Thursday, December 5, 2019

ஓஒ அது அந்தக்காலம்



                            ஓஒ அது அந்தக்காலம்
                             -----------------------------------
 ஓஓ அது அந்தக்காலம் 
பதிவெழுதினால்  அதன்விளைவாக  கருத்தாடல்க;ள் இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் எழுத்தின் பலன்  தெரியும் அதற்கு உதாரணமாக நான்   முன்பு எழுதி இருந்த பதிவு ஒன்றின்  சுட்டியைத் தருகிறேன்   அதையும் அதற்கு வந்திருந்த பின்னூட்டங்களையும் தயவு செய்து படிக்கவேண்டுகிறேன்  பின்னூட்டங்கள் ஒரு தெளிவைக் ஏற்படுத்த வேண்டும் வந்திருந்த பின்னூட்டங்களை  வகைப் படுத்தினால் சில விவரங்களைத்தரும் சில one up manship  ஆக இருக்கும் சில பதிவின் வ்ஷயங்களைத் தாண்டி இருக்கும்  நான் 2010ம் ஆண்டு முதல் பதிவிலெழுதி வருகிறேன்  பதிவில் காணும் செய்திகளுக்கே பின்னூட்டம் இருக்கும் பதிவைப் பற்றிய வாசகர்களின்  கருத்து இருக்கும்முக்கியமாக பதிவை எழுதியவர் பற்றி எழுதுவது தவிர்க்கப்பட்டிருந்தது  ஆனால் இன்று நிலைமை  அப்படி இல்லை என்றே  தோன்றுகிறது 
பின்னூட்டங்களில்   சிலபேர் காணோளி பற்றி கூறி இருப்பார்கள் அந்தக் காணோளி இதோ




  
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறை முன்பு போல் இல்லை... இருக்கவும் வேண்டாம் என்றே தோன்றுகிறது... பணம் நிறைய என்று பத்தாண்டு வேலை செய்து விட்டு இன்று படுத்த படுக்கையாக இருப்பவர்களும் உண்டு...

///
திருமணமாகி வாழ்வில் செட்டில் ஆக நினைப்பதே அரிதாம்..///

செட்டில் ஆனாலும் வாரிசு உருவாவதிலும் சிக்கல்...!
 குடும்பத்தாரோ ஐடி கம்பனியில் கை நிறைய சம்பளம் என்று மகிழ்ந்திருக்கும்போது கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வது முடியாத காரியமாகி விடுகிறது/ அப்படியே பகிர்ந்து கொள்வதானாலும் நம்புவார் இல்லையாம்.

அடுத்த தலைமுறையின் கஷ்டங்களை கண்கூடாகக் கண்டும் புரிந்துகொள்ளமுடியாத குடும்பம் சோகம் தான்..!
எழுதியிருப்பது அத்தனையும் அசல் விவரங்களே. பணம் சம்பாத்தித்து வசதிகள் பெருக்கியதும்.

விடியோவை பத்து தடவை பார்த்திருப்பேன். இந்த மாதிரி திறமையை வைத்துக்கொண்டு உருப்படியாக என்ன செய்வது என்ற கேள்வி ஒருமுறம் எழுந்தாலும், how much fun she seems to have and how fun it is to watch என்ற எண்ணம் உற்சாகத்துடன் மேலோங்குகிறது.
.டி. விவரங்கள் உண்மை என்றே தோன்றுகிறது. வீடியோ கண்டு வியந்தேன். நன்றி அய்யா
அங்கு வேலை பார்ப்பவர்கள் சம்பாதிப்பதை செலவு செய்யக் கூட நேரம் இல்லை என்பது கண் கூடு
இப்படி விடியோவை எல்லாம் பார்த்தால் மீண்டும் இளமையாகி, ஐடி வேலைக்குப் போகமுடியுமுங்களா, சார்?
இருக்கும் நிலையை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லையாம். குடும்பத்தாரோ ஐடி கம்பனியில் கை நிறைய சம்பளம் என்று மகிழ்ந்திருக்கும்போது கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வது முடியாத காரியமாகி விடுகிறது/ அப்படியே பகிர்ந்து கொள்வதானாலும் நம்புவார் இல்லையாம்.//
கஷ்டம் தான். இவர்களின் நிலமை.
உடல்நலம், மனநலம் சரியாக இயங்க இவர்கள் வேலையை வரையறை செய்து கொள்ளவேண்டும்.
பணம் முக்கியம் தான், ஆனால் உடல் நலமும் முக்கியம் இல்லையா இதை யோசிக்க வேண்டும் இளம் தலைமுறைகள்.
வளையங்களை இணைத்து ஆடும் பெண் வியக்க வைக்கிறார்கள்.
GMB சார், .டி . வேலை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது பெரும்பாலும் உண்மை தான்.
நிறைய சம்பளம் ஆனால் அர்த்தமற்ற வாழ்க்கை. எதற்காக இப்படி ஓடுகிறோம்? யாரை திருப்திப் படுத்த இப்படி அலைகிறோம்? உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எதுவமே தெரியாத வாழ்க்கை. மேலும் ஒரு நாற்பது வயது வரை தான் .டி .யில் யாராலும் தாக்குப் பிடிக்க முடியும். அதன் பிறகு , வேலையின் mental stress -இற்கு உடம்பு ஒத்துழைக்காது. எனக்கு , 40+ மனிதர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது. எங்கள் கம்பெனியில் 35 வயதுக்கு மேல் யாரையும் பார்க்க முடிவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்..? காலேஜுகளில் விரிவுரையாளராக சேர்ந்து விடுவரார்களா தெரியவில்லை. .டி யில் மானேஜர் வேலை என்பதை எல்லாரும் பெற்று விட முடியாது
மேலும் மேனேஜர் ஆனால் வெட்கம் மானம் சூடு சுரணை இவைகளை விட்டு விட்டு கஸ்டமருக்கு கூஜா தூக்க வேண்டும். யாரோ ஒருத்தன் சொல்லும் வசை சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏன் இந்த நாய்ப் பிழைப்பு?...TBC.
சமீபத்தில் இந்த விஷயம் தொடர்பாக தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.

விவரமான பின்னூட்டங்களை பதிவுகளில் பார்ப்பதுஅரிதாகிவிட்டது.
----------------------------------- நானும் சேர்ந்து நன்றி சொல்கிறேன்.

வேறு யாராவது வேறு கோணத்தில் வேறு ஏதாவது கருத்துக்களைச் சொல்கிறார்களா, பார்ப்போம்
இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறேன்...markets should be localized . எவனோ முகம் தெரியாத ஆஸ்திரேலிய கஸ்டமருக்கு நாம் கூஜா தூக்கும் அபத்தம் மறைய வேண்டும்.
முதலில் .டி .ஆள்களுக்கு சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அப்படி ஆனால் நிறைய பேர் வேலையை விட்டு விடுவார்கள். விடட்டும். அது தான் நல்லது . சமுதாயத்தில் ஒரு balance கிடைக்கும். எல்லா வேலையும் சமமானது என்ற நிலை வந்து விடும். .டி .ஒரு option ஆக இருக்கும். பளபளக்கும் மால்களும், வீகெண்ட் க்ளப்புகளும் நம் நகரத்துக்கு வேண்டாம். நமக்குத் தேவை நிம்மதியான வாழ்க்கை
. ----------------------------------- சொல்லி இருப்பதை ஆமோதிக்கிறேன். பொதுவாக சுய கட்டுப்பாடு என்பதே குறைந்துவிட்டது. அதற்குக் காரணம் ஐடி துறையில் கிடைக்கும் அதிகப் பணம் மட்டுமில்லாமல், நேரம் கெட்ட நேரம் வேலை செய்வது, நேரம் கெட்ட நேரம் உண்பது, ஆண், பெண் சகஜமாய்ப் பழகுவது என்பது மாறி இருவரும் பழகுவது என்பதே உடல் உறவுக்குத் தான் என்று ஆகிவிடுவது போன்ற பல காரணங்களைச் சொல்லலாம். கட்டற்ற சுதந்திரம் என்பது தவறாகப் பயன்படுத்தப் படுகிறது.

பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு திருமணம் ஆனாலும் மனக்குழப்பத்தோடேயே வேலை செய்கிறார்கள். குழந்தை பிறந்தால் இன்னமும் அவர்களுக்குத் தொல்லை அதிகம் என நினைப்பவர்கள் உண்டு. வாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்ற பெயரில் தவறான நடத்தைகளுடன் தவறான முன் உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர்.
Having "HAPPILY" quit the IT field- have to admit tht whatever you have said in the pst is true. But apart from that- I feel tht the questions of "morality"/ rather the question "What is morality"- is subjective and I do not want to discuss it. why still IT?(1) Students- don't have the support/decision-making authority to choose to study a subject of interest. There's a huge insecurity amidst parents when a student aspires to be a-say-historian or a journalist or a graphic designer or environmental engineer etc. even here- there are very few colleges that offer these kind of options. And above all- even if students and parents choose to opt for a different course- "what is step-2"? There is limited knowledge about the career scope of these courses(2) Parents are unwilling to understand the capacity/capability of their wards. The child scores 100%and one who scores 40%- are both engineers. though we can't judge knowledge by the marks- this is still one reason for the huge knowledge gap.(3) projects- I happened to be in an excellent project- where I learnt a lot. Still- the timings were awful! But a couple of my friends- had and still have a very difficult time with the shifts in IT. A newly married friend of mine- was constantly placed in night shifts and her husband in morning shift- for almost 1 yr- reason being- non-availability of experienced associates. Most managers (not all) are sadists. During my 3.9 yrs in IT- I happened to come across 2 cases of suicide (manager related issues) and one heart attack (stress). They were all barely 30 yrs old! There was a project- where every1 in it was hardworking/equally capable&experienced and eligible to go "on-site" (read- USA). How will you give a "normalised" "rating" in such a case? 
Obviously- the one that is most close to the PM/PL would benefit. the PL in that project would always be close to tears whenever he had to announce the ratings to his team members. The team would always be on the verge of explosion! (contd.)
4) Why then do these people don't quit IT? There is absolute uncertainty beyond a certain point in your career in IT. That is- if not Infosys- you have to move to CTS. There is no choice to derail from the IT track and all ITs share the same story. So if at all- there is a need to change career- that has to be done within the 1st 3-4 yrs of being in IT. But the 1st 3-4 yrs are the most exciting years in IT. You get money/freedom/knowledge/on-site opportunities etc. Then you get married- and once the responsibilities grow- only then these problems in IT begin to haunt you. By this time- it too late. I have known recently a lady who has 6 yrs experience in IT. From a salary of rs 75000 per month (in IT) - which she quit and opted to be a clerk in a bank (around 16-19000 per month). She says- I am 'happy' to earn less but spend more time with my family. But that is her choice/decision. We cannot comment on that.(5) Cost of education- and education abroad-- these are 2 things that don't have an upper limit. Many parents who are IT professionals- are now able to afford such "costly" education- Thanks to the salary that the IT pays. But no one thinks about the options like "Kendriya Vidyalaya"/govt. aided schools. It is because of the fact that these ppl are unwilling to opt for such schools- govt schools lack the necessary facilities that private education provides.
There might be a million things wrong in IT. Still one cannot refute that- it has provided an opportunity to grow for millions of youngsters. People who are working there- do you think that they are blissfully ignorant about these problems? They know it- and they are ready to cope up with it. And people- who make conscious decision to quit IT- have quit and have comfortably settled in more fruitful jobs- do you think these jobs won't have problems? there would still be problems- but there will be a will to tackle them too. there is no point in worrying about how bad IT is... But again- "Bad" and "Good" are subjective- aren't they?
/ எனக்கு , 40+ மனிதர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது. எங்கள் கம்பெனியில் 35 வயதுக்கு மேல் யாரையும் பார்க்க முடிவதில்லை. //
எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாகவே உண்டு. நான் இருப்பது அமெரிக்காவில். இங்கு 40+ பலர் developer , QA engineer ஆக இன்னும் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் குறைவு /இல்லவே இல்லை என நினைக்கிறேன். பல வருடம் developer ஆக வேலை செய்த என் நண்பன் திரும்பி போகும்போது, நான் அங்கும் developer ஆகத்தான் இருப்பேன். எனக்கு அந்த வேலை தான் பிடிக்கும் என்று சொன்னவன், போய் ஒரு வருடத்திலேல்லாம் மேனேஜர் ஆக பதவி உயர்ந்தான். எண்டா என்றால், என்ன செய்வது. நான் developer ஆகவே இருக்க விரும்புகிறேன் என்றால் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள். They think I am not capable to be a manager ! என் காதுபடவே பேசுகிறார்கள்." என்றான். Every onehas to keep moving up the ladder and there are only a small number of manager positions to be filled in!
----------------- சொன்னதில் பிடித்த மற்றொன்று "முதலில் .டி .ஆள்களுக்கு சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அப்படி ஆனால் நிறைய பேர் வேலையை விட்டு விடுவார்கள். விடட்டும். அது தான் நல்லது . சமுதாயத்தில் ஒரு balance கிடைக்கும். எல்லா வேலையும் சமமானது என்ற நிலை வந்து விடும். .டி .ஒரு option ஆக இருக்கும். " எல்லாம் இந்த தொண்ணூறுகளில் ஆரம்பித்த மிக imbalance -இனால் வந்தது!
சுவாரசியமான கருத்துக்கள்.
----------------------------- சொல்வது சரியே. கட்டுப்பாடு என்பது நாம் நமக்கு விதித்துக் கொள்வது - சுதந்திரம் என்பதும். இது வேலியா என்பதையும் நாம் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் - அந்த முதிர்ச்சியைக் கல்வியும் உலக அனுபவமும் (ஓரளவுக்கு வளர்ந்த விதமும்) தரவில்லையென்றால் வம்புதான்.
நிறைய சம்பளம் என்கிறார் ------------. இந்தியாவில் பொருட்களின் விலையும் அதே அளவுக்கு உயர்ந்திருக்கிறதே? ஐடி அல்லாத துறைகளில் இருப்போருக்கு சம்பளம் அத்தனை உயராதத் இன்னொரு சிக்கல். இந்நிலையில் ஐடியில் சம்பாதிப்பவர்கள் ஏதாவது சேமிக்க முடிகிறதா? என் நண்பரின் மகன் பெங்களூரில் வீடு வாங்கியிருக்கிறான். அக்செஞ்சரில் வேலை பார்க்கும் தம்பதிகள் இருவரும் சம்பளத்தில் 75% வீடு மற்றும் கார் கடனுக்கு போய்விடுகிறது என்கிறார்கள் - என்னால் நம்பவே முடியவில்லை. மிச்சப் பணத்தில் மிகவும் சாதாரணமாகத்தான் வாழ்கிறார்கள். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறைவதற்குக் காரணம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த நேரம் இருந்தாலும் வசதி இல்லாது போவதும் ஒரு காரணமோ? பத்தாயிரம் ரூபாய் மாதச்சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்களோ?---------- சொல்லும் இன்னொரு கருத்து கொஞ்சம் பயமூட்டுகிறது. சம்பளத்தைக் குறைப்பதால் யார் பயனடைவார்கள்? கஸ்டமருக்குக் கூஜா தூக்குவதில் தவறில்லை, முகந்தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன? என் அனுபவத்தில் இந்திய ஐடி கம்பெனிகள் கஸ்டமரின் தேவைகளைப் புரிந்து கொண்டதே இல்லை - அதுவும் தொழில் நுட்பக்காரர்கள் தங்கள் நுட்பத்தை வெளிப்படுத்தவிரும்புகிறார்களே தவிர கஸ்டமரின் தேவை, அவசரம் இவற்றைப் புரிந்து கொள்வதில்லை. மற்ற தொழில்களைக் காட்டிலும் ஐடி இந்தியாவுக்கு புதியது என்பதால் கஸ்டமர் சர்வீஸ் மெசூரிடி இன்னும் வரவில்லை என்பதைக் காரணமாக ஏற்க முடிந்தாலும், இதைத் தவிர்க்க கம்பெனிகள் ஏதாவது செய்யவில்லை எனில், ஐடி துறையில் வேலை செய்பவர்களின் நிலமை இன்னும் மோசமாகும் என்றே நினைக்கிறேன். கஸ்டமருக்கு கூஜா தூக்குவதில் தவறில்லை எனும் அதே நேரத்தில் கஸ்டமரிடம் இன்ன சைஸ் இன்ன வெயிட் கூஜா தான் தூக்க முடியும் என்பதையும் இந்திய ஐடி தொழிலாளர்கள் தெளிவாகச் சொல்வதில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :)

-------------------- கருத்துக்கள் நிறைய சிந்திக்க வைக்கின்றன. இது endemic என்றால் ஐடி துறை ஏன் எதுவும் செய்வதில்லை? IT - non IT துறைகளின் கூட்டில் சமூக முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகள் ஏதாவது செய்யலாமே? இந்தியாவின் ஜனநாயகம் (?) மற்றும் capitalistic leanings ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது, சமன்படுத்தாது. பயமாக இருக்கிறது.

-------------
சொன்னது சிரிக்க வைத்தது.. didn't mean to. துறையின் lack of maturityஐத் தான் இது காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

ஐடி சேவை நிலையங்களை பெரும் நகரங்களுக்கு வெகு தொலைவில் அமைத்திருந்தால் ஓரளவுக்கு இந்தப் பிரச்சினைகள் குறைந்திருக்குமோ? உதாரணமாக சென்னைக்குப் பதில் மதுரைக்குத் தெற்கே மட்டும் ஐடி கம்பெனிகள் தலையெடுக்க அனுமதியுண்டு என்ற சட்டம் கொண்டு வரலாம். இதனால் ஐடி துறைகளின் செலவும் ஓரளவுக்குக் குறையலாம், வளராத பிரதேசங்கள் வளரவும் கூடும்.
சைனாவில் போல் graduating classல் இத்தனை சதவிகிதம் இன்ன வேலைக்குப் போகவேண்டும் என்ற விதிகளைக் கொண்டு வரலாம். மீறும் கல்வி நிறுவனங்கள் penalty கட்ட வேண்டும் என்ற விதி கொண்டு வரலாம்.
ஐடி துறையில் வேலைபார்ப்பவர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு பதில், அவர்களிடம் வருமான வரியை அதிகமாக வசூலிக்கலாம். வெறும் salary bracket என்றில்லாமல் ஐடி துறை என்பதற்காகத் தனி வரி, முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும், வசூலிக்கலாம். அதிகம் சம்பாதிப்பதால் அதிகமாக நுகர்கிறார்கள் - அவர்களால் சமூக பாரமும் அதிகரிக்கிறது. அதற்கேற்றாற்போல் தனி வரியை வசூலிக்கலாம்.
1.       பணி நிரந்தரமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் கம்பெனி கழட்டி விடலாம். இல்லை இவரே கழண்டு கொள்ளலாம்.

2.
இந்திய சூழ்நிலையில் 40 வயதுக்கு மேல் இந்தத் துறையில் ஆரம்ப கால எனர்ஜியுடன் தொடர்ந்து வேலை செய்பவர்கள் குறைச்சல் என்கிறார்கள், விஷயம் தெரிந்தவர்கள். ஒரு வயதுக்கு மேல் பணி மேம்பாட்டின் அசுர வளர்ச்சி தாக்குப் பிடிக்க முடியாமல் கண்ணைக் கட்டுவது காரணம்.

3.
ஐடி அறிவை அனுதினமும் அப்டேட் செய்து கொள்ளவில்லை என்றால் பின் தள்ளப்படுவோம் என்பது எந்தப் பணிச்சூழ்நிலையிலும் இல்லாத ஒரு விநோதம்.

4.
செய்யும் தொழிலுக்கு தாலி கட்டிக் கொண்ட மாதிரி வாழ்க்கைச் சூழ்நிலை. எந்நேரமும் பணிச்சூழ்நிலைகளுடன் சங்கிலி பூட்டிக் கொண்ட நிலை.

இதையெல்லாம் பார்த்தால் வாங்கும் சம்பளம் கண்ணை உறுத்தாது. அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகமாகத் தோன்றியிருக்க லாம். இப்பொழுதெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார்கள். தனியார் துறை என்பதால் எதுவும் நிரந்தரமில்லை. நல்லது பாதி கெட்டது பாதி என்று கலந்து கட்டியது தான்.

வேலையில்லா திண்டாட்டத்தின் விழிபிதுங்கல் சுமையை ஓரளவு பங்கு போட்டுக் கொள்வது தேசத்திற்கு நன்மை.

மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது
இதையெல்லாம் யூகிக்க முடிகிறது.
துறையில் காலூன்றியவர்களால் தான் சரியாகச் சொல்ல முடியும்.
மிகச் சரியான தகவல்களுடன்
கூடிய கட்டுரை
எங்கள் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள்
பலர் இத்துறையில் இருப்பதால் இது குறித்து
அதிகமே அறிந்து கவலைகொண்டிருக்கிறோம்
ஆயினும் நடுத்தர மக்கள் உயர் நடுத்தர மக்களாக
மாற இதை விட்டாலும்
வேறு வழியில்லை என நினைக்கிறேன்
//ஐடி துறையில் ஒருவர் சராசரியாக ரூபாய் மாதமொன்றுக்கு ரூபாய் 50,000/ சம்பாதிக்கிறார் whereas பெங்களூரில் ஒருவரின் மாத சராசரி வருமானம் ரூபாய் 6000/ -ஆம்.//

ஜிஎம்பீ சார்! இந்த equation எந்த விதத்தில்-- எந்த அளவுகோலில்-- சரியாகும்?..
துறையில் காலூன்றியவர்கள் சிலரது கருத்துக்கள் பதிவாகி இருக்கின்றன. ஐடி துறையில் சம்பாதிப்பவரும் மற்றவரின் சராசரி வருமானம் என்று நான் குறிப்பிட்டது அல்ல. ஐடி துறையின் முன்னோடி n.r.narayanamurthi சொன்னது. என் அபிப்பிராயம் என்னவென்றால் இத்தகைய discrepancy இன்னொரு ஜாதியை உருவாக்குகிறதோ என்பதுதான்.அதனால் மனிதர்கள் பொறாமைப் படுகிறார்கள், பொறுமை இழக்கிறார்கள், எதற்கும் போராடத்தயாராகி இருக்கிறார்கள். இவர்களை உபயோகித்துக் கொள்ள நம் நாட்டில் ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள்...!சிந்தித்துப் பாருங்கள். ஏறத்தாழ ஒரே பின்னணியில் இருந்து படித்து முடித்து வருபவர்கள், ஏறத்தாழ அதே வயது , அதே இள ரத்தம் ; ஆனால் ஒருவன் உச்சாணிக் கொம்புக்குப் போகிறான். இன்னொருவன் அடிமட்டத்தில் உழலுகிறான். அவர்களை குறை சொல்வதில் என்ன பயன்.?


எல்லாகருத்துக்களையும் பின்னூட்டமாக எழுதிய அனைவருக்கும் நன்றி.
ஐடி துறையில் சம்பாதிப்பவரும் மற்றவரின் சராசரி வருமானம் என்று நான் குறிப்பிட்டது அல்ல. ஐடி துறையின் முன்னோடி n.r.narayanamurthi சொன்னது. //

அவர் சொல்லியிருப்பதை எடுத்தாளும் பொழுது, அவர் எந்த கணக்கில் அதை சொல்லியிருப்பார் என்றாவது நீங்கள்
யூகித்துச் சொல்லக் கூடாதா?.. எனக்கு புரியாததால் தான், தெரிந்து கொள்ள கேட்கிறேன்.


நீங்கள் எழுதிய பிறகு மீண்டும் ஜூன் 29-ம் நாள் ஹிந்து பத்திரிக்கையைப் படித்தேன். நான் புரிந்து கொண்டபடி ஐடி துறையினர் நிறைய வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் நலனைப் பெருக்குகிறார்களாம், வேலை வாய்ப்புக் குறைகளை மாற்ற முடியுமாம்.இந்த சம்பள விகிதத்தைக் காட்டி அவர்களுக்கு அரசு எங்கரேஜ்மெண்ட் தரவேண்டுமாம்.Mr. Murthi was addressing the Bangalore Chamber of industry and commerce on the occasion of the 36th annual general meeting. அவர் எந்த நோக்கத்தில் சொல்லி இருந்தாலும் மக்களின் ஏற்ற தாழ்வுகள் இந்தத் துறையால் அதிகரித்து இருக்கிறது என்பதே என் எண்ணம்.

மொத்த வேலை பார்க்கும் ஜனத்தொகையில் .டி.யிலிருப்பவர் கள் very few.

தனியார் துறை எதுவும் தாங்கள் அடைகிற லாபத்தில் இருந்தே தங்களுடைய செலவினங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் தான் ஒரே வேலைக்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு விகிதத்தில் சம்பளம் இருக்கிறது. ஊழியர் சம்பளத்திற்கென்று அவர்கள் ஒதுக்குவதும் வேண்டாமென்றால், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.
வேண்டாமென்றால்' என்பதை 'அதிகமென்றால்' என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நாளைய
உலகம் எல்லாமே .டி. சம்பந்தப்பட்டதாக மாறப் போகிறது.
அப்பொழுது நேரடியாகவோ, சார்ந்தோ, அல்லது மறைமுகமாகவோ எல்லா வேலைகளிலும் .டி.யின் பாதிப்பும் வளர்ச்சியும் இருக்கும். அதனால் .டி. தொழிலின் பகாசுர வளர்ச்சியின் அடிப்படையில் அனைத்துத் துறையினரும் ஆசிர்வதிக்கப்படுவர்கள்.

இந்திய இளைஞர்கள் உலக அரங்கில்
திறமைசாலிகளாக இருக்கும் இந்தத் துறை தேசத்திற்கு பொன் முட்டையிடுகிற வாத்து. காலம் அதை அடிக்கோடிட்டு எழுதிக்காட்டும்.



















19 comments:

  1. பதிவுகளை எழுதுவதற்கே ஆட்கள் இல்லாத போது விரிவான கருத்துரைகளை எதிர்பார்ப்பது சற்று அதிகம் தான் கருத்துரை வந்தாலே போதும் என்று நினைக்க தூண்டுகிற காலமிது.

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துரைகள் என்று சொன்னேனாகருத்தாடல்கள் இருக்க வேண்டும் என்றுதானே சொன்னேன் வாசகரின் கருத்தை மனம் புண்படாதப்டி கூறலாமே

      Delete
  2. பதிவுகளை எழுதுகிறவர்கள், படிப்பவர்கள் என இரு சாரருமே வெகுவாக குறைந்து விட்டார்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. எழுதுகிறவர்களாவது செறிவுடன்பங்கு கொள்ளலாமே

      Delete
  3. // பதிவெழுதினால் அதன்விளைவாக கருத்தாடல்கள் இருக்க வேண்டும்... //

    இந்நாள் வரை எனது தளத்தில் அப்படித்தான்...!

    // அப்படி இருந்தால்தான் எழுத்தின் பலன் தெரியும்... //

    சிலரின் கருத்துரைகளின் பலன், எனது அடுத்த பதிவிற்கும் காரணமாக இருந்திருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. இதையே நான் ஒன்றிலிருந்து இன்னொன்று என்று கூறி இருப்பேன்

      Delete
  4. பதிவின் குவாலிட்டியைப் பொருத்துத்தான் பின்னூட்டங்களும் வரும்னு நினைக்கிறேன். பதிவு சப் என்று அல்லது ரசனையில்லாது இருந்தால் பின்னூட்டங்களும் அப்படித்தான் இருக்கும். அதனாலத்தான் சில பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டங்கள் வருவதற்குக் காரணம்.

    இப்போ பதிவுகள் எழுதுபவர்களும் குறைவு, படித்துக் கருத்திடுபவர்களும் குறைவு.

    ReplyDelete
    Replies
    1. குவாலிடி என்பதே அவரவர் கருத்தைப் பற்றியது எல்லோரது ரசனையும் ஒரே போல் இருக்காது ஒருவருக்கு சப் என்று இருப்பது இன்னொருவருக்கு குவலிடி செய்தியாகவும் இருக்கலாம்

      Delete
  5. I am unable to express the following comment in fluent Tamil. This comment is also long. Please excuse me.

    I am one of the persons who was an early bird to catch IT field. I was fresh from College after B.Sc. I wanted a job and so when I was selected as an assistant in TERLS (now part of ISRO). I joined the post immediately. Out of curiosity and an offer of the next scale made me appear for an aptitude test for selection as junior programmer in the organization and I was selected. I was posted in Commercial Data Processing Section of Computer Division. That was in 1970. After about 39 years of service I retired in 2009 after getting some promotions. When I joined my gross salary was Rs. 325/= and when I retired my gross salary was Rs. 88000/-

    During this service period I was a witness to the growth of IT field as a mega service provider and job creator. The revolution was truly astounding.

    When I joined there was no special course called computer science or Information technology. Electrical engineers headed the Division, and my head was a Ph.D from Princeton University.

    I studied COBOL and started writing small applications for Accounts and Administration. They were run on IBM 360/44 mainframe computer.

    The growth of Hardware we used during my service is as follows.

    IBM 360, CDC cyber 170-730, cyber 180-830, (mainframes)

    RISC chip PowerPc based Server/Client setup of 64 work stations/servers with terminals running on AIX.

    SUN SPARC based workstations/servers and terminals based on Linux/windows NT and PC.

    From 0.2 MIPS I saw the computing power grow to 100 MIPS.

    From the procedure oriented languages of COBOL and FORTRAN I saw multiple languages like PL/I, PASCAL, ADA, Basic, C, C++ to Object oriented languages like HTML, JAVA.

    But I was unable to keep pace with all these fast developments, and was stuck after my age crossed 40. Since I was in Govt. Job I was able to hold on till my retirement, and retire peacefully. In fact I did not get any promotion during the last 15 years, and stagnated in my scale. Also so many youngsters having advanced modern knowledge passed over me to higher positions very easily.

    What I mean to say is that In IT field one can cope with the fast developments only up to a certain age say 40.
    The initial benefits of joining IT field may look great and tempting. But after one is exhausted at 40, the initial benefits are nullified.
    A job in Govt. Sector in IT field like NIC etc. is good as it offers job security and a steady but low income compared to Private sectors.

    And after all these ramblings I admit with apology that both my sons are working in IT field, one in Govt., and one in Private sector, because these were the jobs selected by them.



    ReplyDelete
    Replies
    1. நான் 87ல் இந்த ப்ரொஃபஷனில் நுழைந்தேன். இதைப் பற்றி பின்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்.

      Delete
    2. @ஜெயகுமார்
      இன்ஃபொர்மேஷன் டெக்னாலகி பற்றி நான் எழுதியதும் நான் அறிந்து எழுடியதல்ல கேட்டறிந்ததே அந்த பிரிவில் இருந்தவர்கள்தாராளமாக அவர்கள் கருத்தை சொல்லி இருந்தார்கள்பொதுவாக இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ப்ரைவேட் செக்டாரால்தான் வளர்ந்து இருக்கிறது என்னும்கருத்தே அதிகம் அங்குடான் 40 வயடுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னுகருத்தும் உண்டு

      Delete
    3. @நெத உங்களனுபவம் தெட்ரிய காத்திருக்கிறோம்

      Delete
    4. @ jk22384 : //..I admit with apology that both my sons ..//

      Your sons are also individuals. They had, in their wisdom, opted for a particular career option. As simple as that. What's there to admit 'with apology', JK Sir?

      Delete
    5. அவரது பிள்ளைகளை சரியாக கைட் செய்ய வில்லையோ என்று நினைக்கலாம் அல்லவா

      Delete
  6. ஆமாம்.   அது ஒரு கனாக்காலம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நான் அந்தக்காலம் என்று குறிப்பிட்டது கருத்தாடல்களுக்கு குறைவிருக்கவில்லை என்பதை தெரியப்படுத்தவே

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தமிழ்மணம் அடைக்கப் பட்டதால் பதிவுகளுக்கும், கருத்துரைகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. தமிழ்மணத்தை நடத்துவதில் அப்படி என்ன பெரிய பிரச்சினைனு தெரியலை. இதுபோல் பொறுப்பில்லாத நிர்வாகிகள் அதிகமாக ஆக ஆக தமிழ் நம் கண் முன்னாலேலே அழிவதைப் பார்க்கலாம்!

    ReplyDelete
  9. அதுவுமொரு காரணமாகலாம் முக்கியமாககருத்து தெரிவிப்பதில் ஏனோ தயக்கம் எழுதுவதே எண்ணங்களைப்பகிரத்தானே மனம் நோகாமல் கருத்து தெரிவிக்கலாமே

    ReplyDelete