Tuesday, August 11, 2015

பதிவு பழையது உத்தி புதியது ..........

                      
                               பதிவு பழையது உத்தி புதியது.......
                          --------------------------------------------




ஏற்றத்தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.

ரொம்ப சரியா சொன்னீங்க.
                       ------------------
 தனியார் பள்ளிகளை வளர்க்கவே திட்டங்கள் தீட்டபடுகின்றன..
இந்த 25% திட்டத்துக்கு செலவு செய்வதை விட அரசு பள்ளிகளை தரம் உயர்த்தலாம்..
அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பகுதியினர்.. வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை..
பள்ளியில் ஆசிரியர்கள் தூங்கினால் உடனடியாக பணியிடை நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகளை செயல்படுத்தவேண்டும்
தனியார் பள்ளிகளை முதலில் முடக்க வேண்டும்...
முற்றிலும் அரசுடமையாக்கப்பட்ட கல்வி இருக்க வேண்டும்...
பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும்
                  --------------
அன்புள்ள ஐயா...

வணக்கம். ஒரு கல்வியாளனாக என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். மிகச் சரியான ஒரு கட்டுரையை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். இதனை வாசித்துக் கொண்டே வரும்போது இதற்கான தீர்வை நான் யோசிக்கும் அதையும் தாங்களே சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

என்னடைய தனிப்பட்ட கருத்துக்களாக சிலவற்றை உங்கள் பதிவிற்குப் பதிலாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1.
சாதி. மதம் இவற்றைத் தாண்டி முறையான ஒழுங்குப்படுத்தப்பட்ட தரமான கல்வி எல்லா வசதிகளுடனும் எல்லோருக்கும் வழங்கப்படும் சூழலை ராணுவ நடவடிக்கை போலக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

2.
எந்த சாதிசங்கங்களையும் முறைப்படுத்தக்கூடாது. அவற்றை நீக்குதல்வேண்டும். கல்வி வாயிலாகவே எல்லாவற்றையும் பெறவேண்டும். தகுதியும் தரமும் மேலெடுத்துச் செல்லவேண்டும்.
3. புதிதாக பள்ளிகள், கல்லுர்ரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றை மேன்மேலும் தொடங்க அனுமதிப்பதை நிறுத்தி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனஙகளைக் கடுமையான விதிகளுக்குட்படுத்தி புற அமைப்பு, கட்டிடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல், வகுப்பறை, நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் முழுமைபெற்ற கல்வித்தகுதி, அவர்களின் பயிற்றுவிக்கும் தரம் இவை முறையான இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டு அவற்றினைத் தரமாய் எப்போதும் தக்கவைப்பது மிக முக்கியமானது,

3,
கல்வி உதவித்தொகை, கல்விக்கடன, இலவசங்கள் இவற்றையெல்லாம் நிறுத்தி அரசே உண்மையாகப் பொருளாதார நிலையில் கஷ்ட்ப்படுபவர்கள் யாராக இருந்தாலும் என்ன சாதியாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களின் உச்சக்கட்ட கல்வி வரை அத்தனை செலவுகளையும் ஏற்கவேண்டும். இலவசங்களுக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான தொகையை கல்விக்குச் செலவிடலாம்.

4.
கட்சி சார்புகளை எல்லாம் மறந்து தரமான மனிதர்களையும் அவர்களால் சமூகத்திற்குப் பயன்விளையும் என்று நம்புகிறவர்களையும் அரசியல் பணிக்கு தெரிவு செய்யலாம். இதெலல்லாம் நடக்குமா என்கிற கேலியைத் தாண்டி யோசிக்கவேண்டும்.

5.
மிகமிக முக்கியமான ஒன்று. விடுபாடு இல்லாமல் எல்லாப் பெண்களும் வயது வேறுபாடின்றி கல்வி அறிவு பெறுதல் கட்டாயமான பணியாக முறைப்படுத்தப்படவேண்டும். இது நல்ல சமுகத்தை வடிவமைக்கும்.

பதிவிற்கு நன்றிகள்.
அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.நிச்சயமாக..

அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..
                    ---------------
...
விசாலமான பார்வைகள்
நிஜமான யோசனைகள்
என்ன இருந்தாலும் என்று மாறும் எந்த நிலை?
                   --------------------
ரொம்ப பெரிய சப்ஜெக்ட். கருத்து ஒன்றும் சொல்வதற்கில்லை.
                       -------------------
வர்ணாசிரமம் ஜாதியாக மாறிய கொடுமையை அறியாமையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கல்வியறிவு இதைப் போக்கிவிடும் என்பதை முழுமையாக ஏற்க முடியவில்லை
                    ---------------
இதில் வருத்தமளிக்கும் விஷயம்
புறக்கணிக்கப் பட்ட பிரிவில் இருந்து
முன்னேறியவர்கள் அவர்களை
ஒரு புதிய உயர்ந்த ஜாதியாக
நினைத்துக் கொண்ட அவர்கள் இனத்தவர்களையே
தாழ்ந்தவர்களாக நடத்துவதுதான்
சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மிகச் சிறந்த பதிவென்றே இதை கருதுகிறேன்.
                 ---------------

தொழிலின் அடிப்படையில்தான் சாதியை பிரித்தான் அன்றைய முட்டாள் மனிதன். இன்று சாதியைவைத்து யாரும் தொழில் செய்வதில்லை. விவசாயத்தை தொழிலாகக் கொண்ட குடும்பத்தினரின் அடுத்த தலைமுறைகள், இன்று நகரங்களில் பணிபுரிகின்றனர்.

வெள்ளாமைக் கண்டால்தான் வாழ்க்கை என்ற நிலை மாறி இருக்கிறது. இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆள் இல்லை.

குடுமி வைத்து புரோகிதம் பார்த்த குருக்களின் வாரிசுகள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.
பனை ஏறி கள்ளு விற்றவர்கள் இன்று வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கின்றனர்.

குலத் தொழிலைக் கொண்டுதான் சாதி பிரிக்கப்பட்டது. குலத் தொழிலை யாரும் தொடராதபோது சாதி எதற்கு...?
சாதி சிலருக்கு வரம் சிலருக்கு அதுவே சாபம்.

நல்லதொரு பதிவு வாழ்த்துகள் ஐயா...!
                      -------------
//எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்ற
தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்
என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்
அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.
அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.//

மிகவும் அருமையான வாசகங்கள். நன்றி ஐயா.
                   -------------
//.கட்டாயக் கல்வித் திட்டத்தில்
25%
இடம் ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை
நடைமுறைப் படுத்தவோ, செயல்படுத்தவோ எந்த முனைப்பும்
இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.// intha karuththai otti thaan inru en post...http://veeluthukal.blogspot.in/2012/01/blog-post_31.html
                  --------------
ஏற்ற தாழ்வுகள் என்பதே உண்மையில் இல்லை. எல்லோரும் முக்கியபங்கு வகிப்பவர்கள். நம் உடலில் உள்ள எந்த உறுப்பு உசத்தி எது மட்டம்?
                   -----------

மனிதன் தாழ்வு ஏற்றம் இல்லை என்று உணர்ந்து அனைவரையும் சமமாக பாவிப்பது என்பது நடக்காது. இதற்கு தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. தனிமனிதன் வேண்டுமென்றால் மாறலாம்.
                      -------------
வலைப்பதிவில் எழுதுபவர்களுக்கு வரும் தட்டுப்பாடே எனக்கும் வருகிறது. நான் என் கருத்துக்கள் சிலவற்றில் மிகவும் நம்பிக்கை கொண்டு இருக்கிறேன் பலமாக சிந்தனையில் எழும் கருத்துக்கள் என் பதிவுகளில் சில சமயம் எப்படியாவது இடம் பிடித்து விடும் அம்மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் நான் எழுதிய பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டங்களே இப்பதிவு. நான் 2012-ம் ஆண்டு துவக்கத்தில் எழுதிய பதிவின் சுட்டி இதோ. அதற்கு வந்த பின்னூட்டங்களே மேலே.
                            ----------------.

 


 



          

36 comments:

  1. #அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க
    வேண்டும்#
    சுட்டியில் சொன்ன விஷயத்தை அரசின் தலையில் குட்டி சொல்லப் போவது யாரோ :)

    ReplyDelete
  2. பின்னூட்டங்கள் உத்தியால் பதிவையும், கருத்துரை இட்டவர்களையும் அறிய முடிந்தது...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  3. பின்னூட்டங்கள் அருமை.

    ReplyDelete
  4. "இதில் வருத்தமளிக்கும் விஷயம்
    புறக்கணிக்கப் பட்ட பிரிவில் இருந்து
    முன்னேறியவர்கள் அவர்களை
    ஒரு புதிய உயர்ந்த ஜாதியாக
    நினைத்துக் கொண்ட அவர்கள் இனத்தவர்களையே
    தாழ்ந்தவர்களாக நடத்துவதுதான்
    சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    மிகச் சிறந்த பதிவென்றே இதை கருதுகிறேன்."


    100 க்கு 100 உண்மையான கருத்து.

    ReplyDelete
  5. ஹரணியின் கருத்துகள் ஏற்கும் வண்ணம் உள்ளன.

    பின்னூட்டங்கள் தந்து, பதிவைப் படிக்க வைக்கும் ஐடியா அருமை.

    ReplyDelete
  6. ரசித்தேன். சிந்தித்தேன். விரக்தியே மிஞ்சியது.

    ReplyDelete

  7. 2012 ஆம் ஆண்டு படிக்கத் தவறிய தங்களது பதிவை இப்போது படித்தேன். கல்வி வணிகமாக மாறுவதை தடுக்க அரசே கல்விக்கூடங்களை நடத்தவேண்டும். கல்வித்துறையில் அரசு தலையிடாமல் கல்வியாளார்களைக் கொண்டு திட்டம் தீட்டி தரமான கல்வியை எல்லோருக்கும் தரவேண்டும். ஆனால் நடை முறையில் இது சாத்தியமா என்பது தான் இப்போதைய கேள்வி.

    ReplyDelete

  8. @ பகவான் ஜி
    கல்வி பற்றி வலைத் தளங்களில் ஒரு ஒத்த கருத்தை உருவாக்கினால் அது அரசுக்குப் போய்ச் சேரும் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  9. @ திண்டுக்கல் தனபாலன்
    அதுதானே எனக்கு வேண்டி இருந்தது. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  10. @ கோமதி அரசு
    அதனால்தான் அதையே பதிவாக்கினேன் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  11. @ வெட்டிப்பேச்சு
    நடந்தவற்றையும் நடப்பவற்றையும் எனக்குத் தெரிந்தபடி எழுதி இருக்கிறேன் பொதுவாக எழுதியதில் பலருக்கும் உடன்பாடு இருப்பது மகிழ்ச்சி தருகிறது பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete

  12. @ ஸ்ரீராம்
    ஹரணியின் கருத்துக்கள் பதிவில் இருந்ததில் இருந்து அதிகம் மாறுபடவில்லை. கருத்துக்கள் அவர் மொழியில் அவ்வளவுதான் வித்தியாசம் ஐடியாவைப் பாராட்டியதற்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  13. @ டாக்டர் கந்தசாமி.
    நாட்டு நடப்புகள் விரக்தி ஏற்படுத்துகின்றன, சரியே. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  14. @ வே.நடனசபாபதி
    ஒரு பொறியிலிருந்துதான் தீ பரவுகிறது. எல்லாம் சாத்தியமே மனம் வேண்டும் மதுவிலக்கை எடுத்தவர்களே இப்போது அமல் படுத்தக் கோருவதில்லையா. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  15. நல்லதொரு ஐடியா சார்! பின்னூட்ட்ங்களுடன்....

    நல்ல கருத்துகள் பின்னூட்டங்களில்.

    பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எந்த சாதி என்று பாராமல் இலவசக் கல்வி கொடுக்க வேண்டும். இலவசங்கள் என்று அள்ளித் தெளிப்பதற்கு பதிலாக அரசு இதைக் கையில் எடுத்துச் செய்யலாம்....உங்கள் கருத்துகளும் அருமை சார்....ஆனால் நமது நாட்டை ஆள்பவர்கள் ஓட்டு வங்கியைக் காப்பாற்றுவதிலும், பாமரர்கள் ஏமாறுவதிலும் கட்சிக்கு அடிமையாகி இலவசங்களுக்கும் பணத்திற்கும் அடிமையாகி இருக்கும் ஆட்சியாளர்கள் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளத்தானே செய்வார்கள். பாமரர்கள் தரண்டு எழுந்தால் இது சாத்தியமாகும்.

    இன்னுமொரு கருத்து...அதாவது, முன்பு கல்வியின் தரம் அதாவது எங்கள் காலம் வரை என்றும் சொல்லலாம்...நன்றாக இருந்தது...அப்போது கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு. இப்போது கல்வி பெறுபவர்கள் அதிகமாகி உள்ளது என்றாலும் தரம் இல்லை. சின்ன உதாரணம் சமீபத்திய நிகழ்வு...ஒரு ஏழை கிராமத்துப் பெண் வேளாண்மை கல்விக்கு விண்ணப்பித்து முதலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து பின்னர் அவள் தேர்வாகி இருப்பதை அண்ணா பல்கலைக் கழகம் - வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோயம்பத்தூர் அறிவித்து அண்ணாகலையரங்கத்திற்கு வர மின் அஞ்சல் கொடுக்க அந்தப் பெண் அதை எப்படி புரிந்து கொண்டாள் என்று தெரியவில்லை, அண்ணா பல்கலைக்கழகம் சென்னைக்கு வந்து திண்டாட, அதை அங்கு நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர் உடனே கோயம்பத்தூர் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பேசி அப்பெண்ணை கோயம்பத்தூருக்கு அப்பெண்ணிற்கும் அவள் தாயாருக்கும் பயணச் சீட்டு எடுத்து உடனே அனுப்பி வைத்து, அவளுக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது. இங்கே அந்த மனிதரின் மனித நேயத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஆனால் இங்கு ஒன்று பளிச்சிடுகின்றது. அந்தப் பெண் 1086 மதிப்பெண் பெற்றிருக்கின்றாள். ஆனால் அவளால் ஏன் மின் அஞ்சலைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை? கல்வியின் தரம்?

    எனவே நாம் கல்வி கல்வி என்று சொன்னாலும். அது சும்மா எல்லோரும் பெறுவது என்று இல்லாமல் மிக மிகத் தரமானதாக, ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், நடைமுறைக் கல்வியை, வாழ்க்கைப் பாடத்தியப் போதிக்கும் கல்வியாக, ப்ராக்டிகல் கல்வியாக தரம் உயர்ந்தால் மட்டுமே நாம் நல்ல கல்வி என்று சொல்ல முடியும். நாடு கல்வியால் முன்னேறி உள்ளது என்று சொல்ல முடியும்....
    நல்ல பதிவு சார்....

    ReplyDelete

  16. அழைப்புக்கு மிக்க நன்றி அய்யா!
    பெருமைமிக்கவரின் பதிவை பொறுமையுடன் படித்துவிட்டு கருத்திட காலமகளின் காலடியில் கருணை வேண்டுகிறேன்.
    பிழையின்றி கருத்திட பிராத்தனை செய்கிறேன் அய்யா!
    நன்றி நல்லோரே!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

  17. பின்னூடங்களையும் ரசித்தேன்
    தீர்வுதான் என்ன சென்று கருத்துரை இட்டு வந்தேன் ஐயா.

    ReplyDelete

  18. @ துளசிதரன் தில்லையகத்து
    அந்தப் பெண் அலைந்தது கல்வியின் தரக் குறைவால் அல்ல. அவளது கவனக் குறைவால் என்பதே சரி. என்னதான் உத்திசெய்து பதிவைப் படிக்க வைக்க முனைந்தாலும் சொல்ல வந்த ஆதாரக் கருத்துகள் புரிந்து கொள்ளப் படுவதில்லை என்பது வேதனை தருகிறது. இந்தப் பதிவின் மையக் கருத்தே எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்கப்பெற்றால் நிலவும் ஏற்றதாழ்வுகள் எண்ணங்களில் இருந்து மறையலாம் என்பதே. அதை கல்வி தனியாரிடம் இருந்தால் செயல் படுத்த முடியாது என்பதால் அரசே எடுத்து நடத்தவேண்டும் என்று எழுதினேன் 1950 -60 களில் ஜப்பானில் இருந்து இறக்குமதியான பேனாக்கள் சீப்பாக ஆனால் தரக் குறைவாக இருக்கும் முதலில் குவாண்டிடியில் கவனம் செலுத்தினார்கள். இப்போது குவாலிடியில் அவர்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. இதன் சாரம் என்னவென்றால் முதலில் அனைவருக்கும் கல்வி. பிறகு தரம் தானாக வரும் அதுவும் கட்டாயமாகிவிடும் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் எழுதி இருக்கிறேன் வருகை தந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

  19. @ யாதவன் நம்பி
    காலமகளின் கருணை கிட்டட்டும் காத்திருப்பேன் நன்றி.

    ReplyDelete

  20. @ கில்லர் ஜி
    பின்னூட்டங்களை படிக்கும் போது பதிவையும் படிக்கச் செய்த உத்தி பலனளிக்கிறது. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete
  21. //இந்த 25% திட்டத்துக்கு செலவு செய்வதை விட அரசு பள்ளிகளை தரம் உயர்த்தலாம்//
    உண்மைதான்.
    இந்த திட்டம் இப்போதுதான் நடைமுறைக்கு வந்திருகிறது. முதல் முறையாக 12-13ம் ஆண்டு இத்திட்டத்தில் சேர்க்கப் பட்ட மாணவர்களுக்கான கட்டணத் தொகையை அரசு செலுத்த உள்ளது.மாணவர்கள் செலுத்த தேவை இல்லை . இது தேவையற்றது என்றுதான் நான் கருதுகிறேன். தனியார் பள்ளிகள் கட்டணத்தை ரகசியமாக வசூலித்துக் கொண்டு அரசு பணத்தையும் பெற்றுக் கொள்ள இது வழி கோலும். பெற்றோரும் இடம் கிடைத்தால் போதும் என்று புகார் செய்ய மாட்டார்கள்
    தற்போது பெரும்பாலான அரசு பள்ளிகளில் தேவையான வசதிகள் உள்ளன.ஆனால் மாணவர்கள்தான் இல்லை.

    ReplyDelete
  22. பழைய பதிவின் பின்னூட்டங்களை தந்து பதிவை வாசிக்க செய்யும் உத்தி சிறப்பு! பின்னூட்டங்கள் சிந்தனையைக் கிளப்பிச் சென்றன! நன்றி!

    ReplyDelete
  23. வித்தியாசமான முறையில் ஒரு உத்தியைப் பயன்படுத்தி எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete

  24. @ டி.என்.முரளிதரன்
    தனியார் பள்ளிகளில் கற்பது தரமான கல்வி தரும் என்னும் மாயைக்கு அடிமையாகித் தவிக்கும் ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தில் 25% ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இடம் என்றும் அவர்களால் கட்டமுடியாத தொகையை அரசே கட்டும் என்னும் நல்ல் எண்ணத்தில் உருவானதே அத்திட்டம் ஆனால் கல்வி வியாபாரிகள் அதிலும் ஓட்டை கண்டு பணம் பண்ணுகிறார்கள். கல்வி ஒரு கன்கரெண்ட் சப்ஜெக்டாக இருக்கக் கூடாது. எல்லாக் கல்வியையும் மத்திய அரசே ஏற்று நடத்தவேண்டும் . அந்தக் கல்வி எல்லோருக்கும் பொதுவாக இலவசமாக இருக்க வேண்டும் இது நாட்டில் உயர்வு தாழ்வு எண்ணங்களைக் கணிசமாகக் குறைக்கும் என்னும் எண்ணமே பதிவின் நோக்கம் இப்போது இருக்கும் நிலையை அடியோடு மாற்ற வேண்டும் மற்றபடி எந்த காஸ்மெடிக் நேரமைப்பும் உதவாது. ஒரு லேட்டெரல் திங்க்கிங் தான் இது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  25. @ தளிர் சுரேஷ்
    பின்னூட்டங்களை மட்டும் படித்தால் போதாது .பதிவையும்ம்படிக்கவைக்க எடுத்த உத்திதான் இது. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete

  26. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    பதிவைப் படிக்க வைக்க எடுத்த உத்தி அது வேறு நோக்கம் இல்லை. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  27. பழைய பதிவை புதிய உத்தியைப்பயன்படுத்தி
    புதிய பதிவாக்கி இருக்கிறீர்கள்
    அருமை ஐயா
    கல்வி இன்று வணிகமயமாகிவிட்டது
    நன்றி ஐயா

    ReplyDelete

  28. @ கரந்தை ஜெயக்குமார்
    என் ஆதங்கங்கள் தான் பதிவாகி இருக்கிறதே. வியாபாரிகளிடம் இருந்து கல்வியை மீட்டெடுக்க என்ன வழி. ? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  29. மிகவும் புதுமையாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  30. இந்தக் குலத்தொழிலை வளர்க்காத காரணங்களால் பல தொழில்கள் இருந்த இடமே தெரியாமல் அழிந்து முற்றிலும் மறைந்துவிட்டன. அதைக் கூட உணர முடியாதவர்களாக நாம் ஆகிவிட்டோம். :(

    ReplyDelete

  31. @ கீதா சாம்பசிவம்
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete

  32. @ கீதா சாம்பசிவம்
    ஒரு பதிவும் பின்னூட்டங்களும் எத்தனை எத்தனை கருத்துக்களைக் கொண்டு வருகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  33. அருமை! அதிலும் தனியார் பள்ளிகளை மூடிவிட்டு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தச்சொன்னதும், வருணாசிரதருமம் இல்லாமல் போனபின் சாதி எதற்கு என்று கேட்டதும் இன்னும் அருமை!

    ReplyDelete
  34. முற்றிலும் அரசுடைமையாக்கப்பட்ட பள்ளிகள் உருப்படவே உருப்படாது என்பது என் தாழ்மையான எண்ணம். பிரச்சினை தனியார் பள்ளிகளை regulate செய்வதில் இருக்கிறது. அதைவிட்டு அரசுடைமையாக்கினால் பின் தங்கிவிடுவோம்.

    ReplyDelete

  35. @ துளசி கோபால்
    பதிவை ரசித்ததற்கு நன்றி மேம்

    ReplyDelete

  36. @ அப்பாதுரை
    /முற்றிலும் அரசுடமையாக்கப்பட்ட பள்ளிகள் உருப்படாது/ அரசுடமை ஆக்கப்பட கூறப்பட்ட காரணங்களைப் பார்க்க வேண்டும் இன்றைய நிலைமையை வைத்துப் பார்த்தால் அரசு பள்ளிகள் உருப்படாது போல் தோன்றலாம் .துளசிதரனுக்கு எழுதிய மறுமொழியில் /இந்தப் பதிவின் மையக் கருத்தே எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்கப்பெற்றால் நிலவும் ஏற்றதாழ்வுகள் எண்ணங்களில் இருந்து மறையலாம் என்பதே. அதை கல்வி தனியாரிடம் இருந்தால் செயல் படுத்த முடியாது என்பதால் அரசே எடுத்து நடத்தவேண்டும் என்று எழுதினேன் 1950 -60 களில் ஜப்பானில் இருந்து இறக்குமதியான பேனாக்கள் சீப்பாக ஆனால் தரக் குறைவாக இருக்கும் முதலில் குவாண்டிடியில் கவனம் செலுத்தினார்கள். இப்போது குவாலிடியில் அவர்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. இதன் சாரம் என்னவென்றால் முதலில் அனைவருக்கும் கல்வி. பிறகு தரம் தானாக வரும் அதுவும் கட்டாயமாகிவிடும் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் எழுதி இருக்கிறேன் வருகை தந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி/.சில கருத்துக்கள் எண்ணியபடி போய்ச் சேருவதில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

    ReplyDelete