பெயர் சூட்டு விழா
-------------------------------
யூல் ப்ரின்னர் ஸ்டைலில் இருக்கும் இவர் பெயர் சந்தீப் தந்தையார்
சிவராம். என் பெரிய மச்சினன் இவரைப்
பற்றியே பல பதிவுகள் போடுமளவு சாதனையாளர் மிகவும் ஷை டைப். எதையும் முன் வந்து
சொல்ல வராததால் பதிவிட முடியவில்லை.
இருந்தாலும் ஓரிரு விஷயங்களைச்சொல்லத்
தோன்றுகிறது தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரிலிருந்து வடகிழக்கு எல்லை
வரை பயணித்தவர் யாருமே பயணிக்காத இடமெல்லாம் உண்டு ஏறத்தாழ இரு மாதங்கள் பயணித்தவர்
நான் என்னுடைய காசெட் டேப்புகளில் பதிவாக்கி இருந்த குரல்களை காசெட் ப்லேயர் கெட்டுப் போய்
விட்டதால் கேட்க முடியாமல் இருந்த நேரம் எனக்கு ஆறுதல் தரும் விதத்தில் ஒரு
கன்வெர்டர் கருவியை வாங்கிக் கொடுத்து அதை செயல் படுத்தவும் கற்றுக் கொடுத்தார்
தற்போது இன்ஃபோசிஸ்ஸில் கணினி நிபுணராகப் பணி புரிகிறார் இவரது வீடு எலெக்ட்ரானிக் சிடியில்
இருக்கிறது . என் வீட்டிலிருந்து சுமார்
நாற்பது கிமீ தூரம்
![]() |
| சந்தீப் சிவராம் குழந்தையுடன் |
இவருக்கு ஒருஆண்மகவு பிறந்து அதற்கு பெயர் சூட்டும் விழாவை குழந்தை பிறந்த 28-ம் நாளில் மேமாதம்
19-ம் தேதி வைத்திருந்தார் எங்களையும் அழைத்திருந்தார் என்று சொல்லத் தேவை இல்லை.
அழைப்பு வந்த நாளிலிருந்து
எனக்கு ஒரே கவலை. போகவேண்டுமா வேண்டாமா
என்னும் டைலம்மா . ஒரு பக்கம் மனம் நீ போக வேண்டும் என்றது. இன்னொரு புறம்
அது அவ்வளவு தேவையா என்றும் எதிர்க் கேள்வி கேட்டது. இவரது வீடு அருகாமையில் இருந்தால் இந்தக் கேள்விகளே எழாது.
இந்த வயதில் பெங்களூரின் புகழ் பெற்ற
ட்ராஃபிக்கில் போவதை நினைத்ததாலேயே
இத்தனை கேள்விகளும் .எனக்கோ எந்த விழாவுக்கும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும் டாக்சி யில் போய்வர ரூபாய்
ஆயிரம் ஆகிவிடும் இரண்டு மணிநேரத்துக்கும் குறையாமல் ஒரு வழிப் பயணம் இருக்கும்
இந்த நேரத்தில் என் உறவினர் ஒருவர் கூறியது நேரங்கெட்ட நேரத்தில் நினைவுக்கு வந்தது ஒரு
வேளை உணவுக்காகவோ காப்பிக்காகவோ இத்தனை தூரம் பயணிக்க வேண்டுமா என்று கேட்டே
எங்கும் போக மாட்டார் அவர். ஆனால் நான் அவர் மாதிரி அல்ல அன்பால் கூப்பிடும்போது
போகாமல் இருக்க முடியவில்லை எப்படிப் பயணிப்பது என்று திட்டமிடத் துவங்கினேன் பேரூந்துப் பயணம் இல்லவே இல்லை என்று மனைவி
கூறி விட்டாள் யாருடனாவது தொற்றிக் கொள்ளலாம் என்றால் போகக் கூடியவர்கள் எல்லோரும்
தொலைவில் இருந்தார்கள் வார நாளானதாலும் என் மகன் டூர் போயிருந்ததாலும் அவன்
மும்பையிலிருந்தே ஓலா டாக்சி புக் செய்கிறேன்
என்றான் என் பேரன் தானே செய்து
தருவதாகக் கூறினான் காலை பதினொரு மணிக்கு பெயர் சூட்டப்படும் என்று கூறி
இருந்தார்கள். அதற்கு நான் என் வீட்டிலிருந்து
காலை எட்டரை மணிக்கே புறப்பட்டால்தான்
நேரத்தோடு போய்ச் சேர முடியும் இப்போது ஓலாவில் ஓலா மினி என்னும் சர்வீஸ்
இருக்கிறது அதில் கட்டணம் குறைவாக
இருக்கும் எலெக்ட்ரானிக் சிடிக்கு இரு
வழிகளில் பயணிக்கலாம் ஒன்று சற்றே சுற்று
ஐம்பது கிமீ தூரம் இருக்கும் நைஸ் ரோட் வழியே போகலாம் ஆனால் போகும் வழியில் இரண்டு
மூன்று டோல்கள் இருக்கும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் இன்னொரு பாதை
நகரத்தின் ஊடே பயணிக்க வேண்டும் நேரம்
அதிகமாகும் நாற்பது கிமீ தூரத்துக்கும்
குறைவே
எப்படியும் போவது என்று
முடிவு செய்து விட்டோம் . நான் ரயில்
நிலையத்திலிருந்து வீட்டுக்கு வர ப்ரிபெய்ட் ஆட்டோவை உபயோகிப்பேன்அதில் இரண்டு
அட்வாண்டேஜுகள் உண்டு. ஒன்று கொடுக்க வேண்டிய தொகை முதலிலேயே தெரியும்
இரண்டாவதுமீட்டரையே பார்த்துக் கொண்டு அதில் ஏறும் தொகையைப் பார்த்துக் கொண்டே
வரும்போது எகிறும் பிபி தொல்லை இருக்காது. இந்த ஓலா செர்வீசில் அந்த வசதி இல்லை. போய்ச் சேர்ந்தபின்தான்
இவ்வளவு சார்ஜ் ஆயிற்று என்று தெரியும்
எனக்கோ எவ்வளவு தீட்டுவானோ என்னும்
கவலை. ஓலாவில் வண்டி ஓடும் நேரத்துக்கு நிமிஷத்துக்கு ஒரு ரூபாய் அதிகம்
வசூலிக்கிறார்கள் இரண்டு மணிப்பயணம் என்றால்
ரூ 120 அதிகம் கட்ட வேண்டும் பெங்களூர் ட்ராஃபிக்கில் எவ்வளவு நேரம் ஆகும்
என்று சொல்ல முடியாது இன்னொன்று நமக்கோ வழி தெரியாது ட்ரைவர் கூட்டிக்கொண்டு போவதுதான் வழி. அருகாமை வந்ததும் தொலைபேசியில் மச்சினன் மகனிடம் ட்ரைவரிடம் வழி
சொல்லக் கேட்டுக் கொண்டோம்
எனக்குமட்டும்தான் இந்தப்
பிரச்சனையா. செலவு செய்யும் பணம் பற்றி
அதிகம் யோசிக்கிறேனோ தெரியாது
இப்போது இருக்கும் தலை முறையினருக்கு ரூபாயின் மதிப்பு தெரியவில்லை என்றால்
என் தலை முறை மக்கள் அது பற்றியே அதிகம் சிந்திக்கிறோம் ஒவ்வொரு ரூபாயும் எத்தனை
மதிப்பு வாய்ந்தது என்று தெரியும் இப்போது
ரூபாய்க்கு மதிப்பேஇல்லை
நான் பணம் செலவு செய்யாத கஞ்சன் அல்ல.ஆனால் செலவு செய்யும் முன் அந்தச் செலவு தேவைதானா என்று என்னையே கேள்வி கேட்பவன் பணத்தின் அருமை தெரிந்தவன்
ஒரு வழியாய் காலை
10-45க்கு போய்ச் சேர்ந்தோம் நாங்கள்தான்
முதலில் போய்ச் சேர்ந்தவர்கள் பதினொரு மணி அள்வில் பெயர் சூட்ட ஏற்பாடுகள் நடந்தன.
இதுதான் முறை என்று ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அரிசியும் அதன் மேல்
தேங்காயும் வைத்து அருகில் விளக்கேற்றினார்கள் குழந்தையின் தாய் வழித் தாத்தா மடியில் வைத்து கைக்கு கருப்பு வளையும் காலுக்கு தண்டையும் அணிவித்தார்கள் திருஷ்டிப் பொட்டும்
வைத்தார்கள் நெருங்கிய சொந்தம் கொண்டவர்கள்
குழந்தைக்கு செயின் அணிவித்தார்கள் பிறகு தந்தை குழந்தைக்கு பெயர்
சூட்டினார் முதலில் எனக்கு விளங்கவில்லை
பிறகு தெரிந்துகொண்டேன் ஷ்லொக்
நாயர் என்ற பெயர் என்று . எனக்கானால் பெயருக்கான காரணம் தெரிந்து கொள்ள
ஆசை. என் மனைவி என் வாயை அடைத்து விட்டாள்யார் சொன்னது சாதிகள் மறைகின்றன என்று. பெயரிலேயே சாதியைக் குறிப்பிடும் புதிய தலை
முறையினர் அதிகரித்து விட்டனர்
பெண்களின் பெயருக்குப் பின்னாலும் பல
இடங்களில் சாதிப்பெயர் காண்கிறேன் பனிரெண்டு மணிக்கெல்லாம் உணவு ரெடி சாப்பிடலாம்
என்றார்கள் மீண்டும் நெடுந்தூரப் பயணம் கருதி
சீக்கிரமே உண்ண அமர்ந்தோம் ஒன்னாங் கிலாஸ் நாடன் சத்தியை வருவல் இஞ்சிப் புளி
ஊறுகாய் பப்படம் காளன் ஓலன் அவியல்
எலிசேரி புளிசேரி பச்சடி பொறியல் இரு வகைப் பாயசம் சாம்பார் ரசம் என்று பட்டியல் நீண்டது நான் மிகவும் குறைந்த அளவே உண்பவன் அதிலும்
அதிக நேரம் எடுத்துக் கொள்பவன் முதலில்
அமர்ந்து இலை எடுக்க ஆள் வரும்வரை உண்பவன் நாங்கள் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்போது பலரும் வரத் தொடங்கினார்கள்
பெங்களூரில் ஒன்று கவனித்திருக்கிறேன் ஏதாவது விழாவுக்குச் செல்வதே சாப்பிட
மட்டும்தான் என்று தோன்றும் படி இருக்கும் ஆனால் வந்தவர்களில் பெரும் பாலோர்
ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதாகக் கூறினர் நம்பாமல் இருக்க முடியவில்லை.
திரும்புவதற்கும் ஓலாவையே நாடினோம் முதலில் வந்தவர் நைஸ் ரோட் வழிதான் போவேன்
என்றார் அவரைக் கான்சல் செய்து விட்டு
சிறிது காத்திருப்பிக்குப் பின் வேறொரு
வண்டியில் பயணித்தோம் இந்த ட்ரைவரோ நம்மிடமே வழி கேட்டுக் கொண்டு ஓட்டினார் ஆனால் பாதி தூரம் சென்றபின் யாரிடமோ
வழிகேட்டு நான் சொல்லாத பாதையில் சற்று
சுற்றிப் போனார் எதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று ஒரு வழியாய் வீடு வந்து சேரும்போது மணி மூன்றரை ஆகி இருந்தது வீட்டுக்கு வந்தது ட்ரைவருக்குச் சில மாம்பழங்கள் கொடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொன்னோம் .நல்ல படி வீடு வந்து
சேர்ந்தோம் என்று எல்லோருக்கும் தகவல் தெரிவித்தோம்
![]() |
| குழந்தையின் பெற்றோருடன் நாங்கள் |
![]() |
| சத்தியை |



