ரிஷபன் சாரின் மனிதம்
----------------------------
நாங்கள்
சென்ற ஆண்டு புதுக்கோட்டை போகும் வழியில் திருச்சியில் அக்டோபர் மாதம்
பத்தாம் தேதி தங்கினோம் விவரமாக, என் பழைய பதிவுகளில் புதுக் கோட்டை
வையா மலைக் கோட்டை என்று எழுதி இருக்கிறேன்
பத்தாம் தேதி மாலை திரு வைகோ திரு
தி தமிழ் இளங்கோ திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி திரு ரிஷபன் ஆகியூரை ஹோட்டல் ப்ரீசில்
சந்தித்தது மறக்க முடியாதது அப்போது திரு ரிஷபன் அவர்கள் எனக்கு அவர் எழுதி
வெளியிட்டிருந்த மனிதம் என்னும் நூலைப்
பரிசளித்திருந்தார் இதுவே முன்பு போல் இருந்தால் புத்தகத்தைப் படித்து
முடிக்காமல் உறங்க மாட்டேன் ஆனால்
சொல்லிக் கொள்ளத் தயக்கமாக
இருக்கிறது இப்போதெல்லாம்
புத்தகம் படிப்பதில் ஒரு சங்கடம் இருக்கிறது படிக்கும்போது வலது கண்ணின் முன்பாக
அவ்வப்போது ஏதோ நிழலாடுவது போல் இருக்கிறது. அதுவே படிப்பதில் இருக்கும் ஆர்வத்தைக் குறைக்கிறது இருந்தாலும் அன்பாகக்
கொடுத்திருந்த நூலைப் படிக்காமல்
இருந்தால் ஏதோ குற்றம் செய்வதுபோல் இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வழியாகப்
படித்துவிட்டேன் படித்தால் மட்டும் போதுமா.
நான் எழுதிய சிறுகதைத்தொகுப்பைப் படித்தவர் கருத்திட விரும்பும் என்னைப் போல்தானே
பிறரும் இருப்பார்கள் என்ற எண்ணம்
வந்தது மனிதம் பற்றி எழுதுவது என்று
தீர்மானித்து விட்டேன் 34 சிறு கதைகள். ஒவ்வொன்றையும் பற்றி எழுதுவதென்றால் மீண்டும் ஒரு முறை நான் வாசித்து உடனுக்குடன்
எழுத வேண்டும் அது என்னுடைய இப்போதைய நிலையில் சாத்தியமில்லை.
இருந்தாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஆகவே படித்த கதைகளில் எது முன் வந்து நிற்கிறதோ அது பற்றி மட்டும்
எழுதுவேன் அம்மாதிரி முன் வந்து
நிற்கும் கதைகளில் ஏதோ என்னை ஈர்த்திருக்க
வேண்டும்
திரு
ரிஷபன் சாரின் கதைகள் ஊடே ஏதோ இனம்
தெரியாத ஒரு ஏமாற்றம் சோகம் என்பவை இழையோடுகிறது. சில சம்பவங்களை அருமையாகக் கதை
பின்னுகிறார் முதல் கதையில் அதுவே நூலின்
தலைப்பு ஒரு மனம் பிறழ்ந்தவனை மனிதாபிமானத்தோடு ஒருவர்
அணுகுவதைப் பதித்திருக்கிறார் பைத்தியம் என்று ஒதுக்கப்படுபவர்கள் பைத்தியம் அல்ல. அவர்களைப் புரிந்து கொள்ள முடியாத நாமே
பைத்தியங்கள் என்று சொல்லாமல் சொல்லி[ப் போகிறார் /பரிசு என்னும்கதையில் என்றோ விரும்பி
இருந்த முன்னாள் காதலியை சந்திக்க நேரும்சமயம் பழைய நினைவுகளை அசை போடும் நேரத்தில் அவளே தன் காதலை நிரூபிக்க வேண்டி
தன்னையே தந்ததை நினைத்து
வருந்துகிறாரா இல்லை அவளை
சந்தித்தபோது வரும் நினைவுகளை விரும்புகிறாரா என்னும் சந்தேகம் வருகிறது காதல்
என்பது ஆண்களுக்கு வாழ்வு , அதுவே பெண்களுக்கு
ஒரு அத்தியாயம் என்பது பற்றி ஒரு
முடிவுக்கு வர முடியவில்லை. தன்னை நேசித்த காதலனுக்காக தன்னையே தரும் ஒரு பெண்ணின்
வாழ்க்கை நேராகாமல் இருப்பது ஒரு குறியீடாகத் தெரிகிறது
நண்பனின்
கிராமத்துக்கு வரும் ஒருவரின் கதை கோலம் ஏற்கனவேமுடிவு எடுத்து விட்டு வந்தவர்போல்
இருக்கிறது. நண்பரின் விதவைத் தங்கைக்கு வாழ்வளிக்க விரும்பும் அவருக்கு அந்த தங்கை
தன் சம்மதத்தை பூடகமாக கோலத்தில் வெல்கம் என்று எழுதிக்காட்டுவதாக முடிகிறது சில
வம்பு பேசும் பெண்களின் குணத்தைச் சாடுகிறது.எதையும் மனம் விட்டுப் பேசினால் மனத்தாபங்களைக் குறைக்கலாம் என்று கூறுவது
மனம் விட்டு என்னும் கதை.
ஒவ்வொரு
கதையையும் எடுத்து ஆராய்ந்தால் வர இருக்கும் எண்ணங்களை விரிவாகச்
சொல்வதென்றால் அதுவே ஒரு நூலாகி
விடும்
திருமணம்
என்பதே ஒரு புது
பந்தத்தைஉருவாக்குவதுதான் குடும்பத்துக்கு
இன்னொரு நபர் . அவர் மூலம் குடும்ப மரம் பல்கிப் பெருக வேண்டி நடத்துவதே திருமணம்
இருந்தாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது மனதுக்கு சங்கடம்
விளைவிக்கிறதுஎதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுவதில்லை கலகல வெனத் துவங்கும் ஒரு பிரயாணம்
எப்படி எதிர்பாராத வகையில் முடிகிறது என்று சொல்வது உதிரிப்பூ எதிர்பாராத
நேரங்களைக் கடந்து வரும் ஒரு
பெரியவரின் நிதானத்தையும் கூறுகிறது
பல சிறு கதைகள் பத்திரிகைகளில் வெளியானவை
பத்திரிகையில் வெளியாவதால் மட்டுமே
ஒரு கதை சிறந்ததும் அல்ல.
பத்திரிகையில் வெளியாகாத கதைகள் சிறப்பாக இருப்பதும் பல கதைகளில்
தெரிகிறது 34 கதைகளில் மனதில் வந்து
உட்கார்ந்து கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. ஒன்றுக்கு இருமுறை படித்துமட்டுமே
நினைவுக்கு வரும்கதைகளும் இருக்கின்றன. முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு முதிய
தம்பதியினர் பற்றியது தர்மதேசம் மனைவி பேச்சைக் கேட்டு தாய் தந்தையரை முதியோர்
இல்லத்துக்கு அனுப்பும் மகன் அவன் மனநிலை
தந்தையின் மனநிலை அவர் தன் மனைவி
மகனுடன் இருப்பதை விரும்புவாள் என்று
தப்புக் கணக்கு போடுகிறார் ஆனால் மனைவியோ
அவர் இருக்கும் இடமே அயோத்தி என்று எண்ணுவதைக் கூறுகிறது இக்கதை.
சந்தர்ப்பங்கள் அதனால் உந்தப்படும் மனிதர்கள்
நிலை என்பதுபற்றி சிந்திக்க வைக்கிறது இக்கதை சலனம் என்னும்கதை என்னால் சரியாகப்
புரிந்து கொள்ள முடியவில்லை எதையோ அப்ஸ்ட்ராக்டாகச் சொல்லும் முயற்சி என்றே தோன்றுகிறது சந்தர்ப்பங்கள்
வாய்த்தால் எல்லா ஆண்களும் தவறு செய்யும்
வாய்ப்பு இருக்கிறதுஅது நிறைவேறாதபோது பிறரிடம் குறை காணும் சுபாவமும் ஆண்களுக்கு இருக்கிறதுஇது நர்மதாவுக்காக
என்னும் கதை.
அழகு
என்பது அதைப் பார்ப்பவரின் கண்களில்தான் என்னும் சொலவடை ஆங்கிலத்தில் இருக்கிறது
மனதுக்குப் பிடித்து விட்டால் திக்கு வாயும் அழகாய்த் தெரியும்போல இருகிறது. ஒரு
முதிர் கன்னி பற்றிய கதை இன்னொன்று
ஒவ்வொரு கதையும் எதையோ பட்டும் படாமலும் சொல்லிப் போகிறது எல்லாக் கதைகளுமே எங்கோ ஏதோ
நிறைவேறாத வெறுமையை சொல்கிறது எல்லாக்கதைகளையும் விவரித்துக் கருத்து சொல்ல
இயலவில்லை பல கதைகள் படிக்கப்பட்டிருந்தும் அவை பற்றி எழுதவில்லை. ஆனால் தொகுப்பில் செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் என்னை மிகவும்கவர்ந்ததுஇதில் வரும் மூதாட்டி
போன்ற பாத்திரங்கள் நம்மில் உலவுகிறார்கள்
அவர்களைக் கூர்ந்து கவனித்து கதையாக்கும் ரிஷபனின் திறமை இந்தக் கதையில் நன்கு
தெரிகிறதுபேரூந்தில் ஏறிவிட்டு அது நிற்காத இடத்துக்கு டிக்கட் கேட்டு அதன் விளைவாய் நிகழும் சம்பவக் கோர்வைகளே கதை. யார் என்ன சொன்னாலும் எது எப்படிப் போனாலும் தன்
காரியத்தை சாதித்துக் கொள்ளும் அநேகர் அந்த மூதாட்டிபோல் நம்மிடையே
இருக்கிறார்கள் தொகுப்பிலேயே என்னைக் கவர்ந்த கதை இது. சும்மாவா அமரர் கல்கி
நினைவுப் போட்டியில் பரிசு பெற்றது
என்னதான்
எழுதினாலும் எல்லாக் கதைகளையும் தொட்டுச்
செல்லாத குறை நெருடுகிறதுவலை உலகில் வை. கோபால கிருஷ்ணன் அவர்கள் செய்தது போல்
விமரிசனப் போட்டி வைத்தால்தான்
எல்லாக்கதைகளையும் விமரிசிக்க
ஜஸ்டிஃபிகேஷன் கிடைக்கும் அவரது
தொகுப்புக்கு நான் எழுதியது ஜஸ்டிஃபை
ஆகவில்லை என்றே தோன்றுகிறது
புத்தக
வெளியீடு
தமிழ்ச்சோலை பதிப்பகம்
3/20அலங்கார்
நகர் 2-வது தெரு,
ஷேக்மானியம் போரூர்
சென்னை -600116
நூலின் விலை ரூ. 100
.
தங்கள் படிப்பில் காட்டும் ஆர்வம் போற்றத் தக்கது! வாழ்த்துகள்!
ReplyDeleteஎன்னிடம் இந்தப் புத்தகம் இல்லைனு நினைக்கிறேன். முடிந்தவரை சிறப்பாக எழுதி இருப்பதற்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஎனக்கும் இடது கண்ணில் இது போல ஒரு மறைப்பு தெரிகிறது. அதனால் தான் பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள். கணினித் திரையைப் பெரிதாக்கியே எழுதவோ வாசிக்கவோ முடிகிறது. டாக்டர் cataract என்றும் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் பார்த்து விட்டு ஆபரேஷன் செய்யலாம் என்கிறார்.
ReplyDeleteஎனக்கு நட்பு முக்கியம் என்று கொட்டும் மழையில் ரிஷபன் சார் உங்களை ஓட்டலில் பார்க்க வந்ததாக படித்த ஞாபகம். அந்த நிகழ்வைத்தான் ரிஷபன் சாரின் மனிதம் என்று சொல்கிறீர்களோ என்று வாசிக்க ஆரம்பித்தால், அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்றையே ரசித்து எழுதியிருக்கிறீர்களே!
ரிஷபன் அவர்களின் கதைகளை அவர் பதிவில் படித்து இருக்கிறேன்.
ReplyDeleteகதை தொகுப்பை நன்றாகவே விமர்சனம் சொல்லி விட்டீர்கள்.
நல்ல பகிர்வு.
விமர்சனம் செய்து விட்டீர்கள்.
ReplyDeleteரிஷபன் அவர்களின் கதைகளைப் படித்துள்ளேன். இந்நூலை இதுவரை படிக்கவில்லை. படிக்காத குறையை நீக்கியது உங்கள் பதிவு. வாழ்த்துகள்.நன்றி.
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்
ReplyDeleteமனிதம் என்பதனை தங்களின் பதிவு உணர்த்துகிறது ஐயா
நன்றி
அவசியம் வாங்கிப் படிப்பேன்
புத்தகங்கள்தான் நமக்கு உற்ற துணைவன் என்று சும்மாவா சொன்னார்கள். சமயம் கிடைக்கும்போது படிப்பேன்.
ReplyDelete
ReplyDelete@ புலவர் இராமாநுசம்
ஐயா வருகைக்கு நன்றி . கண்பிரச்சனையால் படிப்பது மிகவு ம் குறைந்துவிட்டது
ReplyDelete@ ஸ்ரீ ராம்
வருகைக்கு நன்றி
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
ஆம் . முடிந்தவரை விமரிசனம் செய்திருக்கிறேன் பாராட்டுக்கு நன்றி
ReplyDelete@ ஜீவி
எனக்கு இரு கண்களிலும் காடராக்ட் சிகிச்சை முடிந்திருக்கிறது என் கண்ணின் பிரச்சனை கண்ணில் இருக்கும் சில நரம்புகள் வீக்காக இருப்பதால் என்று மருத்துவர்கள் கூறு கின்றனார் ஏதும் செய்ய இயலாது என்றார்கள் இரண்டு முறைகளாக திருச்சியில் சந்திக்க இயல வில்லை. எனவே இம்முறை அவர்கள் வந்தது மகிழ்ச்சி தந்தது. /எனக்கு நட்பு முக்கியம் என்று கொட்டும் மழையில் ரிஷபன் சார் உங்களை ஓட்டலில் பார்க்க வந்ததாக படித்த ஞாபகம். அந்த நிகழ்வைத்தான் ரிஷபன் சாரின் மனிதம் என்று சொல்கிறீர்களோ என்று வாசிக்க ஆரம்பித்தால், அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்றையே ரசித்து எழுதியிருக்கிறீர்களே!/ நான் அப்படி ஏதும் எழுதவில்லை. அலுவலகம் விட்டு நேராக ஓட்டலுக்கு வந்தார்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டியதால் தாமதம் என்றார்கள் என்றே எழுதி இருந்தேன் நான் எல்லாக்கதைகளையும் படித்து விட்டாலும் விமரிசனத்தில் எல்லாவற்றையும் பற்றி எழுத வில்லை வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ கோமதி அரசு
ரிஷபன் சாரின் பதிவுகளை நானும் படித்து வருகிறென் இக்கதைகளைப் பதிவில் வாசித்த நினைவு இல்லை. வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ கோமதி அரசு
மீண்டும் வந்து விமரிசனம் பற்றி கூறியதற்கு மீண்டும் நன்றி மேம்
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
தொகுப்பில் 34 கதைகள் உள்ளன. நான் ஒருசிலவற்றைப்பற்றியே எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
என் பதிவு கண்டு நீங்கள் நூலை வாங்கிப் படிப்பீர்கள் என்றால் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ நெல்லைத் தமிழன்
புத்தக வெளியீடு குறித்த தகவல்களைக் கொடுத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
//நான் அப்படி ஏதும் எழுதவில்லை. அலுவலகம் விட்டு நேராக ஓட்டலுக்கு வந்தார்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டியதால் தாமதம் என்றார்கள் என்றே எழுதி இருந்தேன் //
ReplyDeleteபடித்த ஞாபகம் என்று தான் குறிப்பிட்டிருக்கிறேனே, தவிர நீங்கள் எழுதியிருந்தாக நான் சொல்ல வில்லையே! (இது உங்கள் பாணி பின்னூட்டம்)
----
அது சம்பந்தமாக மற்றவர்கள் எழுதியிருந்ததை நீங்கள் படிக்கவில்லை போலிருக்கு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி என்று நினைக்கிறேன். அவர் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் எழுதியிருப்பார். தேடிப்பார்த்தால் கிடைக்கும்.
கொட்டும் மழை என்றாலே அதைத் தொடர்ந்து மறக்க முடியாத சில நினைவுகள் என் மனசில் படியும்.
1) கொட்டும் மழையில் சென்னை இராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தோற்றம் (தொடக்க விழா) நிகழந்தது.
2) கொட்டும் மழையில் இராஜாஜி அவர்கள் மது விலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று கோரி கலைஞர் அவர்களைச் சந்தித்தது.
3) மழை என்றாலே எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் 'மழை' கதை நினைவுக்கு வந்து விடும்.
-- இந்த எல்லாவற்றிற்கும் தொடர்பு வார்த்தை அந்த 'கொட்டும் மழை' தான்.
(இது என் பாணி பின்னூட்டம்-- ஒரு விஷயத்திற்குத் தொடர்பாக பல விஷயங்களைய்க் கோர்த்துச் சொல்வது)
சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். எழுத்தாளுமை அருமை. ரிஷபன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteplz do take care of your eyes. May be u can have a check up done at leading eye hospitals.
Best regads...
ரிஷபன் அவர்களின் கதை ஒன்றை எங்கள் ப்ளாக்கில் படித்தேன்.அவரது எழுத்தாற்றலை அறிந்தேன். தங்கள் விமர்சனம் அவர் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்க் செய்கிறது. தங்கள் ஆர்வமும் செயல்படும் ஆச்சர்யப் படவைக்கின்றன
ReplyDelete
ReplyDelete@ ஜீவி
ரிஷபன் சார் என்னை பார்க்க வந்ததை என் பதிவில்தான் படித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் ( கொட்டும் மழையில் ரிஷபன் சார் உங்களை ஓட்டலில் பார்க்க வந்ததாகப் படித்த ஞாபகம் .இவை உங்கள் வரிகள்) அன்று கொட்டும் மழையும் இருக்கவில்லை உங்கள் நினைவுகள் இந்த தவறான புரிதலுக்குக் காரணம் உங்களுக்கும் நல்ல கற்பனா சக்தி. நான் பின்னூட்டத்துக்கு மறு மொழிதான் எழுதி இருந்தேன் தவறாக ஏதும் எழுதவில்லையே இனி உங்கள்பின்னூட்டத்துக்கு என் பாணியைத் தவிர்க்க வேண்டும்போல் இருக்கிறது நன்றி சார்
ReplyDelete@ ஷக்தி பிரபா
முதலில் வருகைக்கு நன்றி என் கண்களை நல்ல மருத்ட்குவ நிபுணர்களிடம் காட்டினேன் நரம்புத் தளர்ச்சி வயதின் காரணம் என்றார்கள் என் எழுத்தாளுமையைப் பாராட்டியதற்கு நன்றிகள் மேம்
ReplyDelete@ டி என் முரளிதரன்
நானும் ரிஷபன் சாரின் பதிவுகளைப் படிப்பதுண்டு அவரது ஜுவல்யாவும் அம்முவும் ரசிக்க வைக்கும் பாத்திரங்கள் வருகைக்கு நன்றி முரளி ஜி
அருமையானதொரு நூல் அறிமுகம்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ பரிவை சே குமார்
வருகைக்கு நன்றி சார்
அட்டகாசமான எழுத்துக்குச் சொந்தக்காரர் ரிஷபன் ஜி! அவரின் சில கதைகள் பற்றிய உங்கள் கருத்துகளைப் படித்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteஎன்னிடமும் அவரின் சில புத்தகங்கள் உண்டு.
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
திரு ரிஷபனின் எழுத்துகளை அவர் தளத்தில் படித்திருக்கிறேன் அவற்றில் ஜுவல்யா அம்மு கதைகள் பிடிக்கும் வருகைக்கு நன்றி சார்
ஐயா! ஒரு நூலை எடுத்துக் கொண்டால் அதிலுள்ள எல்லாக் கதைகளையும் திறனாய்வு செய்தாக வேண்டும் என்பதில்லை. நூலைப் பற்றிய பொதுவான நிறை-குறைகளை நடுநிலையோடு சொன்னாலே போதும். அவ்வகையில் இது நல்ல திறனாய்வே! ரிஷபன் நறுக் சுருக்கன நன்றாக எழுதுபவர். நான் ‘நிலாச்சார’லில் பணியாற்றியபொழுது அவர் கதைகள் பிழை திருத்தத்துக்காக என்னிடம் வரும். மிக நன்றாக எழுதுவார். ‘நிலாச்சார’லில், வெளியாக வேண்டிய கதைகளைத் தேர்வு செய்யும் பொறுப்பும் என்னிடமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கதைகளைத் தேர்வுக்குப் பரிசீலிக்க வேண்டா, படித்துப் பார்க்காமலே நேரடியாகப் பிழை திருத்தத்துக்கு எடுத்துக் கொண்டு வெளியிட்டு விடலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதிலிருந்தே அவர் எழுத்துக்களின் தரத்தை உணரலாம்.
ReplyDelete
ReplyDelete@ இ.பு ஞானப்பிரகாசன்
இந்தத் தொகுப்பில் கூட பத்திரிகைகளில் வெளியான கதைகளும் உண்டு பத்திரிகை அலுவலகத்தில் பண்யாற்றிய உங்கள் கருத்துசரியே. ரிஷபன் சார் நல்ல ஆக்கத் திறன் படைத்தவர் வருகைக்கு நன்றி ஐயா
ரிஷபன் said...
ReplyDelete.... இந்த எளியவனைச் சந்திக்க விரும்பும் யாரையும் நான் சென்று சந்திக்க தவறுவதேயில்லை. எனக்கு நட்பும் அன்பும் மிக முக்கியமானது. மீண்டும் நன்றி தங்களைச் சந்தித்த மகிழ்விற்கு
அக்.16-2015
(எனக்கு நட்பு மிக முக்கியமானது என்று ரிஷபன் சார் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டம். இதுஈ தான் என் நினைவில் படிந்து அப்படி வெளிப்பட்டிருக்கிறது.
ReplyDelete@ ஜீவி
கொட்டும் மழை தவிர எல்லாமே சரிதான் மீள் வருகைக்கு நன்றி
'கொட்டும் மழைக்கு' ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தியின் பதிவில் தேடிக் கொண்டிருக்கிறேன். படங்களுடன் அந்தப் பதிவு போட்டிருந்தார். ஆர் ஆர் ஆர் உங்கள் பதிவு பக்கம் வரமாட்டார். ரிஷபன் சாரும் உங்கள் பதிவைப் பார்த்ததாகத் தெரியவில்லை.
ReplyDeleteஅதனால் நான் தான் தேடிப்பார்க்க வேண்டும். விரைவில் அதைப் பற்றித் தெரிவிக்கிறேன்.
தங்கள் பதிலுக்கு நன்றி.
@ ஜீவி
ReplyDeleteஅன்று மழை ஏதும் இருக்கவில்லை. நான் ஆர் ஆர் ஆரின் பதிவுகளைப் படிப்பவன் அவர் எழுதியதாக எனக்கு நினைவில்லை. உங்கள் தேடலின் முடிவை எதிர் நோக்கி அன்புடன்
//அன்று மழை ஏதும் இருக்கவில்லை. நான் ஆர் ஆர் ஆரின் பதிவுகளைப் படிப்பவன் அவர் //எழுதியதாக எனக்கு நினைவில்லை. உங்கள் தேடலின் முடிவை எதிர் நோக்கி அன்புடன்..//
ReplyDeleteமறக்க மனம் கூடுதில்லையே ! http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
மறக்கக்கூடிய நாளா அது? இரவு நேரத்தில், மழை கொட்டியதொரு நாளில், ஆங்காங்கே தெருவெங்கும் நீர் தேங்கியிருக்க, லேஸாக தூரலும் போட்டுக்கொண்டிருந்த வேளையில் Call Taxi யில் உங்கள் இருவர் தயவிலும் அல்லவா நான் அன்று ஜங்ஷனுக்கு வந்தேன்.
முடிந்தால் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள், ஜிஎம்பி சார்!
@ ஜீவி
ReplyDelete/மறக்கக்கூடிய நாளா அது? இரவு நேரத்தில், மழை கொட்டியதொரு நாளில், ஆங்காங்கே தெருவெங்கும் நீர் தேங்கியிருக்க, லேஸாக தூரலும் போட்டுக்கொண்டிருந்த வேளையில் Call Taxi யில் உங்கள் இருவர் தயவிலும் அல்லவா நான் அன்று ஜங்ஷனுக்கு வந்தேன்./யார் எப்போது எழுதினது/சொன்னது ? நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் வைகோ அவர்களின் சிறுகதை இருந்தது. எனக்கு நினைவு இருக்கும் வரை நாங்கள் சந்தித்தபோது மழை ஏதும் இருக்கவில்லை. யாருடைய பதிவிலும் அது பற்றிசொல்லவில்லை. அன்று ரிஷபனும் ரமமூர்த்தியும் அலுவலகத்தில் ஆடிட் இருந்ததாலும் ட்ராஃபிக்கில் சிக்கியதாலும் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஹோட்டலுக்கு வந்ததாகச் சொன்னார்கள் . இந்த மழை விஷயம் இன்னும் உங்கள் நினைவை ஆட்டிக் கொண்டிருப்பது ஆச்சரியமே
ஈவேரா கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்.அவரிடம் யாரோ கடவுளே நேரில் வந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டாராம் அதற்கு அவர் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்றாராம்என்ன அன்று மழை இருந்தது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்குத்தானே இத்தனை பாடு. நீண்ட நாள் கழித்து மீண்டும் இந்தப் பின்னூட்டத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. என் நினைவுலிருந்தது சரியா என்று நினைத்துப் பார்க்கவே.
ReplyDeleteபதிலளித்தமைக்கு நன்றி.