Thursday, July 3, 2014

500-


                                                              500
                                                            -------
என் ஐநூறாவது பதிவாக நான் என்ன எழுதினாலும் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் ஏறத்தாழ எல்லாமே வாழ்த்தாகவே இருக்கும் .என் எழுத்துப் பற்றி ஏதும் இருக்கப்போவதில்லை. நான் மாய்ந்து மாய்ந்து எழுதியது கண்டுகொள்ளாமலே போய் விடும். இது என் அனுபவம் ஆகவே என் இந்த ஐநூறாவது பதிப்பு என் எழுத்துக்கள் இல்லாமல் சில அரிய புகைப்படச் செய்தியாக இருக்கும்
பொன்சாய் மரம்
300 வருடத்துக்கும் மேலான இந்த பொன்சாய் மரம்  படத்திலேயே விலை எழுதி இருக்கிறதே.

உடை வாள் 
இந்த உடைவாள் நெபோலியன் போனபார்ட்டுடையது என்று கூறப்படுகிறது இதன் மதிப்பு 6.4 மில்லியன் டாலர்ஸ் என்று கூறப்படுகிறது

செல்ல நாய்கள்
.திபேத்தியன் மஸ்டிஃப் இந்த வகை நாயும் ( வலது) அதன் குட்டியும்( இடது) இரண்டு மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப் படுகிறது

அரிய கைக்கடியாரம்
உலகிலேயே ஒரே ஒரு மனிதனால் ஓராண்டு உழைப்பில் உருவாகும் இந்தக் கடியாரம் 2.5 மில்லியன் டாலர் விலை மதிப்புள்ளதாம்

உலகக் கால் பந்து போட்டிகள் நடக்கும் இச்சமயம் கண்டு களிக்க ஒரு காணொளி.

51 comments:

  1. 500க்கு வாழ்த்துகள். அரிய புகைப்படங்கள். அதிலும் திபெத்தியன் நாய்கள் நேரிலேயே பார்த்திருக்கேன். பயங்கரமாக இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு கன்றுக்குட்டி சைசிலே! கடிகாரமும் அருமை.

    மேலும் பல படைப்புகளை எழுதவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அன்பின் ஐயா..
    தங்களுடைய ஐநூறாவது பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி..

    எங்களின் சிந்தனைக்கு விருந்தாக இன்னும் ஆயிரம் ஆயிரம் நல்ல விஷயங்களைப் பதிவினில் வழங்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. நாங்கள் அறியாத விஷயங்களைத் தேடி
    அருமையாகத் தந்ததை எப்படிப்
    பாராட்டாமல் இருக்கமுடியும் ?
    பகிர்வுக்கும் தொடரவும் அப்படியே
    ஐநூறாவது பதிவுக்கும் மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அனைத்துப்படங்களும் செய்திகளும் அருமை. 500க்கு வாழ்த்துகள்.

    இன்று 3rd July நாம் நேரில் சந்தித்த நாள். + + Best Wishes ! ;)

    ReplyDelete
  5. அரிய பொருட்களின் விலைப்பட்டியலும், விலையுயர்ந்த நாய்களும், காணொளியும் வியப்பேற்படுத்துகின்றன. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    தங்களுடைய ஐநூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்களுடைய பல எண்ணங்களையும் அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவு அனுபவம் கூட ஒரு புதிய பாடம்தான்.

    ReplyDelete
  6. சிறப்பான படப்பதிவாக அமைந்த ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! படத்தில் விலை எழுதி இருக்கிறதா? தெரியவில்லை எனக்கு!

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.
    500வது பதிவு கண்டேன் 500 பதிவைப்போல இன்னும் ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் படங்கள் எல்லாம் மிக அழகு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. 500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  9. அரிய பொருட்களைக் கண்டு மகிழ்ச்சி.... காணொளி பார்க்க முடியவில்லை. An error occurred என வருகிறது. பிறகு பார்க்கிறேன்.

    500-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. காணொளி திறக்கவில்லை! படங்களுடன் செய்திகள் சுவாரஸ்யம். விரைவில் 1000 பதிவு எட்ட வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்..

    மதிப்பு மிக்க பொருட்கள்
    காட்சி அளித்தது
    மகிழ்ச்சியளித்தன.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. மிகவும் மகிழ்ச்சி ஐயா...

    தொடர்பு கொள்ள என்ன தயக்கம்....? - 09944345233 (Missed calll pl.)

    ReplyDelete
  13. நான் வாழ்த்த போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் உங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆயிரத்தை தொட்டால் உண்மையில் அது சாதனைதான் :)

    ReplyDelete

  14. @ கீதா சாம்பசிவம்
    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  16. @ ரமணி
    நானும் இதுவரை அறியாததுதான். அறிந்தவுடன் பகிர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கு நன்றி சார்.

    ReplyDelete

  17. @ கோபு சார்
    நாம் சந்தித்த தினத்தை நினைவு கூர்ந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  18. @ கீத மஞ்சரி.
    உங்களைப் போன்றோரின் தொடர் ஊக்கம் என்னை எழுத வைக்கும். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  19. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. விலை மிகச் சிறிய எழுத்தில் இருக்கிறது. 10,00,000 யென் என்று இருக்கிறது

    ReplyDelete

  20. @ ரூபன்
    அறிந்ததை பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  21. @ கரந்தை ஜெயக்குமார்
    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  22. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கு நன்றி சார். காணொளி ஏன் திறக்கவில்லை தெரியவில்லை. பார்த்திருந்தால் அதையும் ரசித்திருப்பீர்கள்.

    ReplyDelete

  23. @ ஸ்ரீராம்
    காணொளி திறக்காதது வருத்தமே. முடிந்தவரை எழுதிக்கொண்டிருப்பேன் . இலக்கு ஏதும் இல்லை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  24. @ இராஜராஜேஸ்வரி
    பாராட்டுக்களுக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  25. @ திண்டுக்கல் தனபாலன்
    தயக்கம் என்று ஏதுமில்லை டிடி. முதலில் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் அதன் பின் நடத்தும் தொலைபேசி உரையாடல்கள் ஆத்மார்த்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் மேலும் என் செவிப்புலன் சற்று மக்கர் செய்யும். எதையும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ப்ளீஸ்

    ReplyDelete

  26. @ டி.பி.ஆர் ஜோசப்
    தனியே வாழ்த்துக் கூற வேண்டாம் சார். தொடர்ந்து வந்து பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடலே சரியான ஊக்கமாயிருக்கும். சாதனை என்னும் இலக்கு ஏதுமில்லை சார். தொடர்ந்து எழுத முடிந்தால் சரி.

    ReplyDelete
  27. உங்கள் அன்புக்கு விலையேது? வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  28. @ தமிழ் இளங்கோ
    உங்கள் பின்னூட்டம் நெகிழ வைக்கிறது ஐயா. நன்றி

    ReplyDelete
  29. 500க்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ஐயா... உங்கள் கணிப்பு சரியே. அனைவரும் மகிழ்வாக வாழ்த்துச் சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் வைத்திருக்கும் படங்கள் அனைத்தும் ரசனை.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள். இந்த போட்டோக்களில் உள்ள போருட்கள் அத்தனையையும் வாங்க என் இஷட தெய்வம் முருகனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  31. உங்கள் ஆயிரமாவது பதிவைப் படிக்க ஆவலாக இருக்கிறோம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள்.


    ஹிஹி பின்னூட்டமும் மாய்ந்து மாய்ந்து எழுதினால் பதிவுக்கு மதிப்பு வேணாமா?

    ReplyDelete

  33. @ பாலகணேஷ்
    வாழ்த்துக்கு நன்றி கணேஷ்

    ReplyDelete

  34. @ டாக்டர் கந்தசாமி.
    அத்தனையும் வாங்க முருகன் அருள் வேண்டாம். நீங்கள் கட்டிக்காக்கும் பணப் பையைத் திறந்து செலவு செய்தால் போதுமே. வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  35. @ செல்லப்பா யக்ஞசாமி
    எழுதும்பதிவுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. வாழ்த்துக்கு நன்றி சார்

    ReplyDelete

  36. @ அப்பாதுரை
    பதிவுக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete
  37. 500 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! ஆயிரமாவது பதிவை விரைவில் எட்ட வாழ்த்துகிறேன். படங்கள் அருமை. காணொளியைக் காண இயலவில்லை.

    ReplyDelete
  38. தங்கள் பதிவுக்கும் ,பணிவுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம் அய்யா !

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள், ஜிஎம்பீ சார்!

    அதென்ன 500 என்று கணக்கு?.. அதான் குழப்பம்.

    ReplyDelete
  40. அன்பு ஐயா.. வணக்கம்..

    படங்கள் அனைத்தும் அருமை.. போன்சாய் செடி இவ்வளவு பெரிதாய் கூட வளருமா என கண்டு வியந்தேன் ஐயா..

    500வது பதிவு.. பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளீர்கள் ஐயா..மனமார்ந்த பாராட்டுக்கள்..

    501, 1000, 2000 என இனிவரும் பதிவுகள் அனைத்தையும் ஆவலுடன் படிக்க எதிர்நோக்கியுள்ளோம் ஐயா...

    ReplyDelete

  41. @ வே.நடனசபாபதி
    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.எண்ணிக்கை இலக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. முடியும்வரை எழுதுவேன்

    ReplyDelete

  42. @ பகவான் ஜி
    வருகைக்கு ( முதல்.?) நன்றி சார்.

    ReplyDelete

  43. @ ஜீவி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி சார். சுமார் 46 மாதங்களில் தொடர்ந்து எழுதி கிரிக்கட்டில் சதம் ஒரு மைல்கல் போல . 500 என்னும் எண்ணிக்கை எழுதுவதின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. பதிவர்கள் பலரும் நூறு .இருநூறு என்று குறிப்பிடுவதைக் கண்டு எனக்கும் நானும் குறிப்பிட்டால் தவறாகாது என்று தோன்றியது, இதிலென்ன குழப்பம்.?

    ReplyDelete

  44. @ இல.விக்னேஷ்
    இதில் பிரம்மாண்டம் ஏதுமில்லை. நான் தொடர்ந்து எழுதுவதால் இந்தக் குறியீட்டை எட்டியுள்ளேன் தொடர்ந்து வாருங்கள். நன்றி.

    ReplyDelete
  45. //இதிலென்ன குழப்பம்.? //

    உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள்;
    சொல்லேர் உழவன் கூட கூட்டி, பெருக்கி, வகுத்து கணக்குப் பார்த்தால்?...

    'எழுத்து என் தொழிலும் தெய்வமும் ஆம்' என்னும் இறுமாப்பில் எந்த கணக்கும் பார்க்காமல் எழுதித் தள்ளுங்கள் ஜிஎம்பீ சார்! கணக்குப் பார்த்தால் கணக்கிலேயே மனம் சென்று விடும். அதனால் தான்!

    108 தேங்காய் இறைவனுக்கு உடைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டவன், அந்த 108 எண்ணிக்கையை எண்ணுவதிலேயே மனம் இலயத்துப் போவது போல!

    ReplyDelete

  46. @ ஜீவி
    நான் எழுதுவதைக் கணக்குப் பார்த்து எழுதுவதில்லை ஜீவி சார்.எழுதியதில் எட்டிய ஒரு குறியீட்டினைக் குறிப்பிட்டேன் அவ்வளவுதான். எழுதுவது என் தொழிலல்ல. அது மனநிறைவைத் தரும் ஒரு செயல்.

    ReplyDelete
  47. 500க்கு வாழ்த்துக்கள். மிக சிறப்பாக புகைப்படங்களைத் தெரிவு செய்துவெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete

  48. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  49. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    படங்கள், காணொளி எல்லாம் அருமை.

    ReplyDelete

  50. @ கோமதி அரசு
    வாழ்த்துக்கும் ரசனைக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  51. அருமையான படங்கள்.

    ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete