சில கேள்விகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில கேள்விகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

என் கேள்விகென்ன பதில்


                             என் கேள்விக்கென்ன பதில்
                            -----------------------------------------


சிறுவயதில்  இருந்தே கேள்விகள் கேட்டுப் பழகி விட்டேன் பலரும் இக்கேள்விகளை பார்த்து அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கிறது என்றும் எண்ணலாம் இருந்தால் என்ன தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் என்பார்கள்நான்  கேள்விகள் கேட்பது தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளத்தான் எத்தனை கேள்விகள் எத்தனை முறை கேட்டாலும்  கிடைக்கப்படாத விடைகளும்  தெளிந்து கொள்ள முடியாத சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன பல கேள்விகளுக்குப் பதிலாக நம்பிக்கை சார்ந்த விஷயங்களாகவே முன்  வைக்கப்படுகிறதுஎதற்கும் ஒரு சாங்க்டிடி வேண்டும் அல்லவா. நான் யாருடைய நம்பிக்கைகளையும்  கேள்வி கேட்கவில்லை. மனம் ஒப்பும் படியாக யாராவது பதில் தருகிறார்களா  என்பதே என் தேடல்

சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த –ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!

சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்

விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல் ஒருவனே என்றாலும் 
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )

 சர்வக்ஞா என்பவர் கன்னட உலகில் திருவள்ளுவர் போன்றவர்
 நான் என்னை சர்வக்ஞா என்று சொல்லிக் கொள்ளவில்லை  இருந்தாலும்  ஒவ்வொருவரிடமும் கற்க விரும்புபவன் 
 
சாஸ்திரங்கள் என்று கூறப்படுபவை யாவை  சில சம்பிரதாயப் பழக்கங்களை சாஸ்திரம்  என்று கூறி முடிவு செய்வது சரியா இவற்றுக்கு ஏதாவது சாங்க்டிடி இருக்கிறதா முன்னோர்கள் சொல்லிப் போனது என்னும் பதில் திருப்தி தருவதாயில்லை சாத்திரம் என்பது சில கொள்கைகளை விளக்கும்  நூல் என்னும்  பொருள் கொள்ளலாம் என்று தெரிகிறது அதன் படி மனு சாஸ்திரம் , சைவ சித்தாந்த சாஸ்திரம் . அர்த்த சாஸ்திரம்  வான சாஸ்திரம்  போன்றவற்றைக் கருத்தில் கொள்ளலாம் மற்றபடி சில பழக்க வழக்கங்களை சாஸ்திரம் எனும் பேரில் திணிக்கலாமா 

   சாத்திரங்கள்  பல தேடினேன் - அங்கு
       
சங்கையில்  லாதன  சங்கையாம் - பழங்
       
கோத்திரங்கள்  சொல்லு  மூடர்தம் - பொய்மைக்
       
கூடையி லுண்மை   கிடைக்குமோ ? -நெஞ்சில்
       
மாத்திர  மெந்த வகையிலும்  - சக
      
மாய  முணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
      
ஆத்திர  நின்ற  நிதனிடை- நித்தம்
      
ஆயிரம்  தொல்லைகள்  சூழ்ந்தன. (பாரதியார் )


ஆலயங்களில் அந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் விளக்கேற்றி அந்த ஒளியில் இறைவனின்  உருவை மானசீகமாகக் கண்டார்கள் அது காலத்துக்கு ஏற்றது. ஆனால் இன்றும்  கோவில்களில் கர்ப்பக் கிரகத்தை இருட்டில் வைத்து தீப ஒளியில் ஆண்டவனின்  உருவை தரிசிக்கச் சொல்வது சரியா எங்கும் நிறைந்திருப்பதாகக் கூறப்படும் தெய்வங்களுக்கு உருவம் கொடுத்ததே நாம்தான் அப்படி இருக்க எந்த ஒளியில் தரிசித்தால் என்ன என்னும் பதிலும் எனக்குள் எழுகிறது ஆண்டவனை உருவமில்லாமல் வழிபடும் ஞானம் நம்மில் அநேகருக்கு இல்லை. அவர்களுக்காவது அந்த உருவம் சரியாகத் தெரிய வேண்டாமா நான் சுவாமி சின்மயாநந்தாவின்  பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன்  அவர் சொல்வார் எத்தனையோ இடையூறுகளுக்கிடையே திருமலை சென்று வேங்கடவனை வணங்க முற்படும்  பலரும் அவன்  திரு உருவை நெருங்கும் போது கண்களை மூடிக் கொண்டு அவனைப் பார்க்காமல் கோவிந்தா கோவிந்தா  என்றே கூறி கிடைக்கும்  சில விநாடிகளையும்  கோட்டை விடுகிறார்கள்.  இன்னொரு பதில் உள்ளத்தே இருக்கும்  ஆண்டவனைக் காண வெளிச்சம்  எதற்கு. . இருந்தாலும் பல முறை ஆலயங்களுக்குச் சென்று வந்தவனான  எனக்கு அரை குறை வெளிச்சத்தில் அவன் உருவை தரிசித்து உள்ளம் சார்ந்த பக்தியால்  நல்ல தரிசனம் ஆயிற்று என்று கூறுவோரையும்   பார்த்திருக்கிறேன் எப்படி என்றுதான் புரிவதில்லை செயற்கை ஒளியில் இறையுருவை தரிசிக்கும்போது ஒரு தேஜஸ் காண்போம்  செயற்கை ஒளியில் இல்லை என்றும் கருத்து இருக்கிறதுமேலும்  சிலருக்கு அவ்வாறு தரிசிக்கும் போது அந்த உருவம் நம்மைப் பார்த்து புன்னகை புரிவதுபோலும் தெரியலாம்  இதைத்தான் அறிவுக்கும் மனதுக்கும் நிகழும் போராட்டங்களில் அறிவு  தோற்கிறது என்கிறேன் When there is a conflict between the head and the heart most of the times the heart wins,
கருவறையில் அவனுருவை  தரிசிக்க  இயலாமல் இருட்டடிப்பு  செய்வது  ஏன்  என்பதுதான்.புரியவில்லை மேலும்  கர்ப்பக்கிரகத்துக்கு  வெளியே நந்தா விளக்குக்காக எண்ணெய்  கொடுப்பதும், ராகுகால  வழிபாடு  என்று எலுமிச்சையில்  எண்ணெய் ஊற்றி  தீபமேற்றுவது என்பதெல்லாம் அறிவு சார்ந்தவையோ அல்லவோ அவை நம் கலாச்சார  மிச்சங்கள்  என்றுதான்  ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இன்னொரு சமாச்சாரம் இந்த நிவேதனம் பற்றியதுஆண்டவனைப் பிரத்தியேகமாக வழிபாடு செய்ய என்றே பல தினங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. கிருஷ்ணனாக விநாயகநாக, சிவனாக  அம்பிகையாக வழிபாட்டுக்கு என்பது போன்றவை நிவேதனம் என்றால் காண்பிப்பது என்னும்  பொருள் உண்டு
பல பண்டிகைகளில் கடவுளுக்கு உகந்தது இன்னது என்று படையல் செய்கிறார்கள்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் கிருஷ்ணனுக்கு முறுக்கு சீடை  என்றெல்லாம் வறையறுத்து இருக்கிறார்க்சள்  அதாவது
நிவேதனங்கள் என்பதை ஸ்டாண்டார்டைஸ்  செய்கிறார்கள் இன்ன கடவுளுக்கு இன்னதுதான் உகந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அடியார்களுக்குப் பிடித்தது ஆண்டவனுக்குப் பிடிக்கும் என்னும் எண்ணமோ என்னவோ தவறில்லை கண்ணப்பன்  சபரி போன்றோர் செய்ததுபோல் . ஆனால் இவை ஆண்டவனின் சுவையை அடக்குவதுபோல் இருக்கிறதே இதற்கும் ஏதாவது சாஸ்திரம்  இருக்கிறதா நம்மால் முடிந்ததை ஆண்டவனுக்கும் காண்பிக்கிறோம்  என்பது புரிகிறது



             வான  சாஸ்திரத்தில் (இந்த  சாஸ்திரம்  அறிவியல் சார்ந்தது) நம்  முன்னோர்   முன்னோடிகள்  என்று நமக்குத்  தெரியும். ஆனால்  நாளின் ஒரு பகுதியை  ராகு  காலம்  என்று குறிப்பிட்டு  அது ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு  நேரத்தில்  வரும் என்று கூறுவதன்  விளக்கம்  எனக்குத் தெரியவில்லை. அப்படியே  இருந்தாலும் இடத்துக்கு இடம் இந்த ராகு காலம் மாறவேண்டும்  அல்லவா... ராகு காலம்  ஒரு இடத்தின்  இருப்பை POSITION  சூரியனோடு ஒப்பிடுகையில்  இருப்பதை  பொறுத்துக்  கணிக்கப்  படுவதுதானே.. இந்தியாவில்  ஒரு இடத்தில்  ராகு காலம் இன்னொரு  இடத்தில்  வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில்  ராகு காலங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க  சாத்தியமில்லையே... இந்தியாவின்  ஸ்டாண்டர்ட்  டைம்  நாக்பூரின்  இருப்பிடத்தை  ஒட்டியே  கணிக்கப்படுகிறது. நாக்பூரின்  நேரமும் குவாஹத்தியின்  நேரமும் ஜம்முவின்  நேரமும்  நியாயப்படி வேறு வேறாக  இருந்தாலும் கணக்குக்காக  ஒன்றாக  ஏற்கப்பட்டுள்ளது. அதுபோல்தான்  ராகு  காலம் என்றால் அதனால் விளையப்படுவதாக   சொல்லப்படும்  நிகழ்வுகள் தவறாக இருக்க  வாய்ப்புகள்  அதிகம்தானே..ஒரு காலண்டர் கண்டேன் அதில் வெவ்வேறு இடங்களுக்கு  வெவ்வேறு  ராகுகாலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன



விவேகாநந்தர் கடவுளைத்தேடினார்.உண்டா இல்லையா? என்று தெரிந்து.கொள்ள. இறுதியில் அவர் பார்த்தார். கடவுளை அல்ல. ராமகிருஷ்ணர் என்ற மனிதரை. ராமகிருஷ்ணர் வேதத்தில், பைபிளில், குரானில் தேடினார். சாரதாம்பாள் என்ற மனுஷி தான் தெரிந்தாள். இவர்கள் வரலாற்றில் சமீபத்தியவர்கள் என்பதால் குறிப்பிடுகிறேன்.வள்ளலாரும் அப்படியே.
மகரவிளக்கு பற்றிய சமீபத்தியசெய்தி அது தெவஸ்வம் ஊழியர்களால் ஏற்றப்படுகிறது என்ற அறிக்கை ஆனாலும் தேவர்கள் வந்து ஏற்றுவதாக நம்புபவர்கள் கோடியில் உள்ளனர்.
கடைசியாக நம்பிக்கை இருப்பவர்களையும் நான் நேசிக்கிறேன் ஏனென்றால்  LOVE IS GOD என்னும்  கொள்கையில் நம்பிக்கை உடையவன் நான்