சரித்திரம் மாற்றப்படுகிறதா
-------------------------------------------
அரசியல் பதிவுகள் எழுதக்கூடாது என்றிருந்தேன் இது அரசியல் பதிவா எனக்கு அப்படி
தெரியவில்லை சமீப காலமாக சரித்திரத்தையே
மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன 8-11-2019 ஹிந்து நாளிதழில் கரன் தாப்பரின்
கட்டுரை ஒன்றைப் படித்தேன்எவ்வாறு சரித்திர நிகழ்வுகள் மாற்றப் படலாம் என்பதின் இன்சைட்கிடைத்தது வல்லபாய் படேலுக்கு அர்ப்பணம் என்னும் வீதம்
காஷ்மீரின் ஷரத்து 370வல்லபாய் படேலின் கருத்துக்கு எதிரானது என்னும்
வகையில் அவரது பிறந்தநாளில் ,அதை ரத்துசெய்த செயலுக்கு காரணம்காட்டினார்கள் பிரதமர்மோடியும்
அமைச்சர் ஷாவும் அது எவ்வளவு தவறு என்று
அந்தக் கட்டுரை கூறுகிறது ஆர்டிகிள் 370ஐ நீக்குவதே படேலின் கனவாக இருந்தது
என்றும் அங்கலாய்த்திருக்கிறார்கள் அது
சரி எப்படி நிகழ்வுகள்மாற்றி
உரைக்கப்படுகின்றன என்பதற்கு இதுவுமொரு உதாரணம் ஸ்ரீநாத் ராகவன் அந்த 370 ஆர்டிகிளை கான்ச்டிட்யூஷனில்
கொண்டுவரும் முகாந்திரமான முதல் மீட்டிங் படேலின்
வீட்டில் 1949ம் ஆண்டு மேமாதம் 15 -16 தேதிகளில்
நடந்தது ஜம்மு காஷ்மிர் பிரதமர்
ஷேக் அப்துல்லாவிடம்இது பற்றி பேச அப்போதைய மந்திரி N G
AYYANGAR ஒரு ட்ராஃப்ட் தயார் செய்துஅதை படேலின் கவனத்துக்கு கொண்டு வந்து
அது படேலின் ஒப்புதல் பெற்றால் தான்
ஜவஹர்லால்ஜி அப்துல்லாவுக்கு தெரிவிப்பார் என்றும் கூறி இருந்தார் ஆர்டிகிள் 370ம்
மற்ற காஷ்மீர் பற்றிய ஷரத்துகளும் படேலின் ஒப்புதல் இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதே முக்கியமாக அறியப்பட வேண்டியது
படேலுக்கு மறுக்க உதவும்வீட்டோ தான் அது திரு ராகவன் டெலிக்ராஃப் க்கு ஆகஸ்ட் 13 ம் நாள் 2019 ம் ஆண்டு கூறியதில் ஷரத்து 370
முழுக்க முழுக்க படேலுடையது என்றிருக்கிறார் காங்கிரஸ்
லெஜிஸ்லேச்சர் பார்ட்டியை ஆர்டிகிள் 370 ஐ ஒப்புக்கொள்ளும் படியும் செய்திருக்கிறார்
அக்டொபர்
1949ல் நேரு அயல் நாட்டுக்குச்சென்ன்றிருந்தபோது படேல் ஆக்டிங்க் பிரதமராகஇருந்தபோது ஷேக் அப்துல்லா இந்தமாதிரியான விசேஷ ஷரத்துகளுக்காகபேசிய போது படேல் எந்தமாற்று
கருத்தையும் கூறவில்லை இவற்றிலிருந்து
படேலுக்கு எந்தமாற்றுக் கருத்தும் இருக்கவில்லைஎன்றும் தெரிகிறது வல்லபாய் படேலுக்கு
ஒருமிகப்பெரிய சிலைஅமைத்து படேலுக்கு தனி பெருமை அளித்து தங்களில் ஒருவராகக் காட்டி சொந்தம் கொண்டாடுகிறார்கள் ஆனால் சரித்திரத்துக்கும் MYTH க்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள் படேலொரு
தேசிய தலைவர் அவர்புகழ் பரப்ப எதுவானாலும் செய்யட்டும்
ஆனால் சரித்திரத்தை இருட்டடிப்பு செய்ய
வேண்டாமே
அண்மைக்கால
சரித்திரமே இப்படி என்றால் நினைவு இல்லாதிருக்கும் பழங்கால சரித்திரம் பற்றிக்கேட்க வேண்டாம்
எ
உண்மைதான் ஐயா
ReplyDeleteபல சரித்திரங்கள் கால ஓட்டத்தில் மாறித்தான் போய் விடுகின்றன
சரித்திரங்கள் மாற்றப் படவில்லை. வ.பட்டேலை இந்த விஷயத்தில் முடிச்சுப் போட்டதும் சரியில்லை. எந்தந்த நேரங்களில் எதையெல்லாம் நாட்டின் நலனுக்கு அல்லது தங்களின் அரசியல் நலனுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமோ அதை அரசியலாளர்கள் செய்கின்றனர். அவ்வளவு தான்.
ReplyDeleteசரியல்லாததை சரியாக்கும்வ்ஷயமே நாளை சரித்திர பாடமாகும் என் ஆதங்கங்கள் பதிவிட்டேன்
Deleteசரியில்லாததோ, சரியானவையோ நடப்பன அத்தனையுமே சரித்திரம் தானே? அவை பாடமாவதில் என்ன தவறு இருந்து விட முடியும்?..
Deleteபிரதமர் இந்திராவின் செயல்பாடுகள் சரித்திரம். இன்றைய
சூழலில் நிகழ்காலத்தில் அவற்றில் குறை காணலாம். நாளைய தலைமுறையினர் அவர் செயல்பாடுகளில் விளைந்த பயன்களைப் போற்றிப் புகழலாம் இது தானே சரித்திரத்திற்கான மவுசு?..
இம்மாதிரி பொய்கள் சரித்திரம் ஆக முடியாது சரித்திரமே உண்மை என்றுஎண்ணும் குணமுடையவர்கள்நாம் இதற்குத்தான் சரித்திரத்துக்கு ஆதாரம் தேடுபவர்கள் மக்கள்
Deleteசரித்திரங்கள் உண்மை பேசுகின்றன என்று நம்பிதான் படித்துக் கொண்டிருக்கிறோம்!
ReplyDeleteஇன்றைய சரித்திரமே கதை யாகும்போது நாளை நடந்தது எல்லாம் திரித்துக் கூறப்பட்டவையோ என்னு சந்தேகம் எழலாம் அல்லவா
Deleteஇந்திரா காந்தி புதைத்து வைத்த டைம் கேப்ஸ்யூல்கள் என்ன ஆச்சு?
ReplyDeleteIndian Prime Minister Indira Gandhi had buried a time capsule outside one of the gate of Red Fort complex,The Indira Gandhi government named this time capsule "Kalpaatra", Delhi containing post-independence history of India on 15 August 1972 amid political opposition. It was scheduled to be opened after 1000 years.
'என்ன சொல்லும்' என்று இருக்க வேண்டும்.
Deleteஸ்ரீராம் அவற்றின் உண்மைத்தன்மை அறிய இந்திராவோ நாமோ இருக்கப்போவதில்லை
Deleteஸ்ரீராம்... அப்போது, இந்திரா இந்த டைம் காப்ஸ்யூலைப் புதைத்து வைத்ததை, எதிர்க்கட்சிகள் குறை சொல்லின. மொரார்ஜி பிரதமரான உடன் அது தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது என்று படித்த நினைவு.
Deleteஉண்மை வரலாறு என்று ஒருபோதும் எதுவும் இருக்காது. யார் எழுதுகிறார்களோ, அவர்களது நோக்கில் எழுதுவார்கள். அதுனால காந்தி இப்படிப்பட்டவர், நேரு இப்படிப்பட்டவர் என்று எழுதுவது எல்லாமே அனுமானம்தான்.
உதாரணமா, அக்பர் சின்னப் பையனாக இருந்தபோது, தன் மாமா பைராம்கான் படையெடுத்து எதிரியை வென்று, அவனை அக்பர் (சிறுவன், 7-10 வயது கூட கிடையாது) முன்னிலையில் நிறுத்தி, வாள் ஒன்றைக் கொடுக்க, அக்பர் அவன் தலையை வெட்டி வீழ்த்தினார் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். இன்னொருவர், அக்பர் பெயருக்கு குந்தகம் வரக்கூடாது, அவர் பதவி ஏற்றதும் இன்னொருவரை கொலை செய்தார் என வரக்கூடாது என்பதற்காக, அக்பர் வாளை அந்த எதிரியின் கழுத்தில் ஃபார்மலாக வைத்துவிட்டு பைராம்கானிடம் கொடுத்தார், பைராம்கான் அந்த நபரின் தலையை வெட்டினார் என்று எழுதியிருக்கிறார்.
நாம இந்தச் சம்பவத்தைப் பார்க்காததுனால, நம் மனநிலைக்கு ஏற்றவாறு புரிந்துகொள்ள வேண்டியதுதான்.
அப்படி புரிந்துகொள்வ்து சரித்திரமாகாது
Deleteஇப்போது ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல்வாதிகள் அவ்வளவுதான். அவர்கள் தலைவர்கள் அல்ல.ஆகவேதான் சரித்திரத்தை தப்பும் தவறுமாக புரிந்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.
ReplyDeleteஅரசியல் வாதிகள் தான் சரித்திரம் படைக்கிறார்கள்
Deleteஅறியாமை ஒன்றே காரணம்...
ReplyDeleteயாருடைய அறியாமை சார்
Deleteவேறு யார்...? அற்ப சங்கிகள் தான்...!
Deleteமோடி ஒரு பேடி என்று புரியாத வரை... சங்கிகள் இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது...
ReplyDeleteவிஷயம் தெரிந்தவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் காழ்ப்பு வேண்டாமே
Deleteஇது காழ்ப்பு இல்லை ஐயா...
Deleteஉமிழ்ப்பு...!
ஒரு நாய் என்ன வேசம் போட்டாலும் கும்பிடும் அற்ப ஜந்துக்கள் - சங்கிகள்...
ReplyDeleteபடேலுக்குபரிந்து பேசுபார்கள் புரியாமல் பேசுகிறர்கள்
Deleteஉண்மைகள் உறங்கி கொண்டு இருக்கிறது ஐயா.
ReplyDeleteஉறக்கத்தில் இருப்பவரில் சிலரையாவது எழுப்ப ஒரு சிறு முயற்சிதான் இது
ReplyDeleteசரித்திரம் என்பதே எழுதப்படுபவர்கள், அவர்கள் நோக்கில் புரிந்ததை எழுதிவைப்பதுதானே. இப்போ, 'இந்திரா மிகச் சிறந்த தலைவர்' என்று சொல்பவர்களும் அவரது உண்மைத்தன்மை அறியாமல் எழுதியதைப் படித்துப் பேசுபவர்கள்தாமே. இந்திரா மீது எத்தகைய வன்மம் கருணாநிதி வைத்திருந்தார், என்னவெல்லாம் நடந்தது என்று தெரியாதவர்கள், யாரோ எழுதியதை வைத்துப் புரிந்துகொள்வது போன்றது.
ReplyDeleteநள்ளிரவில் சுதந்திரம் என்ற, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட புத்தகம் ஓரளவு வரலாற்று உண்மைகளைச் சொல்கிறதுன்னு நினைக்கிறேன். அதில் ஓரளவு காந்தி, படேல், நேருவின் குணாதிசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் சொல்லப்பட்டவைகளில் 1% கூட கடைபிடிக்காத அரசியல்வாதிகள்லாம், திருவள்ளுவரைப் பற்றி, தமிழர் என்று பெருமை பேசுவதைப் போல, குஜராத்தியரான பிரதமர் மோடி, அவர் மாநிலத்தைச் சேர்ந்த படேலை உயர்த்திப் பிடிக்கிறார். இதில் பெரிதாக குறை கண்டுபிடிக்க ஒன்றுமில்லை.
காந்தி, நேரு குறித்த என்னோட பார்வை முழுக்க முழுக்க மாறியதற்கு இந்தப் புத்தகம் Freedom at Midnight ஓர் முக்கியக் காரணம். அதற்கு முன்னால் ஒன்பதாவது வகுப்பு வரை இருந்த கருத்துகள் படிப்படியாய் மாறிப் பின்னர் முற்றிலும் மாறுவதற்கு இத்தகைய சில புத்தகங்களே காரணம். 4 முறை திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். அதன் பின்னர் தரம்பாலின் "The Beautiful Tree" புத்தகம் படித்ததும் இந்தியாவின் வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதும் புரிந்தது. நாம் படித்த சரித்திரத்தில் உள்ள குறைகளும் தெரிந்தன.
Delete"The Beautiful Tree" புத்தகம் நண்பர் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு "அழகிய மரம்" என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. பலருக்கும் "The Beautiful Tree" ஆங்கிலப் புத்தகத்தை சிபாரிசு செய்துள்ளேன். https://www.samanvaya.com/dharampal/
Delete@நெத /ஓரளவு வரலாற்று உண்மைகளைச் சொல்கிறதுன்னு நினைக்கிறேன். அதில் ஓரளவு காந்தி, படேல், நேருவின் குணாதிசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன/.இதையும் எப்படி நம்புவது
Delete@கீதா இளவயதில் எளிதாக இன்டாக்ட்ர்னேட் செய்யப்பட வாய்ப்புண்டு
ReplyDeleteஎந்த விஷயத்திலும் நமக்கு ஒரு அபிப்பிராயமிருக்கலாம் ஆனால் பல புது விஷயங்களை கற்கும் முன் ன் நாம்செய்ய வேண்டியது
ReplyDeleteWhen trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.
I agree with //unlearning things is essential//.
DeleteBut certain persons will never approach any ideas or thoughts with open mind. The inference had been already ingrained in their minds, and they don't want to see the reality other than that.
please see my writing /unlearning things is essential Realising and working hard on that--very difficult though.
Deleteநானும் அக் கட்டுரை வாசித்தேன்
ReplyDeleteஅந்த வாசிப்பின் பலனே இப்பதிவு சார்
ReplyDelete