கார் இரவல் கொடுத்த அனுபவங்கள்
---------------------------------------------------------
ஒரு மொக்கைபதிவு
------------------------------
மொக்கையை மெருகேற்ற
ஒரு அனிமேஷன்
மேலே அனிமேஷனைச் சொடுக்கினால்நீங்கள் ரசிக்கும் ஒரு அனிமேஷன் திறக்கும்
இன்று வரமஹாலக்ஷ்மி விரதம் அதையொட்டி
என்பேரனை இங்கு ஒரு
காலேஜில் சேர்த்திருந்தனர் கல்லூரி ஹாஸ்டலில்தான்
தங்க வேண்டி இருந்தது கல்லூரி வீட்டில் இருந்து சுமார் நாற்பது கிமீ தூரம் வாரமொரு முறை அவனை அங்கு சென்று பார்ப்போம் என்மருமகளின் காரை என் வீட்டில் விட்டிருந்தனர் நாங்கள் அவனைப்பார்ப்பதற்கு பொகும்போது அதை
உபயோகிப்போம் என்னிடமொரு காரிருந்து நான் ட்ரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தாலும் கார்
ஓட்டுவதை நிறுத்திஆண்டுகள் பல ஆகி விட்டன காரை ஓட்டுவகுற்கு ஒரு ட்ரைவரை
நியமித்திருந்தோம் ஒருமுறை காரில் பேரனின்ஹாஸ்டல் போய்வர ரூ 300 / - கொடுக்க வேண்டும் என
ஏற்பாடு எங்களுக்கு காரை
உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு வாரமொரு நாள் பேரனைப் பார்க்க போக கார்
எடுப்போம்
ஆனால் சொல்ல வந்தது
அதுபற்றி அல்ல நான் என் வீட்டு முதல் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தேன் தெலுங்கு
மொழி பேசுபவர்கள் அவர்களுக்கு ஒரு மகன் அவன் திருமணம் விமரிசையாகக் கொண்டாட
விரும்பினர் பையன் ஏர் ஃபோர்சில் இருந்தான் திருமணத்தில் அங்குமிங்கும் போக எங்கள்
காரைக்கேட்டனர் நானும்சரியென்றேன் ட்ரைவரின் வாடகையை அவர்கள்
தரவேண்டுமென்றும் வேலை முடிந்ததும் காரை
என்வீட்டு போர்டிகோவில் விட வேண்டுமென்றும் கண்டிஷன் போட்டேன் சரி என்றுஒப்புக்
கொண்டு காரை எடுத்துச்சென்றனர் இரவு பத்து
மணியாகியும் கார்வரவில்லை எந்தசெய்தியும் இருக்கவில்லை நாங்கள் தொலைபேசியில்
தொடர்பு கொண்டோம்
ட்ரைவர் நன்கு
குடித்திருந்ததால் அவனிடம் காரை
ஒப்படைத்து அனுப்ப முடியவில்லைஎன்று கூறினர்
எங்களுக்குக் கவலையாகப்போய் விட்டது வேறு யாரிடமாவது காரை அனுப்ப முடியுமா
என்று கேட்டோம் மாப்பிள்ளைப் பையன் தான்
கார் ஓட்டத்தெரிந்தவன் ஆனால் அவனிடம் கார்
சாவியைத் தர ட்ரைவர் மறுக்கிறான் என்றும்
பதில் வந்தது கார் ட்ரைவருடன்னேயே எப்படியாவதுய்காரை கொண்டு வரச்சொன்னோம் ட்ரைவர்
நன்கு குடித்திருந்ததால் அவனிடம் தனியாக காரை அனுப்ப வில்லை என்றும் கூறினார்கள்
காலையில் முகூர்த்தம்
முந்தைய நாள் இரவில் இந்த களேபரம் எங்களுக்கும் கல்யாண கூடத்துக்குப்போக முடியாத
நேரம் எப்படியாவது சமாளித்து கார் ட்ரைவருடன் காரை அனுப்பக் கேட்டோம் ஒரு வழியாக
மணப்பையன் அவன்நண்பர்கள் சிலரோடு ட்ரைவருக்கு அதிகப்பணம் கொடுப்பதாகக் கூறி
அவனுடன்வந்தனர் அதிகம் பேசிய பணத்தை உடனே தரவேண்டுமென்ற ட்ரைவர் வீட்டு வாசல்முன்
வந்ததும் கார் சாவியை எடுத்துக் கொண்டுநடக்க ஆரம்பித்தான் குடித்தவனுடன் பேசுவதில்
பலனிருக்க வில்லை நாங்களே அந்த அதிகப்பணத்தை உடனே கொடுத்தோம் ட்ரைவரே காரை
போர்டிகோவில் நிறுத்துவேன் என்று அடம் பிடித்தான் அவனிருந்தநிலையில் அவன் காரைச்சுவற்றில் மோதிவிடுவானோ என்ற பயம் இருந்தது வேறு வழி இல்லாமல் அவனையே காரை நிறுத்தச்
சொன்னோம் கெட்ட வார்த்தைகளில் அவர்களை வைது கொண்டே ஒரு வழியாகக் காரை போர்டிகோவில்
நிறுத்தினான் அவன் கேட்ட அதிகப்ணத்தை
கொடுத்து கார் சாவியை நாங்க பெற்றுக்கொண்ட பின் தான் நிம்மதி ஆயிற்று காரை நிறுத்தும்போது சுவற்றில்
படுமாறு நிறுத்தினான் காரின் முன்
பாகம்சற்று சொட்டை விழுந்தது உஷ் அப்பாடா
என்று நினைத்து சிறிது நேரம்கழித்து மாப்பிள்ளை பையனுடன் அதிகாலையில்
சத்திரத்துக்குச் சென்றோம்
வித்தியாசமான அனுபவம்தான் ஐயா
ReplyDeleteஇரண்டாவது காணொளி ஹா... ஹா...
ReplyDeleteகாரை இரவல் கொடுத்தால் எதிர்பாராத சங்கடங்கள். ஹாஹா. திரும்ப கார் வரும்வரை ரொம்ப சங்கடமா உங்களுக்கும் இரவல் வாங்கினவருக்கும் இருந்திருக்கும்.
ReplyDeleteநான் என் கைப்பட உள்ளவற்றை இரவல் தருவதில்லை. ஊர்ல இருக்கும்போது நான் காரை வைத்திருப்பதுபோல் யாரிடமேனும் அவசரத்துக்குக் கொடுத்தால் வைத்திருப்பதில்லை. எனக்கு காரை ரிவர்ஸ் எடுப்பது, ஏசி யை அணைத்தபின் காரை அணைக்கணும், கதவை மெதுவா சாத்தணும் என்றெல்லாம் கவனமா இருப்பேன். எல்லோருக்கும் இந்த கவனம் இருக்காது.
பொதுவாக எந்தப் பொருளையுமே இரவல் கொடுத்தால் நல்ல நிலையில் திரும்பி வராது. எங்க சொந்தக்காரரில் சிலருக்கு நாள், கிழமைகளில் பாத்திரத்திலோ அல்லது எவர்சில்வர் டப்பாவிலோ போட்டு பக்ஷணங்கள் அனுப்பினால் உடனே எல்லாம் திரும்பி வராது. கேட்டாலும் அந்த டப்பாவில் அல்லது தூக்கில் யாருக்கோ அவங்க வீட்டு பக்ஷணம் கொடுத்திருப்பதாகச் சொல்வார்கள். வந்ததும் தரேன் என்பார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேல் போய் உன் பாத்திரம் தானே வேணும் உனக்கு! புதுசா வாங்கிக் கொடுக்கிறேன் என்பார்கள்! வெறுத்து விட்டது! :))))))
ReplyDeleteபுத்தகம் என்றால் திரும்பியே வராது! அதுவும் சில சமயங்களில் நூலகத்திலிருந்து எடுத்த புத்தகமா இருக்கும். திரும்பி வராமல் அபராதம் கட்டியதும் உண்டு. சொன்னாலும் கேட்காமல் எடுத்துச் செல்வார்கள். நமக்கெல்லாம் ஒளிச்சு வைச்சுப் படிக்கத் தெரியாது! :))))
ReplyDeleteஓட்டுனர்களை சரியாக கவனிக்காவிட்டால், நம்மை ஓட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நம் கார் புதுசா இருந்தால் கண்ணில் நீர் வரும். காசைக்கூடக்கொடுத்தும் அவஸ்தை. எங்கும் நடக்கும் கதைதான். பெங்களூர் கதை இன்னுமே மோசம்.
ReplyDeleteமனைவி அமைவது மட்டுமல்ல ட்ரைவர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்னு கவுண்டமனி பாசையில்தான் சொல்லனும்
ReplyDeleteஇரவல் - ரொம்பவே கஷ்டம் தான் - இரவலும் கொடுத்து அவதியும் பட வேண்டியிருப்பது கொடுமை.
ReplyDeleteபாக்யாத பாடல் - சிறப்பு. மற்ற காணொளிகளும் ரசித்தேன்.
@ கரந்தைஜெயக்குமார்
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
@நெல்லைத் தமிழன்
@கீதா சாம்பசிவம்
@ஏகாந்தன்
@ராஜி
@வெங்கட் நாக ராஜ்
வருகை தந்த அனைவருக்கும் நன்றி மொக்கைகளைப் பற்றியே கருத்துரைகள் வரலக்க்ஷ்மி பாடல் பிரசித்தம் ரசித்தவர்கள் குறைவு ஆங்கிலப் பள்ளி யாசிரியர் நான்ரசித்தேகுழந்தை காணொளியும் ரசிக்கத்தக்கதே
//..மொக்கைகளைப் பற்றியே கருத்துரைகள் ..//
ReplyDeleteLove begets Love. அதைப்போலவே, மொக்கைகள் மொக்கைகளையே விளைவாகப் பெறும்!
மொக்கைகளுக்கு மெருகேற்ற இணைக்கப்பட்ட காணொளிகளுக்கும் அதே கதிதானா
ReplyDeleteமொக்கைகள் என்று நீங்கள் கூறினாலும் நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம். ஏனெனில் நீங்கள் பகிரும் ஒவ்வொன்றும் ஒரு செய்தியைத் தருகிறது.
ReplyDeleteஎன் எழுத்துகளின் மேல் இருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சார்
Deleteநல்லதொரு படிப்பினை.கார்உள்ளோர் அனைவருக்கும்.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபலருக்கு இது ஒரு வேறு படிப்பினையா இருந்தது இரவல் கொடுப்பது நல்லதல்ல
Delete