(
பல நாட்களுக்கு முன் நான் போட்ட நாடகங்கள் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அவற்றில் ஒன்றை பதிவாக இ ட்டால் ர்ன்ன என்று தோன்றிய்து. உடனே செயல் படுத்துகிறேன். ”உன் தொடர் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு தெரிந்தும் இதைப் பதிவிட உனக்கு அசாத்திய துணிச்சல்தான்.” யாரோ முணுமுணுப்பது கேட்கிறது நான் போட்ட நாடகங்கள் பதிவுச் சுட்டி இதோ. http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_09.html ) .
வாழ்ந்தே தீருவேன்.
------------------
( A
PLAY BY G.M.BALASUBRAMANIAM )
காட்சி – 1
இடம்- ரங்கதுரையின் பங்களா.
பாத்திரங்கள்- ரங்கதுரை, ராஜு, மாலா.
( திரை உயரும்போது, சுவர்க் கடிகாரம் ஒன்பதடித்து ஓய்கிறது.
ரங்கதுரை ஒரு மேசை அருகே உட்கார்ந்து டைரி எழுதிக் கொண்டிருக்கிறார். மணி அடித்து
ஓய்ந்ததும் எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று நேரம் கடிகாரத்தையும் காலண்டரையும்
நோக்குகிறார்.அவர்
மனதில் தோன்றும் எண்ணன்ங்கள்..”Time and tide waits for no
man. பகல்
இரவாகிறது. இரவு பகலாகிறது. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. நேற்று
இன்றாவதில்லை, இன்று நாளையாவதில்லை. மாறுபட்டுவரும் வாழ்க்கை நியதிகள் காலத்துடன்
போட்டியிடுகின்றனவா.? ஹூம் ! இருபத்தைந்து ஆண்டுகள்....எல்லாம் நேற்று நடந்ததுபோல்
தோன்றுகிறது. இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து வந்திருக்கிறது. இனியும்
நல்ல படியாய் நடக்க ஆண்டவன் துணைதான் அவசியம்.—டைரியை
எடுத்து மேசையில் வைத்துப் பூட்டுகிறார். பிறகு உள்பக்கம் பார்த்துக்
கூப்பிடுகிறார்.)
ராஜு,
...ராஜு... ..!
ராஜு:_
( உள்ளிருந்து குரல் கொடுக்கிறான்.)இதோ வந்திட்டேம்ப்பா. !
ரங்க:- ( தனக்குத்தானே ) ராஜுவும் வளர்ந்து பொறுப்புகளை
ஏற்கத் துவங்கிவிட்டான்மாலாவுக்கும்
கூடிய சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா அப்புறம் நிம்மதியா
இருக்கலாம்.
ராஜு:-
( வந்துகொண்டே )கூபுட்டீங்களாப்பா. ..
ரங்க:-
ஆமா ராஜு. ...உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னுதான் கூப்பிட்டேன். எனக்கும்
வயசாயிடுத்து. இந்தக் கம்பனி பொறுப்பை உங்கிட்ட ஒப்படச்சிட்டு, மாலாவுக்கும் ஒரு
கலியாணத்தைப் பண்ணி வச்சா நான் நிம்மதியா இருக்கலாம் பாரு.!
ராஜு:-
இப்பமட்டும் நீங்க நிம்மதியா இல்லையா
அப்பா. ?
ரங்க
:- அதுக்கில்லை ராஜு... காலா காலத்துல செய்ய வேண்டிய காரியங்களை செய்யறது என் கடமை
இல்லையா .?
மாலா:_
( வந்து கொண்டே ) அதையேதான் நானும் சொல்றேன்.மணி ஒன்பதடிச்சாச்சு. . காலா காலத்துல
செய்ய வேண்டிய காரியங்களில் சாப்பிடறது ஒண்ணு. அந்தக் கடமையெ மறக்கலாமா. ....!
ரங்க:-
இதோ வந்துட்டேம்மா.
ராஜு:-
அப்பா... JUST A MINUTE. Modern Engineering Works ல ஒரு டெண்டர் கால் ஃபார் பண்ணி யிருக்காங்க. நான்
கொடுக்கிற கொட்டேஷன்ஸ் எல்லாம் நீங்க ஒரு
க்ளான்ஸ் பார்த்து அப்ரூவ் பண்ணினா அவங்களுக்கு
சீக்கிரமே அனுப்பிடலாம்.
ரங்க:-
LOOK ராஜு! Hereafterwards you are the boss. இந்த மாதிரி
விஷயங்களிலெல்லாம் நீயே முடிவெடுக்கணும். நான் ஒதுங்கிக்கிறேன்.
மாலா:- அடாடாடா
...பொழுது விடிஞ்சு பொழுது சாயறவரைக்கும் இதுதானா பேச்சு.. கொட்டேஷன்ஸ்
, டெண்டர் , குடும்ப விஷயமா சொந்த விஷயமா எதுவுமே பேச முடியறதில்லை
ரங்க:-
என்னம்மா... நீ பாட்டுக்கு ஏதோ
முணுமுணூக்கிற
மாலா:-
இல்லையேப்பா... வந்து.....நான் ஒண்ணு கேப்பேன்.. கோவிச்சுக்காம ‘ உம்’ நு சொல்றீங்களா.
ரங்க:-
என்னம்மா பீடிகை எல்லாம் பலமாயிருக்கு. என்ன...ம்... சொல்லும்மா...
மாலா:-
அப்பா... எங்க காலேஜ் ஆண்டு விழால ஒரு நாடகம் நடத்தப் போறாங்க. என்னை ஹீரோயினா
நடிக்கக் கூப்பிடறாங்கப்பா... நான் சேரலாமாப்பா..!
ரங்க:-
இதுக்கெல்லாம் எங்கிட்டப் பெர்மிஷன் கேக்கணுமாம்மா. உனக்கு சேரணும்னு இருந்தா
‘ஜாம். ஜாம்’ நு சேர்ந்துக்கோ.
மாலா:-அப்பான்னா
அப்பாதான். தாங்யூ டாடி. ( உள்ளே
ஓடுகிறாள் ).
ராஜு:-
அப்பா.! இப்படி செல்லம் கொடுத்துத்தான் மாலா கெட்டுக் குட்டிச் சுவராகறா.
ரங்க:
-அவ நாடகத்துல நடிக்கிறது தப்புனு சொல்றயா ராஜு. ..
ராஜு:-
நிச்சயமா... சந்தேகமில்லாம தப்புத்தான். நாடகம்னா ஆண் பெண் எல்லாம் சேர்ந்து
நடிப்பாங்க.. இவ ஹீரோயின்னா ஹீரோ யாரோ...?
ரங்க:-
ஆணும் பெண்ணும் சரி சமம்னு நினக்கிற இந்தக் காலத்து ஆள் நீயா இதெல்லாம் தப்புன்னு
நினைக்கிறெ.
ராஜு:-
ஆணும் பெண்ணும் சமம்னு நினைக்கிறவந்தாம்பா நான். இருந்தாலும் பருவ காலத்து விகற்ப
உணச்சி இல்லாம பழகற ஒரு சமுதாயமா நாம இன்னும் மாறலையே அடுத்த பெண்ணை தாயாகவோ
சகோதரியாகவோ பாவிக்கும் பக்குவம் இன்னும் இந்த சமுதாயத்தில் மலரலையே. என்ன
இருந்தாலும் இங்க ஒரு பெண் சாதாரண வாழ்க்கையை சாதாரண முறையில் சாதாரணமாக வாழாதவரை,
இந்த சாமானுய சமுதாயம் அவளை ஒரு சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்வதில்லையே.
ரங்க:-
அடுத்தவர்கள் எப்படி யிருந்தால் நமக்கென்ன ராஜு.! மேலும் சமுதாயங்கறது நம்மைப்
போல் நாலு பேர் சேர்ந்து உருவாக்கறதுதானே. நாம் மாற ஆரம்பிச்சா இந்த சமுதாயம் தானா
மாறுது.
மாலா:-
( உள்ளிருந்து ) சாப்பாடு ஆறி அவலாகிறது. உங்க டிஸ்கஷன்களையெல்லாம்
சாப்பாட்டுக்குப் பிறகு வெச்சுக்கலாமே.
ரங்க:-
இதோ வந்திட்டேம்மா. !
(திரை )
காட்சி- 2
------
இடம்:- பூங்கா.
--------------
பாத்திரங்கள்- மாலா, மோஹன்.
( திரை உயரும்போது, மோஹன் மாலாவுக்காகக் காத்திருக்கிறான். .மாலா
வந்ததும் ,சற்று விறைப்பாக , கோபித்த பாவனையில் நிற்கிறான்.)
மாலா:-
( நாடக பாணியில் ) அன்பர் சற்றே கோபமாக இருக்கிறார்போலும். எங்கே, அங்கே சென்று
கோபத்தின் காரணத்தை அறிந்து வருவோம். அன்பே....ஆ ஆ ஆ ...கொழுந்துவிட்டு எரியும்
கோபத்தின் காரணம் ....?அருகேயே செல்ல முடியவில்லையே.......!
மோஹன்:-
கோபமல்ல பெண்ணே... விரகதாபம்.
மாலா:-
ரொம்ப ஆபத்தாச்சே அது.
மோஹன்:-
அதன் காரணகர்த்தாவே நீதானெ. அது சரி. ! இன்னிக்கு நீ ரொம்ப லேட். இனிமே இப்படி
லேட்டானா உன்னைத் தேடி நான் உங்க வீட்டுக்கே வந்திடுவேன்.
மாலா:
- ஐயையோ ... அப்படி எதுவும் செய்யாதீங்க. தகுந்த சமயத்தில ,தக்க தருணத்தில நானே
உங்கள என் அப்பாகிட்ட அறிமுகப் படுத்தறேன்.
மோஹன்.:-
ஏன் மாலா... எனக்கு இப்ப உங்க அப்பாவைப் பார்த்து பெண் கேட்கத் தகுதி
இல்லைங்கிறதால தானே நீயும் என்னை அறிமுகப் படுத்தத் தயங்கறே.எனக்கு ஒரு வேலை
இல்லை, நானே எனக்கு ஒரு பாரமா இருக்கும்போது, காதல் ஒரு கேடா... கல்யாணம் ஒரு
தேவையா....?
மாலா:-
என்ன மோஹன் என்னென்னவோ பேசறீங்க. ..
மோஹன்:-
மாலா ... நன் ஒரு நல்ல பொசிஷனுக்கு வரத்தான் போறேன். நீயும் பார்க்கத்தான் போறே.
என்னைப் பார்த்தா ..ஏன்.. உன் அப்பாவுக்கே எனக்கு ஒரு நல்ல வேலை கொடுக்கணும்னு
தோணுமே...!
மாலா:-
ஆ ஹா..
! எனக்கு எப்படி அந்த யோசனையே தோணாமப் போச்சு. . மோஹன் நீங்க இப்பச்
சொன்னீங்களே அதே மாதிரி எங்கப்பா கம்பனியிலேயே ஒரு நல்ல வேலை வாங்கித்தர நானாச்சு.
நான் சொல்ல வேண்டியதுதான். ..உடனே எங்கப்பா என் ஆசையை நிறை வேற்றுவார்.
மோஹன்:-
உண்மையாகவா மாலா... ஆனால் அதுல ஒரு பிரச்சனை இருக்கு. நான் தன்மானமுள்ளவன். எந்த
வேலையும் என் தகுதிக்காக கொடுப்பதாகவே இருக்க வேண்டும். உனக்காகவோ இல்லை வேறு
யாருக்காகவோ வேலை கிடைப்பதானால் வேண்டாம். அதையும் உங்கப்பாகிட்ட முதலிலேயே
சொல்லிடு.
மாலா:-
அந்தப் பிரச்சனையை எங்கிட்ட விட்டுடுங்க. ஆமாம் மோஹன். உங்களுக்கு என் மேல்
அன்பிருக்கு அல்லவா..?
மோஹன்:-
என்ன கேள்வி இது. இதை சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா ...
மாலா:-
சில விஷயங்கள சொல்லாமலேயே புரிஞ்சுக்க முடிஞ்சாலும் , சொல்லிக் கேட்பதிலும் ஒரு
தனி இன்பம் இருக்கு தெரியுமா...?
மோஹன்:-
அப்படியா... அது என்ன இன்பம்...
மாலா:-
அதுதான் சொல்ல முடியாதது. உணர்ந்து கொள்ள மட்டும்தான் முடியும்.
மோஹன்:
- என்ன மாலா புதிர் போடறே. அந்த உணர்ச்சி எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியக்
கூடாதா?
மாலா:-
ஏன் தெரியக் கூடாது..? இப்பச் சொல்லுங்க..
மோஹன்:-
என்னன்னு. ..
மாலா:-
என் மேல அன்பு இருக்கான்னு...
மோஹன்:-
அதுதான் சொன்னேனே.... இருக்குன்னு.
மாலா:-
அப்படியில்லீங்க.. இப்படி... போங்க மோஹன் எனக்கு வெக்கமா இருக்கு...
மோஹன்:-
மலா...! நான் உன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் தெரியுமா....எந்தன் உயிருக்குயிர்
..நீ நாடும் அன்பு நான்... என் கண்ணின் மணி நீ ..உந்தன் கருத்தின் ஒளி நான்... நற்பண்ணின்
சுவை நீ .. உன் பாவின் நயம் நான்... என் எண்ணின் பொருள் நீ உன் எண்ணம் சொல்லாதது ஏன்.... மாலா..!
மாலா:-
அடேயப்பா.... காதற்கவிதையே பாடிடுவீங்க போலிருக்கே.
மோஹன்:-
காதலில் கட்டுண்டிருக்கும்போது, சாதாரணமானவனும் கவிதை மட்டுமா பாடுவான் விண்ணையுஞ் சாடுவான்... பண்ணையும் பாடுவான்.
ஆரம்பிக்கட்டுமா.
மாலா:-
விண்ணைச் சாடவா.... பண்ணைப் பாடவா...
மோஹன்:-
பாடத்தான்...
மாலா:-
ஐயையோ இப்ப வேண்டாம். எனக்குப் பயம்மா இருக்கு. இன்னொரு நாள் பாடுவீங்களாம் நானும்
பொறுமையாக் காதைப் பொத்திட்டுக் கேட்பேனாம்....
மோஹன்:-
காதைப் பொத்திட்டுக் கேட்பியா... YOU SILLY
GIRL..!
மாலா:-
DON’T FORGET.நாளைக்கு சாயங்காலம் உங்களை என்
தந்தையிடம் அறிமுகப் படுத்துவென். அதற்கு முன்னே வழக்கம்போல் இங்கே சந்திப்போம். TA..TA…!
( திரை ):
( தொடரும்.)
,
...
,