Friday, December 10, 2021

ஒரு நினைவு

 


”நவம்பர்  மாதத்தில்  பல பிரபலங்கள் பிறந்திருக்கிறார்கள்.முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பெயர் பெற்ற பெண் பிரதமர் இந்திரா காந்தி, பிரபல தமிழ்ப் பதிவர் ஜி.எம்.பாலசுப்பிரஅணியம் ( பிரபல பதிவர் சுந்தர்ஜியும் நவம்பர் மாதப் பிறவி என்று படித்ததாக நினைவு) இவர்களும் இதில் அடங்குவர். ஜீஎம்பியின் பிறந்த நாளும் திருமண நாளும் ஒரே நாளில் வருவது இன்னும் விசேஷம்...! இந்த நிகழ்ச்சி எல்லா ஆண்டும்  விமரிசையாகக் கொண்டாடப் படுகிற்து. ஜீஎம்பியின் சிறுகதைத் தொகுப்பு “வாழ்வின் விளிம்பில்“  எனும் தலைப்பில் 2013ல் அவரது மகன்களால் வெளியிடப் பட்டது  குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர் ஒரு வாழ்த்து அட்டையை அவருக்குக் கொடுத்து அவர்கள் அன்பைத் தெரிவித்துக்கொண்டனர்”

வாழ்த்து அட்டை
வாழ்த்து அட்டையில் எழுதி இருப்பது(உறையின் வெளியே)
-----------------------------------
To             
  The new author in town
From
  The people who love you.
அட்டையின் வாசகங்கள்
 It is said that a person has different 
 roles to be played in a single life &not
 one has been able to keep up all the 
 roles as beautifully as you, be it a 
 husband,father,grandfather, son, brother, 
 teacher,author, philosopher, and 
 many more.The world is lucky to have 
 a person like you and we are the most 
 blessed to be around you and loved by 
 you. 
 We are your 7 flowers and we 
 wouldn't have nurtured into one if 
 it wasn;t for you
 We love U அப்பா
 HAPPY B'DAY APPA
 HAPPY ANNIVERSARY TO our 
 Lovely Parents                       With love from
                                   2 sweet sons
                                   2 loving daughters
                                   3 Blessed grand children. 
வாழ்த்து அட்டையின் உள்ளே


திறந்தாலொரு பொன் நிற மலர் விரிய  அதன் உள்ளே இதழ்களில்  என் வாரிசுகளின்  புகைப் படங்கள் ஒட்டப் பட்டிருக்கின்றன. கடையில் சென்று வாழ்த்து அட்டை  இதைவிட சிறந்த வடிவமைப்பில் வாங்கி இருக்கலாம். ஆனால் என் மீது உள்ள அன்பின் வெளிப்பாடாக அவர்களே வடிவமைத்துக் கொடுத்த இந்த வாழ்த்து அட்டை என்னைக் கசியச் செய்து விட்டது. வடக்கு திசை நோக்கிப் பயணம் செய்யக்  காத்திருக்கும் எனக்கு வேறென்ன வேண்டும். ?
என் எழுத்துக்களில் சிலவற்றைப் புத்தக வடிவில் காண விரும்புகிறேன் என்று தெரிந்ததும் அதற்குத் தேவையான எல்லாப் ப்ணிகளையும்  செய்து முடித்து அதை என் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்ததை எண்ணிப் பார்க்கும் போது நான் கொடுத்து வைத்தவன் என்று புலனாகிறது.

7 comments:

  1. அப்பாவின் பெருமைகளை குழந்தைகள் உணர்ந்திருப்பது சிறப்பு. அதை அழகாக, அவர் மனம் மகிழ வெளிப்படுத்துவது அதனினும் சிறப்பு. அதையும் கடமைக்குச் செய்யாமல் மனதார அக்கறையுடன் தாங்களே முனைந்து தயாரித்து செய்வது மிகச் சிறப்பு.

    ReplyDelete
  2. மனதை நெகிழ்த்தியது.

    எஃபர்ட் எடுத்துச் செய்யும் எதுவும் மனதிற்கு இதமளிக்கும், மெக்கானிக்கலாகச் செய்வதை விட

    ReplyDelete
  3. பிள்ளைகள் பெற்றோரிடம் அன்பு காட்டி ஒன்றி இருப்பதும், பெற்றோரது ஆசைகளை அவர்கள் கோணத்தில் சிந்தித்து நோக்கி அதை அனபோடு செயலப்டுத்துவதும் மிக மிகச் சிறப்பு. இது கண்டிப்பாக உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பதி எந்தவித ஐயமும் இல்லை

    கீதா

    ReplyDelete
  4. பெற்றோர் நல்ல உதாரணங்களாக இருந்து நல்லபடியாக வளர்க்கப்படும் குழந்தைகள் என்பதற்கு உங்கள் மக்கள் நல்ல உதாரணம். தந்தையின் மனம் அறிந்து அவர் ஆசைகளை நிறைவேற்றுவது என்பது மகிழ்வான விஷயம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அன்புமணி சுரங்கம் வாழ்க வாழ்க! எனும் பாடலும் நினைவுக்கு வருகிறது.

    துளசிதரன்

    ReplyDelete
  5. பெரும்பாலான குழந்தைகள் தந்தை இறந்த பிறகுதான் அவரின் மகத்துவத்தை உணருவார்கள். அப்படியில்லாமல் நீங்கள் இருக்கும் பொழுதே உங்களை புரிந்து கொண்டு அதை அழகாக வெளிபடுத்தியிருக்கிறார்கள். It is a blessing.You are lucky.

    ReplyDelete