Sunday, January 24, 2021

ஏதேதோ எண்ணங்கள்

 


இப்போதெல்லாம் எண்ணாத எண்ணங்கள்

எப்பவும்   நினைக்காதபடி  வருகின்றன

ஆண்டென்றும்நாள் என்றும் புவி என்றும்

கோள் எனறும் என்னென்னவோ எண்ணங்கள்

பூமி தன்னைதானெ சுற்றுவதும் சூரியனைச் சுற்றுவதும்

காலத்தின் அளவீடாகி  இருப்பது நினைத்து வியப்பாகிறது

அக்காலத்தின் அளவிட்டில் நம் வாழ்வு மிகக்குறுகியது

82 ஆண்டுகள் காலத்தின்   அளவில்மிகச் சிறியது நாம்தான் 

மணி என்றும்   வினாடி என்றும்  கண்க்கிட்டு மலைக்கிறோம்

இதிலும்   காலா அருகில் வாடா சற்றே மிதிக்கிறேன்  காலால்

என்னும்  பீற்றல் வேறு தேவையா இதெல்லாம்

பயனற்ற பேச்சு--- தனித்தியங்கும் நாளா கோளா  நாம் எல்லாம்

இதில் துணை இல்லாது இயங்க முடியாத நிலை வேறு

துணைக்கும்  வயது ஏறுவது தெரியாதா கடவுள்மனிதனாகப் பிறக்க

வேண்டும்  எங்கோ பாடல் ஒலி கேட்கிறது மனிதனாய் பிறந்தாலும்

அவனும் நம்மைப்போல் அல்லாடத் தானே வேண்டும்

என்றோ எழுதியது  நினைவில்  வருகிறது

செய்யாத குற்றத்துக்கு  வரும் தண்டனைக்கா நாம்   நமக்கு மட்டும்

ஏன் இந்த  சிந்தனைகள் கால அள்வீட்டில்இன்னும்  சொற்ப

 நேரமே மிச்சம் தெரிகிறதுஇருந்தாலும் எண்ணங்களை

தவிர்க்கமுடியவில்லையே                                


20 comments:

  1. உண்மைதான் ஐயா. எண்ணங்களைத் தவிர்க்கமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அவை பதிவயிற்று

      Delete
  2. எண்ணங்கள் அலைகள்போல...அவை வந்துகொண்டேதான் இருக்கும்.

    எண்ணத்தை ஒரு புள்ளியில் குவித்து அலைபாயும் மனதை அடக்க முடியுமா? முடியும் என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை

    ReplyDelete
  3. நடப்பது நடக்கட்டும்... எண்ணங்கள் உற்சாகமாகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் எல்லாம் நம்கட்டுப்பாட்டில் இருக்கிற்தா

      Delete
  4. எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அவை ஏதொ சொல்ல வருகின்றன

      Delete
  5. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    தரை மீது காணும் யாவும்
    தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
    யாரோடு யார் வந்தது நாம் போகும்போது
    யாரோடு யார் செல்வது
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

    அதனால் ஆடும் வரை ஆட்டம் என்று இருக்கும் நாட்களை ஆடலாம். 

    ReplyDelete
    Replies
    1. ஆடத்தெம்பு இல்லாதபோதுபதிவாகின்ற்ன

      Delete
  6. அலைபாயும் எண்ணங்களை ஓரிடத்தில் குவிக்கதான் பற்றுகோலாக கடவுள் பெயர்களை துணை கொள்கின்றனர்.  

    ReplyDelete
    Replies
    1. எ நக்க்,உ அது முடிவதில்லை நம்பிக்கையும் இல்லை

      Delete
  7. உற்சாக எண்ணங்கள் அலைபாயட்டும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அவை நம் கட்டுப்பாட்டில் இல்லையே

      Delete
  8. //எண்ணங்களை

    தவிர்க்கமுடியவில்லையே //

    தவிர்க்க முடியாதுதான்.
    வயதானால் வரும் எண்ணம்.
    பேரக்குழந்தைகளுடன் பேசிக் கொண்டு இருங்கள் உற்சாகம் வரும்.

    ReplyDelete
  9. எ ல்லோர் போலும் இருக்க முடிவ்தில்லை வலைப் பூதான் ஸ்ட்ரெஸ்ஸ் பஸ்டெர்

    ReplyDelete
  10. சிறு வயதிலும் இளமையிலும் நாம் active ஆய் இருப்பதால் எண்ணங்களுக்கு இடமில்லை ; வயது ஆக ஆக நெருங்கிப் பழகியவர்கள் ஒவ்வொருவராய் மறைந்து போக நமக்கும் பணி இல்லாத நிலையில் விரக்தியும் பற்பல எண்ணங்களும் ஏற்படுவது இயல்பு.தவிர்ப்பது எளிதல்ல.

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால் இம்மாதிரிஎண்ண்ங்கள் சகஜமா

      Delete
    2. ஆமாம் . எண்ணங்களின் அழுத்தத்தால் மனத் தளர்ச்சி ( depression ) முதலிய மன நோய்கள் தாக்கலாம் .

      Delete
  11. எனக்கு இப்போதே சில சமயங்களில் எண்ணங்கள் அலை பாய்கின்றன.

    ReplyDelete