Wednesday, November 26, 2014

அடி மேல் அடி அடித்தால்


                                     அடிமேல் அடி அடித்தால்
                                      -----------------------------------


 சிலவிஷயங்கள் ஓரிரு முறை சொல்லிப்போனால் போய்ச் சேருகிறதா தெரியவில்லை. அதுவும் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களைக் குறித்துப் பதிவிட்டால் பதிவுலகில் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். ஒருவர் புரட்சி செய்வதாக நினைக்கிறார். இன்னொருவர் இவருக்கு lateral thinking என்கிறார். இருந்தாலும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பலரும் செயல்படும்போது என் மனமும் சிறிது வருந்துகிறது என்று சொன்னால் மிகையாகாது. இருந்தாலும் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது தவிர வேறெண்ணமில்லை எனக்கு. அனாதிகாலமாக பாதுகாக்கப்பட்ட சில எண்ணங்களை எளிதில் மாற்ற முடியும் என்று தோன்றவில்லை.
சில் நாட்களுக்கு முன் என் பேரன் ( வயது 9 ) கடவுள் பற்றி நாங்கள் கூடி இருந்தபோது கேட்டான். அவனது பாட்டி ( என் மனைவி) புரிந்தோ புரியாமலோ சில ஸ்தோத்திரங்களை எப்போதும் படித்துக் கொண்டிருப்பவள். ஒரு முறை வீட்டின் மேல்தளத்திலிருந்து  கீழே விழுந்து காயம் ஏதும் படாமல் தப்பித்த என் மகன் அதற்கு அவன் அணிந்திருந்த ஆஞ்ச்நேயர் டாலர்தான் காரணம் என்று நம்புபவன்.. என் மருமகளும் காரணங்கள் ஏதும் கேட்காமல் இருக்கும் குண முடையவள். இப்படி இருக்க என் பேரனின் கேள்வி எனக்கு ஆச்சரியமளித்தது. கேள்வி கேட்க வேண்டும் என்னும் தாத்தாவின் குணமிருப்பது மகிழ்ச்சி அளித்தது. அவன் கூடவே கடவுள் என்று ஒன்றுமில்லை. எல்லாமே சயின்ஸ்தான் என்றான். நான் அவனிடம் வளரும்போது கேள்விகள் கேட்டு சரியான பதில்களைப்பெற வேண்டும். இப்போதே எதையும் ஒரு சார்பாக நினைக்காதே என்றேன்.

ஆக மீண்டும் கடவுள் பற்றிய என் எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்தது. நம் நாட்டில்தான் எத்தனைக் கடவுள்கள். ?எத்தனைக் கதைகள்.?பண்டித் ஜவஹர்லால் நேரு எழுதி இருந்ததைப் படித்த நினைவு வருகிறது. கடவுள் என்பவரே மனிதனின் சிருஷ்டி. காரணம் தெரியாத நிகழ்வுகளுக்குக் காரணங்காட்ட அவனால் சிருஷ்டிக்கப் பட்டவரே கடவுள். அதை நம்புபவரை ஆத்திகர் என்றும் நம்பாதவரை நாத்திகர் என்றும் கூறுகிறார்கள். நான் எழுதுவது ஆத்திக நாத்திக வாதம் பற்றியதல்ல. மனிதன் ஏன் இத்தனைக் கடவுள்களைப் படைத்தான் என்னும் கேள்விக்கு பதில் காணவே இதை எழுதுகிறேன், பகிர்கிறேன்
கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறைகற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்
ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கடவுள் வழிபாட்டுக்கும் விக்கிரக ஆராதனைக்கும் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணுசிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாகஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும்பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

?
கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ..
 காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால்செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசிநல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  சரிதானா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பது தவறா.?  
மக்களின் மனநிலையும் அணுகுமுறையும் தெரிந்தும் தொடர்ந்து எழுதுகிறேன் என்றால் சில விழுக்காடு மக்களாவது சிந்திக்கத் துவங்குவார்கள் எனும் நம்பிக்கைதான்   
  




  

46 comments:

  1. இதற்கு என்ன பதில் எழுதினாலும் (எனக்கே) திருப்தியாக இருக்காது. நல்ல சிந்தனை. ஓடும் சிந்தனையின் கேள்விகளுக்கு ஒருநாள் பதில் கிடைக்கலாம். அதிலிருந்தும் கேள்விகள் உருவாகலாம்!

    ReplyDelete

  2. வணக்கம் ஐயா நான் இறைவணக்கதில் ஈடுபாடின்றி இறை நம்பிக்கை வைத்து வாழ்பவன் இறைவன் என்பவன் இருந்தே தீரவேண்டுமென்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழப்பழகினால் அது நம்மை நல்வழிபடுத்தும் ஆனால் சடங்கு சம்பிரதாயத்தில் உடன்பாடில்லை
    இது சரி நியாயமான வழி, இது தவறு நியாயமற்ற வழி இதை அறிந்து வாழத்தெரியாதவன் மனித ஜாதியே அல்ல இதனைக்குறித்து நகைச்சுவையாக ஒரு பதிவிட்டு இருக்கிறேன் இணைப்பு கீழே.. தலைப்பு- Jingujang Manguny

    http://killergee.blogspot.com/2010/09/jingujang-manguny.html

    ReplyDelete
  3. “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே“
    என்ற அகத்தியர் பாடலும்,
    “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே“
    எனும் திருமூலர் வாக்கும் தங்களின் பதிவுகண்ட வழி மனந்தோன்றின அய்யா!
    என்வரை,
    “ ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே “ என்பதை நம்புகிறவன் நான்“
    பெரியாரிடம் கேட்டார்கள்,
    கடவுள் இல்லை இல்லை என்று சொல்கிறீர்களே?
    கடவுள் இப்பொழுது உங்கள் கண்முன் வந்தால் என்ன செய்வீர்கள்?
    கடவுள் உண்டு என்று சொல்லிவிட்டுப் போகிறேன், போய்யா!
    என்றாராம்அவர்.
    இதையும் ரசிக்கிறேன்.
    தங்கள் கருத்துகள் உயர்ந்தன அய்யா!
    நன்றி

    ReplyDelete
  4. சிந்தனைபகிர்வுகள்
    சிறப்பான வெளிப்பாடுகள்..

    ReplyDelete
  5. உயர்வான கருத்துக்கள் சார்! கேள்விகளும். நாங்களும் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தோம். அன்பே சிவம் என்ற தத்துவத்தில் (சிவம் என்பது இங்கு சிவ பெருமான் அல்ல)

    நம்மை மீறிய ஒரு பிரபஞ்ச சக்தி இருக்கின்றது சார். ஆனால் அதற்கு மனிதன் கற்பிக்கும் பெயர்களோ, உருவங்களோ அல்ல. பிரபஞ்ச்வியலில் இயற்பியலின் தத்துவம் இதைப் பற்றிப் பேசுகின்றது.

    சடங்குகளில் நம்பிக்கை இல்லை. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கின்றது.அதை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கிணங்க ஒரு உருவம் கொடுத்து, வழிபட்டு பல மூடநம்பிக்கைகளையும் வளர்த்துக் கொள்கின்றார்கள். அதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    சூரியனையும், இயற்கையையும் (ஐம்பூதங்கலையும்) வழிபட்டு வந்த மனிதன் பல கடவுள்களையும், தேவதைகளையும் உருவாக்கியதற்குக் காரணம், நதி சார்ந்த நாகரீகங்கள் உருவாகியதாலும், ஒவ்வொரு பகுதியிலும் அதன் நிலம் சார்ந்த, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அதனைச் சார்ந்த தொழில்கள், நாகரிகம், உணவு முறைகள், ஆடல்கள், பாடல்கள், பண்பாடு என்று வளர்ந்து அவர்களுக்கென்று அந்த சமுதாயத்திற்கென்று சில விதி முறைகள், பழக்கவழக்கங்கள், குறிகள், உடைமுறைகள் என்று வந்து அவை தங்களின் ஊர்க் காவல் தெய்வம் என்று உருவாக்கினர்....இப்படித்தான் பல தெய்வங்கள், பழக்க வழக்கங்கள். ஒரு குறிப்பிட்டச் சாதி எடுத்துக் கொண்டால் அந்தச் சாதிக்குள்ளேயே பழக்கவழக்கங்கள் மாறுபடுகின்றன. உங்களுக்கு அறியாதது அல்ல. இவை எல்லாம் பின்பற்றப்படுவதால்தான் ஒவ்வொரு குடும்பத்திலும், பிறந்த வீட்டு வழக்கம், புகுந்த வீட்டு வழக்கன் என்று பல பிரச்சினைகள் உருவாகி சமுதாயத்தை மட்டுமல்ல நாட்டையே சீர்குலைக்கின்றன.

    உங்கள் கருத்துக்களை எல்லோரும் பின்பற்றத் தொடங்கினால் நாடு அமைதிப் பூங்கா ஆகிவிடும் சார்...நடக்குமா சொல்லுங்கள்?!!

    (நாங்கள் உங்கள் சிந்தனையை லேட்டரல் திங்கிங்க் என்று குறிப்பிட்டிருந்தோம் அதைத்தான் சொல்லியிருக்கின்றீர்களோ...ஹஹாஹ்ஹ்!! அது உண்மைதானே சார் தவறில்லையே!)

    ReplyDelete
  6. மிகவும் கஷ்டமான பொருள் பற்றி சிந்தித்திருக்கிறீர்கள். ஆழமான சிந்தனைகள். கருத்து சொல்லவே தெளிவான சிந்தனை வேண்டும்.

    ReplyDelete
  7. கடவுளைப் பற்றிய சிந்தனைகள் சிறப்பானவை! தொடருங்கள்!

    ReplyDelete

  8. @ ஸ்ரீராம்
    எழுப்பும் கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கவில்லை. சிந்திக்கத் தொடங்கினாலேயே பாதி கிணறு தாண்டிய மாதிரிதான். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  9. @ கில்லர்ஜி
    வருகை தந்து கருத்துப் பகிர்வு செய்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete

  10. @ ஊமைக் கனவுகள்
    நான் ஒரு agnostic. ஆனால் பலரும் மூல காரணங்கள் பற்றிய சிந்தையே இல்லாமல் நம்பிக்கை எனும் பெயரில் செய்யும் செயல்களே என்னை இம்மாதிரி எழுத வைக்கிறது. என் பதிவில் நான் கடவுள் பற்றிய தர்க்க ரீதியில் ஆன சிந்தனைகளையே எழுப்பி உள்ளேன். வாசகப் புரிதலிலோ இல்லை சொல்லப் பட்ட விதத்திலோ எங்கோ பிழை என்று சொல்கிறது என் மனம்அகத்தியர் பாடலிலும் திருமூலர் வாக்குகளிலும் தெரித்து விழும் உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டனவா என்பதே என் ஆதங்கம். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  11. @ இராஜராஜேஸ்வரி.
    என் சிந்தனை வெளிப்பாடுகள் இருக்கட்டும். அவை இலக்கை அடைகின்றனவா என்பதே என் சந்தேகம் . வருகைக்கும் சாதுர்யமான பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  12. உயரிய கருத்துக்கள் ஐயா

    ReplyDelete

  13. @ துளசிதரன் தில்லையகத்து
    இருக்கிறது . இல்லை என்னும் சர்ச்சையில் நான் ஈடுபடவில்லை. இருக்கிறது என்று சொல்லும் போதுஎப்படி எங்கே என்னும் கேள்விகளைத் தவிர்க்கவே மக்களை சிந்திக்க விடாத கோட்பாடுகள் கொண்டுவரப் பட்டன. நம்பிக்கை என்னும் பெயரில் பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றுவதும் வேண்டுதல் என்னும் பெயரில் உயர் சாதியினர் உண்டு மிச்சம் வைத்த இலைகளில் உருளுப்வதையும் அறியும் போது நெஞ்சு பொறுக்காமல் அடிப்படைத் தத்துவங்கள் மேலேயே சந்தேகம் வருகிறது. பதிவுகள் எழுதுவோர் பலரும் நன்கு படித்தவர், பலரும் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் சிந்திக்க வேண்டும் என்னும் ஆதங்கமே என் பதிவு. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  14. @ டாக்டர் கந்தசாமி
    சிந்தித்து தெளிவு பெற்றவர்கள் கருத்துச் சொல்லத் தயங்குகின்றனர். எங்கோ தவறு செய்கிறோமோ என்னும் பயம்...? வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  15. @ தளிர் சுரேஷ்
    நான் தொடர்வது இருக்கட்டும் . நீங்கள் சிந்திக்கத் துவங்கி விட்டீர்களா சுரேஷ்..? வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ கரந்தை ஜெயக் குமார்
    வருகைக்கு நன்றி ஐயா. கருத்துக்களில் உடன்பாடென்றால் உரக்கச் சொல்லத் தயக்கமேன் ஐயா.?

    ReplyDelete
  17. ***மனசால், வார்த்தையால், செயலால் நல்லதே நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து வாழ உதவுகின்றன கடவுள் கதைகளும் வழிபாட்டு முறைகளும். காலம் காலமாக கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின் அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறும் கதைகளிலும் சடங்குகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன் சரிதானா.? வாழ்வின் உண்மை நிலைகளைப் புரிந்துகொண்டு வெறும் கதைகளையும் சடங்குகளையும் மறுதளிப்பது தவறா.?
    மக்களின் மனநிலையும் அணுகுமுறையும் தெரிந்தும் தொடர்ந்து எழுதுகிறேன் என்றால் சில விழுக்காடு மக்களாவது சிந்திக்கத் துவங்குவார்கள் எனும் நம்பிக்கைதான் ***

    ஆஹா! பிரமாதம் சார். "கடவுள்" தான் பலரையும் சிந்திக்க விடுவதில்லை!

    "நான் இருக்கும்போது நீ ஏன் சிந்திக்கணும். பேசாமல் என்னனை வழிபடு" என்று கடவுள் நிப்னைப்பதாக மனிதன் கற்பனை செய்துகொள்கிறானோ?! :)

    ReplyDelete
  18. //மனசால், வார்த்தையால், செயலால் நல்லதே நினைத்து , நல்லதே பேசி, நல்லதே செய்து வாழ்வதற்கு உதவுகின்றன - கடவுள் கதைகளும் வழிபாட்டு முறைகளும்.//

    ஆன்றோர்கள் சொல்லியதும் இதுவே..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  19. எதுவென்றாலும் நல்வழி சென்றால் சரி தான்...

    ReplyDelete

  20. அந்த காலத்தில் ( அறிவியல் வளராத காலம்) மக்களை நம்பிக்கை மூலமே நல்வழிப் படுத்தமுடியும் என்றெண்ணி இந்த கதைகளை புனைந்திருக்கலாம். அதனால் தாங்கள் கேட்ட ‘நம்பிக்கைகளின் அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறும் கதைகளிலும் சடங்குகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன் சரிதானா.?’ என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete

  21. @ வருண்
    வருகைக்கு நன்றி. கடவுள் சிந்திக்க விடுவதில்லை என்னும் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் நீங்கள் சிந்திக்கவில்லையா, நான் சிந்திக்கவில்லையா. இதற்கெல்லாம் காரணம் ஏதோ ஒரு விதத்தில் நம் அடிமை மனப் பான்மைதான். இதைத்தான் கீதை என் எண்ணப்பகிர்வுகளில் குறிப்பிட்டிருந்தேன். இவை திட்டமிட்டே நடத்தப் பட்டிருக்கிறது. ஆண்டை அடிமை மனப் பாங்கு நம்மை விட்டுப் போகவில்லை. ஒரு சாரார் போக அனுமதிக்க மாட்டார்கள். கடவுள் வழிபாடு என்பது வேறு. அதன் கிளைகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நம்பிக்கை சார்ந்த சம்பிரதாயங்கள் வேறு. இவர்களுக்குப் புரியவில்லையா இலை புரிந்து கொள்ள மறுக்கிறார்களா. ஒரு கருத்தாடல் நிகழலாம் என்று பதிவு எழுதினேன்பலரும் பதுங்குகிறார்கள் என்றே தெரிகிறது.

    ReplyDelete

  22. @ துரை செல்வராஜு
    கடவுள் கதைகளும் வழிபாட்டு முறைகளும் வாழ்க்கை நல்ல முறையில் நடக்க உதவுகின்றன என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. கடவுள் கதைகள் சில நல்வாழ்வுக்கு உதவலாம். ஆனால் வழிபாட்டு முறைகள் மக்களை திசைதிருப்பி விடவே உதவி இருக்கிறது.உங்கள் மனமே உங்களுக்கு எடுதுச் சொல்லும். வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  23. @ திண்டுக்கல் தனபாலன்
    /எதுவென்றாலும் நல்வழிச் சென்றால் நல்லதுதான்/ அப்படி இல்லாததுதானே ஆதங்கத்தின் காரணம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  24. @ வே. நடன சபாபதி
    /அந்தக் காலத்தில் (அறிவியல் வளராத காலம்).../ இப்போது அறிவியல் வளர்ந்து விட்டது என்றால் ஏன் கதைகளும் சடங்குகளும் , முன்னைவிட with a vengeance அனுஷ்டிக்கப் படுகின்றன.? /காலம் பதில் சொல்லும்/. இன்னும் எத்தனைக் காலம் என்று கேட்கத் தோன்றுகிறது. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  25. எல்லா செயலும் கடவுள் அருளால் நடக்கிறது என்று மட்டும் சொல்லாமல், கடவுள் நமக்குள் எப்படி இருந்து கொண்டு நடத்துகிறான், என்பதை அறிய வேண்டும்.
    அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். கடவுள் இந்த அணுவுக்குள்ளும் எம்மாதிரி இருந்து கொண்டு அதை நகர்த்துகிறான், சுற்றுகிறான், விளக்குகிறான் அல்லது தோற்றப் பொருட்களைக் கூட்டுகின்றான், குறைக்கின்றான் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு அறிவு இக்காலத்தில் வளர வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்.(வேதாத்திரி மகரிஷி)

    நீங்களும் ஞானி ஆகி விட்டீர்கள் சார்.

    கடவுள் நம்பிக்கை வைக்க வில்லை என்றால் இரண்டொழுக்கப் பண்பாட்டை மட்டு கடைபிடித்தால் போதும்.
    அது:-
    1.நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்

    2.துன்ப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

    என்னுடைய கருத்து வாழ ஏதாவது நம்பிக்கை வேண்டும்.

    நம்பிக்கை வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது.



    ReplyDelete

  26. @ கோமதி அரசு
    இதற்குத்தான் நான் என் சென்றஒரு பதிவில்you have to unlearn what you have learnt already before trying to understand new ideas. என்று எழுதி இருந்தேன். என் பதிவை கூர்ந்து படித்தீர்களானால் கடவுள் நம்பிக்கை பற்றி நான் பேசவில்லை. ஆனால் சில நம்பிக்கைகளை (மூட) அவர் பெயரால் செயல்படுத்துவதைத்தான் விளக்கி இருக்கிறேன் இதைச் சொல்ல ஞானி ஆகவேண்டாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  27. ஒவ்வொரு அணுவிலும் கடவுள் இருக்கிறார் என்றால் ,காளஹஸ்தி கோவில் மேல் இடி விழுந்தாலும் தரை மட்டமாகி இருக்கக் கூடாதே !தன்னைக் (சிலை )கடத்துபவனைக்கூட தடுக்க முடியவில்லை கடவுளால் !
    தன்னைக் காத்துக் கொள்ள முடியாத கடவுளா மனிதனைக் காப்பாற்றப் போகிறார் ?கெட்டவனுக்கு சாத்தான் பிடித்து விட்டதாக கூறுகிறார்கள் ,அந்தக் கெட்டவனின் உடலிலும் இருக்கும் கடவுளால் சாத்தானை உள்ளே வரவிடாமல் தடுக்க முடிய வில்லை ?பேசாமல் கடவுளுக்கு மேலான சாத்தானையே கும்பிடலாமே ?
    கேள்விகள் ஆயிரம் என்னிடம் உள்ளது....என் தேடல் தொடர்கிறது !

    இந்த பதிவை ஏன் தமிழமணத்தில் சேர்க்காமல் இருக்கிறீர்கள் ?உங்கள் சிந்தனை பரவலாக போய் சேர உடனே இணைத்திடுங்கள் அய்யா ..இது உத்தரவு இல்லை ,என் தாழ்மையான கோரிக்கை !
    சென்ற ஒருமுறை நான் இணைத்தபோது,பதிவிட்ட அடுத்த நாளில் இணைப்பதாக சொல்லி இருந்தீர்களே!

    ReplyDelete
  28. புலிவால் பிடித்திருக்கிறீர்கள்
    சட்டென விடவேண்டாம்
    எத்தனை ஆழம் போக முடியுமோ
    போங்கள்
    பார்த்தனுக்கு துணையாயிருந்தவன்
    உங்களுக்கும் துணையாயிருப்பான்
    வாழ்த்துக்களுடன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete

  29. @ பகவான்ஜி.
    / கேள்விகள் ஆயிரம் என்னிடம் உள்ளது. என் தேடல் தொடர்கிறது/ விருப்பு வெறுப்பின்றி , திறந்த மனதோடு தேடினால் நிச்சயம் பதில்கள் கிடைக்கும். சிந்திக்காமல் பழைய நம்பிக்கைக்கைகளிலேயே தொங்கிக் கொண்டிருந்தால், தூங்குவதுபோல் பாசாங்காக இருக்கும். தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன். நன்றி.

    ReplyDelete

  30. @ ரமணி
    தவறாகச் சொல்கிறீர்கள் புலிவால் பிடிக்கவில்லை. பூனைக்கு மணி கட்டியிருக்கிறேன் அடுத்த பதிவை எதிர்பார்ப்பதை விட என் முந்தைய பதிவு “ கீதைபற்றிய என் எண்ணப் பகிர்வுகள்” படியுங்கள்.பார்த்தனுக்குத் துணையாய் இருந்தவன் கூற்றுகளை நான் எவ்விதம் அணுகி இருக்கிறேன் என்று தெரியும்அவ்வப்போது வருகை தருவதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  31. //வெறும் கதைகளிலும் சடங்குகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்பவன் சரிதானா.? வாழ்வின் உண்மை நிலைகளைப் புரிந்துகொண்டு வெறும் கதைகளையும் சடங்குகளையும் மறுதளிப்பது தவறா.?//

    இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று சொல்லாத வரைக்கும் மற்றவர்கள் என்ன சொன்னாலும்
    அதை உங்களுக்காக எடுத்துக் கொண்டு வழுக்கிக் கொண்டு போக நிறைய வாய்ப்பிருக்கிறது.

    உதாரணமாக: சடங்குகள் வியர்த்தம்; அதனால் எந்தப் பயனும் இல்லை என்று ஒருவர் சொல்லி சடங்குகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்று யாராவது கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    அதற்கு எனக்கு சடங்குகளில் அதிகமான நம்பிக்கை இல்லை; இருந்தும் சொந்தங்களின் நம்பிக்கைகளுக்காக அவற்றை நான் செய்ய வேண்டியிருக்கிறது என்பது மாதிரியான பதில் உங்களிடமிருந்து பெறப்பட்டால், அதனால் என்ன பயன்?.. சொல்லுங்கள்.

    மனிதனின் வாழ்வு குறிக்கோள்களுக்கு கடவுளோ அன்றி சமயச் சடங்குகளோ எதுவுமே குறுக்கே நிற்பதில்லை. எல்லாம் குறிப்பிட்ட தனிநபரின் நம்பிக்கைக்காகவும் அவரின் திருப்திக்காக மட்டுமே.


    வாழ்வின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டதினால், எதற்காக
    கடவுள் பற்றிய கதைகளையும் சடங்குகளையும் மறுதளிக்க வேண்டும்? புரியவில்லை.

    இல்லை, கடவுள் பற்றிய கதைகளையும் சடங்குகளையும் மறுதளித்தவர்கள் வாழ்வின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்களா?.. அதுவும் தெரியவில்லை.

    வாழ்வின் உண்மையான புரிதலுக்கு இரண்டுமே சம்பந்தமில்லாத கேள்விகள்.

    ReplyDelete

  32. @ ஜீவி
    சில நாட்களுக்குப்பின் வருகைக்கு நன்றி வணக்கம்.
    என் கருத்துக்களைத்தான் பதிவாக்கி இருக்கிறேனே ...பின் வழுக்கிக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. என் பலபதிவுகளை நீங்கள் படித்து வந்திருக்கிறீர்கள்.
    /அதற்கு எனக்கு சடங்குகளில் அதிகமான நம்பிக்கை இல்லை; இருந்தும் சொந்தங்களின் நம்பிக்கைகளுக்காக அவற்றை நான் செய்ய வேண்டியிருக்கிறது என்பது மாதிரியான பதில் உங்களிடமிருந்து பெறப்பட்டால், அதனால் என்ன பயன்?.. சொல்லுங்கள்./ நிறையவே ifs and buts.
    உங்களுக்காகச் சொல்கிறேன். பிறப்பால் நான் பிராம்மணன். ஆனால் நான் பூணூல் போட்டுக் கொள்ளவில்லை. என் தாயும் தந்தையும் இறந்துவிட்டனர். நான் அவர்கள் பெயரில் சிரார்த்தம் எதுவும் செய்ததில்லை. செய்வதும் இல்லை. சாலையில் இருக்கும் பாம்புப் புற்றுகளுக்குப் பால் ஊற்றியதில்லை. ஊற்றவும் மாட்டேன். நான் புரிந்து கொண்டதைப் போல் பிறரும் சிந்திக்க முடியாத எண்ண அடிமைத்தனத்தில் இருக்கிறார்களே என்னும் ஆதங்கமே என் பதிவுகளின் வெளிப்பாடு. கடவுள் நம்பிக்கை பற்றி நான் பேசவில்லை. ஆனால் அதன் பயனாக உலவும் ( ”மூட”என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும்) நம்பிக்கைகள் பலரது வாழ்க்கை முறையை பாதிக்கும் எனும் போது என் எண்ணங்களைப் பதிவாக்குகிறேன். எனக்குத் தெரியும் சில die hard நம்பிக்கை வாதிகளுக்கு இது ஏற்காதுஎன்று. என் எண்ணப் பகிர்வுகள் ஒரு சில பதிவுகளுக்கு முன் எழுதி இருந்தேனே. படிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் என் கருத்துக்களைச் சொல்கிறேன் அது போய்ச் சேர்ந்தால் சரி, இல்லை என்றால் பதிவின் தலைப்பில் சொல்லி இருப்பது போல் செய்வேன்

    ReplyDelete

  33. // மனிதனின் வாழ்வு குறிக்கோள்களுக்கு கடவுளோ அன்றி சமயச் சடங்குகளோ எதுவுமே குறுக்கே நிற்பதில்லை. எல்லாம் குறிப்பிட்ட தனிநபரின் நம்பிக்கைக்காகவும் அவரின் திருப்திக்காக மட்டுமே.


    வாழ்வின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டதினால், எதற்காக
    கடவுள் பற்றிய கதைகளையும் சடங்குகளையும் மறுதளிக்க வேண்டும்? புரியவில்லை.

    இல்லை, கடவுள் பற்றிய கதைகளையும் சடங்குகளையும் மறுதளித்தவர்கள் வாழ்வின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்களா?.. அதுவும் தெரியவில்லை.

    வாழ்வின் உண்மையான புரிதலுக்கு இரண்டுமே சம்பந்தமில்லாத கேள்விகள்.//

    பூனைக்கு மணி கட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறாரே என்று இந்த கேள்விகளுக்குத் தான் உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்தேன். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சித்தாலே, தன்னாலே உங்களுக்கும் ஒரு தெளிவேற்பட்டு விடும்.

    முயற்சி தான் செய்து பாருங்களேன். :))

    ReplyDelete

  34. @ ஜீவி
    புரியவில்லை, தெரியவில்லை என்பதையெல்லாம் என்பதை எல்லாம் புரிந்தவர்களும்தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். தூங்குபவனை எழுப்பலாம் தூங்கும் மாதிரி நடிப்பவனை எழுப்புதல் முயற்சி வீண் என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி ஜீவி சார்

    ReplyDelete
  35. பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது மூட நம்பிக்கை தான். அதை மட்டும் வைத்து எதையும் முடிவு கட்டக் கூடாது; முடியவும் முடியாது.

    கடவுள் சிலைகளைத் திருடுபவர்கள் இருப்பதால் கடவுளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்றா பொருள்? சிலைத் திருட்டுக் காலம் காலமாகக் கொடியோர்களால் மிக மிக அதிகமாக நடைபெறுகிறது. அதே போல் சிலை மீட்புகளும் நடைபெறுகின்றன.

    சிலைத் திருட்டு என்பது மனிதன் செய்யும் தவறு. அவனுடைய கெட்ட எண்ணத்திற்குக் கடவுள் எப்படிப் பொறுப்பாவார்? சிந்திக்கத் தெரிந்தவர்கள் இதை ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?

    கடவுள் இருக்கிறார் என்பது ஓர் உணர்வு. உணர்வால் தான் அதை அறிய முடியும். திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே ன்பது போல், நம்முடைய கெட்ட எண்ணங்களாகிய காட்டில் புகுந்து கொண்டிருக்கும் நாம் எங்கோ தெரியும் ஒளிக்கீற்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் தெரிந்து விட்டால்!!!!!!!!!!!

    ReplyDelete
  36. முதல் முதல் முன்பின் தெரியாத மும்பைக்கு ஏகப்பட்ட அமர்க்களத்தோடு சென்ற நானும் எங்கள் குழந்தைகளும் அன்றைய தினம் கடவுளின் இருப்பை உணர்ந்தது போல் வேறென்றும் உணர்ந்தது இல்லை. பல சமயங்களில் என் வழித்துணைக்குக் கந்தசஷ்டி கவசம் வந்திருக்கிறது.

    ReplyDelete
  37. சடங்குகள் பற்றி விரிவாக எழுத வேண்டும். எதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. நான் இங்கே சடங்குகள் எனக் குறிப்பிடுவது வைதிகச் சடங்குகள் மட்டுமே!

    ReplyDelete
  38. பின்னர் வருகிறேன்.

    ReplyDelete
  39. //மனிதனின் வாழ்வு குறிக்கோள்களுக்கு கடவுளோ அன்றி சமயச் சடங்குகளோ எதுவுமே குறுக்கே நிற்பதில்லை. எல்லாம் குறிப்பிட்ட தனிநபரின் நம்பிக்கைக்காகவும் அவரின் திருப்திக்காக மட்டுமே.


    வாழ்வின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டதினால், எதற்காக
    கடவுள் பற்றிய கதைகளையும் சடங்குகளையும் மறுதளிக்க வேண்டும்? புரியவில்லை.

    இல்லை, கடவுள் பற்றிய கதைகளையும் சடங்குகளையும் மறுதளித்தவர்கள் வாழ்வின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்களா?.. அதுவும் தெரியவில்லை.

    வாழ்வின் உண்மையான புரிதலுக்கு இரண்டுமே சம்பந்தமில்லாத கேள்விகள். //

    கீதாம்மா.. இதையும் கொஞ்சம் கண்டுக்கோங்கம்மா.

    ஆக்கப்பூர்வமான விவாதத்திற்குரிய பல பின்னூட்டங்கள் எல்லாம் காட்டில் காய்ந்த நிலவு தான்!

    தொடர்ந்த விவாதங்களே இந்த மாதிரியான பதிவுகளின் சிறப்பைக் கூட்டி பதிவிட்டவருக்கும் மகிழ்ச்சியளிக்கும்.

    ReplyDelete

  40. @ கீதா சாம்பசிவம்
    சில நாட்கள் இடைவெளிக்குப் பின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது
    /பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது மூட நம்பிக்கை தான். அதை மட்டும் வைத்து எதையும் முடிவு கட்டக் கூடாது; முடியவும் முடியாது./இது பலவற்றில் ஒன்று. நான் எல்லாவற்றையும் பட்டியல் இடவில்லை. மூடநம்பிக்கை என்று ஒப்புக் கொள்ளும் நீங்கள் இதையே மறுதளிப்பவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்
    /கடவுள் இருக்கிறார் என்பது ஓர் உணர்வு. உணர்வால் தான் அதை அறிய முடியும். திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே ன்பது போல், நம்முடைய கெட்ட எண்ணங்களாகிய காட்டில் புகுந்து கொண்டிருக்கும் நாம் எங்கோ தெரியும் ஒளிக்கீற்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் தெரிந்து விட்டால்!!!!!!!!!!!/இந்த உணர்வுகள்தான் கேள்வியின் அடிப்படையே. என்னுடைய கீதைப் பகிர்வின் ‘என் எண்ணப் பகிர்வுகளை நீங்கள் படிக்கவில்லை போலும். எப்படி சஞ்சலத்தில் இருக்கும் மனிதனை indoctrinate செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளஒரு திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்று எழுதி இருந்தேன்.கடவுள் என்னும்பெயரைச் சொல்லி மனிதனை சிந்திக்க விடாமல் செய்து. அதை ஊக்கப்படுத்த பல சடங்குகளை உண்டாக்கி, அதன் மூலம் நம்பிக்கைகளையும் , மூட நம்பிக்கைகளையும் வளர்த்து விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவே எழுதுகிறேன் இந்தப்பதிவிலேயே என் மகனின் நம்பிக்கை பற்றியும் என் பேரனின் கேள்வி பற்றியும் எழுதி இருக்கிறேன். எனக்கு biassed அபிப்பிராயம் இல்லை எனக் காட்டவே இதனைக் குறிப்பிட்டேன்.நான் என் கருத்தை எழுதுகிறேன். இதுதான் சரி என்று சாதிக்கவில்லை. என் கருத்துக்களில் இன்ன இடத்தில் மாறுபடுகிறேன் , இன்ன காரணங்களுக்காக மாறுபடுகிறேன் என்றால் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களும் தெரிய வரும் என்னிடம் வார்த்தையைப் பிடுங்கி அதிலிருந்து விவாதம் தொடர்வது சர்ச்சைக்கு வித்திடும் நீங்கள் மற்றபடிச் சுட்டிக் காட்டி இருக்கும் பகுதிகள் வாசகரின் கருத்து. விவாதம் எப்படி எல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நான் கேட்டுக் கொள்வதெல்லாம், விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகுங்கள். தெளிவு ஏற்பட்டால் நலம். எது தெளிவு என்பது அவரவரைப் பொறுத்தது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  41. @ கீதா சாம்பசிவம்
    /சடங்குகள் பற்றி விரிவாக எழுத வேண்டும். எதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. நான் இங்கே சடங்குகள் எனக் குறிப்பிடுவது வைதிகச் சடங்குகள் மட்டுமே!/ பயமுறுத்துகிறீர்களா? இவற்றில் எல்லாம் நீங்கள் ‘துறை’ போனவர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் நன்றி மேடம்.

    ReplyDelete
  42. //கடவுள் என்னும்பெயரைச் சொல்லி மனிதனை சிந்திக்க விடாமல் செய்து. அதை ஊக்கப்படுத்த பல சடங்குகளை உண்டாக்கி, அதன் மூலம் நம்பிக்கைகளையும் , மூட நம்பிக்கைகளையும் வளர்த்து விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவே எழுதுகிறேன் இந்தப்பதிவிலேயே என் மகனின் நம்பிக்கை பற்றியும் என் பேரனின் கேள்வி பற்றியும் எழுதி இருக்கிறேன். எனக்கு biassed அபிப்பிராயம் இல்லை எனக் காட்டவே இதனைக் குறிப்பிட்டேன்.நான் என் கருத்தை எழுதுகிறேன். //

    கடவுளை நம்புபவர்கள் அனைவருமே சிந்திக்கத் தெரியாதவர்கள் என்னும் எண்ணமும் ஒரு விதத்தில் biased தான் இல்லையா? ஏனெனில் முன் முடிவுடன் இருக்கிறீர்கள்.

    உங்களுடைய கீதை எண்ணப் பகிர்வுகளையும் படித்துக் கருத்துச் சொல்லி இருக்கும் நினைவும் இருக்கிறது. எல்லோருமே செம்மையான மனதுடன் இருந்துவிட்டால் உலகம் ஆனந்தமயமாக விளங்குமே!

    அன்பே சிவம் என்பதைச் சொல்வது எளிது. ஆனால் அதைப் புரிந்து கொள்வது கடினம். இது எல்லோராலும் புரிந்து கொள்ள இயலாத ஒன்று. அப்படிப்பட்ட என் போன்ற சாமானியர்களுக்குக் கிடைத்திருக்கும் பற்றுக்கோலே கடவுள் என்னும் வழிகாட்டி. பல சமயங்களிலும் அடுத்தது என்ன என்னும் கலக்கத்தில் இருக்கையில் எங்கிருந்தோ நம்பிக்கை தரும் நிகழ்ச்சி நடக்கும். அதுவும் எதிர்பாராமல். இது ஏதோ ஒரு சக்தி மறைமுகமாக இருந்து செயல்படுகிறது என்பதைத் தான் காட்டும்.

    ReplyDelete
  43. உங்கள் பேரனுக்கு நீங்கள் சொல்லி இருக்கும், அல்லது சொல்லப் போகும் பதிலில் உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பே காணப்படும். எனக்குத் தெரிந்து முழுதாக நாத்திகராக இருந்த என் பெரியப்பாவின் மாப்பிள்ளை வாழ்நாளின் கடைசிக்காலத்தில் முழுக்க முழுக்க பக்திமானாக மாறியதும், "மயன்" என்னும் பெயரில் குமுதம் "பக்தி" இதழில் மாவட்டம் மாவட்டமாகக் கோயில்களுக்குச் சென்று தரிசித்து வந்து அவற்றைப் பற்றித் தொடர்ந்து கடைசிவரை எழுதி வந்தார். ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்டாக இருந்து "தீக்கதிர்" பத்திரிகை வேலைக்காக மத்திய அரசுப் பணியை உதறியவர். ஆக இது மொத்தம் உணர்வுகளோடு தொடர்புள்ளவையே தவிர அறிவோடு தொடர்புள்ளவை அல்ல. அறிவின் எல்லைக்கோட்டுக்கு மிக அருகாமையில் இருப்பதால் ரொம்பவே அறிவுஜீவிகள் தடுமாறுகின்றனர். ஒரு மயிரிழை இந்தப்பக்கம் வந்தால் அவர்களைப் போன்ற பக்திமான்கள் கிட்டமாட்டார்கள். இருக்கிறது என்பதால் தானே இல்லை என்னும் கருத்தே உருவாகி உள்ளது!

    ReplyDelete
  44. வீடு மாறியது மற்றும் உடல்நலமில்லாமை, இணைய இணைப்பு இல்லாமை ஆகியவற்றால் சில நாட்கள் இடைவெளி விட வேண்டியதாகி விட்டது. :)

    ReplyDelete

  45. @ கீதா சாம்பசிவம்
    கீதையின் என் எண்ணப் பகிர்வுகளில் என் மைய்யக் கருத்துக்குப் பின்னூட்டம் இல்லாததால் கருத்திட்டது நினைவில் நீற்கவில்லை என்றுநினைக்கிறேன் என் பேரனுக்குச் சொன்ன பதிலையும் எழுதி இருக்கிறேன்.வளரும்போதுசரியான கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறவேண்டும். எதையும் ஒரு சார்பாகப் பார்க்காதே என்பதாகும் மீள் வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  46. ஹிஹிஹி...  என் பதில் எனக்கே பிடிச்சிருக்கு!

    ReplyDelete