் கூறப் படுகிறது//

    இது புதிய தகவல் ஆனாலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. கல்லேக்குளங்கரை பகவதி க்ஷேத்திரம் பற்றிய பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. //இவனும் ஆன்மீகப் பதிவு போடுகிறானா என்று எண்ண வேண்டாம்//

    அதனால் என்ன??? :))))

    ReplyDelete
  7. பகவதி அம்மன் தரிசனத்துக்கு நன்றி. ஶ்ரீரங்கம் மட்டுமில்லை, பல முக்கியக் கோயில்களிலும் கருவறையின் மின்விளக்குக் கிடையாது. இயற்கையான குத்துவிளக்கு வெளிச்சம் தான். சென்னைக்கருகே படவேடுக்கு அருகிலுள்ள சின்மயா மிஷின் சிவன் கோயிலில் பிரதோஷ தீபாராதனையின் போது அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிடுகின்றனர். குத்துவிளக்கின் வெளிச்சத்திலேயே தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதங்களும் வழங்கப்படும். அதன் பின்னரே மின் விளக்குகளைப் போடுகின்றனர்.

    ReplyDelete
  8. திருமதி. இந்திராகாந்தி திரு. கருணாகரனுடன் இந்த ஆலயத்துக்கு வந்து வழி பட்டதாகவும் ஆலயத்தில் கைகளாகக் காட்சிதரும் அம்மன் ரூபத்தில் லயித்துப் போய் “கை”யையே தன் கட்சி சின்னமாக வைத்ததாகவும் கூறப் படுகிறது//

    அட! இப்படியொரு தகவலா? அருள் பாலிக்கும் தெய்வத்தின் கையா அது? ஆனால் கால்போக்கில் அதே கையால் கையூட்டு பெற்று அசிங்கம் செய்துவிட்டார்களே!!

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம்
    எங்கும் நிறைந்தஇறைவனை உள்ளத்தில் இருத்துவது கடினம் என்பதால் சற்குணங்கள் கொண்ட பல கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து அதில் லயிக்க வைக்கவே உருவ வழிபாடு என்று நம்புகிறேன் நான். அப்படி இருக்கும் அந்த இறையின் உருவத்தை உள்வாங்க முடியாமல் இருட்டடிப்பு செய்வது ஏற்புடையதாய் இல்லை. மின் வசதி இல்லாத காலங்களில் இருந்துவந்த பழமையான வழக்கம் இன்றும் தொடருவதுபகுத்தறிவுக்கு ஒப்பானதாய் தெரியவில்லை/

    ReplyDelete

  10. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete

  11. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  12. @ இராஜராஜேஸ்வரி
    உங்கள் தளத்தில் இதைவிட வியப்பான தகவல்கள் படிக்கிறேன் வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  13. @ துரை செல்வராஜு
    / ஏமூர் பகவதி எல்லோருக்கும் மங்கலங்களை அருள்வாளாக/ ததாஸ்து....!

    ReplyDelete

  14. @ வே,நடனசபாபதி
    இணையத்தில் படித்ததுபகிர்ந்து கொண்டேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

  15. @ கீதா சாம்பசிவம்
    /இவனும் ஆன்மீகப் பதிவுகள் போடுகிறானா என்று எண்ண வேண்டாம் / //அதனால் என்ன...இவன் இப்படி என்று பலரது சிந்தனைகளில் இடம் பெற்று ஆன்மீகக் கருத்துக்களுக்கு குண்டக்க மண்டக்கா என்று கருத்திடுபவனாய் இருந்தாலும் விஷயம் கொஞ்சம் தெரிந்தவன் என்பதைக் காண்பிக்க என்று எண்ணக் கூடாது பாருங்கள். வருகைக்கு நன்றி
    இருக்கும் மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு,,,,, இப்படியெல்லாம் செய்தே நம்மிடம் ஒரு மந்தைக் குணத்தை உருவாக்குகின்றனர். மீண்டும் நன்றி.

    ReplyDelete

  16. @ டி.பி.ஆர் ஜோசப் அறுள் பாலிக்கும் அன்னையின் கைகளா அவை,? அன்னை என்ன செய்வாள். இது அவளது கை என்று யாரும் சொல்லிக் கொள்வதில்லையே. எல்லாப்பாவங்கலையும் செய்துவிட்டு இறைவனுக்கு வைரக் கிரீடம் சாத்துபவர்களும் இருக்கிறார்களே. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  17. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  18. பெரும்பாலான பழங்கால கோவில்களில் மின்விளக்குகள் கிடையாது. குத்துவிளக்கின் ஒளியிலே தான் இறைவனின் தரிசனம்.

    திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் கோவில்களில் கூட ஏகாந்த சேவையின் போது எல்லா விளக்குகளையும் அணைத்து குத்துவிளக்கு/கல்பூர ஹாரத்தி ஒளியில் தான் இறைவனை பார்க்க முடியும்.....

    ஏமூம் பகவதி அம்மன் பற்றிய கதைகள் படிக்க ஸ்வாரசியம்!

    ReplyDelete
  19. பழமையானதொரு கோவிலைப்பற்றிய தக்வல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  20. தங்கள் குடும்பத்தின் குலதெய்வம் இருக்கும், கல்லேக்குளங்கரை பகவதி அம்மன் கோயில் குறித்து சுவையான செய்திகள்! இறையருளை வணங்குகிறேன்!

    ReplyDelete
  21. சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலுக்கு இரு முறை சென்று வந்துள்ளேன். இந்த பகவதி அம்மனைப் பற்றி தற்போதுதான் அறிகிறேன். எங்களோடு இதனை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

  22. @ வெங்கட் நாகராஜ்
    குத்து விளக்கின் ஒளியில்தான் இறைவனின் தரிசனம் ஏன் என்று கேட்கக் கூடாது. கேட்டால் ஒருவிதமாய் எண்ணுகிறார்கள். அந்தக் காலத்தில் மின் வசதி இல்லாதபோது ஏற்படுத்தப் பட்ட சில வழக்கங்களை மந்தை ஆடுகள் போல் ஏற்க முடிவதில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete

  23. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  24. @ தி.தமிழ் இளங்கோ
    கல்லேக்குளங்கரை பகவதி கோவில் எங்கள் குலதெய்வக் கோவில் என்று தவறாக பல ஆண்டுகள் நினைத்திருந்தேன். அது பாலக் காட்டில் உள்ள மணப் புளிக் காவு என்று சரியாகத் தெரியும்வரை.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    கேரளத்தில் எங்கு நோக்கினும்பகவதி கோவிலகள் இருக்கும் அதில் சோட்டானிக்கரை கோவில் பிரசித்தம் மனப் பிறழ்ச்சி அடைந்தவர்களும் பேய் பிசாசு பாதிக்கப் பட்டவர்களும் சோட்டானிக்கரை சென்று விரதம் இருந்தால் குணமடைவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete