சந்திப்புகள் திருச்சி மற்றும் சில இடங்கள்
--------------------------------------------------------------------
இந்தச் சந்திப்பு தொடர் தொடர்ந்து கொண்டே இருக்கிறதுஎப்படி எங்கு நிறுத்துவது
என்பதே குழப்பம் ஆகவே பல இடத்து சந்திப்புகளையும்
இங்கு கூறப் போகிறேன் எங்களுக்கு முன்பெல்லாம்
ஒவ்வொரு ஆண்டும் திருச்சி வைத்தீஸ்வரன் கோவில் சிதம்பரம் என்று போகும் வழக்கம் இருந்தது வலை உலகுக்கு வந்தபின் அவற்றைப் பதிவாக்கி இருக்கிறேன் ஆனால் இது வலைப் பதிவர்களை சந்தித்தது பற்றி மட்டும்
இருக்கும் 2012ம் ஆண்டு திருச்சி சென்றபோது
ஒரு பிரபல வலை நண்பருக்கு அஞ்சல் அனுப்பி சந்திக்க விரும்புகிறேன் என்று எழுதி இருந்தேன் நாட்கள் பல கடந்தும் பதில்
ஏதும் வரவில்லை வருத்தமாக இருந்தது நான் இப்போதும் அவர் பதிவுகளை வாசித்து வருகிறேன் 2013ம் ஆண்டு பயணத்துக்கு முன் திரு திதமிழ் இளங்கோ வை கோபால கிருஷ்ணன் ரிஷபன்
ஆரண்யவிலாஸ் ராம மூர்த்தி ஆகியோருக்கு தகவல் அனுப்பி இருந்தேன் திருமதி கீதா
சாம்பசிவம் அப்போதுமும்பையில் இருந்ததால் தகவல்
அனுப்பவில்லை நாங்கள் அப்போது திருச்சி பேரூந்து
நிலையத்துக்கு எதிரில் இருந்த கிருஷ்ணா இன்
என்னும் ஹோட்டலில் தங்கி இருந்தோம் தி தமிழ்
இளங்கோ அவர்கள் வைகோவுடன் சந்திப்பதாகத்தெரிவித்தார்
|
கோபுசார் தி தமிழ் இளங்கோவுடன் |
மாலையில் சரியாக நண்பர்கள் இருவரும்வந்து விட்டனர் ஏதோ வெகுகாலம் பழகியவர்கள்போலஉரையாடல் இருந்தது
திதமிழ் இள்ங்கோ அவர்கள் எனக்கு வாலியின் நினைவு நாடாக்கள் என்னும் ஒரு புத்தகம்கொடுத்தார் வைகோ எங்கேயும் எப்போதும்
என்னோடு எனும் அவருடைய சிறுகதைத் தொகுப்பைக்
கொடுத்தார் ஒரு துண்டு போர்த்தினார் ஒரு மணி
பர்சில் ரூபாய் ஐந்தும் கொடுத்தார் நான் எழுதி
இருந்த வாழ்வின் விளிம்பில் என்னும்நூலை நானும் கொடுத்தேன் நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத செயல் ஒன்றை வைகோ செய்தார் ”அபிவாதயே”
சொல்லி எங்களை வணங்கினார் மிகவும் நெகிழ்ந்து
விட்டோம் சற்று கொரிப்பதில் ஈடுபாடு கொண்டவர்
வை கோ என்றுதெரிந்தது ஆனால் ஹோட்டலில் ஆர்டர் செய்தது வரவே தாமதமாகிவிட்டது ஏதோ காரணத்தினால்
ரிஷபனும் ராம மூர்த்தியும் வர இயலவில்லை என் மனைவியின் பிறந்த நாள் ஜூலை மாதம் மூன்றாம் தேதி என்று சொன்னபோது வைகோ சாரும் தங்கள் மணநாளும் ஜூலை மூன்றாம் தேதி என்றார் அதன் பின் ஒவ்வொரு ஜூலை 3ம் தேதியும் நாங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோம் மீண்டும் திதமிழ் இளங்கோ வைகோ அவர்களையும் திரு ரிஷபன் ராம மூர்த்தியோடு திருச்சியில் இருக்கும் ஹோட்டல் ப்ரீசில் புதுகை
வலைப் பதிவர் சந்திப்புக்கு போகும்போது சந்தித்தோம் புகைப்படங்கள் பகிர்வதில் திரு
ரிஷபனுக்கும் ஈடுபாடு இல்லைஒரு பதிவர் பற்றி
நான் அவசியம் குறிப்பிட வேண்டும் அவர் தமிழ் வித்தகர் ஊமைக்கனவுகளின் பதிவாசிரியர் ஜோசப் விஜு அவர்களை சந்திக்க நான் விரும்பினேன் ஆனால் அவருக்கு பதிவுலக நண்பர்களை சந்திக்க ஆர்வமில்லை
ஆகவே மாலை நான்கரைக்கு முன் வந்தால் பதிவர்கள்
யாரையும் சந்திக்க வேண்டி இருக்காது என்று எழுதி இருந்தேன் ஆச்சரியமாக அவர்வந்தே விட்டார்
யாருக்கும் முகம் காட்ட விரும்பாதாவர்புகைப்படமுமெடுக்கவில்லை என் சிறுகதைத் தொகுப்பினைக் கொடுத்தேன் ஆனால் அதற்கான
விலையைக் கொடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தார் நான் இதுவரை சந்தித்தவர்களிலேயே வித்தியாச மானவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனபோது
திருமதி கீதா சாம்பசிவத்தையும் அவர்கள் வீட்டில் சந்தித்தேன்
|
திருமதி கீதா சாம்பசிவம் தம்பதியினருடன் |
நான் பதிவர் சந்திப்புகளின்போது வீண்விவாதங்களில் ஈடுபடுவது இல்லை பதிவுகளில்தான் எண்ணங்ளை ப் பகிர்கிறோமே திருமதி கீதாவைச் சந்தித்த போது அவரும் எழுத்துகளில் காணும்சர்ச்சைகளை ஒதுக்கி இருந்தார் என் மனைவிக்கு ஒருமுகராசி எல்லோரிடமும் சகஜமாகப்பழகுவார் அது எனக்கு ஒருஅட்வாண்டேஜ் திரு ராம மூர்த்தி எழுத்துகளில் மட்டுமல்ல நேரிலும்
நகைச்சுவையாகப் பேசுகிறார் 2013ல் திருச்சியிலிருந்து பயணப்படும்போது கரந்தை ஜெயக்குமாருக்குத் தகவல்
அனுப்பி இருந்தேன்
|
கரந்தை ஜெயக்குமார் திரு ஹரணியுடன் |
என்னை பதிவுகளில் ஊக்குவித்த
ஹரணியையும் சந்திக்க ஏற்பாடு செய்தார் கரந்தைப் பள்ளியில் எங்களுக்காகக் காத்திருந்தவர்
வழிகாட்ட ஹரணியின் வீட்டுக்குச் சென்றோம் திரு ஹரணியின் வீடு ஒரு நூலகம்போல் இருக்கிறது ஒரு அறையில் அத்தனைப் புத்தகங்கள் எங்களுக்காக
காலை உணவு தயார் செய்திருந்தார் ஹரணி ஆனால்
அதை உண்ணும் நிலையில் நாங்கள் இருக்க வில்லை எப்போதும் இம்மாதிரிப் பயணங்களில் இதுவரை சென்றிராத கோவில் ஒன்றினைப்பார்க்க போவதை என் மனைவி விரும்புவாள்
அந்த வகையில் நாங்கள்
சென்றது திட்டக்குடி குருபகவான் கோவில் அந்த நேரத்தில் கோவிலில் ஏதோ விசேஷ பூஜைகள்
நடந்துகொண்டிருந்தது வழக்கம்போல் அங்கிருந்து வைத்தீஸ்வரன்கோவில் சிதம்பரம் ஆகிய இடங்களுக்குச்
சென்றோம் அதற்கடுத்த ஆண்டு எங்கள் திட்டம்மயிலாடுதுறையை மையமாகக் கொண்டிருந்தது அந்தப்
பயணத்தில் நாங்கள் திருமதி கோமதி அரசுவை சந்திப்பதாக இருந்தோம்
|
திருமதி கோமதி. திருநாவுக்கரசு நான் |
திருமதிஅரசு கணவருடன் ரயில் நிலையத்துக்கே வந்திருந்தார்
அங்கிருந்து நாங்கள் தங்க இருந்தஓட்டலுக்கு வந்தார்கள் அவர்கள் தயவால் நாங்கள் சென்ற இடம் இதற்கு முன் பார்த்திராதது திருவிடைக்கழி முருகன் கோவில் அரசு அவர்கள் நாயன்மார்கள் பற்றிய உபன்யாசமெல்லாம் செய்தவர் என்று தெரிந்தது நன்கு படங்கள் வரைகிறார் அப்போது நான் என் பதிவில் இது என் ஏரியா அல்ல என்று ஒரு இடுகை இட்டிருந்தேன் முகமறியா வலை நட்புகள்
வெகு காலமாகப் பழகினதுபோல் நடந்து கொண்டது மனசுக்கு இதமாய் இருந்தது. கருத்து வேறுபாடுகள்
பலவும் இருந்தாலும் அவற்றை சரியான முறையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம்பிடித்திருந்தது
இவர்களைத்தவிர
நான் மதுரை வலைப்பதிவர் விழாவில் முதன் முதலாக சந்தித்தது தருமி என்று கூறப்படும்
சாம் ஜார்ஜ் கல்லூரி பேராசிரியர் மற்றும் திண்டுக்கல்
தனபாலன் திரு முத்து நிலவன் போன்றோரும் பலரையும் எதிர்நோக்கி சென்றதும் எதிர்பார்த்தபலரும் வராததும் வருத்தமாக இருந்தது
பலரைப் பார்த்தாலும் அறிமுகமாகி இருக்கவில்லை
திரு சீனா அவர்களின் துணைவியாரையும் சந்தித்தேன்
இன்னும் பலரையும்சந்திக்கும்
ஆசை இருக்கிறது வானவில் மோகன் ஜி வெங்கட் நாகராஜ் போன்றோர் சந்திக்க வருவதாகக் கூறி
இருந்தார்கள் மோகன் ஜி அவர் வரும்போது நான் ஒரு டி ஷர்ட் வாங்கி வைத்து தர வேண்டும் என்றிருக்கிறார்
தங்களது சந்திப்பின் தொகுப்பு நன்று ஐயா வாழ்த்துகள்.
ReplyDeleteதம,2
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி ஜி
Deleteதம வாக்குக்கும் நன்றி ஜி
Deleteசுவாரஸ்ய சந்திப்புகள். தருமி ஸார் சாம் ஜார்ஜ், சாம் ஜேம்ஸ் இல்லை என்று நினைக்கிறேன்.கீதாக்கா, கோமதி அக்கா ஆகியோரை நானும் சந்தித்திருக்கிறேன். மற்றும் வைகோ ஸாரையும் சந்தித்திருக்கிறேன்.
ReplyDeleteதிருத்தி விட்டேன் ஸ்ரீ நன்றி திருச்சி ஒரு பதிவர்களின் சங்கமம் என்றே தோன்றுகிறது
Deleteகோமதி அரசுவை நாங்களும் மதுரையில் அவங்க வீட்டில் பார்த்தோம். வைகோ சார் எங்க வீட்டுக்கே வந்திருக்கார். முதலில் சீனா சாரையும், அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். பின்னர் துளசி கோபாலைப் பார்க்க எங்க வீட்டில் சந்திப்பு ஏற்பாடு செய்தப்போ வந்தார். ரஞ்சனிக்காக ஏற்பாடு செய்த சந்திப்பில் ருக்மிணி சேஷசாயி அவர்கள் வீட்டிலும் சந்தித்தோம்.
ReplyDeleteஇன்னும்சந்திக்க வேண்டிய பதிவர்களின் பட்டியல் நீளமாய் இருக்கிறது எப்போது கைகூடுமோ தெரியவில்லைபுதுக் கோட்டையில் இருந்து வரும்போது திருமதி ருக்மிணி சேஷசாயியை எங்கள் காரில் கூட்டி வந்தோம்
Deleteஅந்த நாள் நினைவு நெஞ்சிலே!!! வந்ததே நண்பரே! நன்றி!
ReplyDeleteஎன் ஆரம்ப பதிவுகைல் ஊக்கம் கொடுத்தவர் நீங்கள் சென்னை வந்தபோது உங்களை உங்கள் இல்லத்தில் சந்திக்க விரும்பினேன் ஏனோமுடியவில்லை வருகைக்கு நன்றி சார்
Deleteநேரில் பார்த்திராத பதிவர்களை பதிவில் பார்த்த சந்தோஷம் தான் உங்களின் இந்தப் பகுதியின் சிறப்பு. நறுக்குத் தெரித்தாற் போல உங்களின் நினைவிலிருக்கும் செய்திகளைச் சொல்லிச் செல்வதிலும் அழகு மிளிர்கிறது. நன்றி, சார்.
ReplyDeleteஎனக்கு பதிவர்களைத் தெரிந்துகொள்ள நேரில் சந்திப்பது உதவும் என்றே தோன்றுகிறது புதுக் கோட்டையில் திரு ஹரணி அவர்களை முதலில் அடையாளம் கன்ஊ ஓல்லமல் அதற்கு வருந்தினேன் என்மனைவிதான் நினைவு படுத்தினாள் தொடர்ந்து வருவது மகிழ்ழ்சி தருகிறது சார்
Deleteஅடையாளம் கண்டு கொள்ளாமல் என்று இருந்திருக்க வேண்டும்
Deleteஆஹா.. இம்முறை எனக்குத் தெரிஞ்ச சிலரோடு சந்திப்பு நடந்திருக்கே... கோபு அண்ணன், கீதா அக்கா, கோமதி அக்கா..
ReplyDeleteஹா ஹா ஹா உங்களைச் சந்திச்சால் டக்கெனப் படமெடுத்துப் பக்கெனப் போட்டிடுவீங்க இங்கே.. அருமை நினைவுகள்.. தொடரட்டும்..
அப்பாவி கம்பபாரதி அதிரா ( இன்னும்சில பட்ட பெயர்கள் விடுபட்டிருக்கலாம் எனக்குத் தெரிஞ்ச என்பதை நான் பதிவில் படித்துத் தெரிந்த என்று அர்த்தம் கொள்கிறேன் /ஹா ஹா ஹா உங்களைச் சந்திச்சால் டக்கெனப் படமெடுத்துப் பக்கெனப் போட்டிடுவீங்க இங்கே.. அருமை /அது அவ்வளவு எளிதல்ல யாருடைய விருபொபமும் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட மாட்டேன் என்னை சந்தித்தாலும் உங்களது விருப்பம் இல்லாமல் வெளிச்சத்துக்கு கொண்டுவர மாட்டேன்
Delete//தி தமிழ் இளங்கோ அவர்கள் வைகோவுடன் சந்திப்பதாகத்தெரிவித்தார் //
ReplyDeleteஇதைப்படித்தவுடன் கொஞ்சம் அதிர்ந்துவிட்டேன். அவ்ளோ பெரிய அப்பாடக்கரா திரு தமிழ் இளங்கோ? வைகோவை சுலபமாக கூட்டிவருமளவுக்கு? பின்னர்தான் புரிகிறது: வை. கோபாலகிருஸ்ணன். வை.கோ என்றெழுதினால் வைகோவுக்குப் போட்டியில்லை. ஒரு வைகோவையே தமிழகம் தாங்க முடியவில்லை. இருவர் வந்துவிட்டால்...?
மன்னிக்கவும், வை.கோ-வின் பதிவுகள் படித்து தெரிந்தது: கொஞ்சம் மாறுபட்ட சிந்தனையாளர். அதாவது ஆங்கிலத்தில் நான்-கன்ஃபார்மிஸ்ட் to the extent I've read him. அணமையில் பல பின்னூட்டங்களை நீங்கள்தான் வை.கோ என்ற சிந்தனையிலேயே போட்டுவந்தேன். அவரின் பதிவுகள் சிலகாலம் தோன்றாததன் விளைவு. அவர் பெயரே மறந்துவிட்டதால்.
தருமி என்ற சாம் ஜ்யார்ஜ் (அவர் இயற்பெயர் அவரின் வலைபதிவில் படத்தோடு இருக்கிறது) என்னிடம் தான் கல்லூரிப்பேராசிரியராக வேலையே பார்க்கவில்லையென்று மறுத்தார். நீங்கள் பேராசிரியர் என்று எழுதுகிறீர்கள்.
தேவையில்லாத குழப்பம் என்று நினைக்கிறேன் திரு கோபால கிருஷ்ணனை நான்கோபு சார் என்றுதான் அழைப்பேன் ஆனால் வலையுலகில் அவரை வைகோ என்றே குறிப்பிடுகிறார்கள் வைகோவின் பதிவுகள் பற்றித் தெரிந்தது அவர் கொஞ்சம் மாறுபட்ட சிந்தனையாளர் எந்த வைகோவைக் கூறு கிறீர்கள் எனக்குத் தெரிந்தவரை கோபுசார் ஒரு சிறந்த கன்ஃபார்மிஸ்ட் தான் நான் தான் சற்று மாறுபட்டவன் என்பதிவுகளைப் படுஇத்து கோபுசாரை நினைத்துக் கொண்டீர்களா நல்ல தமாஷ் சாம்ஜார்ஜ் என்று பெயரைத் திருட்ர்ஹ்தி இருக்கிறேன் அவர் ஒரு பேராசிரியர்தான் சந்தேகம் வேண்டாம்
DeleteNo confusion. It was some sense of humor but it seems to have failed. Please see my words: ‘’…to the extent I’ve read him’’. I added them as a careful after-thought because I know I’m an odd-man-out in Tamil blogosphere.. Not only his blogpost, but in his feedback comments in other blogs he surprised me. .
DeleteProf Sam George stoutly denied that he was a Professor of English when I told him that I wanted to read some of his writings in English. I hold Professors of English in high esteem and I associate readable English with them - an intellectual pleasure for me. But I take it that he doesn’t want to tell that only to me and so, I left the matter at that.
Thanks for your response.
திரு தருமி அவர்கள் ஒரு பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் என்றால் ஆங்கிலப் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டுமா பல விஷயங்களை நீங்களே கற்பனை செய்கிறீர்கள் என்று தோன்று கிறது
DeleteYes, it could be an illusion.
DeleteYou mistook his surname. A commenter (Mr Ilangko) corrected it. I added that his blog shows his photo and name. You’ve appreciated & accepted it. If a commenter mistakes an information, the blogger can care to correct it. Thus, we show mutual consideration. Whereas in his blog, not in one blog post, but in many, I took him for a Prof of English. He could have easily corrected me. He didn’t. Even so, he denied that he was a Prof at all – leave alone the subject he taught. I took it as his caprice and left the simple matter unresolved and writing in his blog. But it has resulted in bringing the illusion here too. :-) A stitch in time saves nine.
Thanks for the response. Let’s close the matter.
என் பதிவுகள் வாசிப்பவர்களின் கருத்துகளுக்கு எந்த தடையுமில்லாமல் திறந்திருக்கும் பின்னூட்டம் இடுபவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறலாம் எனொரே எதிர்பார்ப்பு என்னவென்றால் கருத்துகள் பதிவைச் சார்ந்து இருக்கவேண்டும் சில நேரங்களில் அவை தவறிப் போவதும் உண்டுஇப்பதிவில் திரு சாம்ஜார்ஜின் பெயர் தவறாக இருப்பதாக காட்டியவர் ஸ்ரீ ராம் திரு இளங்கோ அல்ல தவறு என்றால் நான் திருத்திக் கொள்ளத்தயார் மேலும் தருமியின் எழுத்துகளைத்தான் நான் வாசிக்கிறேன் எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன் நீங்கள் சொலி இருப்பது போல் லெட் அஸ் க்லோஸ் த மாட்டர் நன்றி
Deleteஆஹா !! நிறைய பேர் தெரிந்த முகங்கள் :) கோபு சார் இளங்கோ அண்ணா கீதா அக்கா கோமதி அக்கா ஜெயக்குமார் அண்ணா சந்தோஷமாக இருக்கு சம்பவங்களையும் சந்திப்புக்களையும் நிழற்படமாக பார்க்கும்போது . அழகா தொகுத்திருக்கிங்க ..
ReplyDeleteஏஞ்செல் நீங்களும்பட்டப் பெயர்களில் உலா வரத்துவங்கி விட்டீர்களா இவர்களைத் தெரியுமா பதிவுகளில் வாசித்தது தவிர
Delete// இந்தச் சந்திப்பு தொடர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்படி எங்கு நிறுத்துவது என்பதே குழப்பம் ஆகவே பல இடத்து சந்திப்புகளையும் இங்கு கூறப் போகிறேன் //
ReplyDeleteகுழப்பம் ஏதும் இல்லை அய்யா. இந்த தொடர் சுவாரஸ்யமாகவே சென்று கொண்டு இருக்கிறது. பொதுவாகவே பதிவர் சந்திப்பு என்றாலே, எல்லோருமே ஆர்வம் காட்டுவது வெளிப்படை.
// நான் பதிவர் சந்திப்புகளின்போது வீண்விவாதங்களில் ஈடுபடுவது இல்லை பதிவுகளில்தான் எண்ணங்ளைப் பகிர்கிறோமே //
// முகமறியா வலை நட்புகள் வெகு காலமாகப் பழகினதுபோல் நடந்து கொண்டது மனசுக்கு இதமாய் இருந்தது. கருத்து வேறுபாடுகள் பலவும் இருந்தாலும் அவற்றை சரியான முறையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம்பிடித்திருந்தது //
ஆமாம் அய்யா. மாறுபட்ட கருத்துகள் கொண்டு இருந்தாலும், சகபதிவர் என்ற முறையில் ஒருவருக்கொருவர் சகஜமாக உரையாடவே விரும்புகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமையைக் காண முடிகிறது. நயத்தக்க நாகரிகம்.
// இன்னும் பலரையும் சந்திக்கும் ஆசை இருக்கிறது //
எனக்கும் இந்த ஆசை உண்டு. இங்கு நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் பலரையும், ஓவ்வொரு சந்தர்ப்பத்தில் நேரில் கண்டு பேசி இருக்கிறேன். என்னையும் இந்த வரிசையில் வைத்து உங்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்புகள் தந்தமைக்கும், இங்கு இந்த பதிவினில் என்னை சுட்டி காட்டியமைக்கும் நன்றி.
உங்களை சந்தித்தது என்பாக்கியம் மீண்டும் சந்தர்ப்பம்வாய்க்கும் போது சந்திப்போம்
Deleteஉங்கள் அனுமதி இல்லாமல் நீங்க வெளியிட்டுள்ள படத்தில் நானும் இருக்கின்றேன்.
ReplyDeleteபுதுக் கோட்டையில் எடுத்த படங்களிலா சார் தென்றல் சசிகலா வோடு உரையாடும்படத்திலா எனக்கு அப்போது உங்களை அறிமுகமில்லை அதுபோல் பலரையும் அறிமுகமில்லாமல் போய் விட்டது
Deleteஇனியசந்திப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை வாரி வாரி வழங்கும் ஐயா
ReplyDeleteதங்களுடன்எனது புகைப்படங்களைக் கண்டதும் மனம் மகிழ்ந்தது நன்றி ஐயா
எல்லோருடனும் பழகுவதில் நான் உங்களிடம்கற்க நிறைய இருக்கிறது வருகைக்கு நன்றி சார்
Deleteஇனிய சந்திப்புகள் தொடரட்டும். நாம் சந்திக்க ஏனோ இதுவரை வாய்ப்பு அமையவில்லை. நீங்கள் தமிழகம் வரும்போது நான் இருப்பதில்லை. பெங்களூர் பயணம் எனக்கு ஏனோ அமையவில்லை. வரும் வாய்ப்பு விரைவில் அமையட்டும். சந்திப்போம்.
ReplyDeleteஇனி என் பயணங்கள் முன்புபோல் இருக்காது எங்கு போவதானாலும் துணை வேண்டி இருக்கிறது விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன்
Delete//திரு தருமி அவர்கள் ஒரு பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் என்றால் ஆங்கிலப் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டுமா/மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தருமி அவர்கள் ஆங்கிலப் பேராசிரியராகத் தான் இருந்து ஓய்வு பெற்றதாக அவரே சொல்லி இருக்கிறார். அவரின் ஆரம்பகாலப் பதிவுகளில் பார்த்திருக்கலாம். அவை எல்லாம் ப்ளாக்கர் மூலம் வந்தவை. அப்புறமா வேர்ட் ப்ரஸுக்கு மாறினப்புறம் எனக்கு அவ்வளவாத் தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட 2005 ஆம் ஆண்டிலிருந்து அவர் நன்கு அறிந்தவர் என்ற முறையில் ஆங்கிலப் பேராசிரியராகத் தான் இருந்தார் என்று என்னால் சொல்ல முடியும்.
ReplyDeleteLet me add two vignettes to yours.
DeleteThere are two blog-posts he wrote. In one, he was describing his train journey to his college. He commuted by train to his college along with a few colleagues. He was working in some Northern Dist. The episode tells us about the gimmicks played on train. All were teachers of the same college.
Another blog-post relates to Jeyakantan. In TN, common people hero-worship actors and politicians. The educated lot hero-worships Tamil writers. The blog-post was to show how great Jeyakantan was in insulting others - no matter a small student or an old man. The American College wanted to facilitate the writer for some achievement. He came and, at the end of his speech, a student raised a question - a personal question which offended the writer but fended the question with a repartee. The blogger was sure that the student was snubbed. In my comment, I explained how the writer fooled himself with the repartee and how the student was a hero there.
The 2 posts show he was a Professor.
@கீதா சாம்பசிவம் தருமி பெராசிரியர் என்பது போதாதா எந்தப் பிரிவு என்பதில் சர்ச்சை வேண்டாமே தருமி என் நல்ல நண்பர் பல விஷயங்களில் என்கருத்துகளோடு ஒத்துப் போகிறவர் நல்ல எழுத்தாளர் பல நூல்கள் எழுதிப் பிரசுரித்தவர் மேலும் தகவல்கள் இப்போது நான் கூற வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம்
Delete@விநாயகம் தருமியின் பல பதிவுகளை நான் வாசித்திருக்கிறேன் நீங்கள் குறிப்பிடும் சம்பவப் பதிவு என் நினைவுக்கு வரவில்லை
Deleteஎன் பின்னூட்டத்தைக் காணலை. இன்றைக்கு மீண்டும் எழுதுகிறேன்.
ReplyDeleteஎன் தளத்தில் பின்னூட்டங்கள் காணாமற்போவதுகிடையாதே எந்த மட்டறுத்தலும் இல்லையே எங்கே காணோமே என்றிருந்தேன் வாருங்கள் சார்
Deleteநான் தொடருகின்ற பிரபல பதிவர்களைச் சந்தித்ததை இந்த இடுகையில் போட்டிருக்கீங்க. கோபு சார், தமிழ் இளங்கோ, கீதா சாம்பசிவம் மேடம், கரந்தை ஜெயக்குமார் சார், கோமதி அரசு மேடம், நீங்க, மற்றும் பலரைச் சந்தித்ததைப் பற்றிப் படிக்க நல்லா இருந்தது.
ReplyDeleteஜோதிஜி அவர்கள் சொன்னபின்பு, அவர் எங்க இருக்கிறார் என்பதையும் பார்த்தேன்.
பதிவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணுவதை, நம்புவதை எழுதுகிறார்கள். தருமி அவர்களும் அவர் சரி என்று நம்புவதை எழுதுகிறார்கள். எல்லாமே படிக்க நன்றாகத்தான் இருக்கு.
தொடருங்கள் இத்தகைய சந்திப்புகளைப் பற்றி பதிவு எழுதுவதை.
சந்தித்தபதிவர்களைப் பற்றி எழுதியாகி விட்டது என்றே நினைக்கிறேன் இன்னும்பலரை சந்திக்க ஆவல் உண்டு ஆனால் இப்போது இருக்கும் நிலையில் அதிக பயணங்கள் இல்லாத நிலயில் நான் சென்று சந்திப்பது துர்லபம் பருடைய பதிவுகளயும் வாசிக்கிறேன் பதிவர்கள் என்னிடம் ஏற்படுத்தும் தாக்கம்பற்றியும் எழுதலாம் தானே ஆனால் சிலர் விரும்பமாட்டார்கள் நான் பொதுவாக எனது எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறேன் என் சிறுகதைகளைப் படித்தால் புரியலாம் விருப்பமிருந்தால் சொல்லுங்கள் சுட்டிகளைத் தருகிறேன் தொடர்ந்து வாருங்கள்
Deleteஜி.எம்.பி சார்... நேரம் கிடைக்கும்போது உங்களுடைய பழைய இடுகைகளைப் படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை (ஏன்னா.. நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு என்பதால்)
Deleteபின்னூட்டங்களை நான் மிஸ் செய்வதில்லை அது ஒரு காரணமானால்
Deleteபலரையும் தேடிப்போய் சந்தித்திருக்கிறீர்கள். அவற்றை அழகாக நினைவேட்டில் பதிந்துவைத்துப் பகிர்கிறீர்கள். பலருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை அல்லது அமைந்தாலும் பயன்படுத்திக்கொள்ள விழைவதில்லை. நான் இதுவரை பதிவுலகில் எவரையுமே சந்தித்ததில்லை. அனைவரையும் அவரவர் எழுத்தின் மூலமே அறிந்துள்ளேன்.
ReplyDeleteஆஆ எத்தனை நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது நீங்கள் இருப்பது ஆஸ்திரேலியா துளசி மேடம் மாதிரி இந்தியப் பயணம் இல்லை என்று தெரிகிறது பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் குறைவே வருகைக்கு நன்றி மேம்
Deleteஇனிய சந்திப்பு. நல்ல செய்திகளைப் பகிருகிறது.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Delete