Monday, December 11, 2017

சென்னையில் சில சந்திப்புகள்


                          சென்னையில் சில சந்திப்புகள்
                         -------------------------------------------------

சென்னையில் சில சந்திப்புகள்
  சென்னைக்கு பதிவர் சந்திப்புக்குப்போக முடியவில்லை என் பதிவுகளுக்குப் பின்னூட்டம்  எழுதும் மாதங்கி மாலி  என்னைக் கவர்ந்த பதிவர்  முக்கியமாக என்  பதிவு ஒன்றுக்கு அவர் இட்டிருந்த பின்னூட்டம்  என்னை மிகவும் கவர்ந்தது
ஒரு பதிவில் கர்ப்பக் கிரகம்  பெரும்பாலும்  இருட்டாகவே இருப்பதால்    
"தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது".... என்று எழுதி இருந்தேன்   அதற்கு பின்னூட்டமாக மாதங்கி 

I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?
என்று எழுதி இருந்தார் அப்போது அவர் தன்னைப் பற்றி கூறியதில் இருந்து அவர் ஒரு 23 வயது இளைஞி என்று தெரிந்து கொண்டேன்
பிறகு நான்  தெரிந்துகொண்டது அவரது தந்தையாரும் மஹாலிங்கம்  என்னும் மாலி  என்பதிவுகளைப் படித்து இன்ன பதிவை மிஸ் செய்யக் கூடாது என்பாராம் இவரையும் இவர் தந்தையாரையும்  சென்னையில் இரு முறை சந்தித்து இருக்கிறேன்  முதல் முறை என்  மகனது ஆஃபீஸ் கெஸ்ட் ஹௌசில் தங்கி இருந்தோம்  அவர்கள் எங்களுக்காக சிறிது நேரம்காக்கவேண்டி இருந்தது இவரதுதந்தையார்  என் பதிவு ஒன்றைப் பாராட்டினாராம்   வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும் தலைப்பில்   I am ok you are ok என்னும்  ஆங்கிலப் புத்தகத்தின் சாராம்சம்


திரு மஹாலிங்கம்   நான்  மாதங்கி 

 இரவு எட்டுமணிக்கு  மேலாகியும் எங்களுக்காக காத்திருந்ததுநெகிழ்வாக இருந்தது
எரிதழல் வாசன் 
பிறிதொரு சந்தர்ப்பம்  2013ம் வருட முடிவில் சந்திப்பு நடந்தது  வேளச்சேரியில்  என் மகன்வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் எல்லாப் பதிவர்களையும் ஒரே நேரத்தில் சந்திக்கமுடியவில்லை அந்த சந்திப்புக்கு மாதங்கி மாலி அவரது தந்தையாருடனும் வலை உலகில்வாத்தியார் என்று பேசப்படும்  பாலகணேஷ் , திடங்கொண்டுபோராடுசீனு , ஸ்கூல் பையன்  கார்த்திக் கவியாழி கண்ணதாசன்  ஸ்ரீராம் செல்லப்பா  நடன சபாபதி  எரிதழல் வாசன் முங்கில்காற்று  முரளிதரன்  ஆகியோர் வந்திருந்தனர் ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் வரவில்லை நான் அப்போது எழுதி வெளியிட்டிருந்த புத்தகம் வாழ்வின் விளிம்பில் என்னும்  ஒரு நாவல்  அதை அங்கு வந்திருந்தவர்களுக்குக்  கொடுத்தேன் சில படங்கள் எடுத்தேன் ஆனால் ஒருவரது படம்வெளியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அவரை மட்டும்  நீக்கிப் படம் போடும் டெக்னிக் எனக்குத் தெரியவில்லை இன்னொரு முறை பதிவர்களை சந்தித்தேன்   அப்போது  நான் ஒரு சிறுகதையைப் பாதி எழுதி மீதியை முடிக்கும் படி வாசகர்களை வேண்டிக் கொண்டிருந்தேன்  நான் நினைத்த முடிவைச் சொல்பவருக்குப் பரிசு என்றும்  கூறி இருந்தேன்  அதை ஜட்ஜ் செய்ய திரு பாலகணேஷிடம்  கேட்டுக் கொண்டேன்   என் முடிவையும்  முதலிலேயே அவரிடம் கொடுத்திருந்தேன்  ஆனால் என் முடிவை ஒத்து யாரும்  எழுதி இருக்கவில்லை எல்லோருக்கும் கதைகள் சுபமாக வெகு சாதாரணமாக இருக்கவே விரும்புகிறார்கள்  பால கணேஷிடம் அவருக்கு பிடித்த முடிவுக்குப்பரிசை அறிவிக்கக்கேட்டுக் கொண்டேன்   அந்த சந்திப்புக்கும்  பால கணேஷ் சீனு கார்த்திக்  செல்லப்பா போன்றோர் வந்த நினைவு  நான் எப்போது சென்னைக்குச் செல்வதானாலும் பலருக்கும் அழைப்பு அனுப்பி சந்திக்க வேண்டுவேன்  பல தடவைகள் எதிர்பார்த்தவர்கள் வராததால் ஏமாற்றமடைந்து இருக்கிறேன்   கடைசியாக சந்தித்தபோது  நடன சபாபதி ஜீவி கீதா பானுமதி போன்றோர் வந்து சிறப்பித்தனர்  ஸ்ரீராமும் முன்னதாகவே வந்து சென்றுவிட்டார் வருகிறேன் என்று சொல்லி வராதவர்களே அதிகம் அவர்கள் பெயர்கள் வேண்டாமே
திரு பால கணேஷ்

திரு செல்லப்பா திடங்கொண்டு போராடு சீனு 
திரு செல்லப்பா நான் முரளிதரன் 
திரு ஜீவி
திரு நடன சபாபதி




இதைத் தவிர  பானுமதியின்  பெண் திருமணத்துக்குச் சென்றிருந்தோம் பானுமதியின்  கணவர் வெங்கடேஸ்வரன் எனக்கு தம்பி முறை என் சித்தப்பா மகன்  அங்கிருந்து சுப்புத்தாத்த வீடு சொற்ப தூரமே திருமணத்தின் ஒரு இடைவெளியில் அவரைப் பார்க்கப் போயிருந்தோம்  நன்கு படித்த வர் நிறைய விஷயங்கள் தெரிந்திருப்பவர் நான் எழுதி இருந்த நூலைக் கொடுக்க அந்தசந்தர்ப்பத்தை நான் உபயோகித்தேன் சூரி சிவாவின்  மனைவிதான்  திருமதி மீனாட்சி எங்கள் திருமணம் பற்றிக் கேட்டுதெரிந்து கொண்டார்  புத்தகங்கள் படிப்பதில் ஈடுபாடு கொண்டவர் என்றார்  நான் எழுதி இருந்த கடவுள் அறிவா உணர்வா என்னும்பதிவு பற்றி கேட்டார்  நான்சொல்ல வந்ததைத்தான்  பதிவில் எழுதி விட்டேனேஎன்றேன்  அடுத்து எங்கள் ஐம்பதாவது ஆண்டு மண நாளுக்கு அழைப்பு விடுத்தேன் கண்டிப்பாக வருவேன் என்றார்  வரவில்லை  அவர் பதிவில் வாழ்த்தி இருந்தார் வரும்போது ஒரு ஆங்கில நூல் ஒன்றைக் கொடுத்தார் இன்னும்படிக்கவில்லை சென்னையில் இன்னும்பதிவர்கள் பலரை சந்திக்க வேண்டும்  முடியுமா தெரியவில்லை
 என் நூலுக்கு வாழ்த்துரை எழுதி இருந்த தஞ்சைக் கவிராயரை அவரது இல்லத்தில் ஊர்ப்பாக்கம்சென்று சந்தித்ததும் இங்கே சொல்லப்பட வேண்டும் 


தஞ்சைக் கவிராயர் பேரனுடன்  நான் என்மனைவி 
திருமதி பானுமதி நான் ஜீவி நடனசபாபதி 




  


   



40 comments:

  1. படத்தில் என்னுடைய தொப்பை பிரதானமாகத் தெரிவது தற்செயலானது தானே?

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. இது, உங்கள் படத்தை மீண்டும் ஒருமுறை எல்லோரையும் பார்க்க வைக்கவேண்டும் என்பதற்கான டெக்னிக்கா செல்லப்பா சார்? நீங்களும் இப்போவெல்லாம், பலவாரங்களுக்கு ஒரு முறை என்றுதான் எழுதுகிறீர்கள் போலிருக்கு.

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா ஹா செல்லப்பா ஸார் சிரிச்சு முடியலை ஸார்....அண்ட் நெல்லை உங்க கமென்டையும்...

      கீதா

      Delete
    3. செல்லப்பா சார் புகைப்படம் தெரிவதைக் காட்டுகிறது

      Delete
    4. @நெ த உங்கள் படம் பார்க்க என்ன டெக்னிக்

      Delete
    5. @கீதா இந்தப்படம்2013ல் எடுத்தது செல்லப்பா சார் குண்டு ஒன்றும் அல்ல

      Delete
    6. 2013 என்பதை நானும் காலண்டர் பார்த்து (பின்பக்கம்) தெரிந்துகொண்டேன்.

      செல்லப்பா சார், பாலகணேஷ் ரெண்டுபேரும் சேர்ந்து நின்னால், கிட்டத்தட்ட என்னைப் பார்த்ததுபோல்தான். அந்த அளவு 5 1/2 அடி உயரம், கற்பனை செய்துகொள்ளுங்கள்.

      If we are destined to meet, ஏப்ரலில் வாய்ப்பு இருக்கு.

      Delete
    7. காலண்டர் பின் பக்கம் அவ்வளவு குண்டா ஏப்ரலுக்காக காத்திருக்கிறேன்

      Delete
  2. I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same? - அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.

    எழுத்தைப் படித்துவிட்டு அவர்களைப் பற்றிய ஒரு அனுமானம் வைத்திருப்போம். சந்திக்கும்போது அது பெரும்பாலும் மாறுபடலாம். அதேபோல் கருத்துப்பறிமாற்றத்தின்போதும். அதையெல்லாமும் நீங்கள் எழுதியிருக்கலாம்.

    பதிவர்கள் சந்திப்பு எப்பொழுதும் படிக்க ரசனையானதுதான்.

    ReplyDelete
    Replies
    1. எஸ் சில எழுத்துகள் ஒரு அனுமானம்வைக்கச் சொல்லும் ஆனால் அவர்களே தங்களை மாற்றிக் கொள்ளும் சான்சும் இருக்கிறது எல்லா வற்றையும் எப்போதும் எழுதக் கூடாது அவர்களை சந்திக்கும் ஆர்வத்தைக் கெடுத்து விடும்

      Delete
  3. நமது சந்திப்பு அருமையான ஒன்று. அந்த சந்திப்பில் நானும், அருமை நண்பர் நடன சபாபதி அவர்களுமே நிறையப் பேசிக் களைத்ததாக நினைவு. அந்த சந்திப்பில் திரு. ( பானுமதி)
    வெங்கடேஸ்வரன் அவர்களையும், திருமதி. கீதா ரெங்கன் அவர்களையும் தங்களின் குடும்பத்தாரையும் அறிமுகம் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

    நிழல்படங்களை தங்கள் சேமிப்பில் வைத்திருந்ததற்கு நன்றி, சார்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை சந்திக்க மிகவும் முயன்றபின் நிகழ்ந்த சந்திப்பு அது நடன சபாபதி அவர்கள் 2013 லும் வந்து சந்தித்து இருக்கிறார் உங்கள் உரையாடலில் உங்களைப் பற்றி சில விஷயங்களும்தெரிய வந்தது அதை ஊர்ஜிதம்செய்ய இன்னொரு சந்திப்பு தேவைப்படும்

      Delete
  4. நல்ல அறிமுகங்கள். பானுமதி எங்களுக்கும் அவங்க அம்மா வழியில் தூரத்து உறவினர் ஆகி விட்டார். :) சென்ற மாதம் ஶ்ரீரங்கம் வந்தபோது எங்க வீட்டுக்கும் வந்துவிட்டுப் போனார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றாகத் தேடினால் எல்லோரும் ஒரு விதத்தில் உறவாக இருக்கும் உலகம்மிகச்சிறியது மேம்

      Delete
  5. சென்ற வருட சந்திப்பில் ஜீவி அண்ணாவையும், திரு நடநசபாபதி சகோவையும், பானுமதி அககவையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது ஸார். மிக்க நன்றி..

    நல்ல சந்திப்புகள். சந்திப்புகள் மகிழ்வானவை.. தொடரட்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பலரை சந்திக்க நான் முயன்றது உங்களுக்குத் தெரியும் கீதா

      Delete
    2. ஆமாம் சார்! தெரியும் ஸார்..

      கீதா

      Delete
    3. வருகைக்கும் ஆமோதிப்புக்கும் நன்றி கீதா

      Delete
  6. நினைவலைகளை பகிர்வதும் ஒரு சந்தோஷம்தான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சில பார்க்க முடியாத முகங்களையும் பரிச்சயமாக்கலாம்

      Delete
  7. அருமையான சந்திப்புக்கள்.. தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கிலாந்து வந்து உங்களை சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை ஆனால் உங்களைக் கடித மூலமும் தொடர்பு கொள்ள முடியாது பொல் இருக்கிறதே

      Delete
  8. இனிமையானபதிவர் சந்திப்புகள் .மகிழ்வான நினைவுப்பகிர்வு ...

    ReplyDelete
    Replies
    1. அதிராவுக்கான மறு மொழி உங்களுக்கும் பொருந்தும் போல

      Delete
    2. அதிராவுக்கான மறுமொழி உங்களுக்கும் பொருந்தும் போல

      Delete
  9. அருமையான சந்திப்பு!
    சந்தித்த அறிஞர்களின் நினைவுகள்
    அடிக்கடி நினைவில் உருளும்!
    சந்திப்புகள் தொடர வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வருகிறேன் என்று எழுதிய நினைவு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

      Delete
  10. நல்லதொரு பகிர்வு. முதல் முறை சந்தித்தபோதுதான் நான் முதன்முதலாக செல்லப்பா ஸாரோடு அறிமுகம். சீனுவையும் அங்குதான் முதல் முறை பார்த்தேன். இரண்டாம் சந்திப்பில் உணவு(ம்) ருசி.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் இருக்கும் புகைப்படம் வெளியிடவில்லை சந்திப்பு ஒருவருக்கொருவர் என்பதை விட சேர்ந்து சந்திப்பது மகிழ்ச்சியான விஷயம்

      Delete
  11. சந்திப்புகள் என்றுமே இனிமையானவை
    மகிழ்ந்தேன் ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் ஹரணி ஐயாவையும் சந்தித்தது அடிக்கடி நினைவுக்கு வரும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  12. இங்கு குறிப்பிட்டுள்ள பதிவர்களில் மாலி, பால கணேஷ், ராய.செல்லப்பா, டி.என்.முரளிதரன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். அவர்களுள் நீங்களும் ஒருவர். பதிவர் சந்திப்பில் உள்ள முக்கிய அம்சம் இனம் புரியாத நட்பு அல்லது அன்புதான். உங்களது இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் அவை எதிரொலிக்கக் காண்கிறேன். தொடர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முகம் தெரியா வலை நட்புகளை நேரில் சந்தித்து நட்பு பாராட்ட விருப்பம்

      Delete
  13. மிகச் சிறப்பான சந்திப்பு.
    படங்களுடன் படிக்கும் போது சிறப்பாய்...

    ReplyDelete
    Replies
    1. பலரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி குமார்

      Delete
  14. எழுத்துகளுக்குத்தான் எவ்வளவு வலிமை. பார்த்தறியாதபோதும் ஒரு பிம்ம்பத்தை உருவாக்குகிறது. நேரில் பார்க்கும்போது ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. சந்திப்புகள் எப்போதும் இனிமையானவை.

    ReplyDelete
    Replies
    1. நேரில் சந்திக்கும்போது மனதில் பதிந்த பிம்பங்களுக்கும் நிஜத்துக்கும் பல சமயம் நிறையவே மாற்றங்கள் தெரிகிறது இதில் எது நிஜம் எழுத்துகளில் தெரிவதா நிஜத்தில் பார்ப்பதா இரண்டும் கலந்திருப்பதே நேரில் சந்திப்பதன் பலன்

      Delete
  15. உங்கள் சென்னை விஜயத்தின் பொழுது இரண்டு முறை நான் உங்கள் மகன் வீட்டில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். ஒரு முறை திரு.செல்லப்பா அவர்களையும், மூங்கில் காற்று முரளிதரன் அவர்களையும் சந்திக்க முடிந்தது. இரண்டாவது முறை திரு.ஜீ.வீ., திரு.நடனசபாபதி, திருமதி கீதா ரெங்கன் இவர்களை சந்தித்தேன். பல சுவாரஸ்யமான தகவல்கள் கேட்க முடிந்தது.

    ReplyDelete
  16. பதிவர் சந்திப்புகள் நினைத்ட்ர்ஹுப்பார்க்க மகிழ்ச்சி தரக்கூடியது நான் இம்மாதம் சென்னை வர இருக்கிறேன் என் மகன் இப்போது வேறு குடியிருப்பிக்குப் போய் விட்டான் வேளச்சேரியில் இல்லை

    ReplyDelete