ஓ...அந்தக் காலம் ........!
----------------------------------
அது
1959-ம் வருடம். அம்பர்நாத்தில் இரண்டாண்டு பயிற்சி முடிந்து HAL ஏரோஎஞ்சின்
டிவிஷனில் பணிக்கு அனுப்பப் பட்டோம் ஏரோ எஞ்சின் டிவிஷன்
புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள்தான் ப்ய்னீர் எனலாம். போர்
விமானத்துக்கு எஞ்சின் தயார் செய்ய BRISTOL SYDLEY என்னும்
ஆங்கில கம்பனியுடன் ஒப்பந்தம் ஆகியிருந்தது.அவர்களது ORPHEUS
எஞ்சினை இங்கேயே தயார் செய்ய
ஒப்பந்தம் நாங்கள் போய்ச் சேர்ந்தபோது உற்பத்தி செய்ய எந்த தளவாடங்களும்
நிறுவப்பட்டிருக்கவில்லை. அதுவே எங்கள் முதல் பணியாகி இருந்ததுஅந்தக் காலத்தில்
அந்தப் பகுதி ஒரு காடு போல் இருந்தது. அதை செப்பனிட்டு தொழிற்சாலை கட்டி
இருந்தார்கள். நிறைய ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வந்திருந்தனர் பயிற்சி
முடித்து வந்திருந்த எங்களுக்கு முதல் பணியே மெஷின்களை நிறுவுவதுதான் எந்த மெஷின்
எங்கிருக்க வேண்டும் என்ற லே அவுட் முதல் அவற்றை அந்தந்த இடத்தில் எரெக்ட்செய்து
ஓட்டிப்பார்க்கும்வரை மெயிண்டினன்ஸ் துறையுடன் கை கோர்த்துப் பணியாற்றும் வேலை
என்ன வேலை செய்தோம் என்பது பற்றி அல்ல இந்தப் பதிவு.
ஏரோ எஞ்சின்
தொழிற்சாலை புதியதாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் HAL மெயின்
தொழிற்சாலை பேரும் புகழோடு இயங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை
விமரிசையாகக் கொண்டாடப் படும் தொழிற்சாலையிலிருந்தே கணிசமான நிதி ஒதுக்கி
விடுவார்கள் அந்த ஒரு நாளில் தொழிலாளி தன் திறமையைக் காட்டும் விதத்தில் சில
பொருட்களை உற்பத்தி செய்வான் . இன்றும்
என் கண் முன் வருவது லேத் எனப்படும் மெஷினில்( பொதுவாக உருளைகள் செய்ய உபயொகமாகும்
மெஷின்) க்யூபுக்குள் க்யூப் செய்து தங்கள் திறனைக் காட்டி இருந்ததுதான் மிகவும்
கோலாகலமாக ஆயுத பூஜை கொண்டாடப்படும் அந்த் 1959-ம் ஆண்டு எஞ்சின் டிவிஷனில் முதல்
ஆயுத பூஜை. தொழிலாளிகளின் திறமையைக் காட்டும் வாய்ப்பே இல்லாதிருந்தது. அதற்காக
ஆயுத பூஜை கொண்டாடாமல் இருக்க முடியுமா.? ஒரு கமிட்டி நிறுவப் பட்டு என்னிடம்
பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டது. பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டாலும் மேலதிகாரிகளே
இன்னின்ன மாதிரி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். அதன் படி ஒரு மேடை அமைக்கப்
பட்டு சுவாமி படங்களுடன் தொழிற்கருவிகளுக்கும் பூஜை போடப்படும் என்று பொதுவாக
ஒப்புக்கொள்ளப் பட்டது
திட்டமிட்டபடிஅலங்காரங்களுடன்
மேடை வேலைகள் நடந்து கொண்டிருந்தன. திடீரென்று மேலாளர் எத்தனை மாலைகளுக்கு ஆர்டர்
செய்திருக்கிறேன் என்று கேட்டார். இரண்டு மூன்று பெரிய படங்களுக்கு மாலை போடத்
தேவைக்கேற்ப ஆர்டர் செய்துள்ளதைக் கூறினேன் அவர் இன்னும் நான்கு பெரிய மாலைகள்
தேவை என்றார். எதற்கு என்று கேட்டேன் அங்கிருந்த ஆங்கில அதிகாரிகளுக்கு மாலை
அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்றார். எனக்கு அது உடன் பாடாக வில்லை.
நண்பர்களுடன் கமிட்டியில் விவாதித்தேன் ஆயுத பூஜை கடவுளுக்கு நன்றி சொல்லும்
வழிபாடு ஆசாமிகளுக்கெல்லாம் மாலை போட்டு மரியாதை தேவை இல்லை என்னும் கருத்து
உருவாகிற்று. இதை எங்கள் மேலாளரிடம் சொன்னபோது அவர் முகம் சிவந்து விட்டது.
ஒப்புக்குத்தான் கமிட்டி எல்லாம் என்றும் அவர் சொன்னதைச் செய்வதுதான் எங்கள் பணி
என்றும் கூறினார் அப்படியானால் கமிட்டியைக் கலைத்து விடுமாறும் நாங்கள்
எதிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறினேன்.
அந்த
முதல் ஆயுத பூஜை ஏரோ எஞ்சின் டிவிஷனில் நாங்கள் யாரும் பங்கேற்காத கோலாகல பூஜையாக
வெள்ளை அதிகாரிகளுக்கு மாலை மரியாதை எல்லாம் செய்யப்பட்டு நடந்தேறியது. பிரசாதம்
வாங்கவும் நாங்கள் போகவில்லை.
அப்போது நடந்த நிகழ்ச்சிகளில் நான் கவனித்த ஒன்று.
அதிகாரிகள் தமிழில் பேசும்போது பேச்சிலும் வார்த்தையிலும் மரியாதை இருந்தது/ அதே
அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசும் போது வார்த்தைகள் தடித்தும் அகங்காரம் ஆணவம்
உடையதாகவும் இருந்தது காரணத்தை ஆராயும் போது வீட்டுச் சூழலில் தமிழில் பேசும்போது
மரியாதை கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது.ஆங்கிலத்தில் பேசும்போது I KNOW, YOU DON”T KNOW என்னும் பாவம் வந்து விடுகிறது
(அந்தக் கால நினைவுகள் தொடரும்)
நல்ல அனுபவங்கள்.
ReplyDeleteஅட நல்ல அனுபவம் சார்! மாலைக்கு எதிரான தங்கள் கருத்தை ஆமோதிக்கின்றோம் சார்.
ReplyDeleteநம்மவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது பொலைட்னெஸ் குறைவது இன்றளவிலும் உள்ளது சார்...தமிழில் வருவது போல இல்லை என்பது உண்மையே!
சுவாரஸ்யமான அனுபவம்.
ReplyDeleteநல்ல மலரும் நினைவுகள், அன்று தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதியை பாராட்டியே ஆகவேண்டும். மேலதிகாரியின் கெடுபிடிக்கும் வளைந்து கொடுக்காமல் இருந்த உறுதி மேன்மையானது. பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete"தமிழில் பேசும்போது பேச்சிலும் வார்த்தையிலும் மரியாதை இருந்தது/ அதே அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசும் போது வார்த்தைகள் தடித்தும் அகங்காரம் ஆணவம் உடையதாகவும் இருந்தது காரணத்தை ஆராயும் போது வீட்டுச் சூழலில் தமிழில் பேசும்போது மரியாதை கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது.
ReplyDeleteஆங்கிலத்தில் பேசும்போது I KNOW, YOU DON”T KNOW என்னும் பாவம் வந்து விடுகிறது"
இது இயல்பாக வருவது மட்டுமல்ல இதற்கான காரணமாக நீங்கள் சொன்னதும் உண்மைதான்.
மிகவும் கவனிக்கப் படவேண்டிய ஒன்று இது.
God Bless You
அந்தக் கால நினைவுகள் – படிக்க சுவாரஸ்யம். கடவுளுக்கு மரியாதை செய்யும் இடத்தில் அதிகாரிகளுக்கு தனியே எதற்கு மரியாதை என்று நீங்கள் நினைத்து செயல்பட்டது சரிதான். உங்களது அந்தக் கால நினைவுகள் தொட்ரும் என்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.
ReplyDeleteசாமிக்கு செய்யவேண்டிய மரியாதையை ஆசாமிக்கு செய்ய சொன்னதை மறுத்தது சரியே.
ReplyDelete>>> கடவுளுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டில் ஆசாமிகளுக்கெல்லாம் மாலை போட்டு மரியாதை தேவை இல்லை <<<
ReplyDeleteமாலைக்கு எதிரான தங்கள் கருத்து மிக மிகச் சரியானதே!..
வாழ்க நலம்!..
ReplyDeleteசாமிக்கு செய்ய வேண்டிய மரியாதையை ஆசாமிக்கு செய்வது முறையற்றது இது பலருக்கும் புரிவதில்லை.
# கடவுளுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டில் ஆசாமிகளுக்கெல்லாம் மாலை போட்டு மரியாதை தேவை இல்லை #
ReplyDeleteஆனால் ,ஹிந்து சாமிகளின் படத்தை மட்டுமே வைத்து கும்பிடுவது எப்படி கடவுளுக்கு நன்றி சொல்வதாக ஆகும் :)
"அந்தக் கால நினைவுகள் "
ReplyDeleteஆங்கிலத்தில் பேசும் போது வார்த்தைகள் தடித்தும் அகங்காரம் ஆணவம் உடையதாகவும் இருந்தது, காரணத்தை ஆராயும் போது, வீட்டுச் சூழலில் தமிழில் பேசும்போது மரியாதை கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது.
மிக்க மகிழ்வான பண்பு. வரவேற்பிற்குரிய நடைமுறை! நல்ல தலைமுறை!
ஆனால்? இன்று????
நிகழ் கால நினைவுகள் நினைக்கையிலே நெஞ்சு பொறுக்குதில்லையே!!!!
தங்களின் மலரும் நினிவுகள் நறுமணம்!!!!
நட்புடன்,
புதுவை வேலு
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
அனுபவங்களைப் பகிரும்போது என்னை நான் வெளிக்கொண்ர்வது போல் உணர்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
மாலைக்கு எதிரான கருத்தை நான் வெளியிட்டு மேற்கொண்டபோது என் வயது 21.பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்த புதிது. கொள்கைகளில் மாற்றம் இல்லை. வருகைக்கு நன்றி.
ReplyDelete@ ஸ்ரீராம்
என் அனுபவங்களைப் பகிர்வதும் சுவாரசியம்தான் .வருகைக்கு நன்றி ஸ்ரீ.
ReplyDelete@ எஸ்பி. செந்திகுமார்
இந்தமாதிரிக் கொள்கைப்பிடிப்புகளால் நிறையவே அனுபவித்து விட்டேன் வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ வெட்டிப்பேச்சு
இப்பொழுதும் பல குடும்பங்களில் மரியாதையாகவும் பணிவாகவும் தன் வயதிலும் சிறியவர்களிடத்தும் நடந்து கொள்ளும் பாங்கைக் காண்கிறேன் ஆங்கில மொழியில் அது மறந்து விடுகிறது. வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
அன்று அந்த நிலையை நான் எடுத்ததால் பல உயரதிகாரிகளிடம் “நல்ல “ பெயர் வாங்கி இருந்தேன் எல்லோரும் சமம் என்பது என் கொள்கை. வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ வே நடன சபாபதி.
இன்றும் பல கோவில்களில் கூட இது பின்பற்றப்படுகிறதே. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ துரை செல்வராஜு
இந்த முறை பலைடங்களில் விசேஷ்மாகக் கோவில்களில் பின்பற்றப்படும்போது மனம் வலிக்கும் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ கில்லர்ஜி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி.
ReplyDelete@ பகவான் ஜி
நமக்கும் மேலான சக்தி என்று நம்பும் ஒன்றை சிலை வடிவமாகவோ படங்கள் மூலமாகவோ வழிபடுதல் அவரவர் நம்பிக்கையின் அடிப்படை. ஆசாமிகள் நம்மைப்போன்றவர்கள்தானே வருகைக்கு நன்றி ஜி.
ReplyDelete@ யாதவன் நம்பி
இந்தத் தலைமுறையிலும் சில இடங்களில் அந்தப்பண்பைக் காண்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.
//கொள்கைகளில் மாற்றம் இல்லை. //
ReplyDeleteஇது பிடித்தது.
கற்றுத் தந்தவர் கடவுளால் கடவுளுக்கு மாலை போட்டு மரியாதை செய்யலாம். ஆசானை விடவா மேலானவன் ஆண்டவன்? வெள்ளை என்பது தோலின் நிறம். அவ்வளவு தானே?
ReplyDeleteநெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி இன்றிருக்கும் அநேகரை நினைக்க, அன்றைய உங்களின் துணிச்சல் பாராட்டத் தக்கதே ஐயா!
ReplyDeleteநன்றி.
அனுபவம் பலவிதம் அருமையான பகிர்வு ஐயா! உங்கள் பதிவுகளை கைபேசியில் வாசித்தாலும் உடனே பின்னூட்டம் போடமுடியாத சூழல்!என்னிடம் இப்போது ஐபோன்இல்லை தற்போது விரைந்து பழைய நிலைக்கு வரலாம் என்ற நம்பிக்கையுடன்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
ாதங்களின் அனுபவத்தை பதிவிட்டமைக்கு நன்றி படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் மனத்துணிவையும், அச்சூழலை எதிர்கொண்ட நிலையையும் அறிந்து வியந்தேன். ஒவ்வொரு அலுவலகத்திலும் தங்களைப் போன்ற ஒருவர் இருந்தால் போதுமானது. மற்றவை சீராகிவிடும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇது தான் தமிழின் சிறப்பா...?
ReplyDeleteஉங்களின் மன உறுதிக்கு பாராட்டுகள் ஐயா...
ReplyDelete@ தருமி
மாற்றமில்லாக் கொள்கை பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. நன்றி தருமி அவர்களே
ReplyDelete@ அப்பாதுரை
சொல்ல வருவது புரியவில்லை சார்.யார் ஆசான்...?உங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ ஊமைக் கனவுகள்
பாராட்டுகளுக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ தனிமரம்
உங்கள் ஆதரவு கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து தாருங்கள். வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ ரூபன்
அனுபவங்கள் என்னை உருவாக்கின. பகிர்வதும் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
சூழலை எதிர் கொண்ட விதத்துக்கும் ஒரு விலை கொடுத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
இது தமிழின் சிறப்பாகத் தோன்றவில்லை,கற்றுக் கொடுப்பவரின் சிறப்பே வருகைக்கு நன்றி டிடி.
எங்களுடைய ஆசிரியர் கூட சொல்லுவார் ஆங்கிலம் மரியாதை தெரியாத மொழி என்று! அன்றைய நினைவுகள் சிறப்பு! நன்றி!
ReplyDelete
ReplyDelete@ தளிர் சுரேஷ்
மொழியை ஏன் குறை கூறவேண்டும் தளிர். தவறு கற்றுக் கொடுப்பவர்களிடமும் கற்பவர்களிடமும் அல்லவா இருக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா.
மலரும் நினைவுகள் அருமை ஐயா
ReplyDeleteகொண்ட கொள்கையில் உறுதியாக நின்றது கண்டு வியக்கிறேன் ஐயா
நன்றி
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
வெள்ளைக்காரர்கள் வேலை கற்றுக் கொடுத்ததாகப் புரிந்துகொண்டேன்...
ReplyDelete
ReplyDelete@ அப்பாதுரை
அவர்கள் வேலை கற்றுக் கொடுக்க வந்தமாதிரி இல்லை. இன்னும் நம்மை அடிமைகளாகவே பார்த்த ஒப்பந்ததாரர்கள்.மீள்வருகை தந்ததற்கு நன்றி சார்
தமிழ்மொழியில் மற்றவரை அதட்டுவதற்கும் அதிகாரத்தைக் காட்டுவதற்குமான சொல்வரிசை உருவாக்கப்படவில்லை. ஆங்கிலத்திலும் இந்தியிலும் அது உண்டு. எனவேதான் மிகச் சாதாரணமான Stand up, Sit down, Attention, Stand-at-ease, Left Turn, Right Turn, போன்ற NCC parade சொற்களைக்கூட அதே மாதிரி அதிகார தொனியில் உச்சரிக்கவல்ல தமிழ் சொற்கள் நம்மிடம் இல்லை. அடங்கிப்போவதற்கே தகுதியான மொழியாக நம் தமிழை வளர்த்து விட்டோமோ என்று தோன்றுகிறது. சென்றவிடமெல்லாம் தமிழன் மிதிபட்டு உழல்வதற்கு நமது மொழியின் இத்தன்மையும் ஒரு காரணமோ என்பது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு உரியது.
ReplyDelete
ReplyDelete@ செல்லப்பா யக்ஞசாமி
இந்த வகையில் நான் சிந்திக்கவில்லை. ஒரு வித்தியாசமான பார்வை. வருகைக்கு நன்றி சார்
தமிழிலும் அதட்டலாம், திட்டலாமே! எனக்குத் தெரிந்து பிறமொழிகளில் பேசும்போது தான் தமிழ் பேசுபவர்கள் குழைந்து பேசுவதாகத் தெரியும். அருமையான நினைவலைகள்.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
ReplyDeleteதமிழிலும் திட்டலாம்தான் அதட்டலாம்தான்.இருந்தாலும் பொதுவாக வீட்டில் தமிழில் பேசும்போது அறியாமலேயே ஒரு பணிவு கற்றுக் கொள்ளப் படுகிறது. வருகைக்கு நன்றிமேம்