Wednesday, September 13, 2017

நம்பிக்கைகள் பலவிதம்


                             நம்பிக்கைகள் பலவிதம்
                           -----------------------------------------
யானைக்குத் துதிக்கையில் பலம் மனிதனுக்கு நம்பிக்கையில் பலம் என்று கூறுவது வழக்கம் ஆனால் இந்த நம்பிக்கைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாமல் போகும்போது எனக்கு கொஞ்சம் கோபம் வருவது உண்மை  நிறைய எழுதி இருக்கிறேன்  சில நம்பிக்ககைகளையும்  பலன் களையும் கூறுகிறேன் அது என்னைச் சார்ந்து இருக்கும் போது அதிக வீச்சுபெறுகிறது
என்  மனைவிக்கு  கையில் ஒரு மரு வளர ஆரம்பித்தது வலி ஏதும்  இருக்கவில்லை என்றாலும் பார்ப்பதற்குஅதுவும்  என் மனைவிக்கு ஒரு மாதிரி இருந்தது விஜய வாடாவில் இருந்தபோது அங்கே இருந்த மருத்துவர் ஒருவரிடம் காட்டினோம்   அவர் ஜஸ்ட் இக்நோர் இட் என்றார்  முடியவில்லை என்றால் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிவிடலாம்  என்றார் என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பமிருக்கவில்லை  சிறிது காலத்துக்கு  பொறுத்திருந்து பார்ப்பது என்று முடிவாயிற்று  எனக்கும் மீண்டும் திருச்சிக்கே மாற்றல் ஆயிற்று அங்கு ஒரு சரும மருத்துவரிடம் காண்பித்தோம்  அவர் அதைப் பார்த்து ஒன்றும்  செய்ய வேண்டாம்  நம்பிக்கை இருந்தால் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று குளத்தில் வெல்லம்கரைத்து உப்பும் கொடுத்து வாருங்கள்   என் மனைவிக்கு அறுவைசெய்யாமல் இருப்பதுதானே  முக்கியம் மேலும்  அவளுக்கு நம்பிக்கையும்  இருந்தது நாங்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு சொன்னபடி செய்து வந்தோம் ஒரு சில நாட்களில் கையில் இருந்தது மருவா எங்கே போயிற்று தெரியவில்லை  அதுவாக மறைந்ததா கடவுள் அதை நீக்கினாரா என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கை
இன்னொரு செய்தி. எனக்கு ஒரு சித்தப்பா இருந்தார் வயது ஏற ஏற பார்வையை முற்றிலும்  இழந்திருந்தார் ஒரு ஃபார்மசி ஏஜென்சி  நடத்திக் கொண்டிருந்தார்  அவரது வேலையைஅவரே செய்து கொள்வார்  திருச்சூரில் ஒரு முறை அவரைப் பார்க்கப் போனோம்  பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் சொன்னது  வாழ்க்கையே நம்பிக்கையில் ஓடுகிறது எனக்கோ கண்பார்வை கிடையாது பார்வை போனபின் லக்ஷ்மி கடாட்சம் கிடைத்திருக்கிறது எனக்கோ பார்வை தெரியாது நான் சாப்பிடும் உணவில் என் மனைவி விஷம் கலந்தால் எனக்குத் தெரியவா போகிறது  வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடுகிறது என்றார்
 இந்த மாதிரி நம்பிக்கைகள் ஒருவருக்கு இருந்தால் நல்லது அதே சமயம் பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றுவதும்  பிறர் உண்ட எச்சில் இலையில் புரண்டு எழுவதும்  தலையில் தேங்காய் உடைக்கவைத்து பிரார்த்தனை என்னும் பெயரில் செயல்கள் புரிவதும் அலகு குத்தி தன்னை வருத்தி பரிகாரம் செய்ய முற்படுவதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்கள் என்றே தோன்று கிறது சில மரங்களை வெட்டினால் உயிருக்கு ஆபத்து என்று நினைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன்  
 நம்பிக்கைகள் பலவிதம்  நான் நம்பிக்கை பற்றி ஒருபதிவு எழுதி இருந்தேன் அது இங்கே கீழே

 
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.

மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை

 பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை

 பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை

 நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை

 நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கைநம்பிக்கைகள் பல விதம் 

. இருப்பினும் ,

 தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.   

நம்பிக்கையில் இன்னொரு வகை  காணொளீயாக கீழே


                            


50 comments:

  1. காணொளி இன்னிக்கு நோ சொல்லிடுச்சு! பதிவு நல்ல நம்பிக்கையைத் தருகிறது! :)

    ReplyDelete
    Replies
    1. கடைசி நேரத்தில் காணொளி சேர்த்தேன் அதைப் பார்க்க முடியவில்லையா பதிவு சிந்திக்க வைத்தால் போதுமே

      Delete
  2. நமைக்கிக்கையில்தானே வாழ்க்கையே ஒடிக் கொண்டு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் ஆனால் எந்தமாதிரி நம்பிக்கை என்பதுதானே முக்கியம்

      Delete
  3. //தாய் சொல்லி தந்தை என்றறியப்படுவதே தலையாய நம்பிக்கை. //

    கேட்கவே ஏதோ அந்தக் கால சினிமா வசனம் போலிருக்கு.
    ஒவ்வொரு தாயும் மகனிடம் இவர் தான் உன் தந்தை என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தால் அது அசிங்கமல்லவோ?..

    பிறந்த குழவிக்கு தாய்ச்சூடு தெரியும். வித்தியாசம் இருந்தால் புரிந்து கொள்ளவும் செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. பிறந்த குழவிக்கு தாய்ச் சூடு தெரியும் இருக்கலாம் அனுமானமே . அதேபோல் தந்த்சைச் சூடு தெரியுமா இவர்தான் தந்தை என்று அறி முகப் படுத்தா விட்டாலும் இவர் அண்ணன் இவர் மாமா இவள் அத்தை என்றெந்ல்லாம் சொல்வதுபொல் அப்பா பாரு அப்பாகிட்டப் போ என்றெல்லாம் சொல்லியே அறி முகமும் நடக்கிறது யாரையாவது காட்டி அப்பா கிட்டப் போ என்று தாய் சொல்வதில்லை. புரிதலில் தடுமாற்றம் தெரிவதால்தான் அந்தக் கால சினிமா வசனம் போல் தெரிகிறது என்று தோன்று கிறது

      Delete
  4. எங்கள் குடும்பத்தில் கூட இப்படி நடந்திருக்கின்றது..

    மிகப் பெரிய அறுவைச் சிகிச்சை ஒன்று - வைத்தீஸ்வரன் கோயிலின் வேண்டுதல் மூலமாக தவிர்க்கப்பட்டிருக்கின்றது...

    நம்பிக்கை வாழ்க.. நம்பினோரும் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. என் மனைவிக்கு இருக்கும் நம்பிக்கை எனக் கில்லை நம்பிக்கை அவசியம் ஆனால் எதில் எப்படி என்பதும் முக்கியம்

      Delete
  5. நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம். அதில் குறை சொல்லவோ லாஜிக் பார்க்கவோ மற்றவர்கள் யார்?

    "ஒரு மனிதனின் உணவு அடுத்த மனிதனுக்கு விஷம்" என்ற பழமொழியைப் படித்திருப்பீர்களே.

    நீங்கள் சொல்லியிருக்கும் சில பிரார்த்தனைகள், எனக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்கள் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் யாரே அறிவார்? சிலராவது பயன் பெறாமலா இத்தகைய ப்ரார்த்தனைகள் தொடர்கின்றன?

    வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடுகிறது. எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே மன ஓட்டம் தான்..

      ஜி எம் பி ஐயா..ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் நம்பிக்கை... நாம் நம்புவதைத்தான் அடுத்தவரும் நம்ப வேண்டுமென்றில்லை.. அதேபோல அடுத்தவரின் நம்பிக்கையை நாம் நய்யாண்டி பண்ணக்கூடாது...

      இல்லை எனில் மொத்தத்தில் நாம் எதையுமே நம்பாதவராக இருப்பின் .. அடுத்தவரைக் குறைகூறுவது கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளலாம்..

      நமக்குத் துன்பம் வரும்போது நாம் கடவுளிடமோ அல்லது சாத்திரத்திடமோ ஓடுவதுபோலத்தான், ஏனையோரும் துன்பம் வரும்போது.. ஒருவர் ஒன்றைச் செய்தால் நலமாகலாம் எனச் சொன்னால் துன்பத்தில் இருப்போர் அதை நம்பிச் செய்யத்தான் பண்ணுவார்கள்..

      அடுத்தவர்களைக் குறைகூறுவதை விட்டுவிட்டு, நம்மில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து நம்மை நாம் திருத்துவதுதான் நல்லது.

      Delete
    2. நெல்லை தமிழன் --வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடுகிறது என்றாலும் எதை எப்படி என்று ஒரு விவஸ்தை இல்லாமல் நம்புவது பற்றியே புலம்பி இருக்கிறேன்

      Delete
    3. @ அதிரா நன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கையைத்தான் கோபம்வருகிறது என்றேன் துன்பத்தில் இருந்தால் கடவுளிடமோ சாத்திரத்திடமோ ஓடுவது எனக்குப் புரியாதஒன்று என் மனசுக்கு ஒவ்வாததை நான் கூறீருக்கிறே ந் யாரையும்புண்படுத்த அல்ல என் குறைகளும் நிறைகளும் எனக்குத் தெரியும் நான் அதை இதைக் கூறும் எஸ்கெபிஸ்ட் அல்ல

      Delete
  6. Replies
    1. அதற்காக எதிலும் புரிதல் இல்லாமல் நம்புவது சரியல்ல என்பதே என் கருத்து

      Delete
  7. உண்மைதான் ஐயா நம்பிக்கையே வாழ்க்கை.

    காணொளி வேதனையாக இருநதாலும் இந்தக் குழந்தையும் நம்பி(கை)வாழ்கிறது.

    ReplyDelete
    Replies
    1. காணொளி வேதனை அல்ல ஜீ நம்பிக்கையின் ஒளிக்கீற்று

      Delete
    2. தம க்கு நன்றி ஜி

      Delete
  8. காணொளி நம்பிக்கையை விதைக்கிறது. நம்பினோர் கெடுவதில்லை. உண்மைதான் ஐயா! ஆனால் ‘யாரை’ என்பதுதான் முக்கியம். தங்களின் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. யாரை மற்றும் எதை என்பதும் முக்கியம் ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

      Delete
  9. நீங்கள் போட்டிருக்கும் காணொளி எனக்கும் வந்தது. இன்று புதிய தலைமுறை செய்திகளிலும் காண்பித்தார்கள். நம்பிக்கை மனிதனுக்கு முக்கியம். நம்பிக்கை இல்லாமல் செயல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் சில நம்பிக்கைகளைப் பட்டியல் போட்டிருக்கிறேன் அது போல் இருந்தால் சரி எல்லாச் செயல்களுக்கும் நம்பிக்கை என்னும் போர்வை கூடாது என்பதே என் கருத்து

      Delete
  10. நம்பிக்கை.... அது தானே எல்லாம். காணொளி - தன்னம்பிக்கை தருகிறது.....

    ReplyDelete
    Replies
    1. முக நூலில் ஒரு நண்பர் காணொளி கண்களில் நீர் வர வழைத்து விட்டதாகக் கூறி இருந்தார் அது தன்னம்பிக்க ஊட்டவே என்பது என்கருத்து

      Delete
  11. தன்னம்பிக்கை தரும் காணொளி அருமை..

    பகிர்வுக்கு நன்றிப்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிம்மா

      Delete
  12. நம்பிக்கைதானே வாழ்க்கை
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. எதில் எப்படி என்பதும் முக்கியம் சார்

      Delete
  13. நம்பிக்கை என்பது பெர்சனல். சில மூட நம்பிக்கைகள்தான். அலகு குத்தல், எச்சல் இலையில் புரண்டு எழுதல் எல்லாம் அறிவுக்கு ஒவ்வாதவைதான்.

    உண்மையான நம்பிக்கை என்பது தன்நம்பிக்கை வளர்த்தல் அந்தக் காணொளி! எங்களுக்கும் வாட்சப்பில் வந்திருந்தது.!

    ReplyDelete
    Replies
    1. 'நம்பிக்கைகள்' அனேகமா எல்லாமே மூட நம்பிக்கைகள்தான் (மற்றவர்களுக்கு). தங்களுக்கு, தாங்கள் நம்பிச் செய்பவை, அறிவு/அனுபவ பூர்வமானவை, மற்றவர்கள் செய்வது அறிவுக்கு ஒவ்வாதவை. இதுலயும் சாதிப் பிரிவு இருக்கு, தெரியுமா?

      Delete
    2. @ துளசி அறிவுக்கு ஒவ்வாததைத்தான் சாடி இருக்கிறேன் அந்தக் காணொளி பலரும் பார்ததே இருந்தாலும் ஒர் மெசேஜுக்காகப் பகிர்ந்தேன்

      Delete
    3. அறிவு பூர்வமானவை அனுபவ பூவமானவை என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை சுய சிந்தனையை இழந்தவர்கள் செய்யும் சில செயல்களே வருத்தமும் கோபமும் வரவழைக்கிறது

      Delete
  14. நம்பிக்கையில் நம்பிக்கை வைப்போம். ஏதோ ஒரு பிடிமானத்திற்காகத்தான். வேறு வழியில்லை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வேறு வழி இல்லை என்பது ஒரு டிஃபீட்டிஸ்ட் ஆட்டிட்யூட் என்றே தோன்றுகிறது

      Delete
  15. //தாய் சொல்லி தந்தை என்றறியப்படுவதே தலையாய நம்பிக்கை. //
    இந்த நம்பிக்கையை உறுதி செய்ய DNA பரிசோதனை என்று கொண்டு வந்து விட்டார்களே!
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அது தாயையும் நம்பாதவன் செயலாக இருக்கலாம்

      Delete
  16. குழந்தை இப்படி இருக்கிறதே என்று ஒதுக்கி விடாமல் நம்பிக்கை ஊட்டி உற்சாகப் படுத்தி குழந்தையை சாதிக்க வைத்த தாயை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நெகிழ வைத்த காணொளி

    ReplyDelete
  17. சாதாரணமாக உடல் ஊனமுற்றவர்கள் தங்கள் குறைகள் பற்றிப் பேசுவதை விரும்புவதில்லை. இந்தத்தாய்குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நடந்துகொள்வது சிந்திக்கத் தூண்டுவது

    ReplyDelete
  18. வாஸ்து ,ஜோதிடம் ,நியூமராலஜி போன்றவைகளும் மூட நம்பிக்கையே :)

    ReplyDelete
    Replies
    1. சத்தமாகச் சொல்லாதீர்கள் பலரும் கோபித்துக் கொள்வார்கள்

      Delete
  19. nalla pathivu sir. Any faith which does not hurt others is fine. Any faith which does not hurt one's own self is even better (y)

    ReplyDelete
  20. நம்பிக்கைகள் நம்மையும் ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  21. நான் என் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளை எழுபது ஆண்டுக்கு முன்பே விட்டுவிட்டேன் ; பிறர் எதை நம்பினாலும் அது அவர் விருப்பம் . காணொளிக்கு நன்றி . அந்தக் குழந்தையைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன் .

    ReplyDelete
  22. ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  23. The "normal girl" could go several times in the slide, but the other kid could not. That kid does his/her best. The question is "Do we have to feel sorry for that kid?"

    If we carefully look at ourselves, I think we are all physically challenged only. We dont realize it because of our ignorance!

    e.g., We can not compete with Nadal or Michael Jordan or Michael Usain Bolt when it comes to Tennis or Basketball or running. Just like the kid could not compete with the other girl. But we never realize that we are INCAPABLE of competing with another human being. We never feel sorry for ourselves either. We say and justify, "So what?" That does not make me inferior to Nadal or Jordan or Bolt. But, we feel sorry for the kid who is unable to compete another kid. WE ARE ALL IGNORANT and PHYSICALLY as well as MENTALLY challenged only. We never worry about our inability or incompetence because we have a tendency to look at other's inability, NOT OUR OWN!

    I think the Kid would say, "So what?" someone doing better than me would never make me inferior either. Are you feeling sorry for yourself when you see some great

    ReplyDelete
    Replies
    1. I had posted this not to feel sorry for the kid. That was only to show her self confidence I agree in some ways only we are ignorant and mentally handicapped

      Delete
  24. Are you feeling sorry for yourself when you see some great athlete doing much better than you and you are nowhere close to him??

    ReplyDelete
    Replies
    1. HANDICAPPED PEOPLE WOULD NOT LIKE TO BE THOUGHT AS SUCH

      Delete
  25. தமிழ் ஃபாண்ட்ஸ் இப்போத்தான் இண்ஸ்டான் பண்ணினேன் சார்..நான் அனைவருமே ஊனம்தான்னு சொல்ல வந்தேன், சார். நம் ஊனம் நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதை நாம் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை.

    ReplyDelete
  26. நம் ஊனம்நமக்குத் தெரிவதில்லைதான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete