என்னென்னவோ எண்ணங்கள்
==============================
ராண்டம் தாட்ஸ்
எதையாவது எழுது என்கிறது மனம் ஆனால் எதை எழுதினாலும் பெரும்பாலும்என் எழுத்துகள் சரியாகப் புரிந்துகொள்ள்ப் படுவதில்லை மேலும் எழுதுவதே
எண்ணங்களைப் பகிரத்தானே நான் எழுதுவதெல்லாம் என் உள்ளக்கிடக்கைகளை கொட்டிதீர்க்கதானே ஆனால் எல்லோரையும் திருப்தி படுத்தும்
வகையில் எனக்குஏனோ எழுத தெரிய வில்லை சிலருக்கு
மதம் பற்றி நம் கருத்துகளை எழுதினால் பிடிக்காது
சிலருக்கு அரசிய்ல் பற்றி எழுதினால் பிடிக்காது சிலர் எழுதுவது நேர் மறையாக இருக்கவேண்டும் என்கின்றனர் எத்ர்மறை கருத்துகள் பிறர் மனதைப்புண் படுத்துமாம்
அதனால்தானோ என்னவோ என்னைப்பற்றியே எழுதி வந்தேன் நான் என்ன பெரிய புள்ளியா என்னைப் பற்றி எழுதினாலும் போரடிக்கிறதாம் ஆனால்
என்பாட்டிச்சொல்வது போல் எதற்கும் முக பாக்கியம்
வேண்டும் சரி போகட்டும் கரெண்ட் டாபிக்
கொரோனா பற்றி எழுதலாம் கொரோனாவால் கோவில்கள்
எல்லாம் மூடினார்கள் அல்லவா அதையே பக்த கோடிகள்
கோவில் திறக்கா விட்டாலென்ன அவன் எல்லோர் உள்ளங்களிலும் குடி கொண்டு விட்டானே என்கிறார்கள் கொரோனாவால் அவனை நினைப்பது அதிகமாகி விட்டது
எனக்கானால் அவனது அடுத்த அவதாரம்வர கொரோனா ஒரு அறி குறி யோ
என்னும் நினைப்பே வருகிறது
உடல் நலக் குறைவு வருவதென்பது
தவிர்க்க முடியாது கொரோனாவின் ஆதிக்கம அதிகரிக்கிறது இருக்கட்டும் அதற்கு மருத்துவம்
பார்ப்பவரையும் அதை தடுக்க நினைப்போரையும் காணும் போது
யானையை அடையாளம் காட்ட முய்லும குருடர்கதையே நினைவுக்கு வருகிறது கை கழுவுவதும் சானிடைசர் தெளிப்பதும் கை கொடுக்குமா அதற்கு மருத்துவம் பார்ப்பவரையெ பதம் பார்க்கிறதே
அதற்கு ஆகும் மருத்துவச் செலவேபயமுறுத்துகிறது பணம் இல்ர்லாவிட்டால் என்ன செய்வ்து சந்தடி சாக்கில் பணம்பார்க்க நினைக்கும் ஆயுர்வேதமருத்துவர்கள் எந்த பரிசோதனையும் இல்லாமல் அதற்கான தீர்வானமருந்து என்று சொல்பவரை
என்ன செய்ய ஐயாயிரம் வருஷ பாரம்பரியம் மிக்க மருந்து என்று சொன்னாலும் நம்பும் நம்மவர்களை என்னசொல்ல
எதையாவது சொன்னால் நம்பிக்கையே
முக்கியம் என்று சொல்வோரும் உண்டுஅல்லவா ஒருவருக்கு கொரோனா வந்தால் ஆகும் செலவே
பயமுறுத்துகிற்து ஒரு நாள் படுத்தால் கட்டிலுக்குமட்டும் ரூபாய்
ஐந்து முதல் பத்தாயிரம் செலவாகுமே அத்தனை
செலவு செய்ய எல்லோருக்கும் முடியுமா அதற்கு பயந்தே சிலதற்கொலைகளும் நிகழ்கிறதோ?என்னைப்போல்
இருப்பவர் அத்தனை செலவு செய்யமுடியுமா செய்வதால்
என்னபயன் உயிர் அத்தனை விலை உள்ள்தா கைதட்டியோ தீபமேற்றியோ போக்கமுடியாதா
ஓஒ அதையும் செய்து பார்த்தானவர்கள்தானே நாம் இம்மாதிரி நினைப்பதே தவறு என்று சொல்பவரும் உண்டல்லவா
கொரோனாவையே நகைச்சுவை யாக்கி வருவோரைக் காணும்போது பயத்தைப்போக்க இருட்டில் விசில் அடிப்பவர்களோ என்று
நினைக்கத்தோன்றுகிறது
இப்படியே எழுதிக்கொண்டு போகலாம்நோய்க்கு
தீர்வு என்ன இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை ஜுரம் வ்ருவதில்லையா வேறு நோய்கள் தானில்லையாஎல்லாவற்றையும் தடுக்க முடிந்திருக்கிறதா வந்தபின் ஏதோ மருந்து
சாப்பிட்டு குண மாவதில்லையா அம்மைக்கு தடுப்பூசிபோல
இதற்கும் ஏதாவது கண்டு பிடிக்கும்வரை பயந்துசாவோரே அதிகமாய் இருப்பார்கள்



