Sunday, September 10, 2017

குழந்தைகள்

அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பனுக்கு விநாயகர் காணொளிகள் இரண்டு அனுப்பினேன் அவன் அவற்றை அவனது பேத்திக்குப் போட்டுக் காட்டி இருக்கிறான்  எந்த நாட்டில் இருந்தால் என்ன அதுவும் குழந்தைகளுக்கு விநாயகனிடம்  அதிக ஈர்ப்பு ஏற்படுவதுண்டு அதுவும்  இந்தக் காணொளிகளில் வரும்பாட்டும்  இசையும்  அந்தக் குழந்தையை மிகவும்  கவர்ந்திருக்கிறது போலும்  எப்போதும் அதைப் போட்டுப்பார்த்து அதன்   தாளத்துக்கு ஏற்றபடி நடனம் ஆடியிருக்கிறாள்  அதைக் காணொளியாக்கி என்  நண்பன் எனக்கு அனுப்பி இருந்தான் அதுவே நீங்கள் காண்பது என்ன நண்பர்களே ரசித்தீர்களா

எத்தனை பேர் காணொளியைப் பார்க்கப் போகிறார்களோ 

31 comments:

  1. விநாயகர் நடனங்களை இப்போதுதான் காண்கிறேன் எனக்குப் புதுசு. குழந்தையின் நடனத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா. நல்லது நீங்கள் முன்பே பார்த்திருக்கவில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  2. குழந்தை ஆடிய ஆட்டமும் அழகு. விநாயகர் ஆடிய ஆட்டம் அதை விடவும் அழகு! மூன்றுமே நன்றாக இருந்தன. எல்லாம் உடனே திறக்கவும் முடிந்தது. நன்றி. விநாயகர் என்பதாலோ? :)

    ReplyDelete
    Replies
    1. உங்களால் காணொளி காண் முடிந்தது கெட்டு மகிழ்ச்சி எல்லாம் விநாயக அருள்.....!

      Delete
  3. மூன்று காணொளிகளையும் பார்த்து இரசித்தேன். முதல் காணொளியில் அந்த குழந்தை, இயல்பாய் எந்த வித பயிற்சியும் இல்லாமல் இசையைக் கேட்டு அதில் மயங்கி ஆடிய ஆட்டம் அற்புதம்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கண்டு ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி ஐயா

      Delete
  4. மூன்று காணொளியும் கண்டேன் ஐயா ரசித்தேன்
    ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் கணினி திறக்கிறேன்.

    ReplyDelete
  5. Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்

      Delete
  6. குழந்தைகளை கவர்ந்த காணொளிகள் பெரியவர்களையும் குழந்தை பருவத்திற்கு அழைத்துச்செல்லும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

      Delete
  7. துளசி: குழந்தை ஆடுவது அழகு சார்! விநாயகர் நடனமும்...

    கீதா: விநாயகர் மற்றும் மௌஸ் ஆடும் இரு காணொளிகளும் விநாயகச் சதுர்த்திக்குவாட்சப்பில் வந்திருந்தன....மீண்டும் இங்கு ரசித்தேன்.....குழந்தை செம க்யூட்!!!

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளின் செயல்கள் எப்போதும் அழகுதானே பலரும் காணொளிகளைப் பார்த்திருப்பீர்கள் என்பது எதிர்பார்த்தேன் இருந்தாலும் பகிர தூண்டியது

      Delete
  8. விநாயகர் பாடலுக்கு குழந்தை ஆடிய ந்டனம் மிக அருமை.
    காணொளிகள் முன்பே பேரன் காட்டி பார்த்து இருக்கிறேன்.
    மீண்டும் பார்த்தும் கேட்டும் ரசித்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் கண்டு ரசித்ததற்கு நன்றி மேம்

      Delete
  9. விநாயகர் ஆடும் நடன காணொளிகளை முன்பே பார்த்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய உலகம் மிகவும் சுருங்கி விட்டது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  10. இந்தக் காணொளிகள் எனது கணினியில் திறக்கவில்லை...

    தவிர - எனது தளத்தில் சிலபதிவுகளின் காணொளிகள் கூட இயங்குவதில்லை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. கணினி திறக்காத பலரும் பார்த்து இருக்கிறார்கள் காணொளிகள் இயங்காததன்காரணம் தெரிய வேண்டுமல்லவா

      Delete
  11. பார்த்தேன்.

    குழந்தைகளை நாம் படுத்தாமல் இருந்தால் இயல்பாகவே அவர்கள் ஆட்டமும் பாட்டமுமாகத்தான் இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவ்ர்கள் உலகமே தனி சார் வருகைக்கு நன்றி

      Delete
  12. நர்த்தன விநாயகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இப்படி, ராக், பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடும் விநாயகரை முதல் முதலாக பார்க்கிறேன். எப்படி இருந்தாலும் ரசிக்க முடிவதுதானே விநாயகரின் சிறப்பு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இழுத்தைழுப்புக்கு வரக் கூடியவரே விநாயகர் வந்து ரசித்ததற்கு நன்றி

      Delete
  13. மூன்றுமே நன்றாக இருந்தன, இருந்தாலும் இதனை ரசிக்க குழந்தை மனமும் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் யோசித்தே இதனைப் பதிவிட்டேன் வலையுலகில் குழந்தை மனம் படைத்தோர் பலரும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது

      Delete
  14. உங்களின் ரசனை எங்களின் ரசனையாகிப் போனது. நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அபடியா நினைக்கிறீர்கள் நன்றி சார்

      Delete
  15. நர்த்தன விநாயகர் காணொளிகள் அருமை. குழந்தை தன்னை மறந்து ஆடுகிறாள்.

    ReplyDelete
  16. வருகைதந்து ரசித்ததற்கு நன்றி மேம்

    ReplyDelete