நாடகம்- அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடகம்- அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 செப்டம்பர், 2012

வாழ்ந்தே தீருவேன் -(-3 )


                                 வாழ்ந்தே தீருவேன் --( 3 )
                        
                             A PLAY FROM.G.M.BALASUBRAMANIAM  



காட்சி5
இடந்- பூங்கா
பாத்திரங்கள்-மாலா, மோஹன், ராஜு.
( திரை உயரும்போது மாலா மோஹனுக்காகக் காத்திருக்கிறாள் )


மாலா:- ( தனக்குத்தானே ) சேச்சே..! மேனேஜர் வேலை வேலை கிடைச்சாலும் கிடைச்சது, இவருக்காக நான் காத்திருப்பதே வேலையாய் விட்டது. வரட்டும் வரட்டும்,வந்ததும் என்னமாச் சண்டை பிடிக்கப் போகிறேன் பார். ( கைக் கடிகாரம் பார்த்து அலுத்துக் கொள்கிறாள்..மோஹன் பின்னால் வந்து விசில் சப்திக்கிறான். அவள் திரும்பிப் பார்க்கிறாள். )

மோஹன்:- ஹாய்... டார்லிங்...!எங்கெங்கோ பார்க்கிறாயே... நாந்தான் உன் பின்னாலேயே இருக்கிறேனே.

மாலா:- போங்க மோஹன். வர வர உங்களுக்கு எம்மேல இருக்கிற இதுவே போயிடுத்து.

மோஹன்:- இதுவேன்னா எது..?

மாலா.:- அதுதான் இது...

மோஹன்:- லவ்வா..?

மாலா:- யார் கண்டா.. அக்கறையும் பிடிப்பும் குறையறதப் பார்த்தா அதுவு குறையுதோ என்னவோ...

மோஹன்:- மாலா எது குறஞ்சாலும் உம்மேல இருக்கிற இது மட்டும் குறையாது.

மாலா:- இதுன்னா எதுவாம்..!

மோஹன்:- அதுதான் இது...

மாலா:- லவ்வா.. ?


மோஹன்:- லவ்வோ, பிடிப்போ, அக்கறையோ எது வேணா நெனச்சுக்கோ, மோஹனுக்கு மாலாவிடம் உள்ள மோஹம் மட்டும் குறையாது. மோஹனின் மோஹத்தைப் பார்க்கணுமா..( அருகில் இழுக்க அவள் நாணி விலகுகிறாள் )

மாலா,:- நீங்க வந்ததும் உங்ககிட்ட சண்டை போடணும்னுதான் நெனச்சிட்டிருந்தேன். நீங்க வந்ததும், உங்களைப் பார்த்ததும், மோஹனின் மோஹத்தைக் கண்டதும்,, என்னையே நான் உங்ககிட்ட இழந்திருக்கிறதத் தான் உணர்ரேன்.

மோஹன்:- மாலா, கனவிலும் நெனவிலும் என் மனசுல ஆதிக்கம் செலுத்தறவ நீ.. நீ எங்கிட்ட உன்னை இழந்திருக்கியா இல்லை நான் என்னை உங்கிட்ட இழந்திருக்கேனா ஒண்ணும் புரியலை.

மாலா: - கனவிலும் என்னை நீங்க பார்க்கறீங்களா...?கனவில் வரும் நான் எப்படி இருக்கேன். .?

மோஹன்:- ஏன்.... இப்படித்தான்...

மாலா:- இப்படித்தான்னா ..எப்படி... சொல்லுங்களேன்.

மோஹன்:-ஆஹா....! உன்னை வர்ணிக்கச் சொல்கிறாயா... நான் உள்ளதை உள்ளபடி சொன்னால் எனக்கு என்ன தருவீர்கள் மிஸ் மாலா.

மாலா:- போங்க மோஹன்... என்றைக்கும் இல்லாமல் மிஸ்ஸும் கிஸ்ஸும் வெச்சுக் கூப்பிடறீங்களே....

மோஹன்: -மிஸ் வெச்சுக் கூப்பிட்டேனே தவிர கிஸ் வெச்சுக் கூப்பிட்டேனா...

மாலா:- போங்க மோஹன். கனவைக் கேட்டா என்னென்னவோ பேசிக் கொண்டு.....

மோஹன்:- சரி மாலா... கனவில வந்த மாலா என்ன தந்தாளோ அதையே நீயும் தர வேணும்.

மாலா:- எது வேண்டுமானாலும் தருவேன் மோஹன். என்னையே உங்களுக்குத் தர நான் சித்த மாயிருக்கிறேன்.

மோஹன்:- டார்லிங்  எனக்குச் சற்று அவகாசம் கொடு. LET ME GET INTO THE MOOD OF MY DREAM AND THE GIRL. …YES..! நிலவைப் பழிக்கும் முகம், அதில் நினைவைப் பதிக்கும் கண்கள், நிலமடந்தை நாணும் எழில், முத்துச்சரம் விரித்த முல்லைச் சிரிப்பு, கமலமலர் செவ்விதழ் விரிப்பு,படர்கொடி வெல்லும் துடியிடை, என் இடர் சேர்க்க இடையிடையாட, மென்னடை நடந்தென் முன் நின்றாள் நிற்கின்றாள் , இன்பக் கனவினை நனவாக்க யெண்ணி- வந்த கற்பனைக் கண்கண்ட கன்னி.
கண்ட கனவு நினைவாக இன்று என் முன் நிற்கும் காரிகையே ..மாலா..உன்னை அழைக்கின்றேன், அன்புக் கயிற்றால் பிணைக்கின்றேன், கண்ணே கட்டும் பிணைப்பும் பிரியாது உறுதி ( கூறிக் கொண்டே  மெய்மறந்து அணைக்க , அணைப்பினில் சில வினாடிகள் கழிய முதலில் தன்னிலை வரப் பெற்ற )

மாலா:- அடடே... நேரம் போனதே தெரியவில்லை. அப்பாவும் அண்ணாவும் காத்திருப்பார்கள். லேட்டானால் அண்ணா கோபிப்பான். நான் வரேன்.... டாட்டா...!
( மோஹனும் மாலாவும் பிரிய , ராஜு மாலாவின் முன் எதிர்படுகிறான்.)

ராஜு :- மாலா  நீ நடந்து கொள்ளும்முறை உனக்கே சரியாகத் தோன்றுகிறதா..? மாறுபட்ட சூழ்நிலையில் ஒரு பெண் சுதந்திரமாக வளர்ந்தாலும் பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி., வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தவறு.

மாலா:- போதும் நிறுத்துங்க அண்ணா... !ஏதோ தகாத காரியத்தை நான் செய்து விட்டதுபோல பிரலாபிக்கிறீங்களே. ஆணும் பெண்ணும் மனம் இணைந்து பழகறதும் சேருவதும் தவறா.?

ராஜு:- அது அப்படிப் பழகும் ஆணையும் பெண்ணையும் பொறுத்தது. அழகு நிறைந்த சந்ததியினரும் வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் திருமணங்கள் பெரிதும் உதவுகின்றன. வாஸ்தவம்தான். ஆனால் கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபல உணர்வு கொண்ட பெண்ணும், வாழ்வில் மாறிவரும் மதிப்புகளைப் புரிந்துகொள்ளாமல் பணத்தின் அடிப்படையிலும் காழ்ப்பின் அடிப்படையிலும் மாற்றம் காண விரும்பும் ஒரு ஆணும், சேருதல் நன்றா என்றுதான் கேட்கிறேன். சரி சரி பெரிய பிரச்சனைகளை அணுகும் இடமும் சந்தர்ப்பமும் இது அல்ல. வீட்டுக்கு வா போகலாம். பிறகு பேசிக் கொள்ளலாம்...

                                                                    ( திரை )   



காட்சி6

இடம்- ரங்கதுரையின் பங்களா.
பாத்திரங்கள்- மாலா, ரங்கதுரை, ராஜு, மோஹன், டாக்டர்.
( திரை உயரும்போதுரங்கதுரை அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார். அவர் கண்களில் கலக்கம். டாக்டரை அழைத்துக் கொண்டு ராஜு வருகிறான்.)

ரங்க :-வாங்க டாக்டர்...!வாங்க...!காலையிலேயிருந்து என் பெண் மாலா ஒரேயடியா வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். மயக்கமா இருப்பதாகவும் சொல்கிறாள். வந்து பாருங்கள் ப்ளீஸ்  இதோ இந்த அறையில்தான் இருக்கிறாள். ( டாக்டரை அழைத்துக் கொண்டு அறையில் விட்டுவிட்டு வெளியே வருகிறார்.) டாக்டர் எதுவும் பயங்கரமாச் சொல்லாம இருக்க வேண்டும்.



ராஜு:- டாக்டர் என்ன சொல்வார்ன்னு என்னால் யூகிக்க முடியுது அப்பா.!அப்படி மட்டும் இருந்துட்டா  ஆஆஆஅ அப்படியே அவ்ளை.... ஹூம்.!

டாக்டர்:- ( உள்ளிருந்து வந்து கொண்டே)கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் ரங்கதுரை.. சாதாரணமா பெண்களுக்கு வரும் மார்னிங் சிக்னஸ் தான். உங்கள் பெண் தாயாகப்போறா. அவளுக்கு நல்ல ஓய்வும் ஊட்டமுமான உணவும் தேவை.இந்த டானிக்குகளை வாங்கிக் கொடுங்க. நான் வரேன்...

ரங்க:- ( திடுக்கிட்டு திக்பிரமையோடு நிற்கிறார், )டாக்டர்....டாக்டர்.... நீங்க சொல்றது உண்மையா டாக்டர்...?

ராஜு: - டாக்டர் ப்ளீஸ் கீப் திஸ் வெரி கான்ஃபிடென்ஷியல்.(டாக்டர் போகிறார்.)நான் நெனச்சது சரிதான். இதுக்குத்தான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேட்டீங்களா..? இப்போ அவதிப் படறது யாரு...இந்த மாதிரி ஒரு தங்கச்சி இருந்தா என்ன.... செத்தா என்ன... இப்பவே அவளை ஒரு வழியாத் தீர்த்துடறேன்.  மாலா.... மாலா.... !

ரங்க:- ராஜு...! ஆத்திரத்தில் அறிவிழக்காதே. தவறு நடந்துடுத்து. We must try to do the best out of the worst situation… அவளை கூப்பிடு . நான் விசாரிக்கிறேன்.

ராஜி:- மாலா..... கூப்பிடறது காதிலெ விழலை...? வா... இப்படி.. !

ரங்க:- மாலா.... என்னம்மாஇது.... டாக்டர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போறாரே...!உண்மையாம்மா....? எனக்கு எப்படி உங்கிட்டக் கேக்கறதுன்னு விளங்களையேம்மா.. தாயார் இல்லாத குறை தெரியாம இருக்க , உன்னை ஒரு ஆணைப் போல வளர்த்தேனே. என் நம்பிக்கை, மானம் மரியாதை எல்லாம் தவிடு பொடியாகி விட்டதேம்மா...மாலா... இதன் விளைவு உனக்குத் தெரிகிறதாம்மா...?

ராஜு:- அப்பா கேட்டுட்டே இருக்கார், நீ பாட்டுக்கு நீலிக் கண்ணீர் வடிச்சிட்டிருந்தா என்ன அர்த்தம். ...சொல்.. மாலா... சொல்..! உன்னைக் கெடுத்தக் கயவன் யார்..?யார்.. மாலா யார்.. அந்த மோஹன் தானே....!

மாலா.:- அவரைக் கயவர்னு நீங்க சொல்லத் தேவை இல்லை.. அவர் என்னைக் கை விட மாட்டார். எனக்கு நல்லாத் தெரியும்

ராஜு: - கயவனில்லையா... நான் அப்படிச் சொல்லக் கூடாதா ? என்ன தைரியமிருந்தா  தவறு செய்யறதையும் செய்திட்டு எதிர்த்து வேறப் பேசறே.( அவளை அடிக்கக் கையை ஓங்க, அவனைத் தடுத்து )

ரங்க :- ராஜு... இப்பதானே சொன்னேன்.. ஆத்திரப் படாதேன்னு.. மாலா.. ! மோஹனுக்குத் தெரியுமாம்மா, உன்னோட இந்த நிலைமை...?

மாலா.: - தெரியாதுப்பா.. தெரிஞ்சாலும் என்னை ஏத்துக்க அவர் தயங்க மாட்டார் அப்பா. .!

ராஜு.:- ஷட் அப்..! நீ பேசாதே... அப்பா எனக்கு ஒண்ணு தோணுது. அவனுக்கும் இவள் மேல ஒரு கண். இவளை கலியாணம் செய்துக்க விருப்பமான்னு கேட்போம். விஷயத்தை விளக்க வேண்டாம் விஷயம் தெரிஞ்சா ஒரு சமயம் மணக்க ஒத்துக்க மாட்டான். அவனை அவன் வழியிலேயே மடக்கணும். மாலா...! நீயும் அவனிடம் இது பற்றி ஏதும் பேசாதே...!பிறகு பார்த்துக் கொள்ளலாம்...

ரங்க: - அதுதான் சரின்னு எனக்கும் தோணறது. போ ..மாலா.. போ .. ஓய்வெடுத்துக் கொள்..இந்த நிலை உனக்கு வந்திருக்கத் தேவை இல்லை. ஹூம்...! மோஹனும் வர நேரம்தான்.. அவனையும் கேட்போம்.

மோஹன்:- ( வந்துகொண்டே )அதுதான் வந்திட்டேனே .என்ன கேட்கப் போறீங்க...? என்ன பதிலை எதிர் பார்க்கறீங்க....?

ரங்க:- இல்லை மோஹன்.... எங்கள் மாலாவின் திருமண விஷயமாப் பேசிண்டிருந்தோம்.. நான் மாலாவை உங்களுக்குத் திரு மணம் செய்து வைக்கலாம்னு சொன்னேன். அதற்கு ராஜு நீங்க ஒப்புக் கொள்வீங்களோ என்னவோன்னு சொன்னான். நீங்க வர நேரம்தான் உங்களையே கேட்டுடலாம்னேன். மிஸ்டர் மோஹன் எங்கள் மாலாவை திருமணம் செய்துக்க விருப்பமா..?

மோஹன் :- போங்க சார், இதையெல்லாம் எங்கிட்டக் கேட்கணுமா. பெரியவங்க நீங்க பார்த்துச் சொன்னா நான் மறுக்கவாப் போறேன்.

ராஜு :- உங்களுக்கு இந்தத் திருமணத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லையே.....

மோஹன்.: - கரும்பு தின்னக் கூலியா.... இந்த ராஜுவுக்கு என் மேல் எப்பவும் எதிலும் நம்பிக்கை இல்லை ... மாமா...!

ரங்க :- ஹாங்.......! ராஜு  அப்ப உடனடியாகக் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்கணும்.. இல்லையா மிஸ்டர்... ஹாங்... மாப்பிள்ளை..!

                                                                                     (திரை).
  


 
   













      

சனி, 15 செப்டம்பர், 2012

வாழ்ந்தே தீருவேன்.... .( 2 )

                     
                                    வாழ்ந்தே தீருவேன்....( 2  )


A PLAY BY G.M. BALASUBRAMANIAM.

காட்சி- 3.
பாத்திரங்கள்.- ரங்கதுரை, ராஜு, மாலா, மோஹன்.
இடம்:- ரங்கதுரை பங்களா. 

( திரை உயரும்போது ரங்கதுரை செய்தித் தாள் படித்துக் கொண்டு இருக்கிறார். ராஜு ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறான். )

ராஜு:- அப்பா, எவ்வளவு அழகாய் எழுதி இருக்கிறார் தெரியுமா இந்த ஆசிரியர். சமுதாயம் மாறுவது தனி மனிதனின் முயற்சியாலா , அல்லது கூட்டுறவாலா என்று கேள்வி கேட்டு பதிலளிக்கிறார். படிக்கிறேன் .கேளுங்களேன். ( படிக்கிறான்.)கூட்டுறவு என்பதே தனி மனிதனின் முயற்சியின் அடிப்படையில் எழுந்ததுதானே. ஒவ்வொருவனும் சமுதாயத்தின் சீர்கேட்டை உணர்ந்து அதற்கு நிவர்த்தி தேடும்போது , தேடும் பாதையாகக் கூட்டுறவு உருவாகிறது. ஒவ்வொருவனுக்கும் உள்ள கடமைகளை தன்னைச் சார்ந்தவர்கள் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வில் செய்தால் அது நன்மையாகத்தான் முடியும். ஆக இந்த உணர்வோடு செய்யப்படும் தனி மனிதனின் முயற்சியால்தான் சமுதாயம் வளர்கிறது. அல்லதுகூட்டுறவு  முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள், தங்களது பல தனிப்பட்ட கருத்துக்களை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழவைப்பதோடு தாங்களும் வாழவேண்டும் என்ற கொள்கையில் எழுவதால், சீர்கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும். பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும். நான் எனது என்ற அகங்கார எண்ணம் மாய்ந்து நாம் நமது என்ற பரந்த எண்ணம் விரியும். அதனால் சோம்பல் ஒழியும். கட்டுப்பாடு அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும். போட்டி பொறாமை குறையும். எல்லோருமொரு குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் கூட்டுறவில்தான் பொதுஜன சமதர்மம் சிறப்பாக நிலை பெறும்.

ரங்க :-இது என்ன ராஜு. ! ஒரே கேள்விக்கு இரண்டு DIAGONALLY  OPPOSITE  பதில்களா.?

ராஜு:- அவசரப் படாதீங்கப்பா. இரண்டிலும் தெரிந்து எடுத்த பதிலையும் கூறுகிறார் ஆசிரியர். “தனி மனிதன் வளர்ந்தான் என்றால் சமூகம் வளர்ந்தது என்ற நிலை சரியாகத் தோன்றினாலும் எல்லோரும் ஒரே காலத்தில் ஒரே நிலைக்கு மேன்மையடைவது என்பது இயலாத காரியமாதலால் அவ்வளவு சரியெனக் கொள்ள முடியாது. ஆனால் தனிமனிதனின் கட்டுப்பட்ட வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்குமாதலால் கூட்டுறவே சிறந்தது.

ரங்க:- இவ்வளவு சிறப்பாக எழுதும் ஆசிரியர் யார் ராஜு.?

ராஜு:- அவர்தாம்ப்பா திரு. ஜி.எம்.பாலசுப்பிரமணியம் “ நினைவில் நீ “ என்ற நாவலில் எழுதி இருக்கிறார். ( மாலா வருகிறாள். )மாலா, நீ ஏன் இவ்வளவு லேட். ?

மாலா:- ( வந்து கொண்டே ) உஷ் ஷ்... ...வாங்க மோஹன்அப்பா....நான் உங்களிடம் சொல்லியிருந்தேனே என் நண்பர் என்று ... அவர்தாம்ப்பா இவர்.. Mr. Mohan… மோஹன் இவர்தான் என் தந்தை. இவர் என் அண்ணா ராஜு.

மோஹன்:- Pleased to meet you ,sir….!

ரங்க:- Please take your seat.

மாலா:- உட்கார்ந்து பேசிட்டிருங்க... நான் சாப்பாட்டிற்கு அரேஞ்ச்  செய்யறேன். ( போகிறாள். )

ரங்க:- மிஸ்டர்........ம்ம்   மோஹன் நீங்க இப்ப என்ன செய்திட்டு இருக்கீங்க.?

மோஹன்:- நான் ஒரு FREELANCE WRITER. கவிய்ஜைகளும் கதைகளும் எழுதுவேன்

ராஜு:- அதாவது நிரந்தர வருவாய் ஏதும் இல்லாத பிழைப்பு.  AND YOU WILL BE LIVING IN
  A WORLD OF IMAGINATION ALWAYS.

மோஹன்:- OH.! NO..! பிழைப்புக்காக நான் எழுதலியே. வெறும் பொழுது போக்குக்காகத்தான்....மேலும் நான் சம்பாதிச்சுத்தான் சாப்பிடணும்னு இல்லை. சொத்து இருக்கு... இருந்து சாப்பிட்டா இன்னும் இரண்டு தலைமுறைக்குத் தாங்கும்.

ரங்க:- இருந்தாலும் உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்களே.

மோஹன்:- YES…!  I AGREE WITH YOU. . . ! என் தகுதிக்கு ஏற்றபடி ஏதாவது உத்தியோகம் கிடச்சா நான் ஏத்துக்கத் தயார்.

மாலா:- ( வந்து கொண்டே ) டாடி.., நம்ம கம்பனியிலேயே மிஸ்டர். மோஹனுக்கு அவர் தகுதிக்கு ஏற்றபடி உத்தியோகம் கொடுத்தால் அவர் ஆட்சேபிக்கவா போகிறார். என்ன மோஹன்  நான் சொல்றது சரிதானே.

ராஜு: - ஆனால்...மாலா...

மாலா:- நீங்க சும்மா இருங்கண்ணா....மோஹனைப் போல ஆற்றலுள்ளவர்கள் உங்களுக்கு எங்கே கிடைப்பாங்க.?

ராஜு:- MR. MOHAN, WHAT IS YOUR QUALIFICATION ?


மோஹன்:- I AM A GRADUATE…. ARTS


ராஜு:- YOU ARE NOT AN ENGINEER.?

மோஹன்:- நோ...! ஸோ வாட்...?

ரங்க:- அது சரி... மிஸ்டர் மோஹன் உங்களுக்கு இந்த மாதிரி தொழிற்சாலைகளில் வேலை பார்த்த அனுபவம் ஏதாவது உண்டா.?


மோஹன்:- தொழிற்சாலை அனுபவம் என்ன சார் பிரமாதம். மனிதர்களைப் புரிந்துகொண்டு கவிதைகள் புனையறவன் நான். மனிதன் என்னும் பாட புத்தகத்தில் எனக்கு மிகுந்த அனுபவம் உண்டு.

ரங்க:- தென் யூ ஷுட் பீ ஐடியல் ஃபர் அவர் பர்சனல் செக்‌ஷன். உங்களை எங்கள் நிறுவனத்தின் பர்சனல் மேனேஜராகப் போடுகிறேன். நாலையிலிருந்தே வேலைக்கு வந்து விடுங்கள்.

ராஜு.:-அப்பா.... ! யூ டோல்ட் மீ.. ஐ ஆம் த பாஸ்.  !

ரங்க:- இருந்தாலும் என்ன.... நான் சொல்லி நீ மறுக்கவா போகிறாய். ?

மாலா:- தாங்க் யூ டாடி.!

மோஹன்:- தாங்க் யூ சார். அப்பொ நான் வரட்டுமா...!

மாலா:- அதுக்குள்ளாகவா... டின்னர் ஏற்பாடு செய்திருக்கேன். யாருக்காகவாம். (உள்ளே போகிறாள். )

ராஜு:- ஓ... எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்கிறதா... நடக்கட்டும்.. நடக்கட்டும்.
..

                                                          ( திரை ).. 




காட்சி.._ 4.



இடம்:- ஆஃபீஸ்  அறை.

பாத்திரங்கள்.:- ரங்கதுரை, ராஜு, மோஹன், சேகர், ஆஃபீஸ் பாய், ,மற்றும் சிலர்.


ரங்க:- THIS IS YOUR MANAGER’S SEAT Mr. MOHAN. நம்ம தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் வேலை பாக்கிறாங்க. இன்னிக்கி நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கேன்னா அதுக்கு இந்தப் பாட்டாளிப் பெருமக்களின் பேருழைப்புதான் காரணம். அவங்களை நாம் சகோதரர் போல பாவிச்சு நடத்தணும். அவங்களுடைய கஷ்டங்களை தொடச்சு , அவங்களை ஊக்குவிச்சு ஆதரிச்சா நாம உயருவோம். இந்தத் தொழிற்சாலை வளரும், அவங்களும் வளம் பெறுவாங்க. உற்பத்தித் துறையை ராஜு நிர்வகிக்கட்டும். தொழிற்சாலையின் மனித வளப் பிரிவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராஜு:- மோஹன் தொழிலாளர்களிடம் நம் மதிப்பை உணர்த்த, அவன் அன்பை நாம் பெற, அவனை நம்முள் ஒருவனாகக் கருத வேண்டும். அவனை மனிதனாக மதிக்க வேண்டும். எந்திரமாக எண்ணக் கூடாது.

மோஹன்:- அவனும் தன்னை தொழிலாளி என்ற முறையில்தான் எண்ணவேண்டும். சுருங்கச் சொன்னால் அவனுக்கு அவனுடைய இடத்தை அவன் உணரச்செய்ய வேண்டும்.

ரங்க:-  IN A WAY , YES..!அதுவும் ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அந்த உணர்ச்சி ஆக்க பூர்வமான வழிக்கு அடிகோலும் வகையில் உணர்த்தப் பட வேண்டும்.

ராஜு:- THAT IS.. .. YOU MUST HAVE A POSITIVE APPROACH TO PROBLEMS. பெரும்பாலான இடங்களில் நிகழும் சங்கடங்கள். தொழிலாளர்களின் குறைகள் குறைக்கப் படாமல் இருப்பதால் ஏற்படுவது ஆகும்.

மோஹன்:- நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. தொழிலாளி என்றால் கூடவே அவனுக்குப் பிரச்சனையும் இருக்கும். அவையெல்லாம் நாம் நிவர்த்தி செய்ய நினைத்தால் தொழிற்சாலையையே இழுத்து மூட வேண்டி வரும்.

ரங்க: -NO.. அப்படி நினைப்பது பெஸிமிஸ்டிக் வியூ. பரஸ்பர நம்பிக்கை இல்லாமையால் ஏற்படுவது.
ஆஃபீஸ் பையன்.:- சார் உங்களைக் காண தொழிலாளர் சிலர் வந்திருக்காங்க.

ரங்க: வரச் சொல். ( சேகரும் இன்னும் சிலரும் வருகின்றனர்.)

சேகர்:- வணக்கம் சார். !

ரங்க: - வணக்கம். என்னப்பா சேகர், என்ன சமாச்சாரம்.?

சேகர்: நாங்க பிறகு வரோம் சார். நீங்க ஏதோ முக்கிய பிரச்சனையில் இருக்கீங்க போலிருக்கு.

ரங்க:- OH.! NO..! இருப்பா சேகர். இவர்தான் நன் தொழிற்சாலையின் புதிய பெர்சனல் மேனேஜர். மிஸ்டர்.மோஹன். .. மோஹன் இவர்தான் சேகர் நம்முடைய தொழிற்சாலைத் தொழிலாளிகளின் தேர்ந்தெடுக்கப் படாமல் ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவன்.

ராஜு:- வேலையில் நிபுணன்.

மோஹன்:- ஓ ..! அப்படியா....!

தொழி-!:- தேர்ந்தெடுக்கப்படாத தலைவன் என்ற முறையை மாற்றி, திரு. சேகரைத் தேர்ந்தெடுத்துத் தலைவனாக ஆக்கியிருக்கிறோம்.

தொழி.2:- ஆமாம் சார்.... தொழிலாளர் யூனியன் ஸ்தாபித்து அதற்கு சேகரைத் தலைவராக்கி உங்களிடம் அங்கீகாரம் பெறவும் வந்திருக்கிறோம்.

ராஜு:- கங்கிராஜுலேஷன்ஸ்  அண்ட் பெஸ்ட் ஆஃப் லக் சேகர்

சேகர்.:- தாங்க் யூ சார். !

மோஹன்.:- சற்று முன்புதான் பேசிக் கொண்டிருந்தோம். தொழிலாளி என்றால் சங்கம் குறை இவைகள் கூடவே வரும் என்று. இவற்றை எல்லாம் நாம் ஆதரிக்கக் கூடாது சார்.

ரங்க: என் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களைப் பற்றி எனக்குத் தெரியும் மிஸ்டர் மோஹன். பெயரில்லாமல் ஏற்கனவே இயங்கி வந்திருக்குமொரு அமைப்பை சரியான பாதையில் கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் எந்த ஒரு விவகாரத்தையும் தனிப்பட்ட நபர்களிடம் பேசித் தீர்ப்பதை விட , ஒரு அமைப்பிடம் வைத்துக் கொள்வது இரு சாராருக்கும் நல்லதுதானே. கவலைப் படாதே சேகர். உங்கள் யூனியனுக்கு என் மனப் பூர்வமான அங்கீகாரம் ஆதரவு எல்லாம் உண்டு. போய் வாருங்கள்.

சேகர்:- ரொம்ப நன்றி சார். உங்களுக்கு எங்களிடம் இருக்கும் இந்த நம்பிக்கைக்கு, எந்தவித குந்தகமும் நேராமல் நடந்து கொள்வோம். வணக்கம் சார் . வருகிறோம். (போகிறார்கள் )

ராஜு :- அப்பாடா...! எங்கே நீங்கள் மறுத்து விடுவீர்களோன்னு பயந்து கொண்டிருந்தேன். தற்போது அவர்களுக்குக் குறைகள் என்று ஏதும் இல்லாவிட்டாலும்... யார் கண்டது ... நாளைக்கே வரலாமில்லையா... ஏதோ ஒரு இண்ட்யூஷன்  ஒரு சக்திதான் அவர்களை இயக்கி இருக்க வேண்டும்.

மோஹன்:- IT IS NOT BY INTUITION BUT BY INSTIGATION , THEY ACT.  எந்த சக்தியாலும் இயக்கப் படவில்லை. வேண்டுமென்றே யாராலோ தூண்டி விடப் பட்டிருக்கிறார்கள்.
( ராஜுவை முறைக்கிறான் )

                                                                          ( திரை ).  :-






  





























செவ்வாய், 11 செப்டம்பர், 2012

வாழ்ந்தே தீருவேன். ....


 ( பல நாட்களுக்கு முன்  நான் போட்ட நாடகங்கள்  என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அவற்றில் ஒன்றை பதிவாக  இ ட்டால் ர்ன்ன என்று தோன்றிய்து. உடனே செயல் படுத்துகிறேன். ”உன் தொடர் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு தெரிந்தும் இதைப் பதிவிட உனக்கு அசாத்திய துணிச்சல்தான்.” யாரோ முணுமுணுப்பது கேட்கிறது நான்  போட்ட நாடகங்கள் பதிவுச் சுட்டி இதோ. http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_09.html  ) . 


                                                     
 வாழ்ந்தே தீருவேன்.
 ------------------

(  A  PLAY  BY  G.M.BALASUBRAMANIAM )

காட்சி 1

இடம்- ரங்கதுரையின் பங்களா.
பாத்திரங்கள்- ரங்கதுரை, ராஜு, மாலா.

( திரை உயரும்போது, சுவர்க் கடிகாரம் ஒன்பதடித்து ஓய்கிறது. ரங்கதுரை ஒரு மேசை அருகே உட்கார்ந்து டைரி எழுதிக் கொண்டிருக்கிறார். மணி அடித்து ஓய்ந்ததும் எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று நேரம் கடிகாரத்தையும் காலண்டரையும் நோக்குகிறார்.அவர் மனதில் தோன்றும் எண்ணன்ங்கள்..Time and tide waits for no man. பகல் இரவாகிறது. இரவு பகலாகிறது. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. நேற்று இன்றாவதில்லை, இன்று நாளையாவதில்லை. மாறுபட்டுவரும் வாழ்க்கை நியதிகள் காலத்துடன் போட்டியிடுகின்றனவா.? ஹூம் ! இருபத்தைந்து ஆண்டுகள்....எல்லாம் நேற்று நடந்ததுபோல் தோன்றுகிறது. இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து வந்திருக்கிறது. இனியும் நல்ல படியாய் நடக்க ஆண்டவன் துணைதான் அவசியம்.டைரியை எடுத்து மேசையில் வைத்துப் பூட்டுகிறார். பிறகு உள்பக்கம் பார்த்துக் கூப்பிடுகிறார்.)
ராஜு, ...ராஜு... ..!



ராஜு:_ ( உள்ளிருந்து குரல் கொடுக்கிறான்.)இதோ வந்திட்டேம்ப்பா. !

ரங்க:- ( தனக்குத்தானே ) ராஜுவும் வளர்ந்து பொறுப்புகளை ஏற்கத் துவங்கிவிட்டான்மாலாவுக்கும் கூடிய சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா அப்புறம் நிம்மதியா இருக்கலாம்.

ராஜு:- ( வந்துகொண்டே )கூபுட்டீங்களாப்பா. ..

ரங்க:- ஆமா ராஜு. ...உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னுதான் கூப்பிட்டேன். எனக்கும் வயசாயிடுத்து. இந்தக் கம்பனி பொறுப்பை உங்கிட்ட ஒப்படச்சிட்டு, மாலாவுக்கும் ஒரு கலியாணத்தைப் பண்ணி வச்சா நான் நிம்மதியா இருக்கலாம் பாரு.!

ராஜு:- இப்பமட்டும் நீங்க நிம்மதியா  இல்லையா அப்பா. ?

ரங்க :- அதுக்கில்லை ராஜு... காலா காலத்துல செய்ய வேண்டிய காரியங்களை செய்யறது என் கடமை இல்லையா .?

மாலா:_ ( வந்து கொண்டே ) அதையேதான் நானும் சொல்றேன்.மணி ஒன்பதடிச்சாச்சு. . காலா காலத்துல செய்ய வேண்டிய காரியங்களில் சாப்பிடறது ஒண்ணு. அந்தக் கடமையெ  மறக்கலாமா. ....!

ரங்க:- இதோ வந்துட்டேம்மா.

ராஜு:- அப்பா... JUST A MINUTE.  Modern Engineering  Works ல ஒரு டெண்டர் கால் ஃபார் பண்ணி யிருக்காங்க. நான் கொடுக்கிற  கொட்டேஷன்ஸ் எல்லாம் நீங்க ஒரு க்ளான்ஸ் பார்த்து  அப்ரூவ் பண்ணினா அவங்களுக்கு சீக்கிரமே அனுப்பிடலாம்.

ரங்க:- LOOK ராஜு! Hereafterwards you are the boss.  இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் நீயே முடிவெடுக்கணும். நான் ஒதுங்கிக்கிறேன்.

மாலா:- அடாடாடா  ...பொழுது விடிஞ்சு பொழுது சாயறவரைக்கும் இதுதானா பேச்சு.. 
கொட்டேஷன்ஸ் , டெண்டர் , குடும்ப விஷயமா சொந்த விஷயமா எதுவுமே பேச முடியறதில்லை

ரங்க:- என்னம்மா... நீ  பாட்டுக்கு ஏதோ முணுமுணூக்கிற

மாலா:- இல்லையேப்பா... வந்து.....நான் ஒண்ணு கேப்பேன்.. கோவிச்சுக்காம ‘ உம்நு சொல்றீங்களா.

ரங்க:- என்னம்மா பீடிகை எல்லாம் பலமாயிருக்கு. என்ன...ம்... சொல்லும்மா...

மாலா:- அப்பா... எங்க காலேஜ் ஆண்டு விழால ஒரு நாடகம் நடத்தப் போறாங்க. என்னை ஹீரோயினா நடிக்கக் கூப்பிடறாங்கப்பா... நான் சேரலாமாப்பா..!

ரங்க:- இதுக்கெல்லாம் எங்கிட்டப் பெர்மிஷன் கேக்கணுமாம்மா. உனக்கு சேரணும்னு இருந்தா ‘ஜாம். ஜாம்நு சேர்ந்துக்கோ.

மாலா:-அப்பான்னா அப்பாதான்.  தாங்யூ டாடி. ( உள்ளே ஓடுகிறாள் ).

ராஜு:- அப்பா.! இப்படி செல்லம் கொடுத்துத்தான் மாலா கெட்டுக் குட்டிச் சுவராகறா.

ரங்க: -அவ நாடகத்துல நடிக்கிறது தப்புனு சொல்றயா ராஜு. ..

ராஜு:- நிச்சயமா... சந்தேகமில்லாம தப்புத்தான். நாடகம்னா ஆண் பெண் எல்லாம் சேர்ந்து நடிப்பாங்க.. இவ ஹீரோயின்னா  ஹீரோ யாரோ...?

ரங்க:- ஆணும் பெண்ணும் சரி சமம்னு நினக்கிற இந்தக் காலத்து ஆள் நீயா இதெல்லாம் தப்புன்னு நினைக்கிறெ.

ராஜு:- ஆணும் பெண்ணும் சமம்னு நினைக்கிறவந்தாம்பா நான். இருந்தாலும் பருவ காலத்து விகற்ப உணச்சி இல்லாம பழகற ஒரு சமுதாயமா நாம இன்னும் மாறலையே அடுத்த பெண்ணை தாயாகவோ சகோதரியாகவோ பாவிக்கும் பக்குவம் இன்னும் இந்த சமுதாயத்தில் மலரலையே. என்ன இருந்தாலும் இங்க ஒரு பெண் சாதாரண வாழ்க்கையை சாதாரண முறையில் சாதாரணமாக வாழாதவரை, இந்த சாமானுய சமுதாயம் அவளை ஒரு சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்வதில்லையே.

ரங்க:- அடுத்தவர்கள் எப்படி யிருந்தால் நமக்கென்ன ராஜு.! மேலும் சமுதாயங்கறது நம்மைப் போல் நாலு பேர் சேர்ந்து உருவாக்கறதுதானே. நாம் மாற ஆரம்பிச்சா இந்த சமுதாயம் தானா மாறுது.

மாலா:- ( உள்ளிருந்து ) சாப்பாடு ஆறி அவலாகிறது. உங்க டிஸ்கஷன்களையெல்லாம் சாப்பாட்டுக்குப் பிறகு வெச்சுக்கலாமே.

ரங்க:- இதோ வந்திட்டேம்மா. !

                                                                                  (திரை ) 



காட்சி- 2
------
இடம்:- பூங்கா.
--------------
பாத்திரங்கள்-  மாலா, மோஹன்.
( திரை உயரும்போது, மோஹன் மாலாவுக்காகக் காத்திருக்கிறான். .மாலா வந்ததும் ,சற்று விறைப்பாக , கோபித்த பாவனையில் நிற்கிறான்.)

மாலா:- ( நாடக பாணியில் ) அன்பர் சற்றே கோபமாக இருக்கிறார்போலும். எங்கே, அங்கே சென்று கோபத்தின் காரணத்தை அறிந்து வருவோம். அன்பே....ஆ ஆ ஆ ...கொழுந்துவிட்டு எரியும் கோபத்தின் காரணம் ....?அருகேயே செல்ல முடியவில்லையே.......!

மோஹன்:- கோபமல்ல பெண்ணே... விரகதாபம்.

மாலா:- ரொம்ப ஆபத்தாச்சே அது.

மோஹன்:- அதன் காரணகர்த்தாவே நீதானெ. அது சரி. ! இன்னிக்கு நீ ரொம்ப லேட். இனிமே இப்படி லேட்டானா உன்னைத் தேடி நான் உங்க வீட்டுக்கே வந்திடுவேன்.

மாலா: - ஐயையோ ... அப்படி எதுவும் செய்யாதீங்க. தகுந்த சமயத்தில ,தக்க தருணத்தில நானே உங்கள என் அப்பாகிட்ட அறிமுகப் படுத்தறேன்.

மோஹன்.:- ஏன் மாலா... எனக்கு இப்ப உங்க அப்பாவைப் பார்த்து பெண் கேட்கத் தகுதி இல்லைங்கிறதால தானே நீயும் என்னை அறிமுகப் படுத்தத் தயங்கறே.எனக்கு ஒரு வேலை இல்லை, நானே எனக்கு ஒரு பாரமா இருக்கும்போது, காதல் ஒரு கேடா... கல்யாணம் ஒரு தேவையா....?

மாலா:- என்ன மோஹன் என்னென்னவோ பேசறீங்க. ..

மோஹன்:- மாலா ... நன் ஒரு நல்ல பொசிஷனுக்கு வரத்தான் போறேன். நீயும் பார்க்கத்தான் போறே. என்னைப் பார்த்தா ..ஏன்.. உன் அப்பாவுக்கே எனக்கு ஒரு நல்ல வேலை கொடுக்கணும்னு தோணுமே...!

மாலா:- ஆ   ஹா..  ! எனக்கு எப்படி அந்த யோசனையே தோணாமப் போச்சு. . மோஹன் நீங்க இப்பச் சொன்னீங்களே அதே மாதிரி எங்கப்பா கம்பனியிலேயே ஒரு நல்ல வேலை வாங்கித்தர நானாச்சு. நான் சொல்ல வேண்டியதுதான். ..உடனே எங்கப்பா என் ஆசையை நிறை வேற்றுவார்.

மோஹன்:- உண்மையாகவா மாலா... ஆனால் அதுல ஒரு பிரச்சனை இருக்கு. நான் தன்மானமுள்ளவன். எந்த வேலையும் என் தகுதிக்காக கொடுப்பதாகவே இருக்க வேண்டும். உனக்காகவோ இல்லை வேறு யாருக்காகவோ வேலை கிடைப்பதானால் வேண்டாம். அதையும் உங்கப்பாகிட்ட முதலிலேயே சொல்லிடு.

மாலா:- அந்தப் பிரச்சனையை எங்கிட்ட விட்டுடுங்க. ஆமாம் மோஹன். உங்களுக்கு என் மேல் அன்பிருக்கு அல்லவா..?

மோஹன்:- என்ன கேள்வி இது. இதை சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா ...

மாலா:- சில விஷயங்கள சொல்லாமலேயே புரிஞ்சுக்க முடிஞ்சாலும் , சொல்லிக் கேட்பதிலும் ஒரு தனி இன்பம் இருக்கு தெரியுமா...?

மோஹன்:- அப்படியா... அது என்ன இன்பம்...

மாலா:- அதுதான் சொல்ல முடியாதது. உணர்ந்து கொள்ள மட்டும்தான் முடியும்.

மோஹன்: - என்ன மாலா புதிர் போடறே. அந்த உணர்ச்சி எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியக் கூடாதா?

மாலா:- ஏன் தெரியக் கூடாது..? இப்பச் சொல்லுங்க..

மோஹன்:- என்னன்னு. ..

மாலா:- என் மேல அன்பு இருக்கான்னு...

மோஹன்:- அதுதான் சொன்னேனே.... இருக்குன்னு.

மாலா:- அப்படியில்லீங்க.. இப்படி... போங்க மோஹன் எனக்கு வெக்கமா இருக்கு...

மோஹன்:- மலா...! நான் உன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் தெரியுமா....எந்தன் உயிருக்குயிர் ..நீ நாடும் அன்பு நான்... என் கண்ணின் மணி நீ ..உந்தன் கருத்தின் ஒளி நான்... நற்பண்ணின் சுவை நீ .. உன் பாவின் நயம் நான்... என் எண்ணின் பொருள் நீ  உன் எண்ணம் சொல்லாதது ஏன்.... மாலா..!

மாலா:- அடேயப்பா.... காதற்கவிதையே பாடிடுவீங்க போலிருக்கே.

மோஹன்:- காதலில் கட்டுண்டிருக்கும்போது, சாதாரணமானவனும் கவிதை மட்டுமா பாடுவான்  விண்ணையுஞ் சாடுவான்... பண்ணையும் பாடுவான். ஆரம்பிக்கட்டுமா.

மாலா:- விண்ணைச் சாடவா.... பண்ணைப் பாடவா...

மோஹன்:- பாடத்தான்...

மாலா:- ஐயையோ இப்ப வேண்டாம். எனக்குப் பயம்மா இருக்கு. இன்னொரு நாள் பாடுவீங்களாம் நானும் பொறுமையாக் காதைப் பொத்திட்டுக் கேட்பேனாம்....

மோஹன்:- காதைப் பொத்திட்டுக் கேட்பியா... YOU SILLY GIRL..!

மாலா:- DON’T FORGET.நாளைக்கு சாயங்காலம் உங்களை என் தந்தையிடம் அறிமுகப் படுத்துவென். அதற்கு முன்னே வழக்கம்போல் இங்கே சந்திப்போம். TA..TA…!

                                        ( திரை ):
                                                                                                    ( தொடரும்.)
     ,                                                            


...