தொடர் பயணம் இராமேஸ்வரம் -3
---------------------------------------------------- இராமேஸ்வரத்தில் மூன்றாம் நாள் வெகுவாக ஒரு
சுற்றுலாவாகவே இருந்தது காலையிலேயே கிளம்பி இராமநாதபுரத்தில் இருந்ததேவிப்பட்டினம்
திருப்புல்லாணி உத்தரகோச மங்கை ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டம் இட்டிருந்தோம் போகும்
வழியே இந்திராகாந்தி பாலம் மேல் என்பதாலும் அதன் ஊடாகவே தெரியும் பாம்பன் பாலத்தையும்
காணவண்டி நிறுத்தப்பட்டது
பாம்பன் பாலம்
இந்திராகாந்தி பாலத்தில் இருந்து பாம்பன் பாலம் ஒரு பார்வை
பம்பன் பாலத்தூண்களில் அமர்ந்து மீன் பிடிப்பவர்கள்
பாலத்தைக் கடந்தபின் காலை உணவுக்காக ஒரு
ஹோட்டலில் இறங்கினோம் சுவையான காலை உணவாகவே இருந்தது அங்கு சுவற்றில் ஒரு
அறிவிப்பு கண்டேன் சுலை மானி என்று ஏதோ எழுதி இருந்தது. அப்படி என்றால் என்ன என்று
கேட்டபோது அங்கு வளைகுடா நாடுகளில் இருந்து பலரும் வருவார்கள் என்றும் அது
கறுப்புத் தேனீரைக் குறிக்கும் அரபிச் சொல் என்று சொன்னார்கள் கில்லர்ஜி கவனிக்க.
மேலும் நம்மூர் சுக்குக் காஃபியும்
இருந்தது எங்களில் பலர் அதைச் சுவைத்தனர் அதன் சுவையை எங்களுள் ஒருத்தி ருசிப்பது
காணொளியில் காணலாம்
காலை உணவு
சுக்குக்காப்பியின் சுவை காணொளியில் தெரிகிறதா.?
அங்கிருந்து நேராக தேவிப்பட்டினம் போனோம்அங்கு
ராமர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவக்
கிரகங்கள் நீரில் இருக்கின்றன. கடந்தமுறை நாங்கள் வந்திருந்தபோது படகில்
கடலுக்குள் சென்று கடல் தர்ப்பை கொண்டு வந்து
பூசை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் இம்முறை கடல் தர்ப்பை பற்றிய பேச்சே
காணோம் இம்முறை நவபாஷாண நவக்கிரகங்களில் சில நீரில் மூழ்கி இருந்தன.
நவபாஷாணக் கோவில் பற்றிய அறிவிப்பு
நவ பாஷாணக் கோவில் காணொளி
நவபாஷாணக் குளம்
அங்கிருந்து உத்தரகோசமங்கையில் இருக்கும் மரகத
நடராஜர் கோவிலுக்குச் சென்றோம்இதை
ஆதிசிதம்பரத்தோடு ஒப்பிடுகிறார்கள் ஐந்தரை அடி உயர மரகதச் சிலைநடராஜர் ஆடும் இடம் இரத்தினசபை எனப்படுகிறது மார்கழி மாதம்திருவாதிரையின் போது மட்டும்மேனி எங்கும் பூசியுள்ள சந்தணக்காப்புஅகற்றப்பட்டு அபிஷேகம் நடை பெறும் இறைவன்
பெயர் மங்களேசுவரன்அம்பிகை மங்களேசுவரி சிவாலயங்களில்
உபயோகப்படுத்தப் படாத பகிஷ்கரிக்கப்படும் தாழம்பூ இங்கு இறைவனுக்கு அணிவிக்கப் படுகிறது தாழம்பூ பெற்ற
சாபமிங்கு நிவர்த்தி யானதாகக் கதைஇறைவன் பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் ரகசியத்தை
உபதேசித்ததால் இப்பெயர் பெற்றது என்கிறார்கள் உத்தரம் என்றால் உபதேசம் கோசம்
என்றால் ரகசியம்மங்கை தேவி பார்வதியைக்
குறிக்கும்.
உத்தரகோசமங்கை திருக் கோபுரம்
கோவில் பற்றிய அறிவிப்புப் பலகைகள்
தரிசனம்முடித்தபின் திருப்புல்லாணிக்குப் புறப்பட்டோம்அங்கு ஆதிஜகன்னாத பெருமாளைக்
காணச் சென்றோம் இராமேசுவர வழிபாட்டுக்குப் பின்யாத்திரிகர்கள் திருப்புல்லாணி அல்லது தர்ப்பசயனத்துக்கு (ஆதிசேது)
போகவேண்டும் என்பது ஐதீகம்இது ஆழ்வார்களால் மங்களாசாசனம்செய்யப்பட்ட திவ்ய தேசங்களுள் ஒன்று. இந்த இடத்தில்
இராமபிரான் தர்ப்பைப்புல் மேல் சயனித்திருந்ததாகவும்கடலரசன் வர தாமதித்ததால் அவன் மேல் கோபம்
கொண்டுஅவன் கர்வத்தை அடக்கி பிறகு அவன்
உதவியுடன் சேது அணையைக் கட்டினார் என்று கதை உண்டு.
ஆதிஜெகன்னாதர் ஆலயம் திருப்புல்லாணி
. அங்கிருந்து வில்லூண்டி தீர்த்தம்
என்னும்இடத்துக்குப் போனோம்இதுவரை நான் போகாத இடம் இது. சீதையின்
தாகத்தைத் தீர்க்க இராமபிரான் கடலின் ஓரத்தில் தன் வில்லை ஊன்றி நீர் வரவழைத்ததால்
இப்பெயர் என்கிறது அங்குள்ள அறிவிப்புப் பலகை. கடலின் ஆழத்தில் இருந்து வரும் நீர்
குடிக்க ஏதுவாக உப்புக்கரிப்பு இல்லாமல் இருக்கிறது
கடலோரம் வில்லுண்டி தீர்த்தம்
வில்லூண்டி தீர்த்தம் பற்றிய அறிவிப்புப் பலகை.
வில்லூண்டி தீர்த்த நீர்
.
இராமேசுவரம் திரும்பும் வழியில் திரு அப்துல்
கலாமுக்கான சமாதி இடத்துக்கும் போனோம்
திரு அப்துல் கலாம் சமாதிவேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன
சமாதி அருகே நிறுவப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு
இவ்வாறு இராமேஸ்வரத்தில் மூன்று நாட்கள் கழிந்தோடின. அடுத்த நாள் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டோம் மாலையில் நாகர் கோவிலுக்கு ரயில் டிக்கெட் முன் பதிவாகி இருந்தது. நாகர் கோவிலில் அதிகாலை மூன்று மணி அளவில் ரயில் போய்ச் சேரும் என்றும் ரயில் நிலையத்திலேயே ஆறுமணிவரை இருந்து பின் தங்கும் இடத்துக்குப் போவோம் என்று மச்சினன் கூறினான் ( தொடரும் )
வணக்கம் ஐயா விபரங்கள் அனைத்தும் தெளிவாக சொல்லிப் போகின்றீர்கள் ஆம் ஐயா சுலைமாணி என்பது அரபு வார்த்தை அதாவது நமது மொழியில் வரச்சாயா என்று சொல்வோம் அரபியர்கள் ¼ மணி நேரத்துக்கு ஒருமுறை (சிறிய கப்) குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்தப்பெயர் அங்கும் நிலுவையில் இருப்பதை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்
உத்திரகோச மங்கையில் சேதமான அரைக் கோபுரம் பார்த்தீர்களா ? அது 12 முறை கட்டப்பட்டும் இடிந்த கோபுரம் தேரை விழுந்த கோபுரம் என்றும் சொல்வார்கள் திருப்புல்லாணி போனிர்களே கீழக்கரைக்குள்ளும், அப்படியே ஏர்வாடி தர்ஹாவும் பார்த்து இருக்கலாமே தர்ஹா அல்வா சிறப்பான சுவை
காணொளியில் சுக்கு காபியின் சுவையை உணர முடியவில்லை ஒருவேளை குடிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன் தொடர்கிறேன் ஐயா
மிக அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். வில்லுண்டி தீர்த்தம் முன்னெல்லாம் படகில் போக வேண்டும். போனதில்லை. இப்பொழுது நல்ல பாலம் அமைத்திருக்கிறார்கள் போல மிக நன்றி.
வில்லூண்டி தீர்த்தம் பாலம் இருக்கிறதா!! நாங்கள் இலங்கையிலிருந்து இந்தியா வரும் போது இராமேஸ்வரம் வந்துதானே வருவோம். அப்போது பாட்டி திருப்புல்லாணி, வில்லூண்டித்தீர்த்தம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார். தீர்த்தத்திற்குப் படகில் செல்ல வேண்டும். ஆனால் படத்தில் பார்க்க அங்கு தண்ணீர் இல்லாமல் கரை போல் இருக்கிறதே..படங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் சென்றது. அருமையான பயணம் தங்கள் பயணம். அட எங்கள் ஊருக்கும் சென்றீர்களா நாகர்கோவில்....தொடர்கின்றோம் சார்...
@ கில்லர் ஜி உத்தரகோசமங்கையில் சேதமான கோபுரம் ஏதும் பார்க்கவில்லை. அதுபற்றி யாரும் முன்பே சொல்லவுமில்லை, கீழக்கரைக்கும் ஏர்வாடி தர்காவுக்கும் செல்லவில்லை. அவை பற்றிய விவரங்கள் திட்டமிடும்போது தெரிந்திருக்கவில்லை. வருகைக்கு நன்றி ஜி.
@ எஸ்பி செந்தில்குமார் தொடர் வருகைக்கு நன்றி கோவில்களுக்குச் சுற்றுலா என்றால் ஆன்மீகச் சுற்றுலாவாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பிறிதொரு பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன்
@ வல்லி சிம்ஹன் அத்திபூத்தாற்போலான வருகை மகிழ்ச்சி தருகிறது மேடம் மூன்று முறை இராமேஸ்வரம் சென்றிருந்தாலும் வில்லூண்டி தீர்த்தம் காண்பது இதுவே முதல் முறை. வருகைக்கு நன்றி மேம்
@ துளசிதரன் தில்லையகத்து பல இடங்கள் சுற்றுலாத்தலமாக மாறி வரும்போதுஅதற்கேற்ப மாற்றங்களும் செய்யப்படுகின்றன. வில்லூண்டி தீர்த்தத்துக்கு படகில் போக வேண்டுமென்னும் தகவல் வேறு கேள்விகளை எழுப்புகிறது. சீதையின் தாகம் தீர்க்கஇராமர் ஏன் கடலில் வில் ஊன்ற வேண்டும் ? கேள்விகள் கேட்கக் கூடாது. வருகைக்கு நன்றி அடுத்த இரு பதிவுகள் நாகர் கோவில் சுற்றுலாதான்
@ உமேஷ் ஸ்ரீநிவாசன் ஐயா நான் எங்கும் பக்திச் சுற்றுலா என்று கூறவில்லையே கோவில்களுக்கும் போனோம் அதுஆன்மீகச் சுற்றுலாவாகவும் பக்திச் சுற்றுலாவாகவும் ஏனோ எண்ணப்படுகிறது வருகைக்கு நன்றி உமேஷ்
நேரப் பற்றாக்குறையால் வில்லுண்டி தீர்த்தம் போக முடியலை. ஆனால் நாங்கள் தனுஷ்கோடி சென்றோம். அங்கேயே நிறைய மகிழ்வுப் பேருந்துகள் இருக்கின்றன. முதலில் நாங்கள் போய்க் கேட்டப்போ ஒருத்தருக்கு 500 ரூபாய் என்றார்கள். நாங்கள் யோசிக்கவே நீங்க நாலு பேர் மட்டும் என்றால் ஐநூறு ரூபாய் கொடுக்கணும். ஆகவே ஆட்கள் வரட்டும், காத்திருங்கனு சொன்னாங்க. அப்புறமாப் பத்துப் பேர் வரவே மொத்தத் தொகை 2,000/- அனைவருக்குமாகப் பிரித்துக் கொடுத்தோம். அந்த மகிழ்வுந்தில் குறைந்த பட்சமாகப் பதினைந்து பேர் போகலாம். தநுஷ்கோடி செல்வது மிகவும் ஆபத்தான பயணமாகவும் இருக்கிறது. என்றாலும் போய் வந்தோம். அதிலேயே மிகக் களைப்பும் அடைந்துவிட்டோம். மறுநாள் திருப்புல்லாணி போனோம். முதல்நாளே அங்கே போய்த் தங்கி விட்டோம்.
@ கீதா சாம்பசிவம் எனக்கு தனுஷ்கோடி போக ஆர்வமிருந்தது. ஆனால் மகிழ்வூந்து நிறையும் வரை காத்திருக்க மெஜாரிடியினர் விரும்பவில்லை. அது ஆபத்தானது என்றும் கூறி சிலர் பயமுறுத்தி விட்டார்கள். மொத்தத்தில் இம்முறையும் என்னால் தனுஷ்கோடி போகமுடியவில்லை.வருகைக்கு நன்றி மேம்
உங்களது பயணக் குறிப்புகள் மற்றவர்களுக்கு நன்கு பயன்படும் வண்ணம் , நிறைய தகவல்களோடு இருக்கின்றன.தனுஷ்கோடி போவதில் என்ன ஆபத்து என்று குறிப்பிட்டால் தேவலை.
@ தி தமிழ் இளங்கோ இப்போது தனுஷ் கோடிக்கு மணலில் பயணிக்க வேண்டுமாம் சுமார் ஆறு கிலோமீட்டருக்கும் மேல். அங்கு போக ஏதோ விசேஷ வேன்கள் தான் வேண்டுமாம் அவையும் மணலில் சிக்கும் அபாயமிருப்பதாகக் கூறு கிறார்கள் இப்போதும் கடல் வழியே படகுகளில் தனுஷ் கோடி வரை செல்ல முடியும்
ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வந்தது லேசாக நினைவில் இருக்கிறது.படங்களும் பயண விவரங்களும் மீண்டும் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது
@ துளசி கோபால் வில்லூண்டியை நினைக்கும்போது நிறையவே கேள்விகள் வருகின்றன. இந்த முறை இராமேஸ்வரப் பயணத்திலும் தனுஷ் கோடி செல்ல முடியாததில் மிகுந்த ஏமாற்றமே பாராட்டுக்கு நன்றி மேம்
ரசித்தேன். தொடர்கிறேன்.
ReplyDeleteபுகைப்படங்கள் சிறப்பு.
பெரிய்ய்ய்யய்ய்ய டூராக இருக்கும் போல இருக்கு.
ReplyDeleteபயண அனுபவங்களின் விவரிப்பு - எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது..
ReplyDeleteவாழ்க நலம்..
வணக்கம் ஐயா விபரங்கள் அனைத்தும் தெளிவாக சொல்லிப் போகின்றீர்கள்
ReplyDeleteஆம் ஐயா சுலைமாணி என்பது அரபு வார்த்தை அதாவது நமது மொழியில் வரச்சாயா என்று சொல்வோம் அரபியர்கள் ¼ மணி நேரத்துக்கு ஒருமுறை (சிறிய கப்) குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்தப்பெயர் அங்கும் நிலுவையில் இருப்பதை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்
உத்திரகோச மங்கையில் சேதமான அரைக் கோபுரம் பார்த்தீர்களா ? அது 12 முறை கட்டப்பட்டும் இடிந்த கோபுரம் தேரை விழுந்த கோபுரம் என்றும் சொல்வார்கள்
திருப்புல்லாணி போனிர்களே கீழக்கரைக்குள்ளும், அப்படியே ஏர்வாடி தர்ஹாவும் பார்த்து இருக்கலாமே தர்ஹா அல்வா சிறப்பான சுவை
காணொளியில் சுக்கு காபியின் சுவையை உணர முடியவில்லை ஒருவேளை குடிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன்
தொடர்கிறேன் ஐயா
அருமையான பயணப் பதிவு அய்யா! தொடர்கிறேன்.
ReplyDeleteமிக அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். வில்லுண்டி தீர்த்தம் முன்னெல்லாம் படகில் போக வேண்டும். போனதில்லை. இப்பொழுது நல்ல பாலம் அமைத்திருக்கிறார்கள் போல மிக நன்றி.
ReplyDeleteபயணம் அருமையாய் இனிமையாய் நகர்ந்து கொண்டிருக்கிறது ஐயா
ReplyDeleteதொடர்கிறோம்
நன்றி
உங்கள் உடன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறோம். புகைப்படங்கள், செய்திகள் அருமை. நன்றி.
ReplyDeleteவில்லூண்டி தீர்த்தம் பாலம் இருக்கிறதா!! நாங்கள் இலங்கையிலிருந்து இந்தியா வரும் போது இராமேஸ்வரம் வந்துதானே வருவோம். அப்போது பாட்டி திருப்புல்லாணி, வில்லூண்டித்தீர்த்தம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார். தீர்த்தத்திற்குப் படகில் செல்ல வேண்டும். ஆனால் படத்தில் பார்க்க அங்கு தண்ணீர் இல்லாமல் கரை போல் இருக்கிறதே..படங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் சென்றது. அருமையான பயணம் தங்கள் பயணம். அட எங்கள் ஊருக்கும் சென்றீர்களா நாகர்கோவில்....தொடர்கின்றோம் சார்...
ReplyDeleteகீதா
ஐயா, பக்திச்சுற்றுலா பற்றிய விவரணம் அருமையாக உள்ளது. காணொளிகளும் நன்றாக உள்ளன.
ReplyDelete
ReplyDelete@ ஸ்ரீராம்
தொடர் வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
அதுதான் முதலிலேயே எழுதி இருந்தேனே பெங்களூரில் 17-1-2016-ல் துவங்கி 27-1-2016 வரை என்று வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ துரை செல்வராஜு
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்
ReplyDelete@ கில்லர் ஜி
உத்தரகோசமங்கையில் சேதமான கோபுரம் ஏதும் பார்க்கவில்லை. அதுபற்றி யாரும் முன்பே சொல்லவுமில்லை, கீழக்கரைக்கும் ஏர்வாடி தர்காவுக்கும் செல்லவில்லை. அவை பற்றிய விவரங்கள் திட்டமிடும்போது தெரிந்திருக்கவில்லை. வருகைக்கு நன்றி ஜி.
ReplyDelete@ எஸ்பி செந்தில்குமார்
தொடர் வருகைக்கு நன்றி கோவில்களுக்குச் சுற்றுலா என்றால் ஆன்மீகச் சுற்றுலாவாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பிறிதொரு பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன்
ReplyDelete@ வல்லி சிம்ஹன்
அத்திபூத்தாற்போலான வருகை மகிழ்ச்சி தருகிறது மேடம் மூன்று முறை இராமேஸ்வரம் சென்றிருந்தாலும் வில்லூண்டி தீர்த்தம் காண்பது இதுவே முதல் முறை. வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
தொடர்ந்து வர வேண்டி நன்றியுடன் ஐயா
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
தொடர்ந்து வந்து ரசிப்பதற்கு நன்றி ஐயா
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
பல இடங்கள் சுற்றுலாத்தலமாக மாறி வரும்போதுஅதற்கேற்ப மாற்றங்களும் செய்யப்படுகின்றன. வில்லூண்டி தீர்த்தத்துக்கு படகில் போக வேண்டுமென்னும் தகவல் வேறு கேள்விகளை எழுப்புகிறது. சீதையின் தாகம் தீர்க்கஇராமர் ஏன் கடலில் வில் ஊன்ற வேண்டும் ? கேள்விகள் கேட்கக் கூடாது. வருகைக்கு நன்றி அடுத்த இரு பதிவுகள் நாகர் கோவில் சுற்றுலாதான்
ReplyDelete@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
ஐயா நான் எங்கும் பக்திச் சுற்றுலா என்று கூறவில்லையே கோவில்களுக்கும் போனோம் அதுஆன்மீகச் சுற்றுலாவாகவும் பக்திச் சுற்றுலாவாகவும் ஏனோ எண்ணப்படுகிறது வருகைக்கு நன்றி உமேஷ்
நேரப் பற்றாக்குறையால் வில்லுண்டி தீர்த்தம் போக முடியலை. ஆனால் நாங்கள் தனுஷ்கோடி சென்றோம். அங்கேயே நிறைய மகிழ்வுப் பேருந்துகள் இருக்கின்றன. முதலில் நாங்கள் போய்க் கேட்டப்போ ஒருத்தருக்கு 500 ரூபாய் என்றார்கள். நாங்கள் யோசிக்கவே நீங்க நாலு பேர் மட்டும் என்றால் ஐநூறு ரூபாய் கொடுக்கணும். ஆகவே ஆட்கள் வரட்டும், காத்திருங்கனு சொன்னாங்க. அப்புறமாப் பத்துப் பேர் வரவே மொத்தத் தொகை 2,000/- அனைவருக்குமாகப் பிரித்துக் கொடுத்தோம். அந்த மகிழ்வுந்தில் குறைந்த பட்சமாகப் பதினைந்து பேர் போகலாம். தநுஷ்கோடி செல்வது மிகவும் ஆபத்தான பயணமாகவும் இருக்கிறது. என்றாலும் போய் வந்தோம். அதிலேயே மிகக் களைப்பும் அடைந்துவிட்டோம். மறுநாள் திருப்புல்லாணி போனோம். முதல்நாளே அங்கே போய்த் தங்கி விட்டோம்.
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
எனக்கு தனுஷ்கோடி போக ஆர்வமிருந்தது. ஆனால் மகிழ்வூந்து நிறையும் வரை காத்திருக்க மெஜாரிடியினர் விரும்பவில்லை. அது ஆபத்தானது என்றும் கூறி சிலர் பயமுறுத்தி விட்டார்கள். மொத்தத்தில் இம்முறையும் என்னால் தனுஷ்கோடி போகமுடியவில்லை.வருகைக்கு நன்றி மேம்
உங்களது பயணக் குறிப்புகள் மற்றவர்களுக்கு நன்கு பயன்படும் வண்ணம் , நிறைய தகவல்களோடு இருக்கின்றன.தனுஷ்கோடி போவதில் என்ன ஆபத்து என்று குறிப்பிட்டால் தேவலை.
ReplyDelete
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
இப்போது தனுஷ் கோடிக்கு மணலில் பயணிக்க வேண்டுமாம் சுமார் ஆறு கிலோமீட்டருக்கும் மேல். அங்கு போக ஏதோ விசேஷ வேன்கள் தான் வேண்டுமாம் அவையும் மணலில் சிக்கும் அபாயமிருப்பதாகக் கூறு கிறார்கள் இப்போதும் கடல் வழியே படகுகளில் தனுஷ் கோடி வரை செல்ல முடியும்
ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வந்தது லேசாக நினைவில் இருக்கிறது.படங்களும் பயண விவரங்களும் மீண்டும் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது
ReplyDeleteஅடடா.... வில்லுண்டியை விட்டுட்டேனே............. இங்கே உங்கள் படங்கள் மூலம் தரிசனம் ஆச்சு!
ReplyDeleteஎங்களுக்கு தனுஷ்கோடி போகும் வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றி துளசிதளத்தில் எழுதுவேன்.
உங்களைப்போல் அருமையாகவும், 'சுருக்'ஆகவும் எழுத வர்றதில்லை எனக்கு:-(
ReplyDelete@ துளசி கோபால்
வில்லூண்டியை நினைக்கும்போது நிறையவே கேள்விகள் வருகின்றன. இந்த முறை இராமேஸ்வரப் பயணத்திலும் தனுஷ் கோடி செல்ல முடியாததில் மிகுந்த ஏமாற்றமே பாராட்டுக்கு நன்றி மேம்