கதம்பம்-- ( HOW DARE YOU.......!)
----------------------------------
முதலில் ஒரு காணொளி. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி.
டைம்ஸ் நௌ –ல் NEWS
HOUR இரவு ஒன்பதுமணிக்கு வரும். யார் யாரோ வருவார்கள் என்னென்னவோ பேசுவார்கள்.
எல்லோருக்கும் அவரவர் பக்கமே நியாயமாகத் தெரியும் ஒருவராவது அடுத்தவர் சொல்வதில்
ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்திப்பதே இல்லை. NEWS HOUR வெறுமே NOISE
HOUR பாக இருக்கும் உங்கள் ரசனைக்கு அதன் anchor அர்னாப்
கோஸ்வாமி எப்படி நடத்துகிறார் அவருக்குக் கோபம் வரும்போது எப்படி நடந்து
கொள்கிறார் என்பதற்கு ஒரு சாம்பிள்.
இந்தக் காலப் பிள்ளைகளின் புத்திசாலித்தனம்? கண்ணோட்டம் ?அதிகப் பிரசங்கித்தனம் ? எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
ஒரு ஜோக் என் மகன் சொன்னது. ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவில் ஸ்வாமி விவேகாநந்தர் ” சகோதர சகோதரிகளே” என்று அழைத்துப் பேச்சைத் துவக்கினார் என்று சொல்லத் துவங்கியதும் ஒரு சுட்டிப் பையன் “நான் அப்படியெல்லாம் சொல்லி என் தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்த மாட்டேன் “என்றானாம்....!
தொலைக்காட்சியில் ரசித்தது. கல்யாணமாலை நிகழ்ச்சியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார் ”கல்யாணத்தில் முஹூர்த்த நேரம் நெருங்கும்போது சாஸ்திரிகள் “நல்ல நேரம் முடியப் போகிறது .பெண்ணை அழைத்து வாருங்ககள் “ என்பார். திருமணம் முடிந்தால் பையனின் நல்ல நேரம் முடியும் என்று அர்த்தமா...!
இன்னொரு நிகழ்ச்சியில் இந்திர லோகத்தில் பவர் கட் இருக்கிறது. பிரம்ம லோகத்தில் ஏன் இல்லை.?
”பிரம்மாவுக்கு four faces ஒரு ஃபேசில் பவர் போனாலும் மீதி மூன்று ஃபேஸ் இருக்கிறதே”