படங்களில் பதிவு.
------------------------
தலையைப் பிய்த்து கொண்டு ஏதேதோ சிந்தித்து எழுதுவது சரியாகப் புரிந்து கொள்ளப் படுகிறதா என்று புரியாமல் தவிப்பதை விட சில படங்களின் மூலம் நிறையவே சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் எண்ணங்களைச் சித்தரிக்கும் படங்கள் கிடைப்பது அரிது. இள வயது நினைவுகளைப் பகிரும்போது அன்றிருந்த . நாம் அறிந்த இடங்கள் காணாமல்போய் மனம் வருத்தத்தில் ஆழ்கிறது. என் வயதுக்கும் முந்தைய சில இடங்களின் கோலங்கள் மாற்றம் ஒன்றே மாறாதது என்று தெளிவுபடுத்துகிறது. வாருங்கள் நண்பர்களே அன்றைய சில இடங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்று பாருங்கள். கூடவே எண்ணங்களையும் பகிருங்கள்(அந்த நாள் அல்ல , அதற்கும் முந்தைய நாள் ஞாபகம் வருகிறதா.?)
![]() |
| COIMBATORE JUNCTION -NOW |
திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவில் பற்றியும் அங்கு கிடைக்கப் பெற்ற புதையல் பற்றியும் அநேகமாக எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம் . அது பற்றிய ஒரு காணொளித் தொகுப்பு அண்மையில் எனக்கு வந்தது. வலைப் பூ நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
