நான் யார்
பொழுது புலர்ந்தது மெல்லென எழுவீர்
யாரோ மென் குரலில்பாடி என்னை எழுப்புவதுபோல் இருந்தது
கண்விழிப்பு வ்ந்ததும் கற்பனையும்
கனவு என்று தெரிந்தது அதுசரி ஏன்
அந்தமாதிரி ஒரு கற்பனைக் கனவு
என்று ஆராய்ந்தால் கனவே கற்பனையின் காரணம் என்றுநினைக்க முடிந்தது கனவில் நான் என்னை நான் ஒரு ஜகதலப் பிரதாபனாகக்கனவு
கண்டிருக்கிறேன்
நிஜம் என்ன வென்றால் வீட்டில் பாட்டுப்பெட்டியில் கௌசல்யா சுப்ரஜா
ராமா சந்தியா பிரவர்த்ததே என்று ராமனை
துயில் எழுப்பும் பாடலை என் மனைவி போட்டுக்
கேட்டுக் கொண்டிருப்பாள் தினமும் ராமனைத்
துயில் எழுப்பும் என்மனைவி ஏன் என்னைத் துயிலெழுப்புவதில்லை என்னை ஏன்
துயில் எழுப்பவேண்டும்
நான்தான் எப்போதும்அரை
உறக்கத்தில்தானே இருக்கிறேன் அருகில்படுத்திருக்கும் அவள்
சிறிது அசைந்தாலும் விழித்துக்
கொள்வேன் அது போல்தான் அவளும் இருந்தாலும் என்னைப் பாட்டுபாடி எழுப்பாதது ஒருகுறையாகத் தெரிகிறது
மனைவியிடம் சொன்னால் போங்கன்னா என்பாள்
மேலும் இல்லாத ஒருவரை துயிலெழுப்புவது சரி இல்லை என்று சொன்னால் அது அவளுக்குப் பிடிக்காது
ஒருவருக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பதே
சுமூக மண வாழ்வுக்கு நல்லது என்பது நான் கற்ற பாடம்
நான் என்னை ஒரு ஜகதலப் பிரதாபனாக
கற்பனையில் இருந்தேன் மிகுந்த சின்ன
வயதில் ஜகதலப்பிரதாபன் படம் பார்த்திருக்கிறேன் முழு கதை நினைவுக்கு வர
வில்லை இணையத்தில் தேடினால்ஆச்சரியமாக
இருந்தது ஜகதலப் பிரதாபன் ஒரு ராஜ குமாரன்
அவனுக்கு நான்கு தேவகன்னியரோரு
வாழ விருப்பம் இதை கேட்ட அவன் தந்தை
அவனைச் சிரசேதம்செய்ய உத்தரவிடுகிறார்
ஆனால் தாய் அவரைத் தப்பிக்க விடுகிறார்அவ்வை எனுமொரு தெய்வத்தாயின் பராமரிப்பில் ப்ரதாபனும்
அவரதுநண்பரும் இருக்கிறார்கள் ஒரு நாள் அருகே இருக்கும் குளம் ஒன்றில் ஒரு
அழகிகுளித்துக் கொண்டிருப்பதைக் காணுபிரதாபன்
அப்பெண்ணின் புடவயை எடுத்து
மறைத்துக் கொள்கிறார் புடவை தேடி வரும்
அழகிகாணாதிருக்க அவ்வை பிரதாபனை ஒரு குழந்தையாக மாற்றி விடுகிறார்
நாளாவட்டத்தில் அழகி அக்குழந்தையை
நேசிக்கிறார் விரைவில்குழந்தைஉருவம் மாற
ப்ரதாபனும் அந்த அழகியும்மணம்
புரிண்டுவாழ்கின்றனர்
அவர்கள் வாழும் நாட்டின் அரசன் பிரதாபனின் மனைவியிடம் மனம் பறி கொடுத்து
பிரதாபனை தனக்கு இல்லாத ஒரு நோய்க்கு
மருந்து தேடி கொண்டுவர நாக லோகத்துக்கு அனுப்புகிறார் பிரதாபனோ வேலையை கச்சிதமாக முடித்துமேலும்
மூன்று அழகிகளோடு திரும்பி வந்து இனிதே வாழ்கிறார் என்பதாகக் கதை
ஒரு வேளை
ஆழ்மன ஆசைகளே கனவாக வருகிறதோ ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள
விரும்புகிறேன் நான் நல்லபையன் அது பற்றி
ஏற்கனவே எழுதி இருக்கிறேன்
து
சுவாரஸ்யமான கற்பனை, கனவு!
ReplyDeleteஆனால் என்க்கு அப்படி தோன்ற்வில்லையே
Deleteசொன்னவிதம் அருமை ஐயா...
ReplyDeleteநன்றி
Deleteஎன்னுடைய அப்பா (இப்போது இல்லை) ஜகதலப்ரதாபன் சினிமாவை 24 முறை பார்த்ததாக கூறுவார்.
ReplyDeleteJayakumar
நானும் சின்ன வயதில் பர்த்திருக்கிறேன்அப்பொதுவேறு பொழுதுபோக்கு இல்லை அல்லவா
Deleteசார் பெரும்பாலும் ஆழ்மன ஆசைகளே தான் கனவாக...
ReplyDeleteஆனால் நீங்கள் நல்ல பையன் தான் சார்!!!!
கீதா
உங் க ளுக்கு இம்மாதிரி கனவுகள் வருமா
Deleteஇறுதியில் சொன்ன "நான் நல்ல பையன்" ரசிக்க வைத்தது ஐயா
ReplyDelete