செவ்வாய், 19 நவம்பர், 2019

சரித்திரம் மாற்றப்படுகிறதா



சரித்திரம் மாற்றப்படுகிறதா
 -------------------------------------------

ரசியல் பதிவுகள் எழுதக்கூடாது  என்றிருந்தேன் இது அரசியல் பதிவா எனக்கு அப்படி தெரியவில்லை  சமீப காலமாக சரித்திரத்தையே மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன 8-11-2019 ஹிந்து நாளிதழில் கரன் தாப்பரின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்எவ்வாறு சரித்திர நிகழ்வுகள்  மாற்றப் படலாம் என்பதின் இன்சைட்கிடைத்தது  வல்லபாய் படேலுக்கு அர்ப்பணம்  என்னும் வீதம்  காஷ்மீரின் ஷரத்து 370வல்லபாய் படேலின் கருத்துக்கு எதிரானது என்னும் வகையில் அவரது பிறந்தநாளில் ,அதை ரத்துசெய்த செயலுக்கு காரணம்காட்டினார்கள் பிரதமர்மோடியும் அமைச்சர் ஷாவும்  அது எவ்வளவு தவறு என்று அந்தக் கட்டுரை கூறுகிறது ஆர்டிகிள் 370ஐ நீக்குவதே படேலின் கனவாக இருந்தது என்றும் அங்கலாய்த்திருக்கிறார்கள்  அது சரி எப்படி நிகழ்வுகள்மாற்றி  உரைக்கப்படுகின்றன என்பதற்கு இதுவுமொரு உதாரணம் ஸ்ரீநாத் ராகவன்  அந்த 370 ஆர்டிகிளை கான்ச்டிட்யூஷனில் கொண்டுவரும் முகாந்திரமான முதல்  மீட்டிங் படேலின் வீட்டில் 1949ம் ஆண்டு மேமாதம் 15 -16 தேதிகளில்  நடந்தது  ஜம்மு காஷ்மிர் பிரதமர் ஷேக் அப்துல்லாவிடம்இது பற்றி பேச அப்போதைய  மந்திரி N G  AYYANGAR ஒரு ட்ராஃப்ட் தயார் செய்துஅதை படேலின் கவனத்துக்கு  கொண்டு வந்து  அது படேலின்  ஒப்புதல் பெற்றால் தான் ஜவஹர்லால்ஜி அப்துல்லாவுக்கு தெரிவிப்பார் என்றும் கூறி இருந்தார் ஆர்டிகிள் 370ம் மற்ற காஷ்மீர் பற்றிய ஷரத்துகளும் படேலின் ஒப்புதல் இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும்  என்பதே முக்கியமாக அறியப்பட வேண்டியது படேலுக்கு மறுக்க உதவும்வீட்டோ தான் அது திரு ராகவன்   டெலிக்ராஃப் க்கு ஆகஸ்ட்  13 ம் நாள் 2019 ம் ஆண்டு கூறியதில் ஷரத்து 370 முழுக்க முழுக்க படேலுடையது என்றிருக்கிறார்  காங்கிரஸ்  லெஜிஸ்லேச்சர் பார்ட்டியை ஆர்டிகிள் 370 ஐ ஒப்புக்கொள்ளும்  படியும் செய்திருக்கிறார்
அக்டொபர் 1949ல்  நேரு அயல் நாட்டுக்குச்சென்ன்றிருந்தபோது படேல் ஆக்டிங்க் பிரதமராகஇருந்தபோது  ஷேக் அப்துல்லா இந்தமாதிரியான விசேஷ  ஷரத்துகளுக்காகபேசிய போது படேல் எந்தமாற்று கருத்தையும் கூறவில்லை  இவற்றிலிருந்து படேலுக்கு எந்தமாற்றுக் கருத்தும் இருக்கவில்லைஎன்றும் தெரிகிறது வல்லபாய் படேலுக்கு ஒருமிகப்பெரிய சிலைஅமைத்து படேலுக்கு தனி பெருமை அளித்து தங்களில்  ஒருவராகக் காட்டி சொந்தம் கொண்டாடுகிறார்கள்  ஆனால் சரித்திரத்துக்கும் MYTH க்கும்   வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள் படேலொரு தேசிய தலைவர்  அவர்புகழ் பரப்ப எதுவானாலும் செய்யட்டும் ஆனால்  சரித்திரத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டாமே
அண்மைக்கால சரித்திரமே இப்படி என்றால் நினைவு இல்லாதிருக்கும்  பழங்கால சரித்திரம் பற்றிக்கேட்க வேண்டாம்
 


  



         
 

 

ஞாயிறு, 17 நவம்பர், 2019

பல்லுடைக்க ஒரு பாடல்



                                               பல்லுடைக்க  ஒரு பாடல்
                                             ========================


பல்லுடைக்கும்  பாடல்கள்
---------------------------------------------
திதத் தத்தத் தித்தததிதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
( நன்றி:- விக்கிப் பீடியா. )
தென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார்.

திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.


சுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.
முத்தை திரு பத்தித் திருநகைஎன்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம்  வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அருணகிரிநாதர் வாதில் வென்ற பாடலும் பொருளும் பதவுரையும் தான் இப்பதிவின் முதலில் கண்டது.


இப்போதைய பாடல் ரசிக்கலாம் 









வியாழன், 14 நவம்பர், 2019

நீங்கள் தான் உங்கள் brand



                                 நீங்கள்தான் உங்கள் ப்ராண்ட்
                                ----------------------------------------------


நீங்கள்தான் உங்கள் BRAND
ஒரு பொருள் விளம்பரப் படுத்துவதால் சேர வேண் டியவர்க்கு  போய்ச்சேருமென்பது நம்பிக்கை  ஒரு விதத்தில் நாமும் ஒரு ப்ராண்டே
 நம் எண்ணங்கள் நம்பிக்கைகள் எவ்வாறு பிறரால் அங்கீ கரிக்கபடுகிறதோ  அதுவே நம் ப்ராண்ட் கடத்தப்படும் எண்ணங்கள் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதே நம் ப்ராண்டின்  வலிமையோ பலவீனமோ நம் பலங்களை நாம் கொட்டி முழக்க வேண்டும் ஆனால் அது அடுத்தவனின் செவிப்பறையை கிழிக்காதிருக்க வேண்டும்நீங்கள் உங்களை சரியாக ப்ராண்ட் செய்யாவிட்டல் மற்ற்வர் உங்களை தவறாக ப்ராண்ட்  செய்யக் கூடும்உங்களின்   நம்பகத்தன்மை  உங்கள் செயல்களின் மூலம்  வெளிப்பட வேண்டும் உங்கள் செயல்கள் உங்களைப்பற்றிய பெர்செப்ஷனுக்கு அடிகோலும்
மற்றவரிடமிருந்து வித்தியாசமாய் இருங்கள் மற்றவர்களிடம்  கூட இருங்கள் நீங்கள் நீங்களய் இருங்கள்மெய் பேசுவதால் தவறுகள் குறையலாம்  நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டுமோ  அது குறித்து உங்கள் செயல்கள் இருக்கட்டும் உங்களை பிறரிடமிருந்து பிரித்துகாட்டுவது எது என்பதை முதலில் அனுமானிக்க வேண்டும்உங்கள் குறிக்கோள் மிகவும் முக்கியம் அது பற்றிய சிந்தனை எப்போதும் கொழுந்து விட்டு எரிய வேண்டும்
உங்கள் ப்ராண்ட் உங்களைப் பற்றிய  தொகுப்பாக இருக்க வேண்டும் மற்றவர்கல்டமிருந்து எங்கு வித்தியாசப்படுகிறிர்கள் என்பது உங்களுக்கே விளங்க வேண்டும்   உங்களை பிறர் கவனிக்க வேண்டும் சொல்வதை ப்ழக்கப்படுத்துபவராக இருத்தல் அவசியம் உங்களை நீங்களே ரேட் செய்யுங்கள்  தவறு என்று தெரிந்தவற்றை   திருத்திக்கொள்வதுஅவசியம்   ஆனால் அது உங்கள் தவறை எல்லோருக்கு ம் தெரிவிக்கும்  விதமாக வேண்டாம்   க்ரெடிபிலிடி  குறைய வாய்ப்பு உண்டு  
ஒருவனுக்கு இல்லாத குணத்தை  இருப்பதாக காட்டுதல் கூடாது உனக்கு எது  உரியதோ அதைப்பெற நினைப்பது தவறல்ல உங்கள் ப்ராண்ட் உங்களைப்பற்றிய புரிதலைக்கூட்ட வேண்டும் உங்களைப் பற்றிய ப்ராண்ட் வளர்க்கும் போது  முக்கியமாய் கருத்தில் கொள்ள வேண்டியது  உண்மையாய் இரு புத்திசாலித்தனமாயிரு ஒரிஜினலாய் இரு  வித்தியாசமாய் இரு
சரியாகச் சொல்   மாற்றிச்சொல்லாதே  தனித்துவமாய் இருஒரேபோல் கருத்துடையவனாக இரு  எதுபற்றிகருத்திட வேண்டும்  என்பதில் தீர்மானமாய் இரு  எதன் வழியே கருத்திட வேண்டு என்று தீர்மானி உங்கள் ஆடியென்சை புரிந்து கொள்குறிப்பிட காலத்தில்தொடர்பில் இரு
சொல்ல வேண்டியதை  கவனமாகச் சொல் விருப்பு வெறுப்பு இல்லாமல் சொல் சொல்வதற்கு முன்  யோசி வார்த்தைகளில் கவனமாக இரு ன் கருத்துகளுக்கு  ரெஸ்பாண்ட் செய்வோருக்கு  மனம் புண்படாதபடி பதிலளி  
 உனக்கு தெரியாதவற்றை சொல்லாதே உன் குறைகளையும் தெரிந்துகொள் பலருக்கும் ருசிக்காத கருத்துகளைத்தவிர்   தனிப்பட்ட முறை தாக்குதல்களை தவிர் பிறர் கருத்துகளை திருடாதே
 உன் சக்தியை உணர் என்ன செய்ய விரும்புகிறய் என்பதில் தெளிவாய் இரு சொல்ல விரும்புவதை நீயாகச்சொல்  உன்னை மறுபடி மறுபடி  புரிண்டு கொண்டு வெளிப்படுத்து
 நான்பதிவெழுத தொடங்கிய காலகட்டத்தில் எழுதியவை இன்றும்  ரெலெவ்ண்ட் ஆக இருப்பதுபோல் இருக்கிறது
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.

நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.


 


திங்கள், 11 நவம்பர், 2019

பிறந்த நாள் மற்றும் மணநாள்


                                             பிறந்த நாள்  மற்றும்  மண நாள்
                                                 -----------------------------------------------

 ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் எட்டு பத்துடன்   ஒராண்டும்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.

அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?


குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! 

பிள்ளைகளின்   வாழ்த்து
இந்த பிறந்த நாள் முதியோர் இல்லம் வெறிச்சோடி இருக்குகிறது இருந்தாலும்  பழைய நா ட்களைச் சற்றே  புரட்டிப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறில்லையே   இந்த ஆண்டு கேக் செய்யவும் மனசில்லை எனது 75 ம் பிறந்த நாளில் என்நூல் வழ்வின் விளிம்பில்  வெளியாகஎன்மக்கள் குறியாய் இருந்து அதையே என்பிறந்தநாள்பரிசாக அளித்ததும் நினைவுக்கு வருகிறது ஒரு ஆண்டு பிறந்த நாள்வாழ்த்துக்காக  என் மக்கள் பிரயத்டனம் எடுத்ததும் நினைவுக்கு வருகிறது   இனி நினைவிலாடும்   சில நிகழ்வுகள்  புகைப்பட உலா ?
திருமண வைபவம்



இந்த பிறந்ததேதி  ஒரு யுனிக் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்   இவ்வாறு வரும்
11- 11 - 11 நவம்பரில்பிறந்த  புகழ் பெற்றவர்களின்  பட்டியல்  ஜவஹர்லால் நேரு  இந்திரா காந்தி   ஜீஎம்பால சுப்பிர மணியம்





சஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூரில்























சனி, 9 நவம்பர், 2019

தீபாவளியும் வந்து போயாச்சு


                                   தீபாவளியும்   வந்து போயாச்சு
                                   -----------------------------------------------

ஒரு வழியாய் இந்த ஆண்டு தீபாவளியும்வந்துபோயாச் எங்கே மழை வந்து கிடைக்க இருக்கும்  மகிழ்ச்சியையும்கெடுத்து விடுமோ என்னும்பயம் அர்த்தமிலாது போயிற்று தீபாவளி திருநாளில் மட்டுமே நான் கலந்துகொள்வதுவழக்கம்என்மக்கள் இதுவரை எப்படியாவது  தீபாவளிக்கு வீட்டுக்கு வந்து விடுவார்கள்  அன்று என் சக்திக்கு ஏற்றபடிபுதுத்துணிகள் எல்லோருக்கும்வாங்கி விடுவேன் என் குடும்ப உறவுகள் என்றுசொல்லிக் கொள்ள சுமார் ஒருடஜன் உருப்படிகள் தேறும் என்மகன்கள் அவர்களதுமனைவிமார்கள் அவர்களதுகுழந்தைகள் என் மைத்துனன்  மனைவியுடன்   இந்த ஆண்டு என்பேரனும்  அவன் மனைவியும்எதிர்பார்த்தேன்  என் மூத்தமகனின்   மாமியார் அவனுடன் தற்சமயம் சென்னையில்  இருப்பதால் அவர்களும்வருவார்கள் என்று நினைத்தேன்   அவர்களால் பயணப்பட முடியாததால்  என் மூத்தமருமகளும் வர இயலவில்லை ஆனால் எனிளையமகன் அவனது செல்ல நாயுடன்  ஆஜர்
 சம்பிரதாய தீபாவளி எல்லாம்  இல்லை எண்ணைக் குளியல் போன்றவை நாங்கள்திருச்சியில் இருந்தபோது  விடியற்காலை  சுமார் நான்கரை  மணிக்கு  முதலில் ஒருலக்ஷ்மி வெடி கொளுத்தி தீபாவளி தொடங்கும் இந்த ஆண்டு பட்டாசே இல்லை  யாருக்கும் ஈடுபாடில்லை பலகாரங்களில்  குலாப் ஜாமூன்மாத்திரம் மனைவி செய்தாள் மற்றபடி என் மகன்கள் தேன் குழல் மனோஹரம்  நாடா பக்கோடா  லட்டு  என்று வாங்கி வந்திருந்தனர்

எனக்கு இம்முறை கார்டுராய் பாண்ட்இரண்டு வாங்கினேன் எல்லோருக்கும்புடவை சர்ட் எல்லாம் வாங்கினேன்இதெல்லாவற்றையும் விட  எல்லோரும்கூடி இருந்ததே மகிழ்ச்சி  அதை புகைப்படங்கள் எடுத்து  பகிர்ந்து கொண்டோம் என் இரண்டாம் மகனின் செல்லதையும்  அழைத்து வந்திருந்தான்அது ஆளைக்கண்ட சமுத்திரம்போல் அங்கும் இங்கு ஓடியது  எல்லோர் கவனமும் அதன் மேலேயே இருந்தது  
மைத்துனன்  நான்மகன் 

பேத்தி
என் இரு மகன்கள் 
என் இரண்டாம்  மகனின் குடும்பம் 
இண்டாம்மகன் நான்  மைத்துனன்  மூத்தமகன் 
பேரன் மருமகப் பேத்தியுடன் 
எங்கள் குடும்பம்
காலை உணவு 
ரிலாக்ஸ்
செல்லம் ரெஸ்டிங்
 
பெண்டிர் சக்தி
பேத்தியும்  பேரனின் மனைவியும்


தீபாவளிக்கு  செய்ய விரும்பிய இனிப்பு