எண்ணங்கள் நாட்டு நடப்பு பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் நாட்டு நடப்பு பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 மே, 2013

நீ எங்கே இருக்கிறாய் அம்மா.?


                             நீ எங்கே இருக்கிறாய் அம்மா. ?
                             ----------------------------------------



(அண்மையில் பத்திரிக்கையில் படித்தேன்.இன்றைய அம்மாக்களைப் பற்றியோ இது? பகிர்ந்து கொள்கிறேன் )
இங்கிருந்து நான் உன்னைக் கேட்கிறேன்
எங்கோ இருந்ததனைக் கேட்கிறாயா அம்மா.! 




நானோ உடல் நலிவுற்று
நாதியின்றி இருக்கிறேன்-ஆனால் நீ
மருத்துவ மனையில் நாடி பார்த்து
நாக்கு நீட்டச் சொல்லி சோதிக்கிறாய்.




நான் உடல் சோர்வுடன் தவிக்கிறேன்.
நீயோ ஊக்க பானங்களுக்கு பரிந்துரைக்கிறாய்.

நான் பசியால் வாடுகிறேன் நீ
நட்சத்திர ஓட்டலில் பரிமாறுகிறாய்.

கடினமான கணக்குப் புரியாமல் முழிக்கிறேன்.
நீயோ பள்ளியில் மாணவர்க்குப் பாடம் நடத்துகிறாய்.




நான் மணலில் கோட்டை கட்ட முயல்கிறேன்.
நீயோ அடுக்குமாடி பற்றி விவாதிக்கிறாய்.

நான் மனம் வாடி என்னுள் ஒடுங்குகையில்
நீயோ எங்கோ மனநலப் பாடம் எடுக்கிறாய்.

என் கணினி என் மூளையைக் கசக்குகையில்
நீ யாருக்கோ கணினி மூலம் ஆலோசனை கூறுகிறாய்.





காயப்பட்ட எனக்கு உன் அணைப்பு தேவை
நீ கூட்டத்தில் அனைவரையும் அரவணைக்கிறாய்.

தனிமையில் நான் வாடும்போது-நீ
கூட்ட ஆரவாரக் கைதட்டல் பெறுகிறாய்.

நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.

என் அம்மாவாக  நீ எங்கே இருக்கிறாய் அம்மா.?  
-------------------------------------------- 

  ..