உரத்த சிந்தனைகள்.
---------------------------
இந்தப் பதிவு உங்களைப் பற்றியோ என்னைப் பற்றியோ
அல்ல. நம்மைப் பற்றியது.. நம் நாட்டின் நிலையைப் பற்றியது. நம் சமூகம் குறித்தும்
நாம் பின் பற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியும் சிலமணித் துளிகள் சிந்திக்கக்
கோருவது..
ஒரு கொசு கடித்தால் முதலில் நாம் தேடுவது கொசுவத்திச்
சுருளோ கொசுவை விரட்ட ஏதாவது repellent- ஓ தான். நம்மைப்
பரிபாலிக்கும் நகர சபையை ஏன் நாம் ஒன்றும் கேட்பதில்லை.?
குழாயில் வரும் தண்ணீரைக் குடிக்க நமக்கு தைரியம்
இல்லை. பாட்டில் நீரையோ, அல்லது ஏதாவது சுத்திகரிக்கும் முறையையோதான் நாடுகிறோம்.
குழாயில் வரும் நீர் குளிக்கவும் துணி துவைக்கவும் மட்டும்தான் பிரயோசனப்
படுமா.?குழாயில் குடிக்கவும் சமைக்கவும் நீர் பெறும் உரிமை இல்லையா.?
மின்தடை என்றால் இன்வெர்டர் அல்லது தடையில்லா
மின்சாரம் கிடைக்க ஏதாவது ஜெனெரேடரையோ ஏன் நாடவேண்டும். மின் கம்பிகளின் மூலம்
மின்சாரம் கிடைக்கப் பெறுவது நமது உரிமை அல்லவா. ?
வாகனங்களில் நல்ல சாலைகளில் பயணிக்க டோல் வரி
வசூலிப்பவர்கள், ,குண்டுங் குழியுமான சாலைகளில் பயணிக்க வைப்பதை கேட்க வேண்டாமா.?
வீட்டுவரி வசூலிப்பவர்கள் மிகச் சாதாரணமான
அடிப்படை வசதிகள் செய்து தரல் அவசியம்ல்லவா.?
தொலைக் காட்சிகளில் வாய் கிழியப் பேட்டி
எடுப்பவர்கள் நடுநிலையில் செய்திகள் தர வேண்டாமா?
சட்டங்களை இயற்றுபவர்கள் சட்ட திட்டங்களுக்குக்
கட்டுப் பட்டு நடக்க வேண்டாமா?வரி ஏய்ப்பவனும் , கொள்ளை அடிப்பவனும், குடிகாரனும்,
கற்பழிப்பவனும் கொலைகாரனும் எப்படி
சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ அங்கம் வகிக்கலாம்?
அப்படி நிலை கெட்ட மனிதர்கள் பேசுவதையும் தலைமை
வகிப்பதையும் கல்லூரிகளும் மேலாண்மை பயில்விக்கும் கலாசாலைகளும் வாய் பிளந்து
கேட்டு கை தட்டி ஏன் ஆரவாரிக்க வேண்டும்?
குற்றம் செய்யும் சாதாரணக் குடிமகனுக்கு சட்டம்
துரிதமாக செயல்பட்டு
நீதி வழங்குகிற் மாதிரி பதவியில் இருப்பவருக்கும்
பணம் இருப்பவருக்கும் ஏன் விசாரணைகளும் தண்டனைகளும் வழங்குவதில் அசாதாரண கால
தாமதம்.?
இப்படி கேள்விகள் கேட்கும் நாம் எப்படி
இருக்கிறோம்.? சர்வ சாதாரணமாக விதிகளை மீறுகிறோம். சாலை விதிகளை மீறி ரூ.நூறு கொடுக்கத்
தயாராய் இருக்கும் நாம் லஞ்சம் பற்றிப் பேசலாமா.? எந்த ஒரு வேலைக்கும் ஒரு விலை
கொடுத்து சாதிப்பதை தயங்காமல் செய்யும் நமக்கு லஞ்சத்தை பற்றிப் பேச என்ன உரிமை
இருக்கிறது. பள்ளிகள் வியாபாரகூடமாகி விட்டது என்று கூக்குரல் இடும் நாம் நம்
பிள்ளைகளை அங்கு சேர்க்க எந்தவிலையும் கொடுக்கத் தயாராக இருப்பதேனோ. இலவசங்கள்
கொடுத்து நம்மை ஏமாற்றும் அரசை நாம் மீண்டும் மீண்டும் அரசு கட்டிலில் அமர்த்துவது
ஏனோ.?வாழ்க்கையில் மதிப்பீடுகள் மறைந்து விட்டன என்று குறை கூறும் நாம் அவற்றை
மீட்டெடுக்க என்ன செய்கிறோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை சின்னச் சின்ன நல்ல
பண்புகளைப் பேணவும் வளர்க்கவும் செய்தால் ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுங்கான சமுதாயம்
மலர வழியாகாதா. ?CHARITY BEGINS AT HOME. என்று நாம் உணர வேண்டாமா..SMALL THINGS
MAKE PERFECTION. BUT PERFECTION IS NO SMALL THING. என்று அறிவது அவசியமல்லவா.
லஞ்சத்துக்கு எதிராக ஒரு முதியவர் தலைமையில் போராட முன் வந்தவர்கள், அந்தப்
போராட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும். WRONG MEANS WERE CHOSEN TO MEET THE
RIGHT ENDS என்று புரிந்து கொண்டோமென்றால் சரியான பாதையை த் தேர்ந்தெடுக்கலாமே.
ஒரு பெண் சீரழிக்கப் பட்டாள் என்று தெரிந்தவுடன் பொங்கி எழுந்த இளைய சமுதாயம் VESTED INTEREST
கொண்டவர்கள் போராட்டத்தைக் கையில் எடுப்பதால்
விளைந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள வில்லையா.?போராட்டங்கள் தொடர வேண்டும். நம்
செயலின் மீது நம்பிக்கை வேண்டும். ஆக, நம் இலக்கு தெரிந்து நாமும் நல்லவர்களாக
இருந்து போராடல் அவசியம். WE SHOULD NOT REST TILL THE GOAL IS ACHIEVED.
-------------------------------------------------------- . .
. .
நல்ல சிந்தனைகள். இப்படி அங்கலாய்ப்பதைவிட வேறு ஒன்றும் செய்யக் கையாலாகாதவர்களாய் போய்விட்டோமே என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கள் அருமை, காலம் ஒரு நாள் மாறும் என்று நம்புவோமாக......
ReplyDeleteகுற்றம் செய்யும் சாதாரணக் குடிமகனுக்கு சட்டம் துரிதமாக செயல்பட்டு
ReplyDeleteநீதி வழங்குகிற் மாதிரி பதவியில் இருப்பவருக்கும் பணம் இருப்பவருக்கும் ஏன் விசாரணைகளும் தண்டனைகளும் வழங்குவதில் அசாதாரண கால தாமதம்.?//
இந்த நிலை காலங் காலமாய் இப்படி தானே சார் நடந்து கொண்டு இருக்கிறது.
உங்கள் உரத்த சிந்தனைகள் எல்லாம் நியாயம் ஆனது தான்.
அருமையான பதிவு ஐயா. சிந்திக்க வேண்டியது.
ReplyDeleteஉரத்த சிந்தனை என்னுள்ளும் ஒரு
ReplyDeleteசிறு பொறியை விதைத்துப் போனது
மனம் தொட்ட அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
நம் இலக்கு தெரிந்து நாமும் நல்லவர்களாக இருந்து போராடல் அவசியம்.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்,
@ கோமதி அரசு,
@ செம்மலை ஆகாஷ்,
@ ரமணி.
@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.