Wednesday, June 6, 2018

பாரதி மன்னிக்கட்டும்


                             
                                            பாரதி மன்னிக்கட்டும்
                                            -----------------------------------


காலையில் நடைபயில அருகில் இருக்கும் பூங்காவுக்குச் செல்வதுவழக்கம் அங்கே ஒரு எறும்புப் புற்று இருக்க அதை பாம்புப்புற்று என்றுஎண்ணி  அதற்கு சிலர் பால் ஊற்றுவதைக் கண்டிருக்கிறேன்  அந்த இடம் சமன்செய்யப்பட்டு அங்கே சில நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டேன்  அந்த சிலைகளின் மேல் அங்கு உலாவும் பைரவர்கள் காலைக் கடன் கழிப்பதையும் பார்த்திருக்கிறேன்  பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி இதுபற்றி என்ன சொல்லி இருப்பான் என்பதன்  கற்பனை கீழே பதிவாக  தவறானால் பாரதி மன்னிக்கட்டும்
     
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

மந்திரம் வேதம் என்பார் சொன்ன
மாத்திரம் பலன் தரும் என்பார்-தீதில்லை
தாரீர் விளக்கமென்றால்  துச்சமெனவே
மதித்திடுவார் வீண்கேள்வி ஏனோ என்பார்  ( நெஞ்சு )

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ
காரணங் கேட்டே விளங்கியதிங்கு
யாவரும் உணர்ந்திட மறுத்திடுவார்   ( நெஞ்சு )

கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் யாதெனும் அறிவுமிலார்
துடி துடித்து துஞ்சி மடிவோர் துயர்
தீர்க்கக் கிஞ்சித்தேனும் சிந்தையிலார்   ( நெஞ்சு )


சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு
வினை தீர்க்கும் பாம்புயிர்ப்பிடம் கூறியே
பால் வார்ப்பார்ஆறுதல் வேண்டி-மலர் தூவி
மணி அடித்துத் தீபம் காட்டுவார்             ( நெஞ்சு )

சாத்திரங்களொன்றுங் காணார்-பொய்ச்
சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தையிலே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்   ( நெஞ்சு )

தோத்திரங்கள் சொல்லியவர்தாம்-தமைச்
சூதுசெயும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்கொண்டதை வினவினால் அது
முன் ஜென்மப் பாவ பலன் என்பார்             ( நெஞ்சு )  


எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்
இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்
சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்
தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.?  ( நெஞ்சு )
-------------------------------------------

  




26 comments:

  1. நல்ல கவிதை. உங்கள் திறமை ஆச்சரியம் கொடுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் நல்ல தமிழில் எழுத வருவதில்லை பாராட்டுக்கு நன்றி

      Delete
  2. என்றாலும் படைப்பிலேயே உள்ள ஏற்றத் தாழ்வுகள்! அதற்கு தர்க்கரீதியான உங்கள் பதில் என்ன?

    ReplyDelete
    Replies
    1. தர்க்க ரீதியில் பதில் சொன்னால் தர்க்கம்தான் மிஞ்சும் ஒரு வேளை தர்க்கத்தில் வெற்றி பெற்றாலும் ஒரு நட்பீழக்கும் வாய்ப்பும் இருக்கிறது

      Delete
    2. பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் பாவி மனிதன் பிரித்து விட்டானே மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறி விட்டான்

      Delete
  3. அருமை ஐயா அசாத்தியமான வார்த்தைக் கோர்வைகள் மிகவும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் வரிகள்வந்துவீழும் ஆனால் சிகநேரங்களில் என்ன முயன்றாலும்வரிகள் திருப்தி தராது ரசிப்புக்கு நன்றி ஜி

      Delete
  4. தலைவரே, உங்களிடம் இருந்து அழகான காதல் காவியம் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அதற்கான செய்திகள் உங்கள் இதயத்தில் இருப்பது எனக்குத் தெரியும். சீக்கிரம், ஆகட்டும்! காலம் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது!...

    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. நிறையவே காதல் வரிகள் எழுதிவிட்டேன் ஊற்றுஎடுக்கும்போது எழுதலாம் எழுதியதைப்படித்தாலே காதலின் அருமை புரியும் பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  5. மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  6. மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றி சார்

      Delete
  7. அருமை. பாரதி கோபித்துக் கொள்ள மாட்டார். மகிழ்ச்சி அடைவார் . வாழ்த்துகள். சிறப்பான வரிகள்.

    பயணங்கள் பலவிதம் - 06
    https://newsigaram.blogspot.com/2018/06/PAYANANGAL-PALAVIDHAM-06.html
    #பூண்டுலோயா #மலையகம் #டன்சினன் #நீர்வீழ்ச்சி #Pundaluoya #Malaiyagam #UpCountry #Dunsinane #WaterFalls #DunsinaneWaterFalls #SriLanka #LK #Travelling #Travel #TravelLanka #SigaramBharathi ##சிகரம்பாரதி

    ReplyDelete
    Replies
    1. சிகரம் வலைத்தளம்வந்தேன்நீங்கள் சொல்வது புரியவில்லை எந்தள வருகைக்கு நன்றி சார்

      Delete
  8. வித்தியாசமான சிந்தனை.. வித்தியாசமான படைப்பு .. ரசிக்கும்படியாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும்நன்றி மேம்

      Delete
  9. அருமை
    கவிஞருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்க நன்றி சார்

      Delete
  10. பாடலை மிகவும் ரசித்தேன். ஆனாலும் 'தளை' தவறுகள் இருக்கிறது. பொருள் மிகவும் அருமை. அதை dispute செய்ய இயலாது.

    பொதுவா நாம பேப்பரை மிதித்துவிட்டால், உடனே திடுக்கிட்டு மன்னிப்பு வேண்டுவோம். இதன் காரணம், நம் மனதில் புத்தகம், பேப்பர் போன்றவை சரஸ்வதி தெய்வம் என்று பதிந்திருக்கும். அதேபோல், கிரவுண்டுக்குள் இறங்குவதற்கு முன்னால் குனிந்து கிரவுண்டை தொட்டுக் கும்பிடுவார்கள் (பலர்..இதில் நாடுகள் விலக்கல்ல). இதெல்லாம் ஒரு செண்டிமெண்ட் என்றுதான் நாம் நினைக்கணும். ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் அதாரிட்டி இல்லை அல்லவா?

    ReplyDelete
  11. சீர் அடி தளை எதுவும்தெரியாது செண்டிமெண்ட் என்று ஒதுன்க்கிப் போக முடியவில்லை கோவிலுக்குப்போகும் போது கூட அனிச்சையாக கும்பிடுகிறோம் இவை எல்லாம் ஒரு செகண்ட் இன்ஸ்டின்க்ட் போல் ஆகி விட்டது இதில் ஆராய்ச்சி ஏதும் இல்லை பலனில்லச் செயல்கள் என்றே கூற வந்தேன் இதை கூற அதாரிடியாக இருக்க வேண்டும் என்றில்லையே

    ReplyDelete
    Replies
    1. வெறுமே வந்து பாராட்டிச் செல்லும் பதிவர்களிடையே உங்களுக்குத் தோன்றுவதைக் கருத்திடுவது பிடித்திருக்கிறது நன்றி நெல்லைசார்

      Delete
  12. சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு//

    பாம்புக்கு இருப்பிடம் எறும்பு புற்றுதான்.
    பாம்புக்கு தன் இருப்பிடத்தை கட்ட தெரியாது.

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்று பாரதி போல் அழகாய் கவிதை எழுதி விட்டீர்கள்.
    நாகர் வழிபாடு என்பது ஆதிகாலம் முத்ல் கொண்டே இருக்கிறது. சூரியன், மரம், நாகம் அப்புறம் தான் உருவ வழிபாடுகள் வந்தன்.
    ஏதாவது நம்பிக்கை வேண்டுமே மக்களுக்கு.

    ReplyDelete
  13. பாரதிபோல் அல்ல பாரதி என்னசொல்லி யிருப்பான் என்பதே கற்பன்சையாகி விட்டது உருவவழிபாடுகள் பற்றிய என் எண்ணங்களை முன்பே பகிர்ந்திருக்கிறேன் எதையுமே நம்பிக்க என்று கூறீயே தாண்டிவிடல் சரியோ

    ReplyDelete
  14. அருமையான கவிதை! பாரதி இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான் அடைவார்.
    ஒரு சந்தேகம், எறும்பு புற்றை பாம்பு புற்று என்று நினைத்து என்கிறீர்களே,அடிப்படையில் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?எறும்பு புற்று அல்லது கரையான் புற்றில்தான் பாம்பு குடியேறும் என்று இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன்.

    ReplyDelete
  15. பாம்பு தானாக புற்று செய்யாது எறும்பு அல்லது நீங்கள் சொல்வது போல் கரையான்புற்றை உபயோகிக்கிம் என்று கேள்வி பட்டிருக்கிறேன்

    ReplyDelete