Thursday, December 26, 2019

அலை பாயுதே


                                                   அலை பாயுதே                                     --------------------------------
நானொரு மிகச்சாதாரணன்   எல்லாம் தெரிந்தது போல் நினைப்பதில்லை பலராலும் உண்மை என்றே நம்பப்படும் பெர்செப்சன்  எனக்கு இல்லைபெர்செப்ஷன் இல்லை என்றில்லை ஆனல் அதுவே உண்மை என்று நம்புவதில்லை  எனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரியாது  என்று சொல்வதில்வெட்கம் இல்லை  அது போகட்டும் அண்மைக்காலத்தில் அதிகமாகபேசப்படும் என்ஆர்சி எனப்படும் நேஷனல் சிடிஜன்ஸ் ரெஜிஸ்டர் எனப்படுவது குறித்து அநேக  சந்தேகங்கள் இந்த ரெஜிஸ்டரில் பெயரை யார் பதிவு செய்கிறார்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு குடிமகனும்  பதிவு  செய்ய வேண்டுமா இல்லாவிட்டால் நாம்  இந்தியக் குடிமகனாகக் கருதப்பட மாட்டோமா  ஏதும் செய்யாமல் இருந்தால் ஒருவேளை நாம் இந்தியக் குடிமகந்தான்   என்பது இல்லாமல் போய் விடுமோ சரி இதை நிர்ணயிப்பது யார் கட்சிகளுக்கு அடிவருடும் அதிகாரிகளால் தொந்தரவு ஏற்பட்டு நாமே ப்ரூவ் செய்ய வேண்டுமோஇது எனக்கு மலையைக் கெல்லி  எலி பிடிப்பது போல் தோன்றுகிறது இதற்குஅவசியம்தான் என்ன    
முக்கியமாக வேறு மாநிலங்களில்வேலை நிமித்தம்  வாழ்பவர்கள்பாடு  சிரமமாகுமா
இப்போதுதான் மொழி இனம் போன்றவற்றால் பிரிக்கப்படுவது சாதாரணமாய் இருக் கிறதே
 மொத்தத்தில் இது நல்லதற்கல்ல என்றே தோன்றுகிறது  பிடிக்காதவரை துன்புருத்தல் சாத்தியமாகும்
 இது தவிர இதில் சட்ட திருத்தம் வேறு ஒன்னுமே புரியலை

சரி அரசியலை விடுவோம்  என் விட்டு மாமரத்தில் அநேக அணில்கள்  இருக்கின்றன  அவற்றுக்காக கூடுகள் எங்கும் பார்க்க வில்லை  அவை இரவில் எங்கு செல்கின்றனதெரிய வில்லை சாமி
என்னைப்போல் வயதானவனுக்குபொழுது போக்கே   சின்னத்திரையில் சீரியல்கள் பார்ப்பது தான் அதிலும் சந்தேகங்கள் நிறைய உண்டு வாழ்க்கையில் நடப்பது சீரியலில்  காட்டப்படுகிறதா அல்லது சீரியலில் வருவதை வாழ்வில் கடைப்பிடிக்கிறார்களா இதற்கு பதில் தருபவர்களும்  பிரிந்து  இருக்கலாம்   இப்போது சீரியல்களில் பெரும்பாலான வற்றில் ஜோசியம் பார்க்கிறார்கள் அநேகமாக ஜோசியர் சொல்படிதான் நடப்பதாக காட்டப்படுகிறது  கடவுள் சக்தி வாய்ந்தவர் என்றால்   இந்த ஜோசியர்கள் அவரைப் போலவேசக்தி மிகுந்தவர்களாகவே  காட்டப்படுகிறார்கள்    எந்தக் குறையையும்   பரிகாரம் மூலம் சரி செய்து விடுகிறார்கள் நம்மில் நமக்கே நம்பிக்கை  இல்லாமல் போய் விடுகிறது மூட நம்பிக்கை என்றால்  வாசகர்கள்  பொங்குவார்கள்

.நம் வலைத்தளத்துக்கு  வருகைபுரிபவர்  எண்ணிக்கை  தெரிகிறது  அதேபோல் நாம்வெளியிட்டுள்ள  மின்புத்தகங்களை எத்தனை பேர்வாசித்தார்களென்று தெரிவது எப்படி நம்பதிவுகள் அதுவும் பழைய பதிவுகள்   அதிகம்  வாசிக்கப்படுகின்றன வெறும் மூன்றே பேர் கருத்திட்ட ஒரு பதிவு ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர்ல்களால்  வாசிக்கபட்டு இருப்பது ஆச்சரியம் தருகிறது  
ஒன்று மட்டும் புரிகிறது 
நம்மைத்தெரிந்தவர்களை  விடதெரியாதவரே அதிகம்பேர் வாசிக்கிறார்கள்  இத்தனைக்கும்  தமிழ்மணம் வேறுமுடங்கி உள்ளது









14 comments:

  1. சட்சட்டென சப்ஜெக்ட் மாறி வரும் சிந்தனைகள்.  என் ஆர் சியிலிருந்து தொலைகாட்சி சீரியல், அணில், பதிவு  என்று தாவும் சிந்தனைகள்.     உரத்த எண்ணங்கள் ரசித்தேன்.   

    ReplyDelete
    Replies
    1. தான் தோன்றித்தனமக எழுதியது என்கிறீர்களாவருகைக்கு நன்றி

      Delete
  2. // இது நல்லதற்கல்ல /// அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு...

    தவறே செய்யாதவனுக்கு ஜோசியம் என்பது என்னவென்றே தெரியாது....!

    மின்புத்தகங்களை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துள்ளார்கள் என்பதை அறியலாம்... ஆனால், அதை முழுமையாக படித்தார்களா என்பது _____!?

    ReplyDelete
    Replies
    1. எங்கும் ஜோசியம் என்பதைப்பார்க்கும்போது வருந்தி எழுதியது எனது நான்கு நுல்கள்புஸ்டகாவில் மின்னூலாக இருக்கிறதுஅதை கிண்டிலுக்கு மாற்றவும் பலரும் படிக்கஎன்ன செய்ய என்று தெரியவில்லைபுஸ்தகாவில் வாடகைக்கோ வாங்கவோதான் முடியும்

      Delete
  3. தற்போது உள்ள சட்டங்கள் படி ஒருவரை போலீஸ் கைது செய்து சில நாட்கள் சிறையில் வைக்கலாம். கொஞ்ச நாள் கழிந்தவுடன் அவர் ஜாமீனில் வெளியே வந்து விடலாம்.

    NRC எனப்படும் சட்டம் அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தை கொடுக்கிறது. யார் குடிமகன் யார் குடிமகன் இல்லை என்று தீர்மானிக்கும் உரிமை அதிகாரிக்கே. குடிமகன் அல்லாதவர்கள் detention camp என்ற பொது சிறையில் நிரந்தரமாக அடைக்கப் படுவார்கள். இந்திய குடிமகன்கள் அடைக்கப்படமாட்டார்கள் என்று அரசு கூறினாலும் அதிகாரிகள் சொல்வதே தீர்ப்பு எனப்படும் போது தான் அச்சம் தோன்றுகிறது. இப்பிரகாரம் தான் ஹிட்லர் யூதர்களை சிறையில் அடைத்து கொன்று குவித்தார் எணப்படும் பொது தான் இது ஹிந்துக்கள் அல்லாதோரை ஒழித்துக் கட்டும் ஒரு உத்தியோ என்று தோன்றுகிறது.
     தற்போது இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் போதும். அனால் புதிய  சட்டப்படி தாய், தந்தையர் இந்திய குடிமக்களாக இருக்கவேண்டும். அவர்களது பிறப்பு சான்றிதழ் காட்டப்படவேண்டும்,இது போன்று பல சிக்கல்கள்.
     இந்த அரசு யார் சொல்வதையும் கேட்காது. அடிமைகள் பிழைத்துக் கொள்வர். எதிப்பவர் பாடு ????

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. சிக்கல்கள்பல உண்டு என்று தெரிகிறது இனி நான் எல்லாம் என்குடி உரிமையை நிலைநாட்ட வேண்டுமா

      Delete
  4. //நம்மைத் தெரிந்தவர்களை விட தெரியாதவரே அதிகம்பேர் வாசிக்கிறார்கள்//

    இதுதான் ஐயா உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நம்மை தெரியாதோர் என்பது விளங்கவில்லை தெரியாமலா வாசிக்கிறார்கள்என் எழுத்தை தெரியுமல்லவா

      Delete
  5. NRC துவக்கப்படும் போது இந்த அரசு. ஆனால் முடிக்கப் படும் போது இந்த அரசு நிச்சயம் இருக்காது புதிய அரசு இந்த திட்டத்தை கைவிட்டு விடும். இந்தியா போன்ற நாடுகளில் இது நடைமுறை சாத்தியமே இல்லை. ஆனால் என்ன செய்வது?

    மதவெறி பிடித்த முட்டாள் ஆட்சியாளர்கள் இருக்கிறார்களே?

    ReplyDelete
  6. NRC துவக்கப்படும் போது இந்த அரசு. ஆனால் முடிக்கப் படும் போது இந்த அரசு நிச்சயம் இருக்காது புதிய அரசு இந்த திட்டத்தை கைவிட்டு விடும் நம்புவோம்

    ReplyDelete
  7. மூட நம்பிக்கைகளை விடுவது எளிதல்ல. புதிய புதிய நம்பிக்கைகள் தோன்றுகின்றன. மூன்று காணொளிகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் பதிவு மாறி வந்து விட்டதோ

      Delete
  8. NRC பற்றி சொல்லவேண்டுமென்றால் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடிய ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே . என்ற பாட்டைத்தான் பாடவேண்டும். .

    இந்த நேரத்தில் பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்’ என்ற சொல்லாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது.

    இப்போது வரும் திரைக்காட்சி நாடகங்கள் எல்லாம் எதிரமறை கருத்துகளையே புகுத்துகின்றன. கூடியவரையில் அவைகளை பார்க்காமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete
  9. எதிர்மறை நேர்மறை என்பதற்கு ஒருபுதிய அர்த்தம் இலக்கிய சாரல் தளத்தின் மூலம் தெரிகிறது

    ReplyDelete