Saturday, November 7, 2020

எங்கே கடவுள்

 எங்கே கடவுள்

 2013 ல் எழுதியது செறிவான பின்னூட்டங்கள்   வ்ந்தன  அவற்றில் சிலதும் கடைசியில்



 ஆண்டவன் திருமுன் நின்று

குறைகள் சொல்லி அழலாம்

என்றே ஆலயம் சென்றேன்.

 

எங்கும் நிறைந்தவனிடம்

குறைகளைச் சொல்லி அழ

ஆலயங்கள் ஏனைய்யா.?

அபிஷேகங்கள் ஏனைய்யா.?

கோலங்கொடிகள் ஏனைய்யா.?

கொட்டு முழக்கம் ஏனைய்யா.?

பாலும் ப்ழமும் வைத்து நிதம்

பணிந்து நிற்பதேனைய்யா ?

சீலம் பேணும் உள்ளத்தை

தெய்வம் தேடி வாராதோ.?

எனவே குரல் கொடுத்தது

என்னுள் உறையும் பகுத்தறிவு.

 

 

எங்கெங்கும் வியாபித்து நிற்கும்

உருவமென ஒன்றில்லாதது

அதனிடம் வெட்ட வெளியில்

குறைகள் சொல்லப் போனால்

பித்துப் பிடித்தவன் என்பர்

கண்ணால் காணாதது ஆனால்

உண்டென்று எண்ணும் உள்ளம்

முன் நிறுத்தவும் முறையிடவும்

கண்ணன் என்றும் கந்தன் என்றும்

ஆயிரம் நாமங்களுடன் அவரவர்

விரும்பும் வண்ணம் அழைக்கலாம்

குறைகள் கூறி முறையிடலாம்

நம்பினால் என்றும் நலம் பயக்கும்

என்றே உணர்வு சொல்ல வழக்கம்

போல் அறிவும் அதன் பின் செல்ல

அபயமளிக்கும் குமரன் முன் நின்றேன்

குறைகள் சொல்லப் படும்போதே

பதில்களும் அகக்கண்முன்னே

பளீரிட பகிர்கிறேன் பதிவில் நானும்.

வேண்டுதல்களையும்  தீர்வுகளையும்

 

என் குறைகளை நீக்கக் கேட்டேன்.

என்னால் நீக்கப்படுவதற்கு அல்ல.

அவை உன்னால் களையப் பட

வேண்டியவை என்றான் கந்தன்.

 

உடல் உபாதைகள் தருகிறதே என்றேன்.

உடலே தற்காலிகமானது தானே என்றான்

 

பொறுமையினை அருளக் கேட்டேன்

துயரங்களின் உப பொருள் அது.

கற்கப் பட வேண்டுவது என்றான்

 

மகிழ்ச்சியினைத் தரக்கேட்டேன்

அவரவரைப் பொருத்தது அது என்றான்

 

வேதனைகளிலிருந்து விடுதலை கேட்டேன்.

தாமரையிலைத் தண்ணீராய் இரு என்றான்

 

ஆன்ம வளர்ச்சி கேட்டேன். உன்னை

நீயே வளர்த்தினால் பலன் கிடைக்கும் என்றான்.

 

வாழ்க்கையை விரும்பக் கேட்டேன்.

வாழ்க்கை இருக்கிறது. அனுபவிப்பது

உன் விருப்பம் என்றான்.

 

அனைவரையும் நேசிக்கஅருளக் கேட்டேன்..

அவன் சத்தமாகச் சிரித்து , வாழ்வின்

ஆதாரப் புள்ளிக்கு வந்து விட்டாய் என்றான். 

 

 

சிறிது நேரம் கழிந்தது.

கந்தன் என்ன சொன்னான்?
எங்கும் நிறைந்தவன் என்னிலும்தானே
நானும் அவனே அவனும் நானே

இந்தப் பதில்கள் என்னுள்ளே

இருந்ததுதானே. என்னை நானே

அறிய அவன் ஒரு கருவியோ?  

 

 

   என் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு வரிவடிவம் கொடுத்தேன். இதில் என் எழுத்துக்களுக்குக் காரணம் கடவுள் பற்றிய என் அறிவா இல்லை உணர்வா என்னும் கேள்வியும் எழுந்தது. நான் சிலர் படித்து அவர்கள் கருத்துக்களை

வெளியிட வேண்டும் என்று விரும்பி பதிவை அனுப்பினேன். ’சொல்லும் செயலும் எல்லாம் விடுத்து சும்மா இருப்பதே சுகமிங்கெனக்குஎன்கிறார் vsk. verbal permutations and combinations lead us nowhere என்கிறார் சுப்பு தாத்தா.மனம் அறிவு இரண்டுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடில் உணர்வு அல்லது மனம் வெல்லும் என்று உடன்படுகின்றனர் பலர். கடவுள் என்பதே ஒரு CONCEPT. ஆகவே இந்தக் கேள்விக்கே அர்த்தம் இல்லை என்பதுபோல் கூறுகிறார் காஸ்யபன்.அப்பாதுரை உணர்வே உடான்ஸ் என்கிறார்.பலவிதக் கருத்துரையாடல்களுக்கு இதன் மூலம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்  

26 comments:

  1. கிடைத்த பதில்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஊன்றி படித்து கருத்துரை இட்டதற்கு நன்றி ஸ்ரீ

      Delete
  2. கடவுள் பற்றிய உணர்வுதான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அறிவு உணர்வு இரண்டிலும் முன் நிற்பது ஊணர்வுதான் போலும்

      Delete
  3. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பதிவுகளை 7 வருடங்களுக்கு முன்னர் எழுத முடிந்தது. அதற்கு செறிவான பின்னூட்டங்களும் கிடைத்தன. இன்று? 

    so so and so so 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஒப்புக் கொள்கிறேன்

      Delete
    2. வார்த்தைகள் இன்னும் புரிய வைக்கலாம்

      Delete

  4. உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு கொடுத்த வரிவடிவம் மிக அருமை.

    ReplyDelete
  5. // கந்தன் என்ன சொன்னான்? // ஓ... ஓஹோ...! இங்குள்ள முருகன் வேறு...! வடக்கு கந்தன் வேறு...

    சரி, தங்களின் வரி வடிவம் வாசித்தவுடன் : // அந்த அனுபவமே நான் தான் என்றான் கடவுள் // என்ற கண்ணதாசனின் வரிகள் ஞாபகம் வந்தன ஐயா...

    ReplyDelete
    Replies
    1. கண்ணதசனை இதில் நான் அறியேன்

      Delete
  6. நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. நீங்கள் செய்த ஆத்ம விசாரத்தை மிக அழகான கவிதையாக்கியிருக்கிறீர்கள்  எனக்கும் 'பிறப்பில் வருவது யாதெனிக் கேட்டேன்..' என்ற கண்ணதாசன் கவிதை நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  8. 'பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன் ..' தின்று வாசிக்கவும். 

    ReplyDelete
  9. இப்பதிவில் காணும் கேள்வி பதில்கள் யாவர்க்கும்பொருந்து

    ReplyDelete
  10. குறைகளைச் சொல்லி அழத்தான் ஆலயங்கள் என்று நினைத்துவிட்டீர்கள் போலிருக்கிறதே...

    பதில் கருத்துரைகளும் ரசனையானவை

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும்கஷ்டங்கள் வரும்போதுடான் கடவுளை நினைக்கிறர்கள் அதுவும் இப்பெரும் தொற்றுகலத்தி அடிகம் நினைக்கபடுவது கடவுள் அருளே

      Delete
  11. இறை என்பதை உணரத்தான் இயலும் ஐயா கவிதைக் கணைகளோடு பதில்கள் அருமை.

    ReplyDelete
  12. எனக்கு வரு சந்தேகம் எத்தனைபேர்உண்மையாக இறை யை உணர்ந்து இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மையா தெரியாது. ஆனால் சமீபத்தில் நான் உணரந்திருப்பதாக உணர்கிறேன்.

      Delete
    2. 2013ல் உங்கள் கருத்து உணர்வெல்லாம் உடான்ஸ் என்றி ருந்தது மாற்றத்துக்கு காரணம்கூறி இருக்கலாம்

      Delete
  13. Replies
    1. வரிகளை ரசித்தது தெரிகிறது நன்றி

      Delete