Wednesday, August 5, 2015

தமிழ்மணமா புதிர்மணமா.?


                                தமிழ் மணமா புதிர் மணமா..?
                                 ------------------------------------------


வலைத்தளம் அமைத்துத் தமிழில் எழுதுபவர்கள் முதலில் செய்யும் வேலைகளில் ஒன்று தளத்தைத் தமிழ்மணத்தோடு இணைப்பதுதான்  நானும் விதிவிலக்கல்ல. எழுத ஆரம்பித்த ஓரிரு மாதங்களிலேயே தமிழ்மணத்தில் இணைத்தேன் தளம் தமிழ் மணத்தில் இணைந்தாலும் பதிவு எழுதியவுடன் தமிழ் மணத்தில் நுழைந்து இடுகையையும் இணைப்பது வழக்கம். அதுதான் முறை என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன் பொதுவாக என் பதிவுகளை நான் எழுதிய மறுநாளே இணைப்பது வழக்கம் ஆனால் சில மாதங்களுக்கு முன் அவ்வாறு இணைக்கப் போகும் போது இடுகை ஏற்கனவே இணைக்கப் பட்டு விட்டது என்று அறிவிப்பு வந்தது. சில பதிவுலக வாசகர்கள் ஆர்வ மிகுதியால் இணைப்பது தெரிந்தது. என் பதிவுகள் மூலம் அவ்வாறு இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டபடிஅவ்வாறு இணைக்கப் படுவது நிறுத்தப் பட்டது என்று அறிந்தேன் இருந்தாலும் நான் இணைக்கப்போகும் முன்பாகவே என் பதிவுகள் இணைக்கப் பட்டு விடுகின்றன, இதுவரை புரியாத புதிர் இது.

நான் பதிவுலகில் வந்தபோது எனது யு.ஆர் எல் டாட் .காமில் இருந்தது. பின் எப்போது அது .இன் னுக்கு மாறியது என்றும் புரியவில்லை. டாட் இன்னில் இருந்தால் வாக்குப் பட்டை வேலை செய்யாது என்று அறிகிறேன் வாக்குப் பட்டை இருந்தால்தான் ஓட்டு விழும் என்றும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் ஓட்டு எண்ணிக்கையுமே வாசகர்களைக் கவரும் என்றும் தமிழ் மணத்தில் வரும் ராங்க்   குக்கு அடிப்படை என்றும் ஒருபதிவில் படித்த நினைவு. ஆனால் வலைச்சர யு.ஆர் எல். டாட் இன்னில்தான் இருக்கிறது ஆனால் ஓட்டுகள் வருகிறது என்றும் அறிகிறேன் இதுவும் புரியாத புதிர்

எனது இரண்டாவது தளமான பூவையின் எண்ணங்கள்- உம் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டிருந்தது. ஆனால் நான் இந்த தளத்தில் எப்பொழுதாவதுதான் எழுதுவதாலும் இந்தத் தளத்துக்கும் வாசகர்கள் தேவை என்பதாலும் அண்மையில் எழுதிய பதிவுகளை இணைக்க முற்பட்டேன் ஆனால் ஏதோ புதிதாக தமிழ் மணத்தில் இணைக்க விரும்பிய பதிவு என்று நினைத்து தமிழ் மணத்தில் இருந்து என் மின் அஞ்சல் முகவரிக்குக் கடிதம் வந்தது. (வேறு பெயரில்) .எங்கோ தவறு என்று குறிப்பிட்டு அதிலேயே ரிப்லை பகுதியில் எழுதி அனுப்பினால் டெலிவரி ஃபெயில்ட் என்று வந்தது. புதிதாக ஒரு அஞ்சல் அனுப்பி விளக்கமாக எழுதி இருந்தேன்  இது நாள்வரை பதில் இல்லை. என் கடைசி இடுகையை இணைக்க முற்பட்டால் கோரிக்கை ஏற்கனவே இருப்பதாக அறிவிக்கிறது. (வேறு தளத்தின் பெயரில்)
ஆக இதுவும் புரியாத புதிராக இருக்கிறது. தமிழ் மண நிர்வாகிகளுக்கு மின் அஞ்சல் அனுப்பினால் பதில் இல்லை.  விஷயம் அறிந்த வாசகர்கள் தெளிவு செய்வார்களா, இல்லை எங்காவது தொழில் நுட்பப் பிரச்சனை இருக்கிறதா .? எனக்கு தமிழ் மண ராங்க்  பற்றியோ வாக்குகள் பற்றியோ கவலை இல்லை. . இருந்தாலும் ஏன் என் விஷயத்தில் இந்தத் தவறுகளென்றும் புரியவில்லை.  

31 comments:

  1. தமிழ்மணம் சில தமிழ் ஆர்வலர்களால் ஏற்படுத்தப்பட்டு அமெரிக்காவிலிருந்து நடத்தப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பல பிரச்சினைகளை இங்கு உன்னிப்பாகக் கவனித்து செயல்பட ஆள் பலம் இல்லையென்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. இது எனக்குப் புரியாத விஷயம்.. நானும் தமிழ் மணத்தில் இணைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.. ஏனென்று தெரிய வில்லை..

    ReplyDelete
  3. தற்போது பதிவுகள் தானாக த ம திரட்டிக் கொள்கிறது .

    டொமைன் வாங்கி இருந்தால் . இன் ஆகியிருக்கும் .

    புதிய தளத்தை த ம திரட்டியில் பதிவு செய்து இணைத்தால் ஒப்புதல் தருவார்கள் அதன் பின்
    பதிவை இணைக்க முடியும் !

    நம்பர் ஒன்றாக எப்படி வரமுடியும் என்று கேட்டால் என்னால் உறுதியான பதில் தரமுடியாது ,அந்த விஷயத்தில் தமிழ் மணம் .புதிர் மணம்தான்:)

    ReplyDelete
  4. இதற்கெல்லாம் வலைச்சித்தர், குறள் பித்தர் DD யால் பதிலும் சொல்ல முடியும், தீர்வும் சொல்ல முடியும்!

    ReplyDelete
  5. இதையெல்லாம் பார்க்கும்போது ‘ஒண்ணுமே புரியல உலகத்துல
    என்று தான் பாடத் தோன்றுகிறது. .

    ReplyDelete
  6. தமிழ் மணத்தில் எனதுஇரு வலைப்பூக்களையும் இணைக்க அதிகம் சிரமப்பட்டேன். நண்பர்கள் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் உதவினார். இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, நண்பர்களின் உதவியுடன்.

    ReplyDelete
  7. தமிழ் மணம் இப்பொழுது தானியங்கியாக செயல்படுவதாக அறிகிறேன். முன்பு நான் காப்பி- பேஸ்ட் செய்ததாக சொல்லி என் பதிவுகளை தடை செய்துவிட்டது. இப்போது மீண்டும் இணைய மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை. உங்களுக்கு நிறைய நண்பர்கள், வாசகர்கள் இருப்பின் தமிழ் மணத்தில் இணைப்பதும் வாக்குகளும் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. தமிழ் மண ரேங்க் எல்லாம் ஓர் மாயையான தோற்றம். நம்மை மகிழ்ச்சி படுத்திக் கொள்ள உதவும் அவ்வளவுதான். அதனால் ஒரு உபயோகமும் இல்லை. எனவே இதைப்பற்றி சிந்திக்காமல் பதிவுகள் தொடரவும். நல்ல பதிவுகளுக்கு வாசகர்கள் எங்கிருந்தாலும் தேடி வருவார்கள். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. நன்றி!

    ReplyDelete

  8. வணக்கம் ஐயா தமிழ் மணம் புரியாத விடயமாகவே இருக்கின்றது எனக்கும் அதைப்பற்றி நினைக்காமல் என் பணி எழுதிக்கிடப்பதே என்று என் வழியில் போகிறேன்.
    நண்பர் தளிர் சுரேஸ் அவர்கள் சொன்னதும் சரியே...

    ReplyDelete
  9. //தளிர்’ சுரேஷ் said.
    தமிழ் மண ரேங்க் எல்லாம் ஓர் மாயையான தோற்றம்.//

    இந்த உண்மை எனக்கு இத்தனை நாளாத் தெரியாமப்போச்சே? முதல் ரேங்க்குக்காக நான் கில்லர்ஜி உடன் மருதமலைக்குப் போய் முருகனை வேண்டிகிட்டு வந்தேனே?

    எல்லாம் வீண்தானா?

    (தளிர் சுரேஷ் - தமாசை ரசிக்கவும்.)

    ReplyDelete
  10. தமிழ் மணம் புரியாத புதிர்.


    ReplyDelete
  11. எனக்கும் புரியாத புதிர்மணம் தான் ஐயா!

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா.

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

    நம்ம பழனி கந்தசாமி ஐயா சொன்னது ரொம்பச்சரி. தமிழ்மணம் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது. அவரவருக்குக் கிடைக்கும் நேரத்தின்படிதான் சகலகாரியங்களையும் கவனிக்கிறார்கள். நேரக்குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

    இடுகைகளை வெளியிடுவது தானியங்கி என்பதால் ஒருமுறை தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டால் இடுகைகள் நாம் வெளியிட வெளியிட தானே சேர்த்துக்கொள்கிறது என்றாலும் நாம் நம் இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்க்கத்தான் வேணும். நான் அப்படித்தான் செய்கிறேன். (ஒரே குழப்பமா இருக்கோ!)

    நம்பர் 1, ஓட்டு சேகரிப்பு, எண்ணிக்கை இவற்றிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பதிவை வெளியிடுவதுடன் என் கடமை முடிஞ்சு போது. வாசிக்கவேணும் என்ற நண்பர்கள் கட்டாயம் வந்து வாசிப்பார்கள்.

    பதிவர்களின் நூல்கள் என்ற பகுதியில் நாம் எழுதி வெளிவந்த புத்தகங்கள் மாறிமாறி வந்துகொண்டு இருக்கும். அதில் என் புத்தகம் ஒன்றை டிசம்பர் 2014 இல் இணைத்தேன். அன்றுமுதல் அது நிரந்தர இடம் பிடிச்சு அங்கேயே நிக்குது. இலவச விளம்பரம் என்று நினைச்சாலும்..... இது சரி இல்லையேன்னு தோணுதே! தமிழ்மண நிர்வாகிகளுக்குக் கடிதம் அனுப்பினேன். ஆனாலும்..... 'அக்கா' அங்கேயே நிற்கிறார்!

    இந்த கூகுள் அனைத்து உலகத்தையும் பிடிச்சுக்கொண்டதால் அந்தந்த நாட்டில் இருந்து வரும் பதிவுகளுக்கு அந்தந்த நாட்டு அடையாளம் வந்துருக்கு. என் பதிவும் .காம் காண்பிக்காமல் .co.nz என்றுதான் வருகிறது. இதைத் தமிழ்மணம் கணக்கில் எடுப்பதில்லை. இணைக்கும்போது நீ யாருன்னு கேள்வி கேட்கும்:-)

    தொழில்நுட்பப் பதிவுகளைப் பற்றி எழுதிவரும் சசிகுமார் http://www.vandhemadharam.com/ அவர்கள் முன்பு ஒருமுறை சொல்லியபடி .காம் க்குப்பின் /என்சிஆர் (.com/ncr என்று சேர்த்தால் தமிழ்மணம் புரிந்துகொண்டு நம் பதிவை ஒப்புக்கொள்கிறது.

    புதிரைப் புரிந்துகொள்ள முடியாமல் புதிருடன் வாழப் பழகிக்கொண்டால் நல்லது என்று புரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  13. வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா

    ReplyDelete

  14. @ டாக்டர் கந்தசாமி
    தமிழ்மணம் நமக்கு அஞ்சல் அனுப்பும் போது அதே முகவரிக்கு ரிப்ளை அனுப்பினால் டெலிவெரி ஃபெயில்ட் என்று வருகிறது. தனியா அதே முகவரிக்கு அஞ்சல் அனுப்பினால் விளக்கம் ஏதுமில்லை.ஆள் பலம் இல்லையென்றால் தாமதம் ஏற்றுக் கொள்ளப்படலாம் நிராகரிப்பு இருக்குமா.? வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    என்மெயின் தளத்திலிருந்து இடுகைகள் தானே இணைக்கப் படுகின்றன. என் பூவையின் எண்ணங்கள் தளமும் தமிழ்மணத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டதே. ஆனால் இடுகைகள் தானே தமிழ் மணத்தில் இணைக்கப் படுவதில்லை. இணைக்க முயன்றபோது பதில் வருகிறது வேறு யாரோ பெயருக்கு என் முகவரியில் அதுதான் என் பிரச்சனையே வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ பகவான் ஜி
    என் பதிவை நன்கு படித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். எனக்கு நம்பர் ஒன் ஆவதில் எந்த ஆர்வமும் கிடையாது என்று எழுதி இருக்கிறேனே

    ReplyDelete

  17. @ ஸ்ரீராம்
    என் பதிவுகளுக்குத் தவறாமல் வரும் வலைச் சித்தர் குறள் பித்தர் இதுவரை வருகை தரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஆலோசனைக்கு நன்றி.

    ReplyDelete

  18. @ வே.நடன சபாபதி
    தமிழ்மணத்தில் இணைத்தால் அது பல வாசகர்களை சென்றடையும் என்று தெரிகிறது. அதற்குத்தான் முயற்சி.

    ReplyDelete

  19. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    என் இரு தளங்களும் தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டவையே. இடுகைக்கள் இணைப்பதிலிருக்கும் பிரச்சனையே இப்பதிவு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  20. @ தளிர் சுரேஷ்
    எனக்கு தமிழ்மண வாக்குகளிலோ ராங்க்கிலோ ஆர்வமில்லை. பதிவிலேயே எழுதி இருக்கிறேன் நன்றி.

    ReplyDelete

  21. @ கில்லர்ஜி
    என் பதிவை நன்கு படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். எனக்கு தமிழ்மண ஓட்டிலோ ராங்கிலோ ஈடுபாடு இல்லை. நன்றி.

    ReplyDelete

  22. @ டாக்டர் கந்தசாமி
    தளிர் சுரேஷ் அவர் மனதில் பட்டதை எழுதி இருக்கிறார். எனக்கும் அது மாயை என்று தெரியும் நான் எழுதி இருக்கும் பிரச்சனைக்கு இதுவரை யாரும் தீர்வு கொடுக்கவில்லை.

    ReplyDelete

  23. @ வெங்கட் நாகராஜ்
    தமிழ்மணம் புரியாத புதிர் என்றாலும் பலரும் அதைப் பார்க்கிறார்கள் என்பது உண்மைதானே.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  24. @ தனிமரம் தமிழ் மணப் புதிருக்கு விடை யாரும் தரவில்லையே வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  25. @ துளசி கோபால்
    நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. இம்மாதிரிப் பதிவு எழுதியதன் நோக்கமே நான் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்றுதான் என் தளம் பூவையின் எண்ணங்கள் இல் எழுதிய இடுகைக்களைச் சேர்ப்பதில்தான் பிரச்சனை. சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. என் முகவரிக்கு வேறு ஒருவர் பெயரில் அஞ்சல் வருவது ஏன் என்று புரியவில்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  26. @ கரந்தை ஜெயக் குமார்
    திண்டுக்கல் தனபாலன் வருகைக்குக் காத்திருக்கிறேன் ஐயா. இடுகை அவருக்கு அனுப்பியாகி விட்டது. வராவிட்டால் மெயிலில் தொடர்பு கொள்வேன் ஆலோசனைக்கு நன்றி.

    ReplyDelete
  27. துளசி டீச்சர் பதிவு உங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன். என் தளம் .com and .in என்று ரெண்டு வடிவதித்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து பார்ப்பவர்களுக்கும .காம் தெரியாது, டாட் இன் தான் தெரியும். அதனால் இந்தியாவில் உள்ளவர்கள் என் தளத்தில் வாக்களிக்க முடியாது. அது இன்னும் தமிழ்மணத்தில் இணைக்காததுபோல் தோணும். தன்பாலன் சொன்ன ஆலோசனை படி சரி செய்ய முயன்று தோற்றேன். நேர்ம இல்லாததால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.:)))

    ReplyDelete
  28. தமிழ் மணத்தை விட்டு வெளியேறியேப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே இதைக் குறித்தெல்லாம் கவலைப்படுவது இல்லை. நம் எழுத்துப் பிடிச்சிருந்தால் வந்து படிப்பாங்க. இல்லைனா இல்லை! அவ்வளவே! அதிகம் பின்னூட்டம் வரலைனாலும் கவலைப்படறதில்லை. :)

    ReplyDelete

  29. @ வருண்
    எந்தப் பின்னூட்டமும் என் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லவில்லை. அது புதிர்மணமாகவே இருந்து விட்டுப் போகட்டும். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  30. @ கீதா சாம்பசிவம்
    என் தளம் பூவையின் எண்ணங்கள் பொறுத்தவரை என் இடுகைகள் தமிழ்மணத்தில் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. இப்படி ஒரு தளம் இருப்பது தெரிய தமிழ் மணத்தில் வந்தால் வாய்ப்புகள் அதிகம். வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  31. 3 நாட்களாக வெளியூர் வேலை... அதனால் தாமதத்திற்கு மன்னிக்கவும்...

    இதற்கான ஒரு பதிவை விரைவில் எழுதுகிறேன் ஐயா...

    ReplyDelete