கவிதை எழுதலாமே
----------------------------------
மயில்
என்றதும் அழகும் கம்பீரமும் நினைவுக்கு வருகிறது. சில அற்புதமான படங்கள்
கிடைத்ததும் மயில்வாகனனின் நினைப்பும், சூரனின் நினைப்பும் வந்தது கூடவே
ஏதாவது பாடல் புனையலாமா என்று நினைக்கவும் தோன்றியது. நான் எழுதுவதை விட
தமிழில் புலமை கொண்ட நம் பதிவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்ற
எண்ணமும் ஓடியது
இதையே முன்பொரு பதிவில் வேண்டி இருந்தேன் அப்போது வாசகர்களுக்கு நான் பதிவிட்டிருந்த படங்கள் தெரியவில்லை என்று பின்னூட்டமிருந்தது அதே புகைப்படங்களை மீண்டும் வெளியிட்டு என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிக்கொள்கிறேன்
மயிலின்
தோகை அழகு விரிந்து இருப்பதில் கண்டிருக்கிறோம். ஞாலம் வலம் வந்த ஷண்முகன்
பறக்கும் மயிலில்தானே ஆரோகணித்து இருக்க வேண்டும்.? பறக்கும் மயிலின்
படங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடட்டும். பதிவர்களுக்கு நல்ல கவிதை
கிடைக்கட்டும். சரிதானே நண்பர்களே. போட்டி என்று சொல்ல மாட்டேன். படைப்பு
என்று கூறி ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
.





