பெண்கள் உரிமை நம் கலாச்சாரத்தில் கானல் நீரா.?
------------------------------------------------------------------------------
பெண்உரிமையும் முன்னேற்றமும் நம் சமூகக் கலாச்சாரத்தில்
கானல் நீரா.?.
பெண்கள் முன்னேற்றம் என்னும் வார்த்தையே அபத்தமாகத்
தோன்றுகிறது இப்போது மட்டும் பெண்கள் முன்னேறவில்லையா? இப்படிக்கேள்வி கேட்கும்
போது முன்னேற்றம் என்பது என்ன என்றும் புரிந்து கொள்ள வேண்டும் முன்னேற்றம் என்பதை
எதனுடன் ஒப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் பால்ய விவாகம் என்றும் சதிக் கொடுமை என்றும் இருந்த நிலை மாறிவயது
வந்தபின் திருமணம் ஆணும் பெண்ணும் சமம் என்பது புரிந்து கொள்ளப் படுகிறது.
இருந்தாலும் பெண்கள் முன்னேற்றம் பற்றிய பேச்சும் சர்ச்சையும் ஓயவில்லை காரணம் என்னதான் சட்டப்படி சலுகைகள் இருந்தாலும் பொது இடங்களிலும் பணி இடங்களிலும் அவளுக்குச் சம அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்பது பெரிய நெருடலே. .
பெண்களும் வேலைக்குப் போகிறார்கள் படித்தவர்கள் மட்டுமல்ல
படிக்காத பாமரப் பெண்களும் கிராமங்களில் வேலைக்குப் போகிறார்க.ள் எல்லா
வாய்ப்புகளும் பெண்களுக்கும் உண்டு, கிடைக்கிறது. சம்பாதிக்கவும் படிக்கவும் மேனாட்டு நாகரிகங்களில் மூழ்கி முத்துக்
குளிக்கவும் என எல்லா இடங்களிலும் (பெண்களுக்கு சம வாய்ப்பு). தயங்காமல் செய்கிறார்கள் ஏன் மணமாகாமல் ஆணுடன்
சேர்ந்தும் வாழ்கிறார்கள் இருந்தாலும் அடிமனதில் பெண்களுக்கு ஒரு தாழ்வு உணர்ச்சி
இருந்தே வருகிறது.
பெண்கள்
அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?எப்போதுமே ஒரு ஆணைச் சார்ந்திருக்க
வேண்டியவள் , அவளுக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயமோ கருத்தோ கிடையாது என்று
எண்ணுகிறார்களா.?பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்றெல்லாம் அறிஞர்கள் சொன்னது
அவர்களுக்குப் பொருந்துவது இல்லை என்று எண்ணுகிறார்களா.? சமூகத்தில் நடக்கும்
சீர்கேடான சம்பவங்களுக்கு காரணம் என்ன என்று அவர்கள் நினைக்கிறார்கள்.?மனிதனாகப்
பிறந்தால் வளர்ந்ததும் மணம் முடிப்பதும் சந்ததி வளர்ப்பதும் இருக்கத்தான்
செய்யும். ஆனால் பெண் ஒரு போகப் பொருளாக சித்தரிப்பதில் அவர்களுக்கு எந்த அளவு
உடன்பாடு. ஒவ்வொருவருக்கும் குடும்பம் வாழ்க்கை எல்லாம் இருக்கிறது. இதில் யார்
பங்கு எவ்வளவு என்று எந்த முடிவில் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் நடை உடை
பாவனையெல்லாம் அவர்கள் இப்பேர்ப்பட்டவர் என்று அனுமானிக்கும் வகையில் இருக்கிறதா.?
சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்மகன்களும் நல்லவரே.
சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்மகன்களும் நல்லவரே.
சந்தர்ப்பம்
கிடைக்கும் போது ஒவ்வொரு ஆண்மகனும் விலங்காகி விடுகிறான் வில்லன் ஆகி விடுகிறான் என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது. தவறு செய்யும் ஒவ்வொரு ஆண்மகனும் அவனை இழந்த நிலையில் போதையில்
இருக்கும்போதே தவறு செய்கிறான் என்பது சரியா.?பச்சிளஞ்சிறார்களை சிதைப்பவர்களைப்
பற்றி என்ன நினைக்கிறார்கள்?
கணவனுக்கு மனைவியின் மீது இருக்கும் உரிமையில்
அவள் விரும்பாத போது புணர்ச்சியில் ஈடுபடுவது கற்பழிப்பு என்று
எண்ணுகிறார்களா?.அப்படி நினைப்பதாயிருந்தால் அவ்வாறு நிகழும்போது புகார் செய்து
தண்டனை பெற்றுத் தருவார்களா.?.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , பெண்கள் மனதில் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும்( பாரத நாரி.?) என்ற பலமான கருத்தின் வெளிப்பாடே பெண்கள் முன்னேற்றம் பற்றி. அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படுத்தாமல் சிந்திக்காமல் இருக்கச் செய்கிறதோ என்னவோ.?பெண்களே உங்களுக்காக நீங்களே தளைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.எப்போதும் எல்லாவற்றையும் குறை கூறிக் கொண்டே இருக்காதீர்கள் வாழ்வில் ஆணும் பெண்ணும் சமம். ஏதோ ஒரு காரணத்துக்காக,ஏதோ காரணம் என்ன? PROCREATION-க்காக மட்டுமே வித்தியாசமாய் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.உண்மையைச் சொல்லப் போனால் ஆண்களைவிடப் பெண்களே சிறந்தவர்கள் என்னும் என் கருத்தையும் இங்கே பதிவிடுகிறேன்.

தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்க வேண்டியதும் போராட வேண்டியதும் பெண்களும்தான் டெல்லியில் ஒரு பெண் சீரழிக்கப் பட்டபோது இது உணரப்பட்டது பெண்களிடம் தகராறு செய்த வாலிபரைப் புரட்டி எடுத்ததும் செய்தியாக வந்ததே சமையல் கடவுள் இவற்றையும் மீறி பெண்களின் உலகம் வியாபித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியம்.
அது
சரிபெண்கள் ஆண்களுக்கு சமம் இல்லை என்னும்
நினைப்பின் காரணம் தெரிகிறதா
ஒன்றா இரண்டா, சொல்லிக் கொண்டே போகலாமே. இருந்தாலும் முக்கியமாக நான் கருதுவதைச் சொல்கிறேன். முதலாவதாக நம் கலாச்சாரம். நம் மூதாதையர்கள் உடன் இருப்பவர்களை வர்ணாசிரம தர்மத்தின் மூலம் மட்டும் அடக்கி வைக்கவில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்காததன் மூலமும் அடக்கி வைத்திருந்தனர். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது பெண்களுக்கு ஒரு பெரிய ஸ்தானம் தந்ததுபோல் தோன்றும். எந்த செயலிலும் பெண்ணுக்குப் பங்கு இருப்பது போல் காண்பித்து உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பங்குதான் கொடுத்திருக்கிறார்கள். நம் கதைகளிலும் புராணங்களிலும் பெண்கள் ஆண்களின் உடமைப் பொருளென்றும் (பாஞ்சாலியைப் பணையம் வைத்தது), ஒரு பெண் ஆணைச் சார்ந்து இருப்பதுதான் ( ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி) தர்மம் என்றும் போதிக்கப் பட்டு அந்த போதனையே இரத்தத்தில் ஊறி அதுவே பாரத நாரியின் குணமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.ஆணுக்கு பெண் ஒரு போகப் பொருள் என்பது கலாச்சார உணர்வாகவே மாறிவிட்டது. அவற்றை மீறி ஒரு பெண் வெளியில் வருவது ஆணுக்குச் சமம் என்று நிலை நாட்டுவது பொதுவாக ஆண் வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதன் பிரதிபலிப்பே பெண்களைப் பற்றிய பல தலைவர்களின் கருத்து வெளிப்பாடுகள். நம்முடைய patriarchial சொசைட்டியில் பெண்கள் உரிமை கொண்டாடுவது முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

இதையெல்லாம்
மீறித் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் பெண்களும் தங்கள் சுயம் அறிந்து
நடக்க வேண்டும். தங்களை போகப் பொருளாகக் கருதும் ஆண்களின் கவனத்தை சுண்டி
இழுக்கும் வகையில் நடை உடை பாவனைகளால் கவர்வது பாதுகாப்பல்ல என்ற உணர்வு
அவர்களுக்கு வேண்டும். வண்ணம் நிறைந்த மலரை அதன் தேனைப் புசிக்க வண்டுகள் வருவது
இயல்புதானே. ஆண்கள் வண்டுகள் போல் மொய்ப்பதில் பெண்கள் மனம் மகிழ்வடைவதும் இல்லையென்று
சொல்ல முடியாது.
என்னவெல்லாமோ எழுதினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியாதது பச்சிளம் குழந்தைகள் பெண்ணாகப் பிறந்ததாலேயே பாலியல் கொடுமைக்கு எப்படி உட்படுத்துகிறார்கள் என்பதுதான். அதில் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது. வெறும் வக்கிர புத்தியின் வெளிப்பாடல்லவா.?

ஆண்களின்
பாலியல் கொடுமைகளின் கீழ் கணவன் மனைவியை அவள் விரும்பாத நேரத்தில் புணர்வது கொண்டு
வருவதானால் , எனக்குத் தோன்றுகிறது, பெரும்பாலான ஆண்கள் தண்டிக்கப் பட
வேண்டியவர்கள் ஆவார்கள்.ஒருவரது அடிப்படைக் குணங்கள் அவரது மிகச் சிறிய
பிராயத்திலேயே உருவாக்கப் படுகிறது என்கிறார்கள். ஆகவே நம் குழந்தைகள் நல்லவர்களாக
வளருவதில் நம் கடமை நம் பங்கு மிகப் பெரிய அளவை வகிக்கிறது என்னதான் சட்டங்கள்
கொண்டு வந்தாலும் குற்றங்களை குறைக்க முடியலாம். ஒழிக்க முடியுமா. ?
இதற்குத் துணை போகும் பல்வேறு காரணங்களில் எனக்கு இந்தத்
திரைப்படங்களும் விளம்பரங்களுமே முக்கியக் காரணமாகத் தெரிகிறது திரைப்படங்கள் நீதி போதிக்க அல்ல.
வெறும் பொழுது போக்க உதவும் சாதனமே என்று கூறுவோர் இதனை ஒப்புக்கொள்ளத் தயங்கலாம்.
ஆனால் DISPARITY IN LIVING STYLES AND A FEELING OF HELPLESSNESS சில
நேரங்களில் இம்மாதிரியான செயல்களுக்குக் காரணமாகிறதோ என்றும் தோன்றுகிறது.
பெண்ணுரிமை பற்றிப் பேசுவோர் பெண்களைப் போகப் பொருளாக சித்தரிப்பதைத் தவிர்த்தால் இந்த மாதிரி செயல்கள் குறையலாம். எத்தனை பெற்றொர் வயது வந்த தங்கள் மக்களுடன் இந்தத் திரைப் படங்களைப் பார்க்க முடியும் என்று நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும். ஏதாவது சொல்லப் போனால் ஜெனெரேஷன் காப் என்று சொல்வார்கள். எங்கள் ஜெனெரேஷனில் இம்மாதிரி நிகழ்வுகள் நடந்திருந்தாலும் அவை மேல் தட்டு வர்க்கம் தமக்கு அடங்கியவர்களிடம் பிரயோகித்ததாய் இருந்திருக்கும்.
இது போன்ற செயல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் நிலவும் ஏற்ற தாழ்வும் ஒரு முக்கிய காரணமாகப் படுகிறது

.
பெண்களைப் பெற்றவர்கள் நடைமுறைச் சம்பவங்களை உணர்ந்து
எப்போதும் பயத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் பெண்கள் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் விஷயங்கள் போதிப்பிக்கப் படவேண்டும் . பள்ளிகளில் தற்காப்புக்
கலையும் கட்டாயமாகப் போதிக்கப் படவேண்டும். But what
you can do if the animals hunt in herds.as it happened in Mumbai.”
ஒரு வர்மா கமிஷன் சில வழிமுறைகளைப்
பரிந்துரைத்தால் அதை ஒட்டு மொத்தமாக ஏற்க இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன
தயக்கம்.?இந்த வியாதி நம் சமூகத்தில் இப்போதுதான் வேர்விடுகிறதா? வேரோடு கிள்ளி
எறிய என்ன செய்ய வேண்டும். எனக்கு என்னவோ ஒரு தலை முறையே சீரழிந்து விட்டதோ என்ற
சந்தேகமெழுகிறது. ஒழுக்கமான வாழ்வு முறைகளை வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள்,முக்கியமாகப்
பெண்கள் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கை நெறிமுறைகளைத் தொலைத்து
விட்டார்களோ என்னும் கவலை எழுகிறது அதுதான் முன்னேற்றம் என்று கருதுகிறார்களோ எனும் சந்தேகம் எழுகிறது
பெண்ணுக்கு உரிமை என்பது கொடுக்கப் பட
வேண்டியதல்ல. எடுத்துக் கொள்ளப் படவேண்டியது ஆணுக்குப் பெண் நிகர்
எனும்போது,பெண்கள் உரிமைகளை எடுத்துக் கொள்ள முற்படும்போது அதற்கான விலையையும்
கொடுக்க வேண்டி இருக்கிறது. நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை இவற்றின் மூலம் பெண்கள்
ஒரு மதிப்பைப் பெற வேண்டும் அதை விட்டு ஆண்களைக் கவரும் எண்ணம் மேலோங்கி
நின்றாலோ அதற்கான விலையும் கூடும்
பெண்கள் முன்னேற்றம் பற்றிய சரியான புரிதல் இல்லையென்றால் பெண்ணுரிமை கானல் நீராகவே இருக்கும்
பெண்கள் முன்னேற்றம் பற்றிய சரியான புரிதல் இல்லையென்றால் பெண்ணுரிமை கானல் நீராகவே இருக்கும்
பெண்கள் உரிமை நம் சமூகக் கலாச்சாரத்தில் கானல் நீரா?
எனும்தலைப்பில்எழுதப்பட்டுள்ளஇக்கவிதை எனதுசொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்புஇதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி
முடிவுவெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்குஅனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன் பெண்கள் முன்னேற்றம் எனும் வகைக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்
சிந்திக்க வைக்கிறது.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
>>> பெண்ணுக்கு உரிமை என்பது கொடுக்கப்பட வேண்டியதல்ல. எடுத்துக் கொள்ளப் படவேண்டியது.. ஆணுக்குப் பெண் நிகர் எனும்போது,பெண்கள் உரிமைகளை எடுத்துக் கொள்ள முற்படும்போது அதற்கான விலையையும் கொடுக்க வேண்டி இருக்கிறது..<<<
ReplyDeleteசிந்திக்க வைக்கும் பதிவு!..
வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..
ReplyDeleteஆணும், பெண்ணும் சமமே... தங்களின் அலசல் அருமையாக இருக்கிறது வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.
சிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
சிறப்பான பகிர்வு ஒளிவு மறைவு இன்றி பல உண்மைகளை அலசி ஆராய்ந்து படைத்துள்ளீர்கள் ஐயா ! நிட்சயம் தங்களின் இப் படைப்பானது வெற்றியைத் தரும்
ReplyDeleteபடைப்பாகும் ! வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா .
சிக்கலான ஒரு பொருண்மையை, தங்கள் பாணியில் மிகவும் யதார்த்தமாக அலசி முன் வைத்துள்ள விதம் அருமை. வெற்றி பெற பாராட்டுக்கள்.
ReplyDeleteசிறப்பானதோர் கட்டுரை.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஐயா,
ReplyDeleteஉண்மையாக ஆராய்ந்து எழுதிய கட்டுரை.
கட்டுரைக்கு வாழ்த்துகள்.
வெற்றிபெறவும் வாழ்த்துகள்
" நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை இவற்றின் மூலம் பெண்கள் ஒரு மதிப்பைப் பெற வேண்டும் அதை விட்டு ஆண்களைக் கவரும் எண்ணம் மேலோங்கி நின்றாலோ அதற்கான விலையும் கூடும் "
ReplyDeleteநிதர்சனமான வரிகள்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ஐயா. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் ஐயா.
நல்ல சிந்தனை ,எனக்கும் கொஞ்சம் புரிகிறது :)
ReplyDeleteஅருமையான கட்டுரை ஐயா
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDelete@ ஸ்ரீராம்
வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
இணைத்ததற்கு நன்றி டிடி.
ReplyDelete@ துரை செல்வராஜு
வாழ்த்துக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ கில்லர்ஜி
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி
ReplyDelete@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வாழ்த்துக்கு நன்றி ஐயா
ReplyDelete@ அம்பாளடியாள்
ஊக்கமூட்டும் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி மேடம்
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
ReplyDelete@ வெங்கட நாகராஜ்
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துக்கு நன்றி மேம்
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் ஐயா
ReplyDelete@ ஆதிரா முல்லை
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
ReplyDelete@ தமிழ் முகில் பிரகாசம்
பாராட்டுக்கும் வாழ்த்ட்க்ஹுக்கும் நன்றி மேம்
ReplyDelete@ பகவான் ஜி
எல்லோருக்கும் புரியும் என்று நினைத்துதானே எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
ReplyDelete@ வே நடன சபாபதி
வாழ்த்துக்கு நன்றி ஐயா.
ஆய்வுக்கட்டுரை தெளிவான நடையில்....வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDelete
ReplyDelete@ எம். கீதா
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
சீரிய படைப்பு. அருமை அய்யா!வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!
ReplyDelete
ReplyDelete@ மைதிலி கஸ்தூரிரங்கன்
வருகைக்கு நன்றி. உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்
ஒருபக்கமாக இல்லாமல் இரு தரப்பிலிருந்தும் நன்றாக அலசி ஆலோசித்து எழுதியுள்ளீர்கள்... பாராட்டுகள் ஐயா. வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.
ReplyDelete
ReplyDelete@ கீத மஞ்சரி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம் பங்கேற்பது என் கடன். தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்
பெண்ணுரிமை கொடுக்கப்பட வேண்டியதில்லை. பெண் தனது தகுதியால் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.
ReplyDeleteதாய்வழிச் சமுதாயத்தில் இருந்த அந்நிலை நிலப்பிரபுத்துவ சமுதாயக் காலத்தில்
ஆணாதிக்கம் மேலிட்டு பெண் அடிமை எனும் கருத்து விழுதுவிடத்தொடங்கியது.
மாறும் காலம் அருகில்.
மலரும் சமத்துவம் விரைவில்.
கட்டுரை- போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் .
@ பாவலர் பொன் கருப்பையா பொன்னையா
ReplyDeleteகட்டுரையின் மையக் கருத்தினை உள்வாங்கிப் பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி ஐயா
முற்றிலும் வித்யாசமான விரிவான அலசல். வெற்றி பெற வாழ்த்துகள் பாலா சார். :)
ReplyDelete@ தேனம்மை லக்ஷ்மணன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம் .
சிந்திக்க வைக்கும் சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்.
ReplyDeleteஆணை விட பெண் சிறந்தவர் என்று சொல்வது ஒரு வகையில் பேதம் தானே? எதற்காக ஒருவரை விட இன்னொருவர் சிறந்தவர் என்ற கண்ணோட்டம்?
பெண்ணை மதிக்க வேண்டும் என்கிற ஆழமான கொள்கை பண்பாடு மற்றும் கலாசார வழியாக ஒரு. ஒழுக்கமாக ஏற்றுக்கொள்ளப் படவேண்டும். எனில் பேதங்கள் மறையும்.
பெண்கள் முன்னேற்றம் இன்னும் ஆமை வேகத்தில் தான் நடைபெறுகிறது. நகரங்களிலேயே படித்தவர்கள் நடுவிலேயே இந்த நிலை. படித்த பெண்கள் பலரும் இதற்கு காரணமாவது வேதனைக்குரியது.
ReplyDelete