இப்போதெல்லாம் எண்ணாத எண்ணங்கள்
எப்பவும்
நினைக்காதபடி வருகின்றன
ஆண்டென்றும்நாள் என்றும் புவி என்றும்
கோள் எனறும் என்னென்னவோ எண்ணங்கள்
பூமி தன்னைதானெ சுற்றுவதும் சூரியனைச் சுற்றுவதும்
காலத்தின் அளவீடாகி
இருப்பது நினைத்து வியப்பாகிறது
அக்காலத்தின்
அளவிட்டில் நம் வாழ்வு மிகக்குறுகியது
82
ஆண்டுகள் காலத்தின் அளவில்மிகச் சிறியது
நாம்தான்
மணி
என்றும் வினாடி என்றும் கண்க்கிட்டு மலைக்கிறோம்
இதிலும் காலா அருகில் வாடா சற்றே மிதிக்கிறேன் காலால்
என்னும் பீற்றல் வேறு தேவையா இதெல்லாம்
பயனற்ற
பேச்சு--- தனித்தியங்கும் நாளா கோளா நாம்
எல்லாம்
இதில்
துணை இல்லாது இயங்க முடியாத நிலை வேறு
துணைக்கும் வயது ஏறுவது தெரியாதா கடவுள்மனிதனாகப் பிறக்க
வேண்டும் எங்கோ பாடல் ஒலி கேட்கிறது மனிதனாய்
பிறந்தாலும்
அவனும்
நம்மைப்போல் அல்லாடத் தானே வேண்டும்
என்றோ
எழுதியது நினைவில் வருகிறது
செய்யாத
குற்றத்துக்கு வரும் தண்டனைக்கா நாம் நமக்கு மட்டும்
ஏன்
இந்த சிந்தனைகள் கால
அள்வீட்டில்இன்னும் சொற்ப
நேரமே மிச்சம் தெரிகிறதுஇருந்தாலும் எண்ணங்களை
தவிர்க்கமுடியவில்லையே