Friday, February 17, 2017

வீசு தென்றல் காற்றிருக்க


                                 வீசுதென்றல் காற்றிருக்க
                                  -----------------------------------


 இரண்டு மூன்று நாட்கள் வலைப்பக்கம் வர இயலாது என்  மனைவியின்  குலதெய்வக் கோவிலில் திருவிழாவாம் போகிறோம் இந்த இடைக்காலத்தில் எனக்கு என்னாயிற்றோ என்று கவலை வேண்டாம் ஒரு பதிவு என்னை நினைக்கவைக்க

நண்பர் ஒருவர் பதிவினில் வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோஎன்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. இதையே தலைப்பாக்கி ஒரு கவிதை எழுதலாமா என்ற எண்ணம் உதித்தது. வழக்கம்போல் எழுத ஆரம்பித்தேன் மூன்று நான்கு வரிகள் எழுதியதும் என் சிந்தனை என்னை வேறு பாதையில் இழுத்துச் சென்றது. அது போன போக்கிலேயே எழுதியதையும் பதிவிடுகிறேன்

வீசு தென்றல் காற்றிருக்க  வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம் அருகிருக்க-- அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ 

தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை---
போதுமா இப்புவியில் வேறெதுவும் வேண்டாமா
பசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.
கொடுப்பதன் இன்பம்-- அதை எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான் பார்ப்போமே
ஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு  
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோ? முறையோ.?
ஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை

பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?ன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி

பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு போவோம்.
இருப்பதனைத்தும் எனக்கென்றால் அது
என்னுள் உறையும் இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும் உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது---.இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்

என்னதான் இருந்தாலும்  என் குணம்  என்னை விட்டுப் போகாது போல் இருக்கிறதே
எந்தப் பதிவரின்  வரிகள் என்று யூகிக்க முடிகிறதா  



28 comments:

  1. //நண்பர் ஒருவர் பதிவினில் “ வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ”என்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. //

    அந்த நண்பரும் ஆஜர். விரைவில் அந்த 'இனி' தொடர்கதையைத் தொடரும் எண்ணம் இருக்கிறது.

    துணைவியாரின் குல தெய்வக் கோயில் வழிபாட்டிற்கு நலமே சென்று வாருங்கள். உங்கள் கவிதைக்கான தனிப்பின்னூட்டம் காத்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி சார் இன்னும் பின்னூட்டம் காணவில்லையே

      Delete
    2. /முதல் வருகை..க்கு நன்றி சார் இன்னும் பின்னூட்டம் காணவில்லையே.. //

      நீங்கள் என் சமீபத்திய பதிவு பக்கம் வராததினால் தெரிந்திடவில்லை. இதோ, அவரவர் குணம் பற்றி:

      http://jeeveesblog.blogspot.in/

      Delete
  2. 'என் குணம்  என்னை விட்டுப் போகாது போல் இருக்கிறதே'ஏன் அங்கலாய்க்கிறீர்கள் ?நல்ல குணமாய்த்தானே இருக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. சிலருக்குப் புரியாத என் குணம் பற்றித்தான் அங்கலாய்ப்பு மற்றபடி என் குணம் நல்லதுதான் வருகைக்கு நன்றி ஜி

      Delete
  3. ஒரே திசையில் சிந்திக்காமல் மாற்றி யோசிப்பதும் தனிக்கலை, சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீ இதுவே என்னை வித்தியாசமானவன் என்று கூறிக் கொள்ள வைக்கிறதோ

      Delete
  4. குலதெய்வ வழிபாடு குதுகலமானது, அதிலும் அங்கு திருவிழா என்றல் மேலும் சிறப்பு.
    இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது நல்ல கருத்து. எல்லோருக்கும் அந்த எண்ணம் வந்து விட்டால், வீடு, நாடு, உலகம் நலம் பெறும்.

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவங்கள் நிச்சயம் பதிவாகும் என் எண்ணம் பற்றிய உங்க்சள் கருத்துக்கு நன்றி மேம்

      Delete
  5. தாங்கள் சொல்வது சரிதான். பச்சிளம் குழந்தைகள் பசித்திருக்க புற்றுக்கு பாலூற்றுவானேன்? என்றுதான் இந்த நிலை மாறுமோ? சில மூடநம்பிக்கைகள் ஒழிந்தாலே நீங்கள் சொல்வது நடக்கும்.
    வர வர தங்கள் பதிவுகளில் தத்துவ சிந்தனைகள் அதிகம் தோன்றுகிறதே!
    /என்னதான் இருந்தாலும் என் குணம் என்னை விட்டுப் போகாது போல் இருக்கிறதே/
    பிறவிக்குணம் எப்படி போகும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மூடநம்பிக்கைகளே என்னை எழுத வைக்கிறதோ தத்துவ சிந்தனை அல்ல ஐயா ஆதங்கமே வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  6. "என் குணம் என்னை விட்டுப் போகாது" என்கிறீர்களே, அந்த 'உங்கள் குணம்' பற்றி ஒரு ஆறு வாரத்தொடர் எழுதலாமே!
    -(இராய செல்லப்பா நியூஜெர்சி)

    ReplyDelete
    Replies
    1. என் குணம் பற்றி தனியே வேறு எழுத வேண்டுமா. என் பதிவுகளைப் படிப்பவருக்கு தெரிந்திருக்குமே. இருந்தாலும் எழுத விஷயங்கள் கிடைக்காதபோது யோசிக்கலாம் வருகைக்கு நன்றி சார்

      Delete
  7. அடிப்படை குணம் மாறாது. நாம் மாற நினைத்தாலும்! குலதெய்வ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி மேம்

      Delete
  8. மாறாதய்யா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் ஒன்றே மாறாதது எட்ன்பார்களே வருகைக்கு நன்றி டிடி

      Delete
  9. Replies
    1. உங்களது அனுபவ மொழிகள் யாவும்,புரட்சிக் கருத்துகளைப் பாடிய பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் தொனியிலேயே இருக்கக் காண்கிறேன்.

      Delete
    2. சிவவாக்கியரை நான் படித்ததில்லை நான் எழுதுவதெல்லாம் என் சொந்த எண்ணங்களே வருகைக்கு நன்றி சார்

      Delete
  10. உன்னை நேசி; இவனை நேசி
    அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி

    நேசிப்போம் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் அது அபரிமிதமாக இருக்கிறது ஐயா வருகைக்கு நன்றி

      Delete
  11. நன்றாக இருக்கிறது சார்! இறுதி வரிகள் அன்பே சிவம் என்று சொல்லிச் சொல்லிய வரிகள் அனைத்தும் அருமை. அனைத்து வரிகளுமே அருமை

    உங்கள் மனைவியின் குலதெய்வ கோயில் பயணம் இனிதாய் அமையட்டும்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி மேம் குலதெய்வக் கோவில் பயணம் பற்றியத்தொடர் அடுத்து வரும்

      Delete
  12. தாமதமாக வந்தேன். பொறுத்துக்கொள்க ஐயா. கவிதை அருமை.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete