நான் நானாக
--------------------------
தொடர்ச்சி( சுய சரிதையில் இருந்து சில பக்கங்கள்)
திருச்சியில் நேர்காணலில் வெற்றிகரமாக தேர்வாகினேன் பணி நியமன உத்தரவு சில தினங்களில் வரும் என்றார்கள் அங்கு பணியிலிருந்த ஓரிருபழையநண்பர்கள் எனக்கு கை குலுக்கி வாழ்த்து கூறினார்கள் லூகாஸ் ட்விஎஸ்ஸில் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டென் அங்கு நான் பணியில் சேர்ந்து ஓராண்டு காலமானால் ஒரு காலண்டர் மாத நோட்டிஸ் கொடுக்கவேண்டும் ஒராண்டுக்குமுன்னால் 15 நாட்கள் நோட்டீஸ் போதும் பீ எச் ஈ எல்லில் உதவி எஞ்சி நீர் பதவி அதாவது நேரடியாக அதிகாரியாக நியமனம் மேலும் லூகாசில் எப்பவும் பணி பற்றிய பயம் ஒரு கால்குலேடெட் ரிஸ்க் என்று தோன்றியது துணிந்து பணி நியமனம்முன்பே ராஜினாமா கொடுத்து விட்டேன்ON HIND SIGHT அது தவறோ என்று நினைத்தது உண்டு என் எந்த செயலுக்கும் நான் தான்பொறுப்பு என்று நம்புபவன் நான்
திருச்சியில் நேர்காணலில் வெற்றிகரமாக தேர்வாகினேன் பணி நியமன உத்தரவு சில தினங்களில் வரும் என்றார்கள் அங்கு பணியிலிருந்த ஓரிருபழையநண்பர்கள் எனக்கு கை குலுக்கி வாழ்த்து கூறினார்கள் லூகாஸ் ட்விஎஸ்ஸில் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டென் அங்கு நான் பணியில் சேர்ந்து ஓராண்டு காலமானால் ஒரு காலண்டர் மாத நோட்டிஸ் கொடுக்கவேண்டும் ஒராண்டுக்குமுன்னால் 15 நாட்கள் நோட்டீஸ் போதும் பீ எச் ஈ எல்லில் உதவி எஞ்சி நீர் பதவி அதாவது நேரடியாக அதிகாரியாக நியமனம் மேலும் லூகாசில் எப்பவும் பணி பற்றிய பயம் ஒரு கால்குலேடெட் ரிஸ்க் என்று தோன்றியது துணிந்து பணி நியமனம்முன்பே ராஜினாமா கொடுத்து விட்டேன்ON HIND SIGHT அது தவறோ என்று நினைத்தது உண்டு என் எந்த செயலுக்கும் நான் தான்பொறுப்பு என்று நம்புபவன் நான்
எனக்கு
பணிநியமன உத்தரவு வந்தது ஏமாற்றமளித்ததுசம்பளத்தில் மாற்றம் இல்லை என்றாலும் அதிகாரி யாக அல்ல ஒரு நிலை கீழே என்னும்போது வருத்தமடைந்தேன் அவர்களிடம்
தொடர்பு கொண்டபோது என் படிப்புக்கு ஏற்ற வேலைதான்
என்றார்கள் முந்தைய கம்பனியில் ராஜி நாமா கொடுத்தாகி விட்டது வேலை இல்லாமல் இருக்க
முடியாது இக்கட்டான நிலை
முதல்
நாள் வேலைக்குப்போனபோது உதவி எஞ்சி நீரின் ஆஃபீசைப்பார்த்தேன்
பெரிய
அறை நடுநாயகமாக இருக்கை நல்ல பதவி போயிற்றோ
என்று முதலில் தோன்றியது உண்மை
அதே எஞ்சிநீர் பதவிக்கு வர எனக்கு ஆறாண்டுகாலத்துக்கும் மேல் ஆயிற்று என்னை நேர்காணலுக்கு அழைத்தபோதே என் குவாலிஃபிகேஷன் தெரிந்ததுதானே பின் ஏன் இப்படி என்று புரியவில்லை என் குடும்பசூழ்நிலை என்னைக்
வேறு எந்த முடிவையும் எடுக்க வைக்கவில்லை நான்முதன் முதலில் பணிக்குப் போயிருந்தபோது அந்த
அறையில் வீற்றிருந்தவர் பொது மேலாளருக்கும் மேல்நிர்வாக இயக்குனராக பதவி உதவி பெற்றார்
எல்லாம்
ஒரு பட்டப் படிப்பு இல்லை என்பதால் அல்லவா பட்டப் படிப்பு என்றாலேயே ஒரு காழ்ப்பு உணர்ச்சி ஏற்பட்டது ஆனால் நான் பணியில் இருந்தபோது மிகுந்தமதிப்பு பெற்றிருந்தேன் என்கீழ் பட்டப்படிப்பு படித்தவர்கள் பணி புரிந்தார்கள் பலபட்டப் படிப்பு பெறும்
மாணவர்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்திருக்கிறேன் எந்த சூழ்நிலையிலும் என்னை யாரும் குறை கூறியதில்லை
மொத்தத்தில் என்னை யாரும்பட்டம்பெறாதவன் என்று
எண்ணியதில்லை தொழிலில் திறமைபெற்றவன் என்னும் பெயர் பெற்றேன் இருந்தாலும் தொழிலில் மதிப்பு பெற்றால் மட்டும்போதுமா பட்டம் மட்டும்பெற்றிருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பேன்அடிக்கடி
நான்நினைவு கூர்வது ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கப்பட்டிருக்கிறது என்பதைதான்
என்சோகக் கதையை வாசிக்கும்
வாசகர்களே நான் நானாகவே இருந்திருக்கிறேன் எந்த தலை குனிவும் இல்லை பட்டம் படித்தவர்களுக்கு
நான்பட்டம் பெறாதவன் என்பதே தெரியாதபடி சிறந்து விளங்கினேன் ஆனால் மனதின் ஆழத்தில் நான் எங்கோ சென்றிருக்க வேண்டியவன் என்னும்குறை இருந்து கொண்டே இருக்கிறது
பட்டப்படிப்பை விட அனுபவப்படிப்பு மேலானது அல்லவா? ஆனாலும் இப்படிப்பட்ட நிலைகளில் அவர்களுக்கு ஒரு பட்டப்படிப்புச் சான்று தேவையாய் இருக்கிறது. தொடர்கிறேன்.
ReplyDeleteஅதைத்தானே எழுதி இருக்கிறேன்
Deleteஆமாம்.
Deleteபட்டம்பெற்றவர்கள் எல்லாம் திறமை சாலிகள் அல்ல என்பதே என் அனுபவம்/
Deleteமேலும் /
பட்டம் பெறாமலேயே சிறந்த தொழிலதிபராய் விளங்கி இருக்கிறார் ஜம்ஷெட்ஜி டாடா அவர்கள். ஏர் இந்தியா நிறுவனம் அவர் காலத்திலே மிகவும் புகழ் பெற்றிருந்தது. பட்டம் பெற்றவர்கள் நிர்வகிக்கும் இக்காலத்தில்? அதோடு இல்லாமல் அவரவருக்கு என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும். கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்காது.
ReplyDeleteபையில் இருப்பவர் நிலையே வேறு சொந்த தொழில் அல்ல
Deleteபணி நியமன உத்தரவு ஏமாற்றமளித்தது என்ற உங்களுடைய அனுபவம் என் அனுபவத்தை நினைவூட்டியது. கோவையில் தனியார் நிறுவனத்தில் 1980இல் சேரும்போது நேர்காணல் முடிந்து பணி நியமன ஆணை தந்தார்கள். அதில் ரூ.350 மாத சம்பளம் என்றிருந்தது. அப்போது தஞ்சையில் ரூ.250 சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டே அந்த நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் நிர்வாக இயக்குநர் அலுவலகப் பணியாளர் ஒருவர் வந்து ஆணையில் ஒரு சிறிய மாற்றம் என்று கூறி அதனை வாங்கிச்சென்றார். புரியவில்லை. காத்திருந்தேன். ரூ.350 என்பதில் குறுக்குக் கோடிட்டு ரூ.250 என மாற்றி நிர்வாக இயக்குநர் அத்தொகைக்கு நேராக சுருக்கொப்பம் இட்டிருந்தார். தஞ்சையிலேயே ரூ.250இல் தொடர்வதா, கோவையில் அதே ரூ.250 சம்பளத்தில் தொடரலாமா என்ற குழப்பம் சில நிமிடங்கள் அலைக்கழிக்க புதிய அனுபவம், புதிய மனிதர்கள், புதிய இடம் தேவை என்று எண்ணி எப்படியும் சமாளிப்போம் என்று முடிவெடுத்து கோவையில் பணியில் சேர்ந்தேன். நான் பிறந்த கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக கோவை என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
ReplyDelete1966 ல் பி எச்ஈ எல் லில் பணியில் சேர்ந்த்போது எஞ்சி நீயராகப் பணிக்கும் எனக்குக் கொடுத்த பணிக்கும் ஆரம்ப சம்பளம் ஒன்றுதான் ஸ்கேல் மாறி இருந்தது 400--960 இன்னொன்று 400 --750 ஆரம்ப சம்பளம் ஒர்ரே மாதிரியாக இருந்ததாலும் போகப்போக மற்ற ஸ்கேலுக்கு வரலாம் என்னும் நம்பிக்க்சயாலும் சேர்ந்தேன் அந்த முடிவு தவறோ என்று எண்ணிய நேரங்களுண்டு
Deleteநீங்கள் நீங்களாகவே இருக்கும் போது, "சோகக் கதை" இல்லை ஐயா...
ReplyDeleteநான் நானாக இருந்ததில் சோகக்கதை எங்கோ போயிருக்க வேண்டியவன் பாதி தூரம் கூடப்போக முடியவில்லை
Deleteநினைவுகள்....
ReplyDeleteஒவ்வொருவருக்கும் ஒரு சோகம் - எல்லாம் நல்லபடியே நடந்தது என்ற எண்ணம் கொண்டால் மகிழ்ச்சி.
நல்ல படியே நடந்தது என்னவென்றால் அந்த நிறுவனம் ஒரு பணியாளை இழக்கவில்லை
Deleteஎன்னைப் பொருத்தவரை அனுபவமே மிகச்சிறந்த படிப்பு. ஆனால் சட்டமும், சமூகமும் ஏற்காது.
ReplyDeleteபடித்தவனுக்கு நான் படிப்பித்து கொடுத்து இருக்கிறேன். எனது அனுபவ அறிவை.
அதை யார் கொண்டாடுகிறார்கள்
Deleteசார்... பட்டம் என்பது ரொம்ப அத்தியாவசியம் என்பது உண்மைதான். பதவி உயர்வு, உயர் பதவிகள் போன்றவை பட்டத்தைப் பொறுத்துத்தான் கொடுக்கப்படுகிறது.
ReplyDeleteதிறமை (இயல்பான அறிவு), உழைப்பு, அனுபவம் என்பது வேறுதான். இருந்தாலும் பதவி என்று வரும்போது, அவர்களின் பட்டம்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.
சொந்தத் தொழில் முனைந்து பெரிய ஆளாக வருபவர்களைக் கணக்கில் கொள்ளக்கூடாது. அப்போது அவர்களின் அறிவைவிட பணத்துக்குத்தான் மரியாதை. அவர்களிடமும் பெர்சனலாகக் கேட்டால், அவர்களும், 'நான் பட்டங்கள் பெற்றிருந்தேன் என்றால் அதன் கெளரவமே வேறு' என்றுதான் சொல்வார்கள்.
பட்டம்பெற்றவர்கள் எல்லாம் திறமை சாலிகள் அல்ல என்பதே என் அனுபவம்
ReplyDeleteஎன்னுடைய அனுபவமும் அதுதான். ஆனால் ஒரு பதவிக்குப் பரிந்துரை என்று வரும்போது, பட்டங்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பது என் அனுபவம். 'திறமை' என்பது முற்றிலும் வேறு, 'கல்வி அறிவு' என்பது முற்றிலும் வேறு. சாதாரண மெக்கானிக்குத் தெரிந்த விஷயங்கள் (மிஷினைப் பற்றி) அவரது மேனேஜருக்கே சுத்தமாகத் தெரிந்திருக்காது. நான் நிறைய சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ்களைப் பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன். Only a handful are really skilled persons. மத்தவங்கள்லாம் படித்துப் பட்டம் வாங்கியவர்கள்.
Deleteநான் ரண்ட ம் தாட்ஸ் இன் எய்ட் அவர்ஸ் என்னும் பதிவு எழுதி இருந்தேன் நேரம் கிடைதால் படித்துப்பாருங்கள் ஆங்கிலத்திலும் அதையே தமிழிலும்சுட்டி தருகிறேன்
Deletehttps://gmbat1649.blogspot.com/2010/09/random-thoughts-in-eight-hours.html
Deletehttp://gmbat1649.blogspot.com/2010/12/blog-post_30.html
/https://gmbat1649.blogspot.com/2010/09/random-thoughts-in-eight-hours-contd.html முதலும் மூன்றாவதும் ஆங்கிலத்தில் இரண்டாமது தமிழில்
//
ReplyDeleteஎன்கீழ் பட்டப்படிப்பு படித்தவர்கள் பணி புரிந்தார்கள் பலபட்டப் படிப்பு பெறும் மாணவர்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்திருக்கிறேன்//
அந்த மனநிறைவுதான் வேண்டும்.
பட்டம் பெற்றவர்களை விட சிறப்பாக செய்தாலும் பட்டம் பெற்று இருந்தால் என்ற நினைவுகள் வந்து போகும் தான்.
வந்து போகும் நினைவுகள் மட்டும் அல்ல இந்த ifs and buts நிறையவே அலைக்கழிக்கிறது
ReplyDeleteIfs and buts நிலைமைகள் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று உண்டா சார்? ராஜீவ் காந்தி, ஹெலிக்காப்டர் ரிப்பேர் என்றபோதும், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை கேன்சல் செய்யாமல் ரிப்பேர் சரி செய்யும்வரை காத்திருந்து புறப்பட்டார். இந்த ஒரு நிகழ்வுக்கே எத்தனை ifs and buts போடலாம்?
Deleteநானெல்லாம், 'இறைவன் இதுதான் எனக்குச் சிறந்தது என்று என்னைத் தேர்ந்தெடுக்கும்படியான மனநிலையைக் கொடுத்திருக்கான்' என்றுதான் நினைத்துக்கொள்கிறேன்.
அந்த பக்குவம் எனக்கில்லை சார்
Deleteஎனக்கும் அந்தப் பக்குவம் கிடையாது. ஆனால் அவற்றை நினைத்தால் 'நிம்மதி இருக்காது'. அவன் எனக்கானதைத் தான் தருவான் என்று எனக்கு ஒரு நம்பிக்கை.
Delete