கற்ற பாடமும் இன்னபிறவும்
==============================
நான் கற்றுக்கொண்ட பாடம் ஒரு குட்டிக் கதை
என் பேரக் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்பும் கதை.
அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் படித்துக் கொண்டிருந்தபோது என்
தந்தையின் அலுவலகம் சுமார் எட்டு மைல் தூரத்தில் இருந்தது. அவர் தினமும் தன்
சைக்கிளில் போய் வருவார். ஒரு நாள் ”உடல் சோர்வாக இருக்கிறது .இனறு அலுவலகத்தில் முக்கிய
வேலை இருக்கிறது. விடுப்பு எடுக்க முடியாது. அதனால் ப்ளீஸ் இன்றைக்கு மட்டும் ஒரு
நாள் நீ என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் விடு. மாலை ஐந்து மணிக்கு சரியாக
வந்து என்னை கூட்டிக் கொண்டுவா”என்று கேட்டுக் கொண்டார். வீட்டிலும் டௌனில் சில
வேலைகள் கொடுத்தார்கள் நான் தந்தையை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவரது அலுவலகத்தில்
விட்டு விட்டு வந்தேன். எப்படியும் மாலை அவரைக் கூட்டிவர டௌனுக்குப் போகவேண்டும்.எனக்கு
ஒரு ஐடியா தோன்றியது,அவரைக்கூட்டிவர ப் போவதாக வீட்டில் சொல்லி சீக்கிரமாகவே
கிளம்பிப் போய் ஒரு தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்கப் போனேன் ஷோ முடிந்து நான்
தந்தையின் அலுவலகத்துக்குப்போகும் போது நேரம் ஆகி யிருந்தது. என்னைப் பார்த்ததும்
அவர் என்னிடம் “ஏன் லேட்” என்று கேட்டார். எனக்கு உண்மையைச் சொல்ல முடியவில்லை. சைக்கிள்
பங்க்சர், வழியில் நண்பனைப் பார்த்தேன், வீட்டுக்கு வேண்டிய சில சாமான்களை
வாங்குவதில் நேரம் ஆகி விட்டது என்று ஏதேதோ உளறினேன், அந்தநேரம் பார்த்து
தியேட்டரில் என்னுடன் படம் பார்த்த நண்பன் ஒருவன்”படம் நன்றாக
இருந்தது இல்லையா.” என்று போகும் வழியில் சொல்லிப் போனான். என் தந்தை மிகவும்
வருந்தினார். “என்னிடமே உண்மையைச்சொல்ல முடியாமல் பொய் கூறுகிறாய் என்றால் என்
வளர்ப்பில்தான் எங்கோ தவறு. அதற்கு எனக்குத் தண்டனையாக உடல் நலமில்லாவிட்டாலும்
இந்த எட்டு மைலையும் நான் நடந்தே வருகிறேன்” என்று சொல்லி என்ன சொல்லியும் கேட்காமல்
நடக்கத் தொடங்கி விட்டார். நானும் அவர் பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு
போனேன். நான் செய்த தவறுக்கு எனக்குத் தண்டனை தராமல் அஹிம்சை முறையில் அவர்
தன்னையே தண்டித்துக் கொண்டதை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. நான் சொன்ன
பொய்க்கு என்னை அவர் அடித்து தண்டனை தராமல் அன்பினால் தண்டித்தது இன்றும் என் மனதை
கனக்கச் செய்கிறது. அன்று தெரிந்து கொண்டேன். பயத்தினால் திருத்துவதைவிட அன்பினால்
கட்டுப்படுத்த முடியும் என்று.நான் பொய் சொல்வதையும் நிறுத்தி விட்டேன்.
---------------------------------------------------
டாக்டர் கந்தசாமி ஐயா
அவர்கள் எது சுகம் என்று கேட்டு அவருக்கே உண்டான பாணியில் பதிலும் சொல்லி
இருக்கிறார்.ஆனால் இவற்றை எல்லாம் அனுபவிக்க வாழ்க்கை 9 8 7 6 5 4 3 2 1 0 என்று
இருக்க வேண்டும் என்பதே இந்தத் தலை முறையினரின் எண்ணம்
அது என்ன 9 8 7 6 5
4 3 2 1 0...?
9---கிளாஸ் தினம்
குடிக்க நீர்
8---மணி நேர நல்ல தூக்கம்
7---குடும்பத்துடன் இந்த அதிசயங்களுக்கு பயணம்
6---இலக்க மாத சம்பளம்
5---நாள் வாரத்தில் வேலை
4---சக்கர வாகனம்
3---படுக்கை அறை ஃப்லாட்
2---சூட்டிகையுள்ள குழந்தைகள்
1---காதல் மனைவி
0---டென்ஷன்
---------------------------------------------------------------
உலகிலேயே சிறந்த ஆறு மருத்துவர்கள்.-1. சூரிய ஒளி
2 ஓய்வு
3. உடற்பயிற்சி
4. உணவு 5 தன்னம்பிக்கை 6 நண்பர்கள்.
------------------------------------------------------------------------------------
இரு மாதங்களுக்கு முன்னொரு நாள் நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு
வந்தார். அவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறவர். நல்ல மனிதர். எப்படியோ அவருக்கு
எங்கள் மேல் ஒரு தனி மரியாதை. சிறந்த பக்திமான். எல்லோருக்கும் உதவும் குணம்
படைத்தவர்.
அவருடைய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக ஒரு
பூஜை செய்வதாகவும் அதற்காக எச்.எம் டி லேஅவுட்டிலிருக்கும் கோவிலில் இருந்து ஸ்ரீ லலிதாம்பிகை அம்மனை ஒரு
நாள் பள்ளிக்கு எடுத்துவர ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த பூஜைக்கு நாங்களும்
வந்து பள்ளி மாணவ மாணவிகளை ஆசிர்வதிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். என்
மனைவியாவது கோவில் பூஜை மற்றும் வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர். ஆனால் நான்.....?
எனக்கு அவரது கோரிக்கையைத் தட்ட முடியவில்லை. நல்ல மனிதர் நம்மையும் மதித்து
குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வேண்டுகிறார். சரி என்று சொல்லிவிட்டேன். அது ஒரு
ஞாயிற்றுக் கிழமை.அவரது பள்ளி என் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர்
தூரத்துக்குள் இருக்கிறது
அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்று பள்ளிக்குக்
கூட்டிக்கொண்டு போகச் சொன்னோம். வயதான எங்களைப் பார்த்து ஆட்டோக்காரர் எங்களுக்கு
வேறு வழி இல்லை என்று தெரிந்து கொண்டு ரூ.80 கேட்டார். பேரம் ஏதும் பேசிப்
பயனில்லை என்று தெரிந்தது. வாசலிலேயே எங்களை வரவேற்றார் நண்பர். சுமார் இரண்டரை
மணிநேரம் பூஜை நடந்தது. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம வழிபாட்டுடன் பூஜை நடை பெற்றது. நான்
சற்றும் எதிர்பார்க்காதபோது நாங்கள் மேடைக்கு அழைக்கப் பட்டோம். எனக்கு பொன்னாடை போர்த்தி என் மனைவிக்கு
வெற்றிலை பாக்குப் பழங்களுடன் பிரசாதமும் தரப் பட்டது. அம்மாதிரி ஒரு
ஏற்பாட்டுக்கு நான் தகுதி ஆனவனா தெரியவில்லை. மனம் நெகிழ்ந்து விட்டது.ஒரு நாள் பள்ளி மாணவர்களுடன் என்னை உரையாட அழைத்திருக்கிறார்.என்னைப் பற்றிய ஏதோ மதிப்பு.இதையெல்லாம் பார்க்கும் போது I FEEL VERY HUMBLE
மதிய உணவும் அனைவருக்கும் வழங்கப் பட்டதுஅப்போது பூஜை செய்ய வந்திருந்த ஆச்சாரியார் குழந்தைகளையும் பூஜையில் பங்கு பெறச் செய்ததை முதலில் தெரியாததாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு ஒரு பகுதியைக் காணொளியாக்கினோம் அது இத்துடன்.
மதிய உணவும் அனைவருக்கும் வழங்கப் பட்டதுஅப்போது பூஜை செய்ய வந்திருந்த ஆச்சாரியார் குழந்தைகளையும் பூஜையில் பங்கு பெறச் செய்ததை முதலில் தெரியாததாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு ஒரு பகுதியைக் காணொளியாக்கினோம் அது இத்துடன்.
எண்ணங்களின் பகிர்வு மனதைக் கவர்ந்தது. நன்றி.
ReplyDeleteநல்ல நினைவுகள். உங்கள் தந்தையார் உங்களுக்குக் கொடுத்த தண்டனை நன்றாக வேலை செய்திருக்கிறது.
ReplyDeleteசந்தடி சாக்கில் என்னையும் கௌரவித்துள்ளீர்கள். நன்றி. ஆறு இலக்க சம்பளம்? எவ்வளவு பேர் வாங்க முடியும்?
பள்ளிக் குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவது விசேஷம்.
தண்டனை உங்களுக்கு நல்ல பாடமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். தற்போது எங்களுக்கு நல்ல பாடம்.
ReplyDelete
ReplyDeleteதங்களது தந்தையாரின் செயல் பலருக்கும் பாடம் ஐயா இந்த வகை எண்ணங்கள் எல்லோருக்கும் வராது
ஒருவேளை அவர் உங்களை இரண்டு அடி அடித்திருந்தால் இந்தப்பதிவும் எங்களுக்கு கிடைத்திருக்காது தாங்கள் தொடர்ந்து பொய் சொல்லியும் இருப்பீர்கள்.
என்னுடைய அப்பா ரொம்பக் கோபக்காரர். தாட்பூட் தஞ்சாவூர்தான்! ஆனால் ஒன்று! அவரை நான்தான் சைக்கிளில் உட்காரவைத்து ஆபீஸ் சென்று விட்டு வருவேன். வெளிவேலைகள் ஏதாவது இருந்தாலும் "டிரைவர்! வண்டிய எடு" என்பது போல "ஸ்ரீராம்! சைக்கிளை எடு!" என்பார்!
ReplyDeleteஅன்பே பெரிய ஆயுதம்
ReplyDeleteநன்றி ஐயா
மறக்க முடியாத தண்டனைதான்.....
ReplyDeleteஅனுபவங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
மனதைப் பண் படுத்திய - மலரும் நினைவுகள்!..
ReplyDeleteஇந்த நற்குணங்கள் எல்லாம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியவை..
எடுத்துச் சொல்லப்பட வேண்டியவை..
இந்தத் தன்மைக்காகத் தான் - எதிர்பாராதவிதமாக - அம்மன் வழிபாட்டின் போது தாங்கள் கௌரவிக்கப்பட்டது!..
வாழ்க நலம்!..
// என் வளர்ப்பில்தான் எங்கோ தவறு // இந்த நினைப்பே இன்றைய பெற்றோருக்கு வருவது சந்தேகம் தான்...
ReplyDelete// பயத்தினால் திருத்துவதைவிட அன்பினால் கட்டுப்படுத்த முடியும் // ஆகா...!
ஐந்து அதிகாரங்கள் கொண்ட ஆறாவது மருத்துவர் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் முக்கியம்...
அப்பாவின் தண்டனை எப்படி மனதில் ஊடுருவிப் பாய்ஞ்சிருக்கும் என நன்றாகப் புரிகிறது.
ReplyDeleteபள்ளிக்குழந்தைகள் அனைவருமே இந்துக்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை பூஜைக்கு அழைத்து அவர்களைக் கொண்டு வழிபாடு செய்தல் சரியாக இருக்கும்.
மற்ற மதக்காரர்கள் இருக்கும் பள்ளி என்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.
என் பயணங்களில் அங்கங்கே பள்ளிப்பிள்ளைகளை, சுற்றுலாபோல இந்துக்கோவில்களுக்கு அழைத்து வருவதைப் பார்த்திருக்கிறேன்.
சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மற்ற மதத்தினர் தங்கள் பிள்ளைகள் இதில் கலந்து கொள்ள விருப்பப்படவில்லை என்றால் அனுப்ப மாட்டார்கள் தானே? அப்போது அந்தக்குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு வெளியே பயணிக்கும் இன்பத்தை இழந்து விடமாட்டார்களா?
பள்ளிச்சுற்றுலா என்றால் அனைவருக்கும் பொதுவான இடங்களுக்கே கூட்டிப்போக வேண்டும் என்று எண்ணுகின்றேன்.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
தண்டனை அல்ல அது பாடம்பள்ளிக் குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவது விசேஷம். திருமதி துளசி கோபாலின் கருத்தைப் பார்க்கவும்வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
அதை ஒரு பாடமாகத்தான் கொள்ள வேண்டும். பகிர்தலின் பலன் சொல்ல வருவது இலக்கு நோக்கி செல்வது. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ கில்லர்ஜி
சொல்ல வருவது இலக்கு நோக்கிப் போகும் போது மகிழ்ச்சியே ஏற்படுகிறது, வருகைக்கு நன்றி ஜி.
ReplyDelete@ ஸ்ரீராம்
உங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி. ஒரு உண்மை சொல்ல வேண்டும். கதையில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கற்பனையே. முதலிலேயே கதை என்று சொல்லி இருக்கிறேனே கவனிக்க வில்லையா. இருந்தால் என்ன. நான் சொல்ல வந்தது இலக்கினை எட்டி விட்டது. நான் இதை இப்படியே விட்டிருக்கலாம். ஆனால் நடக்காத ஒன்றை வலை நண்பர்கள் நடந்ததாக எண்ணக் கூடாது அல்லவா.?
ReplyDelete@ அன்பே பெரிய ஆயுதம்தான் ஐயா. மறுக்க முடியாத உண்மை. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
தண்டனை அல்ல. அது பாடம் அனுபவம் என்பது சரியல்ல. கற்ற பாடம். கதையை அனுபவமாகக் கொள்ளக் கூடாது அல்லவா.ஆனால் கதையும் பாடம் கற்பிக்கலாம். வருகைக்கு நன்றி.
ReplyDelete@ துரை செல்வராஜு
/
இந்த நற்குணங்கள் எல்லாம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியவை.எடுத்துச் சொல்லப் படவேண்டியவை/ உண்மை ஐயா. ஆனால் அதற்கு நான் எடுத்துக் கொண்ட வழி கதை. ஆனால் கதையே அனுபவமாக எண்ணப்படக் கூடாது என்பதால் சொல்கிறேன் .நடந்தது போல் சொன்னது ஒரு உத்தி. வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி டிடி.
ReplyDelete@ துளசி கோபால்
அப்பாவின் தண்டனை அல்ல மேடம் அவர் கற்றுக் கொடுத்த பாடம் ஒரு கதையை என்னை முன்னிலைப்படுத்திச் சொன்னேன். அதுவே நடந்த நிகழ்வாக எண்ணப் பட்டு விட்டது.
ஒரு ஞாயிறு அன்று நடத்தப் பட்ட பூஜை. மற்ற மதத்தினர் இருந்தால் தவிர்த்திருக்கலாம் என்னை பொறுத்தமட்டில் நல்ல விஷயங்கள் ஜாதி மத இனம் பார்க்காமல் பகிரப் பட வேண்டும். மற்ற மதத்தினரும் நம் மதத்தைப் பற்றி அறிய ஒரு கட்டாயமில்லாத வாய்ப்பு. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிமேடம்.
குட்டிக் கதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteமற்ற அனைத்தும் அருமை.
ReplyDelete@ கோமதி அரசு
கதையை ரசித்ததற்கு நன்றி மேடம்
தங்களின் இளவயதுப் பாடம் மிகவும் அருமையான பாடம். நல்ல நினைவுகள்.
ReplyDeleteஉலகிலேயே சிறந்த ஆறு மருத்துவர்கள்.-1. சூரிய ஒளி 2 ஓய்வு
3. உடற்பயிற்சி 4. உணவு 5 தன்னம்பிக்கை 6 நண்பர்கள்.// யெஸ் யெஸ்....
எங்களைப் பொருத்தவரை தாங்கள் அந்தப் பள்ளியில் சிறப்புரை ஆற்ற முழுத் தகுதி பெற்றவரே. அங்கு பெற்றோர்களும் இருந்தால் இன்னும் நல்லதே. உங்கள் பேச்சைக் கேட்பதற்கு.
தங்கள் தந்தையார் உங்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால் நீங்கள் பொய் சொல்வதை நிறுத்தியிருக்கமாட்டீர்கள்.அவரையே தண்டித்துக்கொண்டது தான் உங்களை மாற்றியிருக்கிறது. தங்களின் தந்தையாரின் அணுகுமுறை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
ReplyDelete@ தில்லையகத்து துளசிதரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா. பொய் பேச மாட்டேன் என்று சொல்பவன் ஒரு உண்மையச் சொல்ல வேண்டும். பதிவில் சொல்லி இருந்தது நிகழ்வல்ல புனையப் பட்ட கதையே.
ReplyDelete@ வே. நடன சபாபதி. வருகைக்கு நன்றி ஐயா. பதிவில் சொல்லி இருக்கும் நிகழ்ச்சி ஒரு புனைவே. தன்னிலையாகக் கதை கூறப்பட்டதால் உண்மை நிகழ்வு போல் தோன்றி இருக்கலாம். நான் பொய் பேசுவதில்லை என்பது உண்மையே.