ஜூலை தினங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜூலை தினங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூலை, 2016

ஜூலை விசேஷ தினங்கள்


                           ஜூலையின் விசேஷ தினங்கள்
                            -------------------------------------------------
ஜூலை மாதம் என்றால் நினைவுக்கு வருவது அமெரிக்க சுதந்திரதினம் ஜ்ூலை நான்காம் நாள் சுவாமி விவேகாநந்தரின் நினைவு நாள் ஜூலை நான்காம் தேதி  ஆனால் எங்களுக்கு ஜூலை மாதம் என்றால் ஒரே கொண்டாட்ட தினங்கள்தான்  ஜூலை மூன்றாம் நாள் என் மனைவியின் பிறந்தநாள் ஜூலை ஆறாம் நாள் என் மூத்த பேரனின் பிறந்த நாள் ஜூலை ஆறாம் தேதி என் மச்சினி மற்றுமென் மனைவியின் சித்தியின் மணநாள். ஜூலை பத்தாம் நாள் என்  இரண்டாம் மகனின் மண நாள் ஜூலை பதினைந்தாம் நாள் என் மூத்தமகனின் மண நாள்,ஜூலை 27-ம் தேதி என் பேத்தியின் பிறந்தநாள். இதுவுமல்லாமல்  வேண்டப்பட்ட பலரது நாட்களிலும்  ஜூலை மாதத்தில் விசேஷ தினங்கள் இருக்கும் இந்தஜூலை பத்தாம் நாள் ஒரு திருமண நிச்சய நாள்ஜூலை பத்தாம் நாள் என் மச்சினியின் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும் நாள்
ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் மூன்றாம் நாள் பயணத்தில் ஏதாவது கோவிலில் இருப்போம் ஆனால் கடந்த இரு வருடங்களாக இந்த நேரத்தில் எங்கும் போக முடியவில்லை. இந்த ஆண்டு ஜூலை பதினைந்தாம்நாள் என் மூத்த மகனின் வெள்ளி விழா மணநாள். நாங்கள் சென்னையில் இருப்போம்
ஜூலை மூன்றாம் நாள் என் மனைவியின் பிறந்த நாள் திருச்சி வை கோபால கிருஷ்ணனின் மண நாளும் ஆகும்
என்மனைவியின் பிறந்த நாளை  மிகவும் எளிமையாகக் கொண்டாடினோம் என் இரண்டாம் மகன் அவனது மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தான் என் இரண்டாவது பேரன் அவனது பாட்டிக்கு  அவனே தயாரித்த வாழ்த்து  அட்டையைக் கொடுத்தான் அவனது ஆர்வமும் அன்பும் திக்கு முட்டாடச் செய்து விட்டது பரிசுப் பொருட்கள் இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப் படுகிறது
எழுபது ஆண்டுகளைத் தள்ளிவிட்டவளைப் பார்க்கும்போது அந்த வயதில் நான் எப்படி இருந்தேன் என்று என்னை அறியாமலேயே  சிந்தனை ஓடும் ............!

சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்  காணொளியைப் பகிர முடியவில்லை
பேரனின் வாழ்த்து அட்டை 
!
கேக் வெட்டப் போகிறேன் ( பேரனின் மேற்பார்வையில்) 

கேக் வெட்டலாமா

எம் புருசனுக்கு கேக்





























   







-


Top of Form
Bottom of Form


'