முருகா நீ அப்பாவி அல்ல(நான்தான் )
-----------------------------------
ஈசானம்,
தத்புருஷம், வாமனம்,
அகோரம்,
சத்யோஜாதம், அதோமுகம்-எனும்
ஈசனின்
ஆறுமுக நுதல் கண்களின்
தீப்பொறிகளாய்
வெளியான ஆறுமுகனே
எனை
ஆளும் ஐயனே, உனைக் குறித்து
எனக்கொரு
ஐயம் எழுகிறது.
அஞ்சு
முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,
அஞ்சாதே
என வேலுடன் அபயமளிப்பவனே,
கனி
கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத
விரும்ப
,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை
அப்பனை
வலம் வந்து கனி கொண்டான்.
நீயோ
மயிலேறி பூவுலகை வலம் வந்து ,
கனிகிட்டாக்
கோபத்தில் மலையேறி நின்றனை.
பரமனுக்கே
ப்ரணவப் பொருளுரைத்திய
தகப்பன்சாமி
நீயென்ன அப்பாவியா.?
ஈசன்
சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத
சூரன்,
ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்
ஈரேழு
உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி
தேவர்கள்
விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்
பெற்று
, அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,
போரில்
அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற
சூரனைசக்திவேலால்
இரு பிள வாக்கினை.. அழித்தவனை
சேவலாய்
மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.?
மாயை
உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை
ஆட்கொண்ட
சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்
கரம்
பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா
இல்லை
சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்
செய்த
அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,
ஏதுமறியாப்
அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து
ஆட்டுவிப்பதாகக் கூறுகிறார்களே நீ நிச்சயமாக அப்பாவி அல்ல.
தீபாவளி முடிந்தவுடன் சஷ்டி விரதம் ஆரம்பித்து விடும்.
ReplyDeleteமுருகன் கதை கந்தபுராணம் படிப்பேன்.
உங்கள் பதிவால் முன்பே படிக்க ஆரம்பித்துவிட்டேன் முருகனைப்பற்றி.
நன்றி கவிதைக்கு.
உங்களை பாடவைத்தவன் முருகன் , இந்த பாட்டுக்கும் அவன் தான் தலைவன்.
உண்மைதான் ஐயா அப்பாவுக்கு புத்தி சொன்னவனை அப்பாவி என்று சொல்வது பொருந்தாதுதான் அருமையான கேள்விக்கணை கவி.
ReplyDeleteமேன் மேலும் கவிதைகளை எழுதிக் குவிக்க அந்த முருகன் அருள் புரிவான்.
ReplyDeleteஅருமை. என் அப்பன் முருகன் உங்களை பாட வைத்திருக்கிறான் என்று கோமதி அரசு மேடம் சொல்லியிருப்பதை ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteஒண்ணுக்கு ரெண்டா கட்டிக்கிட்டவனை எப்படி அப்பாவின்னு சொல்ல முடியும் :)
ReplyDelete
ReplyDelete@கோமதிஅரசு
@கீதா சாம்பசிவம்
@ஸ்ரீராம்
எனக்கு முன்பே தெரியும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கடைசி வரிகளில் சொல்லி இருக்கிறேனே வருகைக்கு நன்றிகள்
//எனக்கு முன்பே தெரியும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கடைசி வரிகளில் சொல்லி இருக்கிறேனே//
ReplyDeleteஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே ஸார்...!!!!
:)))
@கில்லர்ஜி
ReplyDeleteவருகைக்கு நன்றி முதலில் அவன் செய்கைகள் அவனது அப்பாவித்தனத்தைதான் உணர்த்தியது ஆனால் நான் என்ன எழுதினாலும் வாசிப்பவர் அவற்றை சரியா புரிந்துகொள்ள விரும்புவதில்லையே அவர்கள் கூற்றுக்கு ததாஸ்து என்றால் அவர்களாவது மகிழ்வார்கள்
@பகவான் ஜி
ReplyDeleteஇரண்டு பெண்டாட்டிக்காரன் அப்பாவி அல்ல என்கிறீர்களா வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ஸ்ரீராம்
என்னை யாரோ ஆட்டுவிப்பதாக யாராவது நினைத்தால் நான் பொறுப்பல்ல ஸ்ரீ.
நாங்கள் அப்படி பின்னூட்டம் கொடுத்திருப்பதாகச் சொன்னதற்கு பதிலாய்ச் சொல்லியிருப்பதால் எங்களை சொன்னேன் ஸார். ஆட்டுவிக்கப்படுவது தெரியாமலேயே வாழ்வதுதானே ஸார் வாழ்க்கை!
ReplyDelete:)))
அவன் அப்பாவியல்ல என்றதினால், நீங்கள்தான் அப்பாவி என்றாகிவிடுமா!
ReplyDeleteஎப்படியோ -
ReplyDeleteநீ அப்பாவியா!?.. - என்று, முருகனிடம் கேள்வி கேட்கப் போக -
பதிவில் அழகான கவிதை கிடைத்துள்ளது..
வாழ்க நலம்!..
ReplyDelete// ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து
ஆட்டுவிப்பதாகக் கூறுகிறார்களே நீ நிச்சயமாக அப்பாவி அல்ல. //
நீங்கள் அப்பாவி என்றால் நிச்சயம் முருகனும் அப்பாவிதான்.
கவிதையை இரசித்தேன். வாழ்த்துகள்!
தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தத்தையும் பொருளுடன் படித்ததுபோல ஓர் உணர்வு இந்த பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருந்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்களைப் போல இந்த பதிவானது இறைவனுடன் நீங்கள் மிகவும் அன்யோன்யமாய் இருப்பதை உணர்த்தியது. மிகவும் நன்றி ஐயா.
ReplyDelete
ReplyDelete@ ஸ்ரீராம்
நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று எண்ணுபவன் நான் மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ ஏகாந்தன்
அப்போ நானும் அப்பாவி இல்லையா
ReplyDelete@ துரை செல்வராஜு
வருகை தந்து கவிதையை ரசித்ததற்கு நன்றி சார்
ReplyDelete@ வே. நடன சபாபதி
அவன் என்னை ஆட்டுவிப்பதானால் அவன் அப்பாவி அல்ல என்னைத் தவறாக புரிந்து கொள்வதால் நான் ஒரு அப்பாவி என்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
நான் எந்த பதிகங்களையும் முழுதாகப் படித்ததில்லை வருகைக்கு நன்றி சார்
முருகா நீ அப்பாவி அல்ல
ReplyDeleteஉலகைச் சுற்றி வந்த வீரன்
தந்தைக்கு உபதேசம் செய்தாய்
...............................