Sunday, July 19, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ் ஸிங்



                                 

    கடைசியில்  சில பக்கங்கள் மிஸ்ஸிங்
  ---------------------------------------------------
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும் 
காட்சி  ----7
இடம் ---ரோடு
பாத்திரங்கள் ===ரத்தினம் பக்கிரி 
 (திரை உயரும்போது பீடி  நெருப்புப்பொறியின்வெள்ச்சம் யரோ ஒருவ பதுங்கி வருவதை அறிவிக்கிற்து இதேரீதியில் எதிர் திசையில் ஒரு உருவம் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு  பதறி )
ரத்னம்---  யார்றாவன்
பகிகிரி ---ரத்தினமா  நல்ல வேளை
ரத்னம்---பக்கிரியா நானும்தான் பதறிப்போனேன்
பக்கிரி ----சே  இந்த டிருட்டுத்தொழிலும் ஒரு பொழப்பாண்ணே எந்நேரமும் மூட்டைப்பூச்சி போலீஸ்காரனுக்கு பயந்து பயந்து சே நம்ம தலையில சாமி இப்படி எழுதி இருக்கக்கூடாது
ரதனம்---- அவரென்ன செய்வாரண்ணே  பாவம் பணக்காரனுக்கு பதுக்க பகலையும் அதை அமுக்க நமக்கு இருட்டையும்படச்சிருக்காரே  அதச்சொல்லு
பக்கிரி –ஆனா நமக்கெதிரா விளக்கையும்  வீட்டையும்  பூட்டையும் போதாக்குறைக்கு இந்த பொலீசையும் படைச்சானே இந்த பாழாப்போன ம்னுசன்  அவனையும்  சேர்த்தில்ல படச்சிருக்காரு கடவுள்  அத்தச்சொல்லு
ரத்னம்----எனக்கென்னவோ இந்தபொழப்பே சலிச்சுப்போச்சு
பக்கிரி ---எனக்குந்தான் எங்கேன்னா  ஒரு பம்பர் கொள்ளை  அடிச்சுட்டு  அப்புறம் நாலு பேரப்பொல பெரிய மனுஷனா தைரியமா வாழணும் (அவன்ப் முகத்தில் டார்ச் ஒளி )யார்ரா அது
ரத்னம்___ அண்ணே போலீஸ்  (இருவருமோட தொடர்ந்து  துப்பாக்கி சுட்ட சத்தமும் கேட்கிறது)
                               திரை       


 


                

10 comments:

  1. விறுவிறுப்பு
    தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருவது மட்டும்போதாது போட்டியிலும் பங்கு கொள்ளவேண்டும் நன்றி

      Delete
  2. டயலாக் ஸூப்பர் ஐயா.

    ReplyDelete
  3. பெரிய மனுஷனா மாறுவது இப்படித் தானா...?

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் என்று தோன்றுகிறது

      Delete
  4. தொடர்கிறேன்...பகல் இரவுக்கான விளக்கத்தை இரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு விளக்க மாகலாம்தானே

      Delete
  5. ரொம்பச் சுருக்கமான பகுதி!

    ReplyDelete
    Replies
    1. ஒரு திருப்பு முனையோ

      Delete