சில துணுக்குச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில துணுக்குச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு


                                             கண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு
                                             _________________________________________

சில துணுக்குச் செய்திகள்
காலையில் எழுந்ததும் கணவனை வணங்கி பின் குளித்துப் பூசை செய்து தளதளவென சேலை கட்டி, தலை நிறையப் பூச்சூடி  கணவனை எழுப்பி காஃபி போட்டுக் கொடுத்து  டிபனும்  கொடுத்து அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்tது என்னத்தான் என்று கேட்கும்   பாரத நாரி என்று நினைத்தாயோ
நான் பொண்டாட்டிடா    !  (கபாலி படம் பார்த்துப் படுத்ததன் விளைவு இது)
                    ----------------------------------------
ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வாங்கவில்லை  பாட்மிண்டனில் தங்கம் வாங்கவில்லை.  துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம்  வாங்கவில்லை. வில்வித்தையில் தங்கம் வாங்கவில்லை குஸ்தியிலோ பாக்சிங்கிலோ தங்கம் வாங்கவில்லை ...... ஏன் தெரியுமா ?
நாம் இந்தியர்கள் ஆடி மாதத்தில் தங்கம் வாங்குவதில்லை புரியுதா?
                        *************************************

நான் இந்த முறை சென்னை சென்றிருந்தபோது  தெருப் பெயர் எழுதி இருக்கும் பதாகைகளில் அந்த இடத்துக்குப் பொறுப்புள்ள கவுன்சிலர் பெயர் தொலை பேசி எண் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் நம் இடத்தில் நிகழும் சில காரியங்களுக்கு யாரிடம் குறையைச் சொல்வது என்று தவிக்க வேண்டாம் அல்லவா ஒரு நல்ல விஷயம் பாராட்டுவோம்  இங்கு பெங்களூரிலும் அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?
                        ************************************************


 இராமன் இருக்குமிடம் அயோத்தி என்று  நினைத்து சீதை அவனுடன் காட்டுக்குப் போனாள் என்பது கதை. இப்படியும் இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது அயோத்தியில் இருந்தால் மூன்று மாமியார்களையும்  சமாளிக்க வேண்டி இருந்திருக்கும் இராமனுடன்  போவதில் இரண்டு பலன்கள்  நல்ல பெயருக்கு நல்ல பெயர்.  மாமியார்களிடம் இருந்து தப்பிக்கவும் அதுவே வழி  இது எப்படி இருக்கு ?
                        **********************************************

 சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது  ஏறத்தாழ ஓராண்டு காலம்  கழிந்தும் அடுத்த பதிவர் சந்திப்பு எங்கே எப்போது என்று தெரியாத நிலை. இருக்கிறது  இதனை நான் எழுதக் காரணம் ஒரு மைய அமைப்பு இருந்தால் சில முடிவுகளை  எடுக்கும்  வாய்ப்பு அதிகம்  ஏ டி எஸ் அம்பர்நாத் அலும்னி அசோசியேஷன் சந்திப்பு இந்த ஆண்டு ஃபெப்ருவரியில்  நடந்தது பற்றி எழுதி இருக்கிறேன்  மைய அமைப்பு உள்ள அந்த அசோசியேஷனின் அடுத்த சந்திப்பு நாக்பூரில் அடுத்த ஆண்டு ஃபெப்ருவரியில்  19-20 தேதிகளில்  நடக்கப் போகிறது  சந்திப்புக்கு வருகை கோரும் அழைப்பும் வந்து விட்டது வலைப்பதிவர் சந்திப்பு குறித்த முடிவும்  சீக்கிரமே எடுக்கப்படும்  எனும் நம்பிக்கை இருக்கிறது 
                   ******************************************
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணிருக்கிறாள் என்று சொல்வார்கள் அதையே ரியோ ஒலிம்பிக்ஸுக்குப் பின்  மாற்றிக் கூறலாம்  ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண் இருக்கிறார்  உ-ம் தீபாகர்மார்க்கருக்குப் பின்னால் பிபேஷ்வர், சாக்க்ஷிக்குப்பின்னால்  குப்தீப்,  சிந்துவிற்குப் பின்னால்  கோபிசந்த்
ஒரு ஆணின் பேச்சைக் கேட்கத்துவங்கினால் பெண்கள்  முன்னேறலாம்
                     *******************************************