Saturday, March 7, 2015

மகளிர் தின எண்ண ஓட்டங்கள்


                        மகளிர் தின எண்ண ஓட்டங்கள்
                       -----------------------------------------------
    
மகளிர் தினம்
எதேச்சையாக மகளிர் தினம்08-03-2015) நினைவுக்கு வந்தது. எந்த உந்துதலும் இல்லாத பொழுதே காதலர் தினம் நினைவுக்கு வருகிறது காதலர் பற்றி சிந்திப்பது அளவு மகளிர்தினம் பற்றி சிந்திப்பதில்லை. அப்படியே மகளிர் தின நினைவாக எழுதலாம் என்றால் பொதுவாக சாதனைகள் புரிந்த பெண்களைப் பற்றியோ வயிற்றைக் க்ழுவவே பாடுபடும் பெண்களைப் பற்றியோ எழுதுவதைக் கண்டிருக்கிறேன் நான் எழுதப் போவது சாதாரண இந்தியப் பெண்களைப் பற்றி. நீ எழுதுவதற்கு என்ன இருக்கிறது அதுதான் நாடே பேசும் INDIA’S DAUGHTER பற்றித்தான் எங்கும் செய்திகளாக இருக்கிறதே. அதைப் பற்றி நீ என்ன சொல்லப் போகிறாய் என்னும் முணுமுணுப்பு காதில் விழுகிறது
எனக்குள்ள பெண்க்ளை பற்றிய எண்ணங்களை நகைச்சுவையாகப் பல பதிவுகள் எழுதிவிட்டேன்
நம் நாட்டில் பெண் குழந்தைகளை விரும்புபவர் குறைவு என்று செய்திகள் சொல்கின்றன. ஆண்பெண் விகிதாச்சாரம் எடுத்துக்காட்டாகக் காட்டப் படுகிறதுஆனால் நான் அறிந்தவரை மத்தியதர வர்க்க வீடுகளில் பெண்களின் கையே ஓங்கி இருக்கிறது. பெண்களுக்காகத் தனிச் சலுகைகளை அரசும் அவ்வப்போது கொடுக்கிறது. ரயிலில் மகளிர்க்காகத் தனிப் பெட்டி. பேரூந்துகளில் தனி இருக்கைகள். இந்தச் சலுகைகள் ஏன் வழங்கப் படுகின்றன என்றால் மகளிரை ஆண்களுக்குச் சமமாக நினைக்க முடிவதில்லை. மகளிரை வீக்கர் செக்ஸ் என்று குறிப்பிட்டேபழகி விட்டோம். ஒரேவித வேலையில் மகளிருக்குக் கொடுக்கப் படும் சம்பளமும் பல இடங்களில் குறைவே இம்மாதிரியான எண்ணங்கள் காலங்காலமாகவே இருக்கிறது . நான் நம் நாட்டைப் பற்றிப் பேசுகிறேன். அதாவது ஒரு வித ஆணாதிக்க மனப் பான்மை நம் ரத்தத்தில் ஊறி விட்டது.
நம் நாட்டில் மிகப்பெரிதாகக் கருதும் ஆன்மீக நூலான பகவத் கீதையிலேயே பெண்களை தாழ்வாக நினைக்க வைக்கும் பகுதிகள் உள்ளன. உதாரணத்துக்கு
கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பது சுலோகம் 32—”பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர் வைசியர் சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.
ஆண்டவன் என்று கருதப்பட்டு வந்த பரமாத்மா கிருஷ்ணனின் கூற்று இது நிலைமை இப்படி இருக்கும்போது பெண்ணியம் பெண்சுதந்திரம் என்று கூறுவோரில் பலரும் இந்த மனப்பான்மை யுடையவரை அலட்சியம் செய்கின்றனர் என்று பரவலாக நினைக்கப் படுவதில் ஆச்சரியமில்லை. இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு இவை காரணம் என்று சொல்லித் தப்பிக்க முடியாது
இயற்கையின் படைப்பில் ஆணும் பெண்ணும் சமமாகவே படைக்கப் பட்டிருக்கின்றனர். இயற்கையை ஒட்டியே அவர்கள் உடல் வாகு அமைந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் புணரும் போது  குழந்தைகள் உருவாகின்றன. ஆனால் அதுவே பெண்ணின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது ஆணும் பெண்ணும் புணரும்போது அதன் பாதிப்புகள் பெண்களுக்கே அதிகம் . ஆகவே அவர்களை வீக்கர் செக்ஸ் என்று கருதக் கூடாது இந்த நினைப்பே பெண்களைப் போகப் பொருளாக எண்ண வைக்கிறது. நடப்பு நிகழ்வுகளை மனதில் கொண்டு பெண்களும்  தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.  டெல்லியில் நடந்த ஒரு பெண்ணின் சீரழிப்பு இந்த நாட்டையே கொந்தளிக்க வைத்தது. சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் BBCயைச் சார்ந்த ஒருவர் ஒரு டாகுமெண்டரி படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதை இப்போது அரசும் தடை செய்து விட்டது. தண்டனையில் இருக்கும் ஒரு குற்றவாளி சொல்லி இருக்கும் கருத்துக்களே இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். எங்காவது ஏதாவது நிகழ்வு நடக்கக் காரணங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. ஒரு ரயில் விபத்து நடந்தாலும் காரணங்கள் அலசப் படுகின்றன. அவ்வாறிருக்க தண்டனையிலிருக்கும் குற்றவாளி ஒருவன் கூறுவது சர்ச்சைகளைக் கிளப்புகிறது. இதுவே சன்னியாசி என்று கருத படுபவராலும் தலைவர்கள் என்று கருதப் படுபவர்களாலும் சொல்லப் பட்டிருக்கின்றன. இம்மாதிரிக் கருத்துக்கள் எழக் காரணமே பெண்கள் தாழ்ந்தவர்கள் என்னும் எண்ணமே. பெண்களைப் போகப் பொருளாக நினைப்பவர்கள் குடிக்கு அடிமையாய் தன் வசம் இழந்து இருக்கும்போது செய்யும் குற்றங்களே வெளிச்சத்துக்கு வருகின்றன.நம்மைச் சுற்றி நடப்பது என்ன, நம்மைப் பற்றிய எண்ணங்களுக்கான காரணங்கள் என்னென்ன என்பதை மகளிர் அவசியம் அறிய வேண்டும்

நாம் என்னதான் வேண்டினாலும் ஒரு அழகான பெண் ஆணைக் கவருகிறார் என்பது தான் உண்மை. பல ஆண்களும் நல்லவர்கள் போல் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குச் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்பதுதான் பல பெண்களுக்கும் இது நன்றாகவே தெரியும் இருந்தாலும் பலரும் ஆண்களைக் கவரும் முயற்சி தங்களுக்குப் பாதகம் என்பதையும் உணர வேண்டும். சில பல சுதந்திரங்கள் அதற்கான விலையையும் பெறக்கூடும் நாட்டு நடப்புகளை அறியவும் அதைச் சமாளிப்பதற்கான மனத் திண்மையைப் பெறவும் பெண்கள் அறியவேண்டும் வருமுன் காத்தலே புத்திசாலித்தனம் வந்த பிறகு என்னதான் கூப்பாடு போட்டாலும் பாதிப்படைபவர்கள் பெண்களே.. இந்தப் பெண்கள் தினத்தில் இவற்றை முக்கியமாய் அறிய வேண்டியவர்கள் பெண்களே. அந்த விழிப்புணர்ச்சியை வலைப் பதிவுகளில் வளைய வரும் பெண்கள் அவசியம் வழங்கவேண்டும்.இதுவரை கொஞ்சம் சீரியசாகவே எழுதி விட்டேன்.
நடுத்தரக் குடும்பங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருப்பது போல் இருக்கும். ஆனால் உண்மையில் கீழே படித்துப்பாருங்களேன்

 கணவன்:- இன்றைக்கு நண்பர்கள் இருவரை டின்னருக்கு   அழைத்திருக்கிறேன் .என்ன சமையல் செய்கிறாய் ?
மனைவி:- நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு .

கணவன்:-  அடை  அவியல்  செய்துவிடு
மனைவி:- அவியலுக்கான  காய் கறிகள்  இல்லையே.

கண்வன்:-அப்போது  வெஜிடபிள் புலாவ்  செய்கிறாயா?
மனைவி:- அவியலுக்கே  காய்கறிகள்  இல்லை  என்கிறேன்,வெஜிடபுள்  புலாவ்
எப்படி?

கணவன்:-  வெங்காய  சாம்பாரும்  உருளைக் கிழங்கு  பொடிமாசும்  செய்கிறாயா?
 மனைவி:- இரவு உணவில்  உருளைக் கிழங்கு  வாயு  உபத்திரவம்  தரும்.


கணவன்:-சோளே  பட்டுரா  செய்தால் நன்றாக  இருக்கும் இல்லையா?
மனைவி:- சோளே  பட்டுரா ரொம்ப ஹெவியாகி விடும்.

கணவன்:-அப்படியானால்  மாகி  நூடுல்ஸ் செய்கிறாயா?
மனைவி:- சேச்சே ! டின்னருக்கு  கூப்பிடுகிறீர்கள் . வயிறு நிறைய  வேண்டாமா.?

கணவன்:-சரி. இட்லி  சாம்பார்  செய்து விடு
மனைவி:-அதற்கு  முன்பே ப்ளான்  செய்திருக்க  வேண்டும் .இட்லிக்கு
 மாவு அரைக்க  வேண்டாமா?

கணவன்:-அப்போ   ஓட்டலிலிருந்து  ஏதாவது  தருவிக்கலாமா.?
மனைவி:- வீட்டுக்கு வரச்சொல்லிக்  கூப்பிட்டு  ஓட்டலில் இருந்து தருவிப்பதா?


கணவன்:-பின் என்னதான் செய்யப் போகிறாய்
மனைவி:- நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு........!

30 comments:


  1. //பல ஆண்களும் நல்லவர்கள் போல் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குச் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்பதுதான்//
    அருமையான சவுக்கட வார்த்தை ஐயா ஸூப்பர்

    கணவன் மனைவியின் உரையாடல் அருமை மனைவி கணவனை கேனயனைப்போல் ஆக்கி விடுகிறாள் இதுதான் பல குடும்பங்களில் நடக்கிறது.

    ReplyDelete
  2. ஹா...ஹா....ஹா... கடைசி உரையாடலைப் படித்ததும் சிரிப்பு வந்தது!

    கொஞ்சம் பத்தி பிரித்துப் போட்டீர்களானால் படிக்க எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  3. ஒண்ணும் சொல்வதற்கில்லை ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நிச்சயமா ஆண்கள் சொல்லுகிறபடிதான் பெண்கள் நடக்கிறார்கள்?

    ReplyDelete
  5. ---//நான் அறிந்தவரை மத்தியதர வர்க்க வீடுகளில் பெண்களின் கையே ஓங்கி இருக்கிறது. ///
    உண்மைதான் ஐயா

    ReplyDelete
  6. ராமர்களும் உண்டு...

    உரையாடல் ஹா... ஹா...

    ReplyDelete
  7. நடுநிலையுடன் அலசி இருக்கிறீர்கள். உண்மைகளை அழுத்தமாகவே கூறி விட்டீர்கள்.மிடில் கிளாஸ் குடும்பங்களில் பெண்களின் கையே ஓங்கி இருக்கிறது.
    கடை நிலைக் குடும்பங்களில் பெண்களின் நிலை மோசமாகவே உள்ளது

    ReplyDelete
  8. நல்ல விழிப்புணர்வைத் தரும் பதிவு. நன்றி.

    ReplyDelete
  9. //பல ஆண்களும் நல்லவர்கள் போல் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குச் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்பதுதான்..//

    சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தும் - தன்னை சான்றோனாக, உத்தமியாக நிலை நிறுத்திக்கொண்ட நல்லவர்களும் உண்டு!..

    கருத்தாழம் மிக்க பதிவு!..

    ReplyDelete

  10. @ கில்லர்ஜி
    நான் எல்லா ஆண்களையும் குறை சொல்லவில்லை.ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.ஆண் அவன் விருப்பத்தை கட்டாயப் படுத்தினால் நிம்மதி போய் விடும். வருகைக்கு நன்றிஜி

    ReplyDelete

  11. @ ஸ்ரீராம்
    நடைமுறையில் இருப்பதைத்தானே சொல்கிறேன் ஆனால் பெண்ணடிமைத்தனம் என்று பேசுகிறோம். பத்தி பிரித்து’ புரியவில்லை. படிக்க சிரமமாக இருக்கிறதா. ?வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்
    ஏன் இந்த விரக்தி மேடம். ?வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  13. @ டாக்டர் கந்தசாமி
    நிச்சயம் ஆண்கள் சொல்கிறபடிதான் பெண்கள் நடக்கிறார்கள்?---அதென்ன கேள்விக்குறி,?வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  14. @ கரந்தை ஜெயக்குமார்
    நான் அறிந்த ஒரு உண்மையைத்தான் பகிர்ந்தேன் ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ திண்டுக்கல் தனபாலன்
    /ராமர்களும் உண்டு/ நீங்கள் ராமர்களும் என்று சொல்வதில் அவர்கள் மைனாரிடி என்னும் தொனி தெரிகிறதே. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  16. @ முரளிதரன்
    கடை நிலைக் குடும்பங்களில் பெண்களின் சுடந்திரம் அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. கருத்துப்பகிர்வுக்கு நன்றி முரளி.

    ReplyDelete

  17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வந்து கருத்துப் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  18. @ துரை செல்வராஜு
    நான் எல்லா ஆண்களையும் கூறவில்லை. கவனித்தீர்கள் என்றால் “பல” ஆண்களும் என்றுதான் கூறி இருக்கிறேன். வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  19. அய்யா தங்களின் இந்த செய்கையை
    கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
    (மை மைண்ட் வாய்ஸ்)
    பின் என்னவாம்
    எங்க வீட்டில் அடிக்கடி நடைபெறும் சமாச்சாரங்களை இப்படி பகிரங்கப்படுத்தினால் பாராட்டவா முடியும்.

    ReplyDelete
  20. என்னதான் எழுதினாலும் சொன்னாலும், இந்தியாவில் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லை என்றே சொல்லவேண்டும். எப்போது நாம் பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்துகிறோமோ அப்போது இந்த மாதிரி தினம் கொண்டாடவேண்டியதில்லை.

    ReplyDelete

  21. @ அன்பே சிவம்
    ஆட்சேபணை என்றால் அது முதலில் என் வீட்டிலிருந்துதான் வரவேண்டும். இப்போதல்லவா தெரிகிறது “இண்டிக்கி இண்டி ராமாயணம்” என்று. முதல்(?) வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  22. @ வே.நடன சபாபதி.
    என்னைக் கேட்டால் நம் யாருக்குமே சுதந்திரம் இல்லை. இதில் ஆண் என்ன பெண் என்ன?நம் நாட்டில் பெண் சுதந்திரம் ஆணுக்கு ஈடாக இருக்கிறது. ஆனால் பலரது மைண்ட் செட் வித்தியாசமாக இருக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  23. ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே. நேற்றோடு (மார்ச் 8) மகளிர்தினம் முடிந்து விட்டது. ஆச்சு. இனி அடுத்த ஆண்டு இதேநாள் வழக்கம் போல விவாதங்கள், அதே பிரச்சினைகள் தொடரும்.

    ReplyDelete

  24. @ தி. தமிழ் இளங்கோ
    சில தினங்களைக் குறிப்பிட்டு அதன் பின் புலங்களை நினைவு கூர்வது நல்லதே. அதை ஒரு சடங்காக எண்ணும்நமக்குள் பிரச்சனைகள்தொடரும் விவாதங்களும் இருக்கும்.வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  25. உரையாடல் டாப்.

    தன்னையறிந்து நடக்கும் மாதர் போற்றப்படுகிறார்.

    ReplyDelete
  26. கீதா அம்மா சொன்னதைத்தான் திருப்பிச் சொல்லத் தோன்றுகிறது!

    ReplyDelete
  27. ஹஹஹஹஹ நல்ல நகைச்சுவை. இதே போன்றுதான் கிட்டத் தட்ட ஒரு பதிவு விசுawesome அவர்களும் மிக மிக நகைச் சுவையுடன் எழுதியிருக்கிறார். இப்போது அல்ல ,முன்பே.

    எப்படி இந்தப் பதிவை விட்டோம் என்று தெரியவில்லை சார்!

    யதார்த்தம்.....அதே. மிடில் க்ளாஸ் குடும்பங்களில் பெண்கள் கைதான் ஓங்கி இருக்கின்றது. மிக மிக நலிந்த குடும்பங்களில் ஆண்கள் தான் ....பெண்கள் பாவம் சார்....

    கீதா: சார், எங்கள் வீட்டில் மதுரை மீனாட்சியோ, காஞ்சி காமாட்சி ஆட்சியோ இல்லை சார். எல்லாமே வீட்டுத் தலைவரின் ஆட்சியே.

    ReplyDelete

  28. @A.Durai
    வருகைக்கு நன்றி துரை சார். மாதர்கள் போற்றப் பட வேண்டியவர்களெ sans அவர்களின் சில நேரத்தைய அசட்டு + அகம்பாவ குணங்கள்

    ReplyDelete

  29. @ தருமி
    நான் இதை எதிர்பார்க்கவில்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  30. @ துளசிதரன்
    என் வீட்டில் நடப்பதையே கற்பனையாகக் கூறினேன். அப்படி நடப்பது அண்மைக் காலங்களில்தான் வீட்டில் நிம்மதி தருவது எதுவோ அதுவே நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதே முக்கியம். மற்றபடி மதுரையா சிதம்பரமா என்றெல்லாம் எண்ண வேண்டாம்.

    ReplyDelete