Thursday, September 10, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்


  கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்

காய்சி 19

அருணா வீடு

பாத்திரங்கள்  அருணா தாத்தா சபாபதி மாணிக்கம்

அருணா ---தாத்தா தாத்தா==

 தாத்தா ---- வாம்மா அருணா  இந்த தாத்தாவை மறந்துட்டியோன்னு  நெனச்சேன்

நீ இல்லாம எனக்கு ஒண்ணும்முடியலைம்மா

 அருணா ---இனிமே அந்தக்கவலை வேண்டாம்தாத்தா

தாத்தா –என்னையும்  உன் கூடவேஉன் புருஷன் வீட்டுக்கு

 கூட்டிட்டு போகப் போ றியா  அருணா

அருணா – புருஷன் வீடு   அந்தவீட்டுவாசல நான்மிதிக்கலாமா  யாருக்காவது ஆபத்து என்றால் உதவுவதுதானே முறை அதற்கு அவர் வெளியே  போகச் சொல்லிட்டார் அந்த வீடு எனக்கு நரகம் புகுந்த வீடு ஊஊம்

தாத்தா—என்னதான் நடந்தது அருணா

அருணா –இதை அவரிடமல்லவா கேட்க வேண்டும் எதுவும்நடக்காமலேயே  என்னைவீட்டை விட்டு போ என்று சொல்லிவிட்டார் தாத்தா

தாத்தா – சொல்லிட்டா  நீ உடனெ வந்திடறதா … உனக்கு எதிலும அவசர புத்தி.நீதன் கொஞ்சம்நிதானமாயிருந்திருக்கணும் அடிக்கிற கை தான் அணைக்கும்கொபமுள்ள இடத்தில்தான்  குணமும் இருக்கும் (சபாபதி வருவதைக் கவனிக்காமல்)

அருணா---குணத்தைபற்றி சொல்லப் போனால் அவர்பத்தரைமாற்றுத் தங்கம் உழைத்து பிழைக்கணும்   என்பதுதான் அவர் ஆசை என்னைக்கல்யாணம் செய்துக்க ஆசை உள்ளவர்களுக்கு என் சொத்துமேலதான் ஆசைஆனால் இவர் என்  சொத்தில் ஒரு நயாபைசா கூடவேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவுபோட்டவர் தாத்தா

சபா --- பிழைக்கத்தெரியாதபைத்தியக்காரன்

 அருணா --- நீயா  அவரைப் பைத்தியக்காரன்என்று சொல்ல உனக்கு என்ன யோக்கியதை இருக்கு பிறன் மனைவி என்று கூடப்பார்க்காமல் என்னை கெடுக்கத்  துணிஞ்ச உன்னை கண்ணால் கண்டதை  அப்படியே நம்பக்கூடாதுஎன்ற  அவரா பைத்தியம்

சபா -----நீ செய்த சாகசத்துல உன்னை நம்பிட்டான்  பெண்கள் சாகசம்[பற்றி எங்கே படிச்சிருக்கப்போறான்

அருணா—அவர் படிக்காட்டி என்ன படிச்ச உன்னை விட அவர் கிட்டநல்ல  குணம் இருக்கு அவர்கிட்ட  என் எதிர்ல என்புருஷனைப்பத்தி அவதூறா பேசறதை  என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது  மரியாதையா வெளியே போயிடு

சபா—ஹஹஹஹா கல்யாணமென்றலேயே குமட்டிக்கிட்டு இருந்த உனக்கா இத்தனை பதிபக்தி ஆண் என்றால் ரெண்டு கண்களையும்காதுகளையும்  பொத்திக்கொள்ளும்   உனக்கா  புருஷன் மேல இவ்வளவு அபிமானம்  அருணா  அந்த  ஆள்  உன்னை நல்லா ஏமாத்தி இருக்கான்

 அருணா--- ஏமாத்தறது உங்க பரம்பரை சொத்து சுற்றிலும்  உங்களைப்போல   ஆண்களையே  பார்த்து வந்த எனக்கு ஆண்கள் மேல் வெறுப்பு வந்ததில் ஆச்சரியமில்லை ஆண்களிலே நல்லவர்களும்  உண்டு என்று  அவரைப்பார்த்து புரிஞ்சு கிட்ட நான் இனி உன்  வார்த்தைகளை  நம்புவேன்னு  நெனக்கிறயா

சபா---என்னை நம்பறயோ இல்லையோ  சும்மா இருந்த என்னை ஏமாத்தி உன்னை அடைஞ்ச அவன்  என் பரம விரோதி  உன்கண்முன்னாலே என்னை அவமானப் படுத்தினதை பார்த்தியே நீ இப்ப உன் கண்ணெதிரே துடி துடித்து சாகப்போறதையும் பார்க்கப் போறே நீ

அருணா--- பேச்சுலே எப்பவும் வீரத்துக்கு உனக்கு பஞ்சமிருந்ததில்லை

சபா—செயலிலும் இருக்கறதப்பார்க்கப்போறெ  நீ ஒரு பெண் எதிரே  அவமானப்பட்டா கோழை கூட வீரனாவான்   பழிக்குப்பழி வாங்கற வெறியனாவான்  என்பதை நீ புரிஞ்சுக்கோ தூக்கு மேடையிலேருந்து தப்பிச்ச அவன் என் துப்பாக்கியிலிருந்து தப்ப முடியாது ( என்று தன் கைத்துப்பாக்கியை காட்டி  ஓடுகிறான் )

அருணா --- ஆஅ ஆ (மாணிக்கம் வருகிறான்)

மாணிக்கம்  --அண்ணி  அண்ணன்  ஏதோ கோவத்துல அப்படி சொன்னார்  உங்களுக்கு மாலை போட்டுவரவேற்க காத்திட்டு இருக்கார்

 அருணா – இந்த சபாபதி பாவி துப்பாக்கியை எடுத்திட்டு அவரை சுடஓடிட்டு இருக்கான்

மாணிக்கம் – கவலைப்படாதீங்க அண்ணி  அவனை தடுத்திடலாம் வாங்க போலாம்

                               திரை       

 எத்தனை பேர் பங்கு கொள்கிறார்களோ தெரியவில்லை பதிவுகளில் கதைகள் கட்டுரைகள் நிறையவே வ்ருகின்றன நாடகங்களில்லை  அந்தக் குறையை இது போக்கலாம்   போட்டியின் நிபந்தனைகளை  மீண்டும் பார்ப்போம்   என் நாடக மானுஸ்க்ரிப்டில்  கடைசியில். சில பக்கங்களை காணவில்லை கிடைத்தவரை பதிவிட்டு இருக்கிறேன்   மீதியை வாசகர்கள்  யூகித்து எழுதவேண்டும்  கற்பனை கொடிகட்டி பறக்க இங்கு ஒரு வாய்ப்பு  மீதிப் பகுதியை நாடக வடிவிலோ கதை வடிவிலோ எழுதலாம் இதுவரை வந்தகதையின்   தொடர்பாக இருக்கவெண்டும் வாசகர்களின்  படைப்பை அவர்கள் தளத்தில்வெளியிடலாம்  போட்டியில் ப்ங்கு பெறுவதை  எனக்கு மின்  அஞ்சல் மூலம்  தெரியப்படுத்தவேண்டும்      தேர்ந்தெடுக்கப்டுபவருக்கு  ரூபாய் ஆயிரம் பரிசாக வழங்கப்படும் 

 பலரும்  முடிவு பற்றி யூகித்திருக்கலாம்  வெரி சிம்பிள் என்ன எழுதி தெரிவிக்க வேண்டியதே பாக்கி  போட்டியில்பங்கு பெற கடைசி நாள் 30--09---2020 

              

     

 

  

 

6 comments:

  1. அந்த நிருபர் என்ன சொல்கிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முடிக்கும்போது நிருபரென்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

      Delete
  2. துப்பாக்கியோடு போனவனை தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம் ஜி

      Delete
  3. முழுவதும் இன்று ஒருமுறை படித்து முடித்தேன்..மிகச் சிறப்பாக இருந்தது..பரிசுக்காக இல்லையென்றாலும் அருமையான நாடகத்திற்கு ஒரு விமர்சனம் போல எழுத ஆசை..இது எழுதியஆண்டு குறித்து அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
  4. அருமையான நாடகம் ஐயா
    போட்டி சிறக்கட்டும்
    வலைப் பூ வர்களின் முடிவுகளைக் காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete