புதுகை வலைப் பதிவர் விழா- என் சில எண்ணங்கள்
----------------------------------------------------------------------------------
வலைப் பதிவர் விழா புதுகையில் களை
கட்டிக் கொண்டிருக்கிறது. விழாவுக்குப் போனோமா வந்தோமா என்றில்லாமல் எதையும் செய்ய இயலாத நிலையில் இது அப்படி
இருக்கலாம் அது இப்படி இருக்கலாம் என்று கருத்tதுக் கூறுவது முறையா தெரியவில்லை.
ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் சொல்வதை விட முன்பே சொல்வது தவறாகாது என்று
நினைக்கிறேன்
ஏறத்தாழ 200 பதிவர்கள் வருகை
எதிர்பார்க்கப் படுகிறது. எண்ணிக்கை மாறலாம் பலர் முதல் நாள் வரலாம் பலர் அன்று
காலை வரலாம் இம்மாதிரியான நிகழ்ச்சியை சரிவர இயக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும் இதைக்
கருத்தில் கொண்டே வலைப் பதிவர் குழுவுக்கு
முதலிலேயே நேர விவரணங்களுடன் நிகழ்ச்சி நிரல் தயார் செய்து பதிவர்களுக்குத் தெரியப் படுத்தக்
கோரி இருந்தேன் எல்லோர் வருகையும் பதிவு செய்யப் படவேண்டும் அறி முகப் படுத்தப் பட வேண்டும் கையேட்டுப்
புத்தகங்கள் வழங்கப் படவேண்டும் நேரம்
சரியாக பின் பற்றப் படாவிட்டால் குழப்பம்
உண்டாகும். தமிழ் மின் இலக்கிய குழுவோடு
கைக் கோர்த்து போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
சிறப்பு விருந்தினர் என்று சிலர் ( பலர்?) அழைக்கப்பட இருக்கின்றனர். அவர்களும் அவர்கள் பங்குக்குப் பேசாமல்
இருக்கப் போவதில்லை. இதல்லாமல் புத்தக வெளியீடு என்றும் இருக்கிறது. சிலர்
விசேஷமாகக் கௌரவப் படுத்தப் போவதாகவும் நினைக்கிறேன் கால இயந்திரத்தின் துணையோடு
கற்பனைகளில் சிலர் மிதக்கிறார்கள். காலை
உணவு மதிய உணவு மாலை தேனீர் போன்றவை பற்றிய விவரங்கள் ஏதும் கொடுக்கப்
பட்டிருக்கிறதா. வலைப்பதிவர் போட்டிக்கு
நடுவர்கள் யார் ? யாராயிருந்தாலும் அவர்களுக்கு வலைப் பதிவர்களின் அறிமுகம்
இருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன் முடிவு
சொல்லும்போது அறியாமலேயே bias இருக்கக் கூடாது. இதை எல்லாம் சொல்லாமல் போய்க்
கொண்டிருக்கலாம் இருந்தாலும் கூடப் பிறந்த
சுபாவம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இக்கருத்துகள் யார் பணியையும் குறை கூற
அல்ல. பதிவர் விழா சிறக்கவே என்று கூற விரும்புகிறேன் without any prejudice மதுரையில் நடந்ததைவிட
சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே நோக்கம்
நல்ல யோசனைகள்.
ReplyDeleteசிறப்பாய் செய்வார்கள் என்று நம்புகிறேன் !
ReplyDeleteஅய்யா நீங்கள் செய்த முன்னெச்சரிக்கை சரியானதுதான். வலைப்பதிவர்கள் சந்திப்பு என்பது வலைப்பதிவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் வேறு திசைக்கு பயணம் ஆகி விடக் கூடாது.
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
ReplyDeleteதிரு தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் சொல்வதையே நானும் வழி மொழிகின்றேன் ஐயா
ReplyDeleteகவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், நாள்தோறும் ஒவொரு ஊர் என, அயராமல் பயணித்து, நாள்தோறும் விழா அரங்கங்ககளை அலங்கரித்து வருபவர்.
நிச்சயமாக அவருக்குத் தெரியும். எதை செய்ய வேண்டும் என்பதை விட,
எதை செய்யக் கூடாது என்பதை அவர் நன்கு அறிவார்.
விழா சிறக்கும்
நன்றி ஐயா
ReplyDeleteஸ்ரீராம்
/நல்ல யோசனைகள் / அமைப்பாளர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ பகவான் ஜி
எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் விட்டுப் போனது ஏதாவது இருந்தால் சரிசெய்ய ஒரு சில ஆலோசனைகளே. வருகைக்கு நன்றி ஜி.
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
எச்சரிப்பது என் கடமை என்று நினைத்தே எழுதினேன் வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
விழாவைத் தனிமனிதர் நடத்துவதில்லை. ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றதே இது. ஒரு ட்ரான்ஸ்பெரன்சி வேண்டும் என்று தோன்றியது.சில ஆலோசனைகள். எழுதி இருந்தபடி without any prejudice வருகைக்கு நன்றி ஐயா.
Good Idea Ayya
ReplyDeleteGood Idea Ayya
ReplyDeleteதாங்கள் கூறுவது சரியே!..
ReplyDelete//ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் சொல்வதை விட முன்பே சொல்வது தவறாகாது என்று நினைக்கிறேன்///\இது நீங்கள் எழுதியது.
ReplyDeleteநான் எழுதிக் கொண்டிருக்கும் வரிகள் இதுதான் //பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது அதற்கு எந்தவொரு உதவியும் செய்யாமல் அப்படியே வேடிக்கை பார்த்துவிட்டு அந்த நிகழ்வு முடிந்த பின் குற்றம் குறைகளை பொதுவில் சொல்லுவதும் நிறைகளை தனிப்பட்ட முறையில் சொல்லுவதும்தான்.// என்று பதிவு எழுத ஆரம்பித்த வேலையில் உங்கள் பதிவு என் கண்ணில் பட்டது.
நாம் சொல்லவருவது வேறாக இருக்கலாம் ஆனால் எண்ணங்கள் ஒன்றாக இருப்பது போல இருக்கிறது
அருமை
ReplyDelete
ReplyDelete@ கில்லர்ஜி
எதைச் சொல்கிறீர்கள் ஜி ?
ReplyDelete@ துரைசெல்வராஜு
/தாங்கள் கூறுவது சரியே/ எதைக் குறிப்பிடுகிறீர்கள் ஐயா?
ReplyDelete@ அவர்கள் உண்மைகள்
/நாம் சொல்லவருவது ”வேறாக இருக்கலாம்” ஆனால் எண்ணங்கள் ஒன்றாக இருப்பது போல இருக்கிறது/நான் சொல்லவந்ததைத்தான் சொல்லிவிட்டேனே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ நாகேந்திரபாரதி
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்
ReplyDeleteபரிசீலிக்கப்படவேண்டிய ஆலோசனைகள். நிச்சயம் விழாக்குழுவினர் எவ்வித குறையும் இல்லாமல் விழாவை சிறப்பாக நடத்துவார்கள்.
@ வே.நடனசபாபதி
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா. நானும் நம்புகிறேன்
ReplyDeleteஅதாவது நடுவர்கள் வலைப்பதிவர்களுக்கு தெரிதல்கூடாது என்று தாங்கள் சொன்ன யோசனையை சொன்னேன் ஐயா
சிறப்பான யோசனைகள்! நன்றி!
ReplyDelete
ReplyDelete@ கில்லர்ஜி
தெளிவு படுத்தியதற்கு நன்றி ஜி
ReplyDelete@ தளிர் சுரேஷ்
வருகைக்கு நன்றி சார்
நல்ல யோசனைகள் ஐயா....
ReplyDeleteசிறப்பான கருத்துரைகள் ஐயா! விழா சிறப்பாக அமையும் என நம்புவோம்.
ReplyDelete
ReplyDelete@ பரிவை.சே.குமார்
வருகைக்கும் யோசனைகளை அங்கீகரிப்பதற்கும் நன்றி ஐயா
ReplyDelete@ தனிமரம்
விழா சிறப்பாக அமைய வேண்டும் என்பதே என் அவாவும் வருகைக்கு நன்றி.
தங்களது கருத்துக்கள் விழாக் குழுவினருக்கு மட்டுமல்ல, செல்லும் நமக்கும் பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
பொதுவாகவே பாராட்டு பெறுபவர்கள் இதனை எவ்வாறு ஏற்கிறார்களோ தெரியவில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.
ஐயா... வணக்கம்...
ReplyDelete///G.M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் நினைவில்... எண்ணத்தில்... // இதற்கு கீழ் தங்களின் இரு பதிவுகள் நீங்கள் வெளியிட்ட அன்றே இணைக்கப்பட்டு விட்டது... நன்றி...
அன்புடன்
திண்டுக்கல் தனபாலன்
http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html
தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்.
ReplyDeleteஉங்கள் ஐயங்கள், சந்தேகங்களை சொல்லிடுறது ந்ல்லதுதான் சார். பொதுவாக "நடுவர்கள்" நிலைமை திண்டாட்டம்தான். எனக்குத் தெரிய கோடி கொடுத்தாலும் பலர் அப்பொறுப்பை ஏற்கவே பயப்படுவாங்க. ஏன் என்றால் அவர்களுக்கே அவர்கள "பயஸாக" இருந்துவிடுவோமோ என்கிற ஐயம் இருக்கும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteI can suggest one thing, முடிந்தால்..all the reviewers/judges should review the poems/articles independently. They should never ever discuss with each other that "he/she has done a good job! What do you think about him/her?" This kind of discussions mentioning about "someone" as good or bad will influence other reviewers. Every reviewer just have to review and rate them as 1-10 based on their own judgement and send the report to the committee and forget it!
சரி, நான் இடத்தை காலி பண்ணுறேன், சார். "வந்துட்டான் அறிவுரை சொல்ல!" ணு என்னை ஒரு வழி பண்ணிடப்போறாங்க! :)
ReplyDelete@ வலைப் பதிவர் சந்திப்பு புதுக்கோட்டை
நான் எழுதிய பதிவுகள் இணைக்கப் பட்டு விட்டதைப் பார்த்தேன் நன்றி
ReplyDelete@ ஜீவி
நல்ல யோசனைதான் எங்கு அமர்வது யார் யார் அமர்வது போன்ற விஷயங்களில் ஒத்த கருத்து என்பதுதான் கேள்விக்குரியது வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ வருண்
நான் என்ன நினைக்கிறேன் என்றால்முடிவெடுக்குமுன் டிஸ்கஷன்கள் இருந்திருக்கவேண்டும் முடிவெடுத்தபின் யார் கேட்கப் போகிறார்கள் வருகைக்கு நன்றி சார்
@ வலைப்பதிவர் சந்திப்பு
ReplyDeleteநான் அனுப்பிய போட்டிக்கான பதிவுகள் இருப்பது கண்டேன் தகவலுக்கு நன்றி.
எங்கு அமர்வது?
ReplyDeleteஇதிலென்ன சந்தேகம்?.. மாநாட்டு அரங்கில் தான்.
யார் யார் அமர்வது?.
மாநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் தான்! இந்த விஷயத்தில் அனைவருக்கும் ஆர்வம் இருக்குமென்பதால்.
நல்ல யோசனைகள்....
ReplyDelete
ReplyDeletei @ ஜீவி
இந்த ஆலோசனையை அடுத்த பதிவர் விழாவில் பரிசீலித்தால் நலமாயிருக்கும் இந்த விழாவுக்கு இது டூ லேட் என்று தோன்றுகிறது
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
ஊதுகிற சங்கை ஊதி விட்டேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
ஜீவி அவர்களின் கருத்து கவனிக்கப்பட வேண்டும்.
ReplyDelete
ReplyDelete@ அப்பாதுரை
ஜீவி அவர்களின் கருத்துக்கள் ஏற்புடையதே ஆனால் நடைமுரைப் படுத்தவே அதற்காகவென்றே இன்னொரு வலைப் பதிவர் சங்கமம் வேண்டும்